வியாழ மாற்றம் 03-05-2012 : பாபில் மீன்

May 3, 2012 17 comments

 

ஒரு கேள்வி ஒரே பதில்

rajavarothayam-sambanthan-2009-3-26-7-1-45யாழ்ப்பாணத்தில் மேதினம், தமிழரின் புதிய வாழ்க்கையை கொடி அசைத்து ஆரம்பித்து வைத்தேனே .. பார்த்தீர்களா? ராஜதந்திரத்தில் புலிகேசியை விட நாம் ஒரு படி மேலே என்பதை ஏற்றுக்கொள்கிறாயா கிராதகா?

கொமெடி பண்ணும் மூடில் இல்லை! லிபரல் .. நடைமுறை .. யதார்த்தம்.. ராஜதந்திரம் என்று இண்டலக்ட்டாக எழுதினாலும் குத்தினா வலி வலி தானே! எனக்கு இதை எழுத அருகதை இல்லை என்றே சொல்லிக்கொள்ளுங்கள். என் படலை, என் சிந்தனை. எழுதக்கூடவா நாதியில்லை? என் வயதுக்காரரிடம் யாழ்ப்பாணத்தில் மேதினம் எல்லாம் எப்படி நடக்கும் என்று கேட்டுப்பாருங்கள். சம்பந்தர் ஐயா, நீங்கள் அப்போது அவசரகால சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்துக்கொண்டு இருந்த சமயம்! வல்வெட்டித்துறை, மல்லாகம், சுன்னாகம், சுழிபுரம், பளை, சாவகச்சேரி, புன்னாலைக்கட்டுவன் என்று எல்லா மூலைகளிலும் இருந்து பலநோக்கு கூட்டுறவு சங்கம், தனியார் கல்வி நிலையங்கள், பாடசாலைகள், அரசாங்க திணைக்களங்கள், அந்த சம்மேளனம்.. இந்த சங்கம் என்று பேரணி ஆரம்பிக்கும். குஞ்சு குருமான் எல்லாம் கம்பஸ் பகுதியில் மொய்த்து போய். பின்னாலே டயஸ் ரோட்டில ரெண்டு, அபிராமி ஹோட்டலுக்கு பின் காணிக்குள் இரண்டு, அக்கம் பக்கம் மூன்று என 90கலிபரும், 50கலிபரும் பாதுகாப்புக்கு! பின்னேரம் ஐந்து மணியளவில் இராமநாதன் வீதிக்கு பேரணி வரும்போது மதில் மேல்(பூனையாக) நின்று வேடிக்கை பார்த்த எனக்கு வயது பன்னிரெண்டோ பதின்மூன்றோ. அப்போதெல்லாம் திரண்டு மிடுக்காக பறந்தால் ஒரே ஒரு அடம்பன் கொடி தான்! மிடுக்கோ மிடுக்கு! இன்றைக்கு அந்த இடத்தில் அந்த காட்சியை பார்க்கும் போது .. சம்பந்தர் ஐயா .. உங்களிட்ட இதை எதிர்பார்க்கவில்லை!

பாபில் மீன்

அண்மையில் கூகிள் ப்ளாக் ஒன்றில் அவர்கள் Google Translate ஐ அறிமுகப்படுத்தி ஆறுவருடம் ஆகிவிட்டது பற்றி குறிப்பிட்டு இருந்தார்கள். அதிலே ஒரு விஷயம் இருந்தது.
By this estimate, most of the translation on the planet is now done by Google Translate. (We can’t speak for the galaxy; Douglas Adams’s “Babel fish” probably has us beat there.)
babelfishஇதுநாள் வரைக்கு பாபில் மீனை சும்மா ஒரு விளையாட்டு பொம்மை என்று தான் நினைத்திருந்தேன். அதற்கு பின்னால் ஒரு கதையே இருப்பது சென்ற வாரம் தான் தெரியவந்தது.
விஷயம் சுவாரசியமானது. இந்த மீன், எங்கள் மூளையில் இருக்கும் அதிர்வுகளை உணரும் ஆற்றல் நிறைந்ததாம். அதனால் மனதில் என்ன நினைத்தாலும், கண்டுபிடித்துவிடுமாம். நாங்கள் என்ன மொழி பேசுகிறோம், எந்த மொழியில் சிந்திக்கிறோம் என்ற சிக்கல் இல்லை. உணரும் அந்த அலைகளை, முன்னால் இருப்பவருக்கு, அவரின் மூளை புரிந்துகொள்ளக்கூடிய அலைவரிசையில் அதிர்வுகளை ஏற்படுத்தும் ஆற்றலும் இருக்காம். இதை தான் Universal Translator என்று அழைப்பார்களாம்!
சரி, இப்படி ஒரு வஸ்து உண்மையிலேயே இருக்கா? ஹீ ஹீ .. “The Hitchhiker's Guide to the Galaxy” டக்லஸ் அடம்ஸ் எழுதிய நாவலில் வந்த மீன் தான் இது! புத்தகத்தை வாசித்து மண்டை காயவேண்டும்! Terry Prachchet வாசம் அடிக்கிறது. ஒரு சின்ன வரி!
"I refuse to prove that I exist," says God, "for proof denies faith, and without faith I am nothing".
"But," says man, "the Babel fish is a dead giveaway, isn't it? It proves you exist and so therefore you don't."
யோசியுங்கள் … யோசிக்க யோசிக்க நிறைய கம்பினேஷன்ஸ் வரும்! ச்சே .. தமிழில் எப்போது இந்த ஸ்டைலில் எழுத்துக்கள் வரப்போகிறதோ!
Velayutham-Vijay-Hansika-Kiss-Photos-Stills-Ninja Romeo-1நான் ஹன்சிகாவை பார்த்து “பார்டா என்னமா கும்முன்னு இருக்கு .. இறுக்கி அணைச்சு ஒரு உம்மா…” என்று மனதுக்குள் யோசித்தால் கூட பாபில் மீன், அந்த அலைகளை அறிந்து, ஹன்சிகாவுக்கு புரியும் மொழியில் கன்வேர்ட் பண்ண, அடுத்த கணமே என் கன்னத்தில் ஹன்சிகா எச்சிலை துடைக்க ஹன்ஹெர்சீப் தேடவேண்டியிருந்தது! துடைக்கும்போது தான் யோசித்தேன் ஆகா ஏடாகூடாமாக எதையாவது யோசித்தால், இந்த மீன் காட்டிக்கொடுத்துவிடுமே… கடவுளே கெட்ட சிந்தனைகளை மனதுக்குள் இருந்து அகற்றிவிடு … மீன் எனக்கு குறு குறுவென்று காதுக்குள் வந்து சொன்னது!
மூதேவி இப்பிடியே யோசிச்சுக்கொண்டிரு .. விடிஞ்சிடும்!

இந்தவார பாடல்!

கிட்டார் இசையை கேட்டவுடனேயே துள்ளி எழுந்தது ஞாபகம் வருது. ஏ ஆர் ரகுமான் வருகிறார் என்றவுடன், அடிச்சு பிடிச்சு, 150 டொலர்ஸ் மச்சி என்று அழுத கஜனை கெஞ்சி கூத்தாடி வாங்க வைத்து, அரங்கத்துள் நுழையும் போது ஒரே ஒரு வேண்டுகோள் தான். கடவுளே “லுக்கே சுப்பி” பாட்டு தலைவர் பாடவேண்டும்! கடவுள் இந்தமுறை என்னை கைவிடவில்லை!
முதலில் promotion!
லதா மங்கேஷ்கரின் பிரமாண்ட உருவம் லேசர் திரையில், அவர் பாட பாட, தலயின் குரலும் சேர, அந்த உயர்ஸ்தாயி எட்டும்போது வேறென்ன வேண்டும் பராபரமே? எப்படி இப்படி ஒரு பாட்டு ரகுமான் மனதில் தோன்றியது என்பது இன்றைக்கும் எனக்கு ஆச்சரியமே. சரியான முறையில், சரியான தருணத்தில் கேட்டால், நீங்கள் எவ்வளவு பெரிய இவனாக இருந்தாலும் கண் கலங்கும். சந்தேகமேயில்லாமல் ரகுமானின் சிறந்த ஐந்து பாடல்களுக்குள் இது வரும்! ஒஸ்கார் வரைக்கும் போன பாடல். ஒஸ்கார் அந்த பாக்கியத்தை மயிரிழையில் தவறவிட்டது!
ரகுமானும் லதாவும் இறுதி பல்லவியில் செய்யும் அட்டகாசம் கொஞ்ச நஞ்சம் இல்லை. தல சுரம் பாடி முன்னர் கேட்டதில்லை. இருவரும் பாடும்போது ஒரு வித ஏக்கம். ஒரு சோகம். மூட் கெட்டுது போ!
மொழி புரியவேண்டியதில்லை. இந்த பாட்டு கடத்தும் விஷயம், இசையை கொண்டே புரிந்துகொள்ளலாம். ஆனாலும் என்ன தான் வரிகள் என்று தேடிப்பார்த்தேன்.
My eyes are waiting for your arrival.
My heart is going through various emotions.
Slowly darkness in creeping in the courtyard, where is my lamp?
The sun is setting and gesturing to the moon, where are you?
Where are you my moon?
How do I show you what is here?
I've drunk water from the fountain
I've touched several clusters of my dreams
The atmosphere is so different and new
மண்டை எரிய வைக்கும் வசனங்கள்! பாலா நேரம் கெட்ட வேளையில் சம்பந்தர் கொடிபிடித்த படத்தை அனுப்பும்போது .. இன்னும் எரிகிறது!

இந்த வார காமெடி

nadodimannan00022இந்திய தூதுக்குழு சரோஜாதேவி தலைமையில் வந்தது இன்னமும் ஞாபகம் இருக்கும் என்று நினைக்கிறேன். அப்போது சுதர்சன நாச்சியப்பர் யாழ்ப்பாணம் போனது A9 ஏசி பஸ்சில்! பஸ்காரனும் விசேஷமாக போட்ட படம் பருத்தி வீரனாம். நாச்சியப்பர், படத்தில கஞ்சா கறுப்புவின் பர்போர்மன்ஸ் பார்த்து நல்லா ரசிச்சிருக்காப்ல! அடுத்தநாள் டக்ளஸ் என்ற நடிகர் ஒருவரை நிஜமாகவே யாழில் பார்த்துவிட, தல வாயடைத்து போய், “நீதாண்டா அடுத்த எம்ஜிஆர்” என்று சொல்லிப்புட்டார்! இத கேட்ட நம்ம புது எம்ஜிஆரும் ஊர் முழுக்க பறையடிக்க, எவனும் சீண்ட இல்ல! கடைசில அவரே தனக்கு தானே சொன்ன பஞ்ச் டயலாக்!
பயபுள்ள பொய் சொல்லீட்டான் போல!
அடுத்த நாளே நம்ம சரவணபவன் எம்பி, சம்பந்தமூர்த்தி நாயனாரை தேசியத்தலைவர் என்று சொல்லிவிட, சம்பந்தர் சொன்ன டயலாக்
“தக்காளி குடுத்த காசுக்கு மேலால கூவுறாண்டா!”
குறையொன்றுமில்லை, மறைமூர்த்தி கண்ணா, குறையொன்றுமில்லை கண்ணா, குறையொன்றுமில்லை கோவிந்தா!

வைகுந்தனும் அனிதாவும் … நடுவில் தாடிக்காரர்!

wines_01“அண்ணே நூற்றி முப்பத்தினாலாவது திருக்குறள் சொல்லுங்க பார்ப்பம்”
இந்த ரெண்டில் எது அடிச்சா கப்பென்று ஏறும்? என்று வெள்ளைக்காரியிடம் மேர்லோவையும் ஷிராசையும் காட்டி விசாரித்துக்கொண்டு இருக்கும் போது தான் படுபாவி வைகுந்தன் குறுக்கே புகுந்து கேட்டான்! “யூ காரி ஒன்” என்று சொல்லிவிட்டு வெள்ளைக்காரியும் இன்னொரு ரெமி மார்ட்டினிடம் போய்விட, கடுப்பானேன். 
இப்ப என்னத்துக்கடா இத கேக்கிற? .. இன்னும் வாங்கவேயில்லையே!”
“அவர் பந்தி பந்தியா எழுதுவார் ஆனா ஒரு குறள் கேட்டா தெரியாது! சும்மா சொல்லன பார்ப்பம்”
முன்னால் நிற்கும் என்னையே “அவர்” என்று விளிக்கும் சாவகச்சேரி தமிழ்!
“தெரியாதடா .. அப்பிடி என்ன தாண்டா இருக்கு அந்த குறளில”
மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்”
“எதை மறந்தாலும் பின்னர் படித்துக்கொள்ளலாம். ஆனால் ஒழுக்கம் கெட்டால் திரும்பிப்பெறமுடியாது! மிஞ்சி மிஞ்சி போனால் மதுரை ஆதீனமானால் ஆகலாம்!”
“அதில்ல அண்ணே .. இன்னொரு விஷயம் இருக்கு .. கண்டுபிடியுங்க பார்ப்பம்!”
வெள்ளைக்காரி இப்போது ரெமிமார்ட்டினை சிரித்து அனுப்பிவிட்டு டகீலா பர்சன்டேஞ் என்ன என்று ஒரு சைனாகாரனுக்கு விளங்கப்படுத்திகொண்டு இருந்தாள்!
“இந்த திருக்குறள் எனக்கு எப்பவுமே வயித்த கலக்கும்டா! நீயே சொல்லடா !”
“இது தெரியாதா அவருக்கு! ஆயிரத்து முன்னூற்று முப்பத்துமூன்று குரலில இந்த குரலில தான் பார்ப்பான் என்ற சொல்லு வந்திருக்கு. திருவள்ளுவர் கூட சாதிய விட்டு வைக்கேல்ல பார்த்தீங்களா?”
“அடக்கப்பட்டுக்கொண்டு இருக்கிறோம் என்று தெரிந்தால் தானே ஒருத்தனாவது எதிர்த்து கிளம்புவான்!  அப்போது சாதியம் ஏற்றுக்கொள்ளப்பட்ட சமூக நடைமுறையாக இருந்திருக்கலாம்.  திருக்குறள் இஸ் நாட் பேர்பேக்ட் பாஸ்!”
v133Thiruvalluvar3“தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும்”

“கணவனை தெய்வமாக தொழுது வாழும் பெண் பெய் என்றால் மழை பெய்யுமாம்! பெண்ணடிமைத்தனம் இல்லையா? கணவன் கடவுளா? பெய் என்றால் பெய்திடுமா? ஜிம்மி கூட பெய்யாது தலைவரே!”
“அண்ணே நீங்க சும்மா கதைக்கோணும் எண்டு கதைக்கிறீங்க .. திருக்குறள் உலக பொதுமறை .. சும்மா நேற்று படலைல முளைச்ச காளான் எல்லாம் வள்ளுவரை விமர்சிக்க தொடங்கீற்று!”
“விமர்சிக்கேல்ல! ஆனா ஏன் விமர்சிக்காம கூடாது? எண்டு கேக்கிறன். இந்த காலத்துக்கேற்ற மனுநீதியை ரெண்டாயிரம் வருஷத்துக்கு முன்னால போய் தேடுறது சரிவருமா? அது வேற புரியாம .. மனப்பாடம் செய்து .. எதுக்கு? உரை மட்டுமே போதாதா? பக்கத்திலேயே பாரதி .. கொஞ்சம் தள்ளி பெரியார் .. ஏன் வெளிநாட்டு அறிஞர்கள் சொன்ன விஷயங்கள், எல்லாவற்றையும் குறை நிறை கண்டு ஆராய்ச்சி செய்து ஒரு தொகுக்கப்பட்ட மனுநீதியை ஒவ்வொரு ஆண்டும் உருவாக்கலாமே. Code of ethics! ஏன் ஒருத்தன் எழுதினதையே பிடிச்சு தொங்கிக்கொண்டு?”
ladies-coupe-anita-nair-193x300“அண்ணே நான் சும்மா பொதுவா தான் கேட்டேன் .. நீங்க சர்வதேச பிரச்சனையாக்கிறீங்க?”
“அனிதா நாயரின் Ladies Coup’ வாசிச்சியா? திருவள்ளுவர் பள்ளி மாணவருக்கு எக்ஸாம் டைம்ல சிம்ம சொப்பனமா இருப்பதை அருமையாக சொல்லியிருப்பார். முக்கி முக்கி பாடமாக்கி ..”
“அண்ணே ப்ளீஸ் ஆரம்பிச்சிடாதீங்க .. இந்த இடத்தில புத்தக விமர்சனம் தொடங்கினா ரொம்ப லெந்தா போயிடுமே !”

பருவமே புதிய பாடல் பாடு!

நோர்வேயை சேர்ந்த எரிக் சொல்கெய்ம் (நம்ம தோஸ்து இல்ல) எடுத்த ஸ்டில்களின் தொகுப்பு. ஒரு வருடம் பூராக தன் வீட்டு கோடியில் கமரா பூட்டி, எடுத்த படங்கள். ஒஸ்லோவின் பருவ மாற்றங்களை அழகாக கவர் பண்ணியிருக்கும் வீடியோ. பாருங்கள்!
ஒரு பத்து தடவை பார்த்திருப்பேன். திருப்பி திருப்பி பார்க்க பார்க்க, ஏதோ ஒரு சோகம். விளக்க முடியவில்லை. திடீரென்று நாற்பது வயதானது போல. இன்னும் ஒரு பத்து தடவை வயசு ..ஐம்பது .. இன்னும் .. அறுபது .. ஒரு கட்டத்துக்கு பின் அந்த வீடியோவை ரசிக்கமுடியவில்லை. வயதாகிவிட்டது!

மன்மதகுஞ்சு ஸ்பெஷல்!

vadivelu09நண்பரும் கவிஞருமான மன்மதகுஞ்சு இரண்டு வாரங்களுக்கு முன்னர் அணிந்த ஜட்டி நாற்றம் உலகமெங்கும் பரவிய நாள் முதல், அடுத்தது என்ன? என்று எந்திரனுக்கு பிறகு ஷங்கர் ரூம் போட்டு பட டிஸ்கஷனுக்கு போனது போல கவிதைக்கு டிஸ்கஸ் பண்ண ஆரம்பித்துவிட்டான். முதலில் ஒரு முழு நீள மொனிக்கா லிவிங்ஸ்கி ஸ்பெஷல் வந்தது. வேண்டாம்டா, இதெல்லாம் படலைக்கு ஆகாது என்று சொல்ல, ஒசாமா, ஈரான் என்று சர்வதேச ரேஞ்சில் ஒரு கவிதை வந்தது. தலையை சுவற்றில் மோத ரெடியாகும்போது தான் போன் பண்ணி புதுசா ஒரு ஐடியா வந்திருக்கு, எழுதியிருக்கிறேன் ஈமெயில் பாரு என்றான்! கோதாரி வாசித்தேன்! யாரோ குமுது டீச்சராம். படிச்ச பையனோட ஓடிப்போயிட்டாவாம்! அந்த டீச்சரை போல எனக்கேன் ஒரு டீச்சர் கிடைக்கேல்ல? என்று ஏங்கி ஏங்கி ஒரு கவிதை. தெரியாத்தனமா மேலிடத்துக்கும் தலைவர் சிசி பண்ணியிருக்கிறார். ரெண்டுநாளா போன் எடுத்தா ஒரு பக்க காது ஆளுக்கு அவுட்டாம்! அவ்வளவு அடி விழுந்திருக்கு!
என்ன கவித எழுதலாம் என்று லீவு போட்டு யோசித்துக்கொண்டிருந்தவனுக்கு, இந்த வீணாப்போன மதுரை ஆதீனம் மாட்டர் எடுத்து கொடுத்திட்டுது. மச்சி எழுதப்போறேன் எண்டான். எனக்கு இன்றைக்குமே நித்தியானந்தா செய்த தவறு எது என்று புரியவில்லை. பிரமச்சரியத்தை போதித்துவிட்டு அதை கடைப்பிடிக்காமல் இருந்தது தவறு தான். இதிலே ரஞ்சிதாவின் அந்தரங்கத்தை இழுப்பது சரியா? சரி மக்களை தவறான வழிப்படுத்தினார் என்றால், ஆண்டாண்டு காலமாக “யாமிருக்க பயமேன்” என்று சொல்லிக்கொண்டு பழனி முதல் நல்லூர் வரை மாளிகை மாளிகையாய் வைத்துக்கொண்டு, “நான் உங்களை காப்பாற்றுவேன், அஞ்சவேண்டாம்” என்று சொல்லிக்கொண்டே உலகை சுற்றும், ஊரை ஏமாற்றும் முருகன் செய்வது தவறில்லையா? என்று எழுதலாம் தான்! என்னை நாத்திகன் என்பார்கள். “முருகன் இல்லை என்று நான் சொல்லவில்லையே! ஏமாற்றுகிறான் என்று தானே சொல்கிறேன்” நான் ஆரம்பித்து மீண்டும் கடவுள் எழுத தயாராயில்லை!!
ரொம்ப நீளமா இருக்கு! கை வைக்கட்டா என்று கேட்க! உன் படலை, நீ தானே பப்ளிஷ் பண்ணுகிறாய். என்ன வேணுமெண்டாலும் செய் என்று சொல்லிய தாராள குண கவிஞன். அங்கே இங்கே வெட்டி எறிந்து டிங்கர் பண்ணி இருக்கிறன்! தல கடுப்பாகுதோ தெரியேல்ல!
சரி இப்ப, ஜட்டிகவிஞரின் ஐட்டத்துக்கு போவோம்!

nithyananda-morning-templeமும்மலங்கள் அடக்கி
முப்பொருளும் ஒடுக்கி
முத்திநெறி முழு இரவும் செய்தாய்!
வெள்ளித்திரை நீயோட்ட,
சின்னத்திரை அதையோட்ட!
நெட்திரையில் கூட நித்தம் நித்தி(தி)ரை
எத்திரை வரலாற்றிலும் முதன்முதலாய்
நித்திருவிளையாடல்!
சொறியன் கூந்தலின் நறியவும் உளவோ?
நக்கீரன் சைட்டில் கூட
பொருள் குற்றம் இல்லை!
 
கடவுளையே கொன்றாய்!
என் மதம் தான் உன் மதம்
ஒற்றுமையாவோம் என்றாய்!
524353_10150712660412337_714962336_9706621_2038533751_nஆட்டம் அடக்கி மனசை ஒடுக்கி
தியானம் பூண சொன்னவரு
வீடியோவே பொய்யடா
வேண்டுமென்றே சதி செய்யுறான்
வெஸ்டர்ன் காரன்!
திரையில் வந்தது எல்லாம் பொய்
நம்பாதே என்றாய் – நாதாரி
தெக்கத்தியனும் அதையே சொன்னான்!
தீர்மானம் போட்டும் கேட்டானில்லை!
தீயவன் எல்லாம் ஈசியாக ஆதீனம் ஆள!
திக்கற்ற தமிழன் பாவம்
தியான பீட கொடியை ஏந்துகிறான்!

இந்த கவிதையை வாசித்தபின், யாழ்ப்பாணத்து நல்லை ஆதீனம், மன்மதகுஞ்சுவுக்கு இளைய ஆதீனம் பட்டம் கொடுத்தாலும் கொடுக்கலாம்!

Comments

 1. ஆயிரம் கேள்வி பதில்களால் சொல்ல முடியாத உணர்வுகளை, அந்த உணர்வின் வலிகளை , ஒரே கேள்வி ஒரே பதிலில் சொன்னதாய் உணர்கிறேன்.
  மௌனத்தின் வலி, வலிமையானது.

  ReplyDelete
 2. மேதினம் என்றால் உழைப்பாளிகளை அவர்களின் வியர்வை ஈரத்தை,அவர்களின் துன்பத்தில் நாம் பெற்றுக்கொண்ட இன்பத்தை பிரதிபலித்த ஊர்வல அடையாளங்களை எம் தலைமுறை மறக்கமுடியுமா ? எமது இனத்தின் வாழ்வியலின் அடையாளத்தை குறீத்து நின்ற ஊர்வலம் எங்கே,இப்போ மேடை போட்டு பிறிஸ்டல் போட்டில எழுத்துக்களால் எழுது ஏனோ தானோவென்று நடத்தப்படும் மேதினம் எங்கே.. இனி அவையெல்லாம் எம் தலைமுறை பார்க்கமுடியாதா என்ற ஏக்கங்களை ஏற்படுத்திவிட்டாய் அந்த கேள்வி பதில் மூலம்..

  ரகுமானில் இசையில் அதிக ஆதிக்கம் செய்யும் ஹிட்டார் இசைக்கருவியின் நாதங்கள் ரகுமான், லதா அம்மாவின் குரலுடன் கலந்து மனதில் ஒரு சுகந்தத்தை பரப்புகிறது அமைதியான சூழலில்

  உண்மையில் அதனை பெண் அடிமைத்தனமாக பார்க்கவேண்டுமில்லை.. அம்புலிமாம கதைகள் கற்பனையானவையாக இருக்கும் ஆனால் அந்த கதையின் பின்னால் நமக்கு புரியவைக்கும் ஒரு நன்னெறி இருக்கும் அதே போலதான், தமிழ் ஆசிரியார் பொன்னுச்சாமி ஒருக்கா சொன்னார், வீட்டில இதை நான் டெஸ்டு பண்ணிப்பார்க்க முடியாது அப்படி செய்தால் எனது குடும்பன் இன்றூடம் பிரிந்துவிடும் என்றூ உண்மை அதுதான், சில கருத்துக்கள் உள்ளே அர்த்தம் பொதிந்து மேலோட்டமாக சொல்லிவிட்டு போக அதன் உட்கரு புரியாமல் மேலோட்டமாக நாமும் எடுத்து அடுத்தவன் முதுகை சொறீஞ்சு விட்டிடுறோம்.திருக்குறளை முழுதாக பின்பற்றூதல் என்பது 2012 இல் உலகம் அழிவதற்கு சமமானது.. ஆனால் அதனை உட்சென்றூ கருத்து அறியலாம் ,ஆனால் அதை விமர்ச்சிக்க போனால் எதிர் மறையே அதிகம் மிஞ்சும் என்றூ நான் நினைக்கிறேன்

  பார்க்க திரும்ப திரும்ப பார்க்க வேண்டும் போல இருக்கு.. இதே போலத்தான் இன்னொருத்தன் தனது மகளை குழந்தையில் இருந்து 13 வயசுவரை வீடியோ எடுத்து மிகவும் நேர்த்தியாக எடிட் பண்ணியிருக்கிறார்,ஒரு சிறூமியின் முகமாற்றத்தையும் திரும்ப திரும்ப பார்க்கலாம்,

  நித்தி வரிகளை சிறப்பாக எடிட்டிங் பண்ணியிருக்கிறாய்..

  ReplyDelete
 3. தல.. போன வாரம் உங்கள ஒரு கேள்வி கேட்டேன்.. அலேக்கா எஸ் ஆகிட்டீங்க... ஹ்ம்ம்....

  babel fish மேட்டரு சூபரு...

  நித்தி டேய் ஜேகே பகுதியில வருவாருன்னு எதிர்பார்த்தேன்... ஏமாற்றம் ன்னு நெனைக்கிறதுக்குள்ள கவிதைய போட்டு தள்ளிட்டீங்க...ஹி ஹி..

  ReplyDelete
 4. சந்தோசம் ஜேகே, விகடனை விட வியாழ மாற்றம் எனக்கு தவறாமல் படிக்கும் படி செய்கிறது, மேதினம் நல்ல நினைவுகள், அடம்பன் கொடி அதை மதில் மேலிருந்து பார்க்கும் சிறுவன் கூட கலிபர் பாதுகாப்பு - நல்ல சித்திரம். உங்களுக்கு விலாவாரியா கொமன்ட் போடுறதை உரிமையால் மிகைப்படுமோ என்று தவிர்க்குறேன் - பிறகு முதுகு சொரியிற எண்டு சொல்லப்படும்.

  "கணவன் வாக்கினைக் கடவுள் வாக்கினை விட மேலானதாகக் கருதி அவனையே தொழுதிடும் மனைவி பெய் என ஆணையிட்டவுடன் அஞ்சி நடுங்கிப் பெய்கின்ற மழையைப் போலத் தன்னை அடிமையாக எண்ணிக் கொள்பவளாவாள்." - கருணாநிதி உரை, பலரதும் ரசனைக்காக.

  நெட்டில் சுட்டது: இக்குறளிற்குப் பாரதிதாசன் கூறிய விளக்கம் மிகச் சிறப்பானது. மரபை அறிந்து அளித்த புது விளக்கம்.
  மழை தேவைப்படும் உழவன் மழை வேண்டும் என நினைக்கிறான். அவன் ‘மழையே நீ இப்பொழுது பெய்ய வேண்டும்‘ என வேண்டுகிறான்.உடனே மழை பெய்கிறது. அப்படிப்பட்டவளாகக் கணவன் எண்ணத்தைப் புரிந்து கொண்டு செயலாற்றும் மனைவி இருந்தால் அவள் உள்ளத்தில் கணவனே தொழத்தக்கவனாக நிறைந்திருப்பான். என்னும் கருத்தமைய அவர் உரை கூறியுள்ளார்.

  இலக்கண மற்றும் கருத்து நயத்திற்கு பரிமேலழகர் உரை காண்க.
  படலை, ஆறாவடுவிலிருந்து வள்ளுவம் வரை எல்லாம் விமர்சனத்திற்கு உள்ளாக்க வேண்டும் - அப்போது தான் தெளிவு பிறக்கும்.

  கடவுள் பற்றிய சர்ச்சையும் தர்க்கமும் (logic), நீங்கள் கூட அப்படி தமிழில் எழுதலாம், தமிழிலும் அப்படி சிலபல உண்டு. கடவுள் சர்ச்சை பற்றி நவீன புதுக்கவிதயின் நக்கலுடன் ஒரு பாடல், யார் எழுதினது என்பது வாசகர் தேடலுக்கு:

  'ஒன்றே' என்னின், ஒன்றே ஆம்;
  'பல' என்று உரைக்கின், பலவே ஆம்;
  'அன்றே' என்னின், அன்றே ஆம்;
  'ஆமே' என்று உரைக்கின், ஆமே ஆம்;
  'இன்றே' என்னின், இன்றே ஆம்;
  'உளது' என்று உரைக்கின், உளதே ஆம்;
  நன்றே, நம்பி குடி(?!) வாழ்க்கை!
  நமக்கு இங்கு என்னோ பிழைப்பு? அம்மா!

  டிஸ்கி: //'ஆமே' என்று உரைக்கின்,// மலையாள மொழி வழக்கோ ? கொஞ்சம் நித்தியிடம் கேட்டு சொல்லவும்.

  ReplyDelete
 5. அப்பாவுக்கு தெரியாமல் களவாக பார்த்த மேதின ஊர்வலம் தானஂ ஞாபகம் வருகிறது
  //பறந்தால் ஒரே ஒரு அடம்பன் கொடி தான்! மிடுக்கோ மிடுக்கு!//
  எப்படி ரசித்து பெருமையாக பார்த்தோம்

  சரி, இப்படி ஒரு வஸ்து உண்மையிலேயே இருக்கா
  பயம் காட்டிட்டீங்களே

  //ஏ ஆர் ரகுமான் வருகிறார் என்றவுடன்//
  ஏன் தான் ஞாபகப்படுத்தினீர்களோ என்று இருக்கிறது எனக்கு போக முடியவில்லை, மிகவும் கவலைப்பட்டேன்

  /மொழி புரியவேண்டியதில்லை. இந்த பாட்டு கடத்தும் விஷயம், இசையை கொண்டே புரிந்துகொள்ளலாம்.!//
  அருமையான வசனங்கள்.... ஏதோ ஒன்றுடன் தொடர்புபடுத்தி ரசிக்கும் போது

  திருக்குறள்.......
  இங்கு விமர்சனம் எழுதும் பலர் உங்களை நன்றாக தெரியும் என்பதால் நீங்கள் எந்த அர்த்தத்தில் எழுதுகின்றீர்கள் என்பது புரிகிறது போல ஆனால் எனக்கு ஒன்றுமே புரியவில்லை

  ம.குவின் கவிதை நல்லா இருக்கு . படலையில் நிரந்தர இடத்தை பிடித்தமைக்கு வாழ்த்துக்கள்


  அதுசரி ஜேகே உங்களுடைய "உ..ஊ..மபதமா" விற்கு என்ன நடந்தது அந்த பக்கமும் கொஞ்சம் எட்டி பார்க்கிறது

  ReplyDelete
 6. >தமிழரின் புதிய வாழ்க்கையை கொடி அசைத்து ஆரம்பித்து வைத்தேனே

  எனக்கென்னவோ அவர் அசைத்தது புலிக்கொடி மாதிரி இருக்குது, அதாவது பின்நவீனத்துவ அரசியலில்...

  ReplyDelete
 7. @பாலா ..

  Format இல் சின்ன மாற்றம் ட்ரை பண்ணினேன் .. :)

  ReplyDelete
 8. @மன்மதகுஞ்சு
  //ஆனால் அதை விமர்ச்சிக்க போனால் எதிர் மறையே அதிகம் மிஞ்சும் என்றூ நான் நினைக்கிறேன்//

  இலக்கியங்களை, நீதிகளை கேள்விகேட்காமல், காலத்துகேற்றவாறு மாற்றாவிட்டால், ஒன்று எங்கள் இனம் அடிப்படைவாதம் சார்ந்து போய்விடும். இல்லை எமக்கும் அந்தவகை இலக்கியங்களுக்கும் உள்ள தூரம் அதிகரித்துவிடும். எங்கள் இனத்தில் இந்த இரண்டாவது விஷயம் நடக்கிறது என்று நினைக்கிறேன்..

  ReplyDelete
 9. @நன்றி மயிலன்

  உங்கள் கேள்வி இன்னமும் ட்ராப்டில் இருக்கிறது. இந்த வாரம் அந்த ஒரு கேள்வியும் பதிலும் முக்கியமாக பட்டதால் ஏனைய கேள்விகளை அடுத்தவாரத்துக்கு மாற்றிவிட்டேன்.

  ReplyDelete
 10. @வாலிபன்

  //பிறகு முதுகு சொரியிற எண்டு சொல்லப்படும்//
  சொல்லுறவனுக்கு ஒரு சொம்புத்தண்ணி எடுத்து தரும் பண்பு இருந்தாலும் பரவாயில்லை .. கணக்கில எடுக்காதீங்க பாஸ்..

  //அடம்பன் கொடி அதை மதில் மேலிருந்து பார்க்கும் சிறுவன் கூட கலிபர் பாதுகாப்பு //
  எழுதுறது ஒருத்தருக்காவது புரியாதா என்ற ஏக்கம் இப்போதெல்லாம் எனக்கில்லை!


  //"கணவன் வாக்கினைக் கடவுள் வாக்கினை விட மேலானதாகக் கருதி அவனையே தொழுதிடும் மனைவி பெய் என ஆணையிட்டவுடன் அஞ்சி நடுங்கிப் பெய்கின்ற மழையைப் போலத் தன்னை அடிமையாக எண்ணிக் கொள்பவளாவாள்."//

  ப்ரில்லியன்ட் ... கருணாநிதியின் இந்த தமிழுக்கு ஒரு சல்யூட் .. நேரம் கிடைத்தால் ஜெயராஜ் அண்ணாவிடம் சொல்லுங்கள் எங்களுக்கு கருணாநிதியிடம் பிடித்தாது இப்படி மயக்கம் கொடுக்கும் தமிழ் தான் என்று !!!!!!!!!!!

  எல்லா உரைகளையும் வாசித்து பார்த்தேன் .. சிலது சுமந்திரன் ரகம்! ... சில குறள்கள் காலத்தை மீறி நிலைக்காது என்றே நினைக்கிறேன்!

  //'ஒன்றே' என்னின், ஒன்றே ஆம்//
  இதை நானும் கடற்கரையை வெறித்து பார்க்கும் காலங்களில் நினைத்திருக்கிறேன்....

  //டிஸ்கி: //'ஆமே' என்று உரைக்கின்,// மலையாள மொழி வழக்கோ ? கொஞ்சம் நித்தியிடம் கேட்டு சொல்லவும்.//
  அது மலையாளத்தில் இருக்கும் தமிழ்!

  ReplyDelete
 11. நன்றி கீதா

  //சரி, இப்படி ஒரு வஸ்து உண்மையிலேயே இருக்கா
  பயம் காட்டிட்டீங்களே //
  வாசிக்கும்போது பயந்தது தெரிந்தது!!!

  //திருக்குறள்.......
  இங்கு விமர்சனம் எழுதும் பலர் உங்களை நன்றாக தெரியும் என்பதால் நீங்கள் எந்த அர்த்தத்தில் எழுதுகின்றீர்கள் என்பது புரிகிறது போல ஆனால் எனக்கு ஒன்றுமே புரியவில்லை //

  இல்லை, context ஒன்றும் இல்லை .. அடிக்கடி இந்த இலக்கியத்தை சுவாரசியமாக டிஸ்கஸ் பண்ணவேண்டும் என்று ஆர்வம். மன்மதகுஞ்சு, வாலிபன் போன்றவர்களுக்கு சொல்வதுண்டு .. ஒரு வறட்சியாக இலக்கியம் இருக்க கூடாது என்று தான் வைன், வெள்ளைக்காரி எல்லாம் புகுத்துவது!!!

  //அதுசரி ஜேகே உங்களுடைய "உ..ஊ..மபதமா" விற்கு என்ன நடந்தது அந்த பக்கமும் கொஞ்சம் எட்டி பார்க்கிறது//
  அதை ஏன் கேட்கிறீங்க .. அதுக்கு அவ்வளவு வரவேற்பு இல்லை .. அதனால் தான் வியாழ மாற்றத்தில் இந்த வார பாடலாக போடுகிறேன்.

  ReplyDelete
 12. @சக்திவேல் அண்ணா

  //எனக்கென்னவோ அவர் அசைத்தது புலிக்கொடி மாதிரி இருக்குது, அதாவது பின்நவீனத்துவ அரசியலில்...//

  ஒ இத தான் ராஜதந்திரம் எண்டு சொல்லுவாங்களா?!

  ReplyDelete
 13. // நேரம் கிடைத்தால் ஜெயராஜ் அண்ணாவிடம் சொல்லுங்கள் எங்களுக்கு கருணாநிதியிடம் பிடித்தாது இப்படி மயக்கம் கொடுக்கும் தமிழ் தான் என்று !!!!!!!!!!!// ஐயே இந்தக் குசும்பு தானே வாணாங்கிறது நான் என்ன அவரின்ட முகவரா ? அனா சயிக்கில் காப்பில யானைய செருகினத நான் கண்டுக்கல.

  //இதை நானும் கடற்கரையை வெறித்து பார்க்கும் காலங்களில் நினைத்திருக்கிறேன்.... // கடலுக்குப் போனா எவ்ளோ இருக்கு வெறித்துப் பார்க்க + யோசிக்க: நீங்க ஏன் இப்படி ?

  //அது மலையாளத்தில் இருக்கும் தமிழ்!// யாரு நித்தியா மேனனை சொல்லுறீங்களா ? கவிதை கவிதை, அசிஸ்டன்ட் டைரட்டர்களா நோட் பண்ணுங்கப்பா.

  ReplyDelete
 14. //கடலுக்குப் போனா எவ்ளோ இருக்கு வெறித்துப் பார்க்க + யோசிக்க: நீங்க ஏன் இப்படி//

  இது யுத்த காண்டத்து warm up பாட்டு ... ராமன் கடற்கரையில் நிக்கிறது தான் சீன்!

  ReplyDelete
 15. hii.. Nice Post

  Thanks for sharing

  For latest stills videos visit ..

  www.ChiCha.in

  www.ChiCha.in

  ReplyDelete
 16. JK,
  Whatever you mentioned as the luka chuppi song's lyrics, where did you get it from? I don't know Hindi, my knowledge of Hindi is through Doordarshan but after hearing the song and reading the given lyrics, I felt they are not exact translation. I agree that they convey similar meaning. Here is two links that give translated lyrics:
  http://www.youtube.com/watch?v=9a-2zVlfA5w (you will find in subtitles)

  http://www.youtube.com/watch?v=2aDkMDoWvNY (here below the player you will see the following)

  Luka Chuppi bahut huyi saamne aa ja naa
  Enough of hide and seek, come before me.
  Kahan kahan dhoondha tujhe
  I searched for you everywhere.
  Thak gayi hai ab teri maa
  Your mother is now tired.
  Aaja saanjh hui mujhe teri fikar
  Its evening and I'm worried about you
  Dhundhla gayi dekh meri nazar aa ja na
  Hazy is what my sight is, come to me

  Kya bataoon maa kahan hoon main.
  What do I tell you about the place where I am, maa?
  Yahan udney ko mere khula aasmaan hai
  There is freedom and independence like the vast sky here.
  Tere kisson jaisa bhola salona
  Like your stories it is innocent and beautiful here
  Jahan hain yahan sapno vala
  Its like a dreamland here.
  Meri patang ho befikar udd rahi hai maa
  My kite (I am) is flying without any worries maa.
  Dor koi loote nahin beech se kaate na
  Nobody to steal or cut my kite's string.

  Teri raah takey aankhiyaan
  My eyes are waiting for your arrival.
  Jaane kaisa kaisa hoye jiyaa
  My heart is going through various emotions.
  Dhire dhire aangan uthre andhera, mera deep kahan
  Slowly darkness in creeping in the courtyard, where is my lamp(son)
  Dhalke suraj kare ishara chanda tu hai kahan
  The sun is setting and gesturing to the moon, where are you?
  Mere chanda tu hai kahan
  Where are you my moon (son)?

  Kaise tujhko dikhaun yahaan hai kya
  How do I show you what is here?
  Maine jharne se paani maa, tod ke piya hai
  I've drunk water from the fountain maa
  Guchcha guchcha kayee khwabon ka uchal ke chuwa hai
  I've touched several clusters of my dreams
  Chaaya liye bhali dhoop yahaan hai
  The sunlight along with the shade is here
  Naya naya sa hai roop yahan
  The atmosphere is so different and new
  Yahaan sab kuch hai maa phir bhi
  All that I want is here maa... but still...
  Lage bin tere mujhko akela
  Loneliness is what I feel here without you

  ReplyDelete
 17. மோகன் .. இந்த கடைசி stanza வில் உள்ள வரிகளை அங்கொன்றும் இங்கொன்றுமாக பொறுக்கி context க்கு ஏற்றவாறு கொடுத்திருந்தேன் .. சில வரிகளை கொடுக்கவில்லை .. நன்றி உங்கள் விளக்கத்துக்கு ..

  முழுதாக வரிகள் கொடுக்க இடம் போதாமல் போகிறது .. அதனால் தான் இந்த தகிடுத்தத்தங்கள்!

  ReplyDelete

Post a comment

Contact Form