வியாழ மாற்றம் 03-05-2012 : பாபில் மீன்

May 3, 2012

 

ஒரு கேள்வி ஒரே பதில்

rajavarothayam-sambanthan-2009-3-26-7-1-45யாழ்ப்பாணத்தில் மேதினம், தமிழரின் புதிய வாழ்க்கையை கொடி அசைத்து ஆரம்பித்து வைத்தேனே .. பார்த்தீர்களா? ராஜதந்திரத்தில் புலிகேசியை விட நாம் ஒரு படி மேலே என்பதை ஏற்றுக்கொள்கிறாயா கிராதகா?

கொமெடி பண்ணும் மூடில் இல்லை! லிபரல் .. நடைமுறை .. யதார்த்தம்.. ராஜதந்திரம் என்று இண்டலக்ட்டாக எழுதினாலும் குத்தினா வலி வலி தானே! எனக்கு இதை எழுத அருகதை இல்லை என்றே சொல்லிக்கொள்ளுங்கள். என் படலை, என் சிந்தனை. எழுதக்கூடவா நாதியில்லை? என் வயதுக்காரரிடம் யாழ்ப்பாணத்தில் மேதினம் எல்லாம் எப்படி நடக்கும் என்று கேட்டுப்பாருங்கள். சம்பந்தர் ஐயா, நீங்கள் அப்போது அவசரகால சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்துக்கொண்டு இருந்த சமயம்! வல்வெட்டித்துறை, மல்லாகம், சுன்னாகம், சுழிபுரம், பளை, சாவகச்சேரி, புன்னாலைக்கட்டுவன் என்று எல்லா மூலைகளிலும் இருந்து பலநோக்கு கூட்டுறவு சங்கம், தனியார் கல்வி நிலையங்கள், பாடசாலைகள், அரசாங்க திணைக்களங்கள், அந்த சம்மேளனம்.. இந்த சங்கம் என்று பேரணி ஆரம்பிக்கும். குஞ்சு குருமான் எல்லாம் கம்பஸ் பகுதியில் மொய்த்து போய். பின்னாலே டயஸ் ரோட்டில ரெண்டு, அபிராமி ஹோட்டலுக்கு பின் காணிக்குள் இரண்டு, அக்கம் பக்கம் மூன்று என 90கலிபரும், 50கலிபரும் பாதுகாப்புக்கு! பின்னேரம் ஐந்து மணியளவில் இராமநாதன் வீதிக்கு பேரணி வரும்போது மதில் மேல்(பூனையாக) நின்று வேடிக்கை பார்த்த எனக்கு வயது பன்னிரெண்டோ பதின்மூன்றோ. அப்போதெல்லாம் திரண்டு மிடுக்காக பறந்தால் ஒரே ஒரு அடம்பன் கொடி தான்! மிடுக்கோ மிடுக்கு! இன்றைக்கு அந்த இடத்தில் அந்த காட்சியை பார்க்கும் போது .. சம்பந்தர் ஐயா .. உங்களிட்ட இதை எதிர்பார்க்கவில்லை!

பாபில் மீன்

அண்மையில் கூகிள் ப்ளாக் ஒன்றில் அவர்கள் Google Translate ஐ அறிமுகப்படுத்தி ஆறுவருடம் ஆகிவிட்டது பற்றி குறிப்பிட்டு இருந்தார்கள். அதிலே ஒரு விஷயம் இருந்தது.
By this estimate, most of the translation on the planet is now done by Google Translate. (We can’t speak for the galaxy; Douglas Adams’s “Babel fish” probably has us beat there.)
babelfishஇதுநாள் வரைக்கு பாபில் மீனை சும்மா ஒரு விளையாட்டு பொம்மை என்று தான் நினைத்திருந்தேன். அதற்கு பின்னால் ஒரு கதையே இருப்பது சென்ற வாரம் தான் தெரியவந்தது.
விஷயம் சுவாரசியமானது. இந்த மீன், எங்கள் மூளையில் இருக்கும் அதிர்வுகளை உணரும் ஆற்றல் நிறைந்ததாம். அதனால் மனதில் என்ன நினைத்தாலும், கண்டுபிடித்துவிடுமாம். நாங்கள் என்ன மொழி பேசுகிறோம், எந்த மொழியில் சிந்திக்கிறோம் என்ற சிக்கல் இல்லை. உணரும் அந்த அலைகளை, முன்னால் இருப்பவருக்கு, அவரின் மூளை புரிந்துகொள்ளக்கூடிய அலைவரிசையில் அதிர்வுகளை ஏற்படுத்தும் ஆற்றலும் இருக்காம். இதை தான் Universal Translator என்று அழைப்பார்களாம்!
சரி, இப்படி ஒரு வஸ்து உண்மையிலேயே இருக்கா? ஹீ ஹீ .. “The Hitchhiker's Guide to the Galaxy” டக்லஸ் அடம்ஸ் எழுதிய நாவலில் வந்த மீன் தான் இது! புத்தகத்தை வாசித்து மண்டை காயவேண்டும்! Terry Prachchet வாசம் அடிக்கிறது. ஒரு சின்ன வரி!
"I refuse to prove that I exist," says God, "for proof denies faith, and without faith I am nothing".
"But," says man, "the Babel fish is a dead giveaway, isn't it? It proves you exist and so therefore you don't."
யோசியுங்கள் … யோசிக்க யோசிக்க நிறைய கம்பினேஷன்ஸ் வரும்! ச்சே .. தமிழில் எப்போது இந்த ஸ்டைலில் எழுத்துக்கள் வரப்போகிறதோ!
Velayutham-Vijay-Hansika-Kiss-Photos-Stills-Ninja Romeo-1நான் ஹன்சிகாவை பார்த்து “பார்டா என்னமா கும்முன்னு இருக்கு .. இறுக்கி அணைச்சு ஒரு உம்மா…” என்று மனதுக்குள் யோசித்தால் கூட பாபில் மீன், அந்த அலைகளை அறிந்து, ஹன்சிகாவுக்கு புரியும் மொழியில் கன்வேர்ட் பண்ண, அடுத்த கணமே என் கன்னத்தில் ஹன்சிகா எச்சிலை துடைக்க ஹன்ஹெர்சீப் தேடவேண்டியிருந்தது! துடைக்கும்போது தான் யோசித்தேன் ஆகா ஏடாகூடாமாக எதையாவது யோசித்தால், இந்த மீன் காட்டிக்கொடுத்துவிடுமே… கடவுளே கெட்ட சிந்தனைகளை மனதுக்குள் இருந்து அகற்றிவிடு … மீன் எனக்கு குறு குறுவென்று காதுக்குள் வந்து சொன்னது!
மூதேவி இப்பிடியே யோசிச்சுக்கொண்டிரு .. விடிஞ்சிடும்!

இந்தவார பாடல்!

கிட்டார் இசையை கேட்டவுடனேயே துள்ளி எழுந்தது ஞாபகம் வருது. ஏ ஆர் ரகுமான் வருகிறார் என்றவுடன், அடிச்சு பிடிச்சு, 150 டொலர்ஸ் மச்சி என்று அழுத கஜனை கெஞ்சி கூத்தாடி வாங்க வைத்து, அரங்கத்துள் நுழையும் போது ஒரே ஒரு வேண்டுகோள் தான். கடவுளே “லுக்கே சுப்பி” பாட்டு தலைவர் பாடவேண்டும்! கடவுள் இந்தமுறை என்னை கைவிடவில்லை!
முதலில் promotion!
லதா மங்கேஷ்கரின் பிரமாண்ட உருவம் லேசர் திரையில், அவர் பாட பாட, தலயின் குரலும் சேர, அந்த உயர்ஸ்தாயி எட்டும்போது வேறென்ன வேண்டும் பராபரமே? எப்படி இப்படி ஒரு பாட்டு ரகுமான் மனதில் தோன்றியது என்பது இன்றைக்கும் எனக்கு ஆச்சரியமே. சரியான முறையில், சரியான தருணத்தில் கேட்டால், நீங்கள் எவ்வளவு பெரிய இவனாக இருந்தாலும் கண் கலங்கும். சந்தேகமேயில்லாமல் ரகுமானின் சிறந்த ஐந்து பாடல்களுக்குள் இது வரும்! ஒஸ்கார் வரைக்கும் போன பாடல். ஒஸ்கார் அந்த பாக்கியத்தை மயிரிழையில் தவறவிட்டது!
ரகுமானும் லதாவும் இறுதி பல்லவியில் செய்யும் அட்டகாசம் கொஞ்ச நஞ்சம் இல்லை. தல சுரம் பாடி முன்னர் கேட்டதில்லை. இருவரும் பாடும்போது ஒரு வித ஏக்கம். ஒரு சோகம். மூட் கெட்டுது போ!
மொழி புரியவேண்டியதில்லை. இந்த பாட்டு கடத்தும் விஷயம், இசையை கொண்டே புரிந்துகொள்ளலாம். ஆனாலும் என்ன தான் வரிகள் என்று தேடிப்பார்த்தேன்.
My eyes are waiting for your arrival.
My heart is going through various emotions.
Slowly darkness in creeping in the courtyard, where is my lamp?
The sun is setting and gesturing to the moon, where are you?
Where are you my moon?
How do I show you what is here?
I've drunk water from the fountain
I've touched several clusters of my dreams
The atmosphere is so different and new
மண்டை எரிய வைக்கும் வசனங்கள்! பாலா நேரம் கெட்ட வேளையில் சம்பந்தர் கொடிபிடித்த படத்தை அனுப்பும்போது .. இன்னும் எரிகிறது!

இந்த வார காமெடி

nadodimannan00022இந்திய தூதுக்குழு சரோஜாதேவி தலைமையில் வந்தது இன்னமும் ஞாபகம் இருக்கும் என்று நினைக்கிறேன். அப்போது சுதர்சன நாச்சியப்பர் யாழ்ப்பாணம் போனது A9 ஏசி பஸ்சில்! பஸ்காரனும் விசேஷமாக போட்ட படம் பருத்தி வீரனாம். நாச்சியப்பர், படத்தில கஞ்சா கறுப்புவின் பர்போர்மன்ஸ் பார்த்து நல்லா ரசிச்சிருக்காப்ல! அடுத்தநாள் டக்ளஸ் என்ற நடிகர் ஒருவரை நிஜமாகவே யாழில் பார்த்துவிட, தல வாயடைத்து போய், “நீதாண்டா அடுத்த எம்ஜிஆர்” என்று சொல்லிப்புட்டார்! இத கேட்ட நம்ம புது எம்ஜிஆரும் ஊர் முழுக்க பறையடிக்க, எவனும் சீண்ட இல்ல! கடைசில அவரே தனக்கு தானே சொன்ன பஞ்ச் டயலாக்!
பயபுள்ள பொய் சொல்லீட்டான் போல!
அடுத்த நாளே நம்ம சரவணபவன் எம்பி, சம்பந்தமூர்த்தி நாயனாரை தேசியத்தலைவர் என்று சொல்லிவிட, சம்பந்தர் சொன்ன டயலாக்
“தக்காளி குடுத்த காசுக்கு மேலால கூவுறாண்டா!”
குறையொன்றுமில்லை, மறைமூர்த்தி கண்ணா, குறையொன்றுமில்லை கண்ணா, குறையொன்றுமில்லை கோவிந்தா!

வைகுந்தனும் அனிதாவும் … நடுவில் தாடிக்காரர்!

wines_01“அண்ணே நூற்றி முப்பத்தினாலாவது திருக்குறள் சொல்லுங்க பார்ப்பம்”
இந்த ரெண்டில் எது அடிச்சா கப்பென்று ஏறும்? என்று வெள்ளைக்காரியிடம் மேர்லோவையும் ஷிராசையும் காட்டி விசாரித்துக்கொண்டு இருக்கும் போது தான் படுபாவி வைகுந்தன் குறுக்கே புகுந்து கேட்டான்! “யூ காரி ஒன்” என்று சொல்லிவிட்டு வெள்ளைக்காரியும் இன்னொரு ரெமி மார்ட்டினிடம் போய்விட, கடுப்பானேன். 
இப்ப என்னத்துக்கடா இத கேக்கிற? .. இன்னும் வாங்கவேயில்லையே!”
“அவர் பந்தி பந்தியா எழுதுவார் ஆனா ஒரு குறள் கேட்டா தெரியாது! சும்மா சொல்லன பார்ப்பம்”
முன்னால் நிற்கும் என்னையே “அவர்” என்று விளிக்கும் சாவகச்சேரி தமிழ்!
“தெரியாதடா .. அப்பிடி என்ன தாண்டா இருக்கு அந்த குறளில”
மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்”
“எதை மறந்தாலும் பின்னர் படித்துக்கொள்ளலாம். ஆனால் ஒழுக்கம் கெட்டால் திரும்பிப்பெறமுடியாது! மிஞ்சி மிஞ்சி போனால் மதுரை ஆதீனமானால் ஆகலாம்!”
“அதில்ல அண்ணே .. இன்னொரு விஷயம் இருக்கு .. கண்டுபிடியுங்க பார்ப்பம்!”
வெள்ளைக்காரி இப்போது ரெமிமார்ட்டினை சிரித்து அனுப்பிவிட்டு டகீலா பர்சன்டேஞ் என்ன என்று ஒரு சைனாகாரனுக்கு விளங்கப்படுத்திகொண்டு இருந்தாள்!
“இந்த திருக்குறள் எனக்கு எப்பவுமே வயித்த கலக்கும்டா! நீயே சொல்லடா !”
“இது தெரியாதா அவருக்கு! ஆயிரத்து முன்னூற்று முப்பத்துமூன்று குரலில இந்த குரலில தான் பார்ப்பான் என்ற சொல்லு வந்திருக்கு. திருவள்ளுவர் கூட சாதிய விட்டு வைக்கேல்ல பார்த்தீங்களா?”
“அடக்கப்பட்டுக்கொண்டு இருக்கிறோம் என்று தெரிந்தால் தானே ஒருத்தனாவது எதிர்த்து கிளம்புவான்!  அப்போது சாதியம் ஏற்றுக்கொள்ளப்பட்ட சமூக நடைமுறையாக இருந்திருக்கலாம்.  திருக்குறள் இஸ் நாட் பேர்பேக்ட் பாஸ்!”
v133Thiruvalluvar3“தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும்”

“கணவனை தெய்வமாக தொழுது வாழும் பெண் பெய் என்றால் மழை பெய்யுமாம்! பெண்ணடிமைத்தனம் இல்லையா? கணவன் கடவுளா? பெய் என்றால் பெய்திடுமா? ஜிம்மி கூட பெய்யாது தலைவரே!”
“அண்ணே நீங்க சும்மா கதைக்கோணும் எண்டு கதைக்கிறீங்க .. திருக்குறள் உலக பொதுமறை .. சும்மா நேற்று படலைல முளைச்ச காளான் எல்லாம் வள்ளுவரை விமர்சிக்க தொடங்கீற்று!”
“விமர்சிக்கேல்ல! ஆனா ஏன் விமர்சிக்காம கூடாது? எண்டு கேக்கிறன். இந்த காலத்துக்கேற்ற மனுநீதியை ரெண்டாயிரம் வருஷத்துக்கு முன்னால போய் தேடுறது சரிவருமா? அது வேற புரியாம .. மனப்பாடம் செய்து .. எதுக்கு? உரை மட்டுமே போதாதா? பக்கத்திலேயே பாரதி .. கொஞ்சம் தள்ளி பெரியார் .. ஏன் வெளிநாட்டு அறிஞர்கள் சொன்ன விஷயங்கள், எல்லாவற்றையும் குறை நிறை கண்டு ஆராய்ச்சி செய்து ஒரு தொகுக்கப்பட்ட மனுநீதியை ஒவ்வொரு ஆண்டும் உருவாக்கலாமே. Code of ethics! ஏன் ஒருத்தன் எழுதினதையே பிடிச்சு தொங்கிக்கொண்டு?”
ladies-coupe-anita-nair-193x300“அண்ணே நான் சும்மா பொதுவா தான் கேட்டேன் .. நீங்க சர்வதேச பிரச்சனையாக்கிறீங்க?”
“அனிதா நாயரின் Ladies Coup’ வாசிச்சியா? திருவள்ளுவர் பள்ளி மாணவருக்கு எக்ஸாம் டைம்ல சிம்ம சொப்பனமா இருப்பதை அருமையாக சொல்லியிருப்பார். முக்கி முக்கி பாடமாக்கி ..”
“அண்ணே ப்ளீஸ் ஆரம்பிச்சிடாதீங்க .. இந்த இடத்தில புத்தக விமர்சனம் தொடங்கினா ரொம்ப லெந்தா போயிடுமே !”

பருவமே புதிய பாடல் பாடு!

நோர்வேயை சேர்ந்த எரிக் சொல்கெய்ம் (நம்ம தோஸ்து இல்ல) எடுத்த ஸ்டில்களின் தொகுப்பு. ஒரு வருடம் பூராக தன் வீட்டு கோடியில் கமரா பூட்டி, எடுத்த படங்கள். ஒஸ்லோவின் பருவ மாற்றங்களை அழகாக கவர் பண்ணியிருக்கும் வீடியோ. பாருங்கள்!
ஒரு பத்து தடவை பார்த்திருப்பேன். திருப்பி திருப்பி பார்க்க பார்க்க, ஏதோ ஒரு சோகம். விளக்க முடியவில்லை. திடீரென்று நாற்பது வயதானது போல. இன்னும் ஒரு பத்து தடவை வயசு ..ஐம்பது .. இன்னும் .. அறுபது .. ஒரு கட்டத்துக்கு பின் அந்த வீடியோவை ரசிக்கமுடியவில்லை. வயதாகிவிட்டது!

மன்மதகுஞ்சு ஸ்பெஷல்!

vadivelu09நண்பரும் கவிஞருமான மன்மதகுஞ்சு இரண்டு வாரங்களுக்கு முன்னர் அணிந்த ஜட்டி நாற்றம் உலகமெங்கும் பரவிய நாள் முதல், அடுத்தது என்ன? என்று எந்திரனுக்கு பிறகு ஷங்கர் ரூம் போட்டு பட டிஸ்கஷனுக்கு போனது போல கவிதைக்கு டிஸ்கஸ் பண்ண ஆரம்பித்துவிட்டான். முதலில் ஒரு முழு நீள மொனிக்கா லிவிங்ஸ்கி ஸ்பெஷல் வந்தது. வேண்டாம்டா, இதெல்லாம் படலைக்கு ஆகாது என்று சொல்ல, ஒசாமா, ஈரான் என்று சர்வதேச ரேஞ்சில் ஒரு கவிதை வந்தது. தலையை சுவற்றில் மோத ரெடியாகும்போது தான் போன் பண்ணி புதுசா ஒரு ஐடியா வந்திருக்கு, எழுதியிருக்கிறேன் ஈமெயில் பாரு என்றான்! கோதாரி வாசித்தேன்! யாரோ குமுது டீச்சராம். படிச்ச பையனோட ஓடிப்போயிட்டாவாம்! அந்த டீச்சரை போல எனக்கேன் ஒரு டீச்சர் கிடைக்கேல்ல? என்று ஏங்கி ஏங்கி ஒரு கவிதை. தெரியாத்தனமா மேலிடத்துக்கும் தலைவர் சிசி பண்ணியிருக்கிறார். ரெண்டுநாளா போன் எடுத்தா ஒரு பக்க காது ஆளுக்கு அவுட்டாம்! அவ்வளவு அடி விழுந்திருக்கு!
என்ன கவித எழுதலாம் என்று லீவு போட்டு யோசித்துக்கொண்டிருந்தவனுக்கு, இந்த வீணாப்போன மதுரை ஆதீனம் மாட்டர் எடுத்து கொடுத்திட்டுது. மச்சி எழுதப்போறேன் எண்டான். எனக்கு இன்றைக்குமே நித்தியானந்தா செய்த தவறு எது என்று புரியவில்லை. பிரமச்சரியத்தை போதித்துவிட்டு அதை கடைப்பிடிக்காமல் இருந்தது தவறு தான். இதிலே ரஞ்சிதாவின் அந்தரங்கத்தை இழுப்பது சரியா? சரி மக்களை தவறான வழிப்படுத்தினார் என்றால், ஆண்டாண்டு காலமாக “யாமிருக்க பயமேன்” என்று சொல்லிக்கொண்டு பழனி முதல் நல்லூர் வரை மாளிகை மாளிகையாய் வைத்துக்கொண்டு, “நான் உங்களை காப்பாற்றுவேன், அஞ்சவேண்டாம்” என்று சொல்லிக்கொண்டே உலகை சுற்றும், ஊரை ஏமாற்றும் முருகன் செய்வது தவறில்லையா? என்று எழுதலாம் தான்! என்னை நாத்திகன் என்பார்கள். “முருகன் இல்லை என்று நான் சொல்லவில்லையே! ஏமாற்றுகிறான் என்று தானே சொல்கிறேன்” நான் ஆரம்பித்து மீண்டும் கடவுள் எழுத தயாராயில்லை!!
ரொம்ப நீளமா இருக்கு! கை வைக்கட்டா என்று கேட்க! உன் படலை, நீ தானே பப்ளிஷ் பண்ணுகிறாய். என்ன வேணுமெண்டாலும் செய் என்று சொல்லிய தாராள குண கவிஞன். அங்கே இங்கே வெட்டி எறிந்து டிங்கர் பண்ணி இருக்கிறன்! தல கடுப்பாகுதோ தெரியேல்ல!
சரி இப்ப, ஜட்டிகவிஞரின் ஐட்டத்துக்கு போவோம்!

nithyananda-morning-templeமும்மலங்கள் அடக்கி
முப்பொருளும் ஒடுக்கி
முத்திநெறி முழு இரவும் செய்தாய்!
வெள்ளித்திரை நீயோட்ட,
சின்னத்திரை அதையோட்ட!
நெட்திரையில் கூட நித்தம் நித்தி(தி)ரை
எத்திரை வரலாற்றிலும் முதன்முதலாய்
நித்திருவிளையாடல்!
சொறியன் கூந்தலின் நறியவும் உளவோ?
நக்கீரன் சைட்டில் கூட
பொருள் குற்றம் இல்லை!
 
கடவுளையே கொன்றாய்!
என் மதம் தான் உன் மதம்
ஒற்றுமையாவோம் என்றாய்!
524353_10150712660412337_714962336_9706621_2038533751_nஆட்டம் அடக்கி மனசை ஒடுக்கி
தியானம் பூண சொன்னவரு
வீடியோவே பொய்யடா
வேண்டுமென்றே சதி செய்யுறான்
வெஸ்டர்ன் காரன்!
திரையில் வந்தது எல்லாம் பொய்
நம்பாதே என்றாய் – நாதாரி
தெக்கத்தியனும் அதையே சொன்னான்!
தீர்மானம் போட்டும் கேட்டானில்லை!
தீயவன் எல்லாம் ஈசியாக ஆதீனம் ஆள!
திக்கற்ற தமிழன் பாவம்
தியான பீட கொடியை ஏந்துகிறான்!

இந்த கவிதையை வாசித்தபின், யாழ்ப்பாணத்து நல்லை ஆதீனம், மன்மதகுஞ்சுவுக்கு இளைய ஆதீனம் பட்டம் கொடுத்தாலும் கொடுக்கலாம்!

Contact Form