வியாழ மாற்றம் 31-05-2012 : நாய்கள்!

May 31, 2012

நாய்கள்!

உனக்கப்ப ஒரு வயசு கூட ஆகேல்ல எண்டு நினைக்கிறன். ஏதோ ஒரு எலெக்ஷன். இவங்கள் அமுதலிங்கம், செல்வநாயகம் எல்லாம் சேர்ந்து எடுத்த மாவட்ட சபையா தான் இருக்கோணும்... மறந்துபோச்சு. சுன்னாகம் மயிலினி மகாவித்தியாலயத்தில தேர்தல் வாக்களிப்பு நிலையம். நான் தான் எஸ்பிஓ (Senior Presiding Officer).  நிலையத்து பொறுப்பதிகாரி. முதல் நாளே போய் வோட்டிங் பொக்ஸ் எல்லாம் செக் பண்ணி ரெடி பண்ணி வைக்கோணும். கச்சேரிக்கு போறன். அங்க வாசலிலேயே மறிச்சு திருப்பி அனுப்பீட்டாங்கள்.
குளியாபிட்டியாவில இருந்தெல்லாம் சிங்களவனை இறக்கியிருக்கிறாங்கள். அவங்கள் தான் எல்லா வேலையும் பார்ப்பாங்கள். எங்கள வேணுமெண்டா நேரே வரச்சொன்னாங்கள். அதிகாரிக்கு கொடுக்கவேண்டிய வாகனமும் இல்லை. என்னடா இது சனியன் எண்டு நினைச்சுக்கொண்டே வீட்ட போறன்!

JPLTCB64
அடுத்தநாள் மே 31. 1981 ஆ 82 ஆ? சரியா ஞாபகம் இல்ல. அண்டைக்கு காலம யாழ்ப்பாணம் முழுக்க டென்ஷன் .. கச்சேரி முழுக்க ஆர்மியை இறக்கீட்டான். ஆனா மயிலணி பூத்தில சனமெண்டா .. அப்பிடி ஓரு சனம். தொண்ணூறு வீதம் வோட் விழுந்துது. பின்னேரம் கொஞ்சம் கொஞ்சமாக நியூஸ் வர தொடங்கீட்டுது. மூண்டு போலீசை பெடியள் போட்டவங்கள் எண்டு நினைக்கிறன். கூட்டணியிண்ட ஓபிஸ் சுக்கல் நூறு. டவுணுக்க கடையெல்லாம் உடைக்க தொடங்கீட்டாங்கள். பெட்டியை எடுத்துக்கொண்டு ஆர்மி பாதுகாப்போட பஸ்சில போறம். தாவடிச்சந்தில ஒரு கடைல நிப்பாட்டி ஆர்மியே கதைவை உடைச்சு சிகரெட் எடுக்கிறான். நாங்க ஒண்டும் பறயேல்ல! வீடு போனா காணும்.
நியூஸ் வெளிய வரத்தொடங்கீட்டு. சென்றல் கொலிஜ் பக்கத்தால, அப்ப யாழ்ப்பாணம் எஸ்பியா இருந்த சுந்தரலிங்கம் போய்க்கொண்டிருந்தார். அவருக்கு கீழ வேலை செஞ்ச போலீஸ் காரனெல்லாம் கூவடிக்கிறானாம். சுப்பிரிண்டனுக்கு கூவடிக்கிற அளவுக்கு சேட்டை கூடிப்போச்சுது. இவர் உடனே கொழும்புக்கு அறிவிச்சிருக்கிறார். அங்கால பக்கம் இருந்து எந்த ரெஸ்போன்ஸும் இல்ல. இது சரிவராது எண்டு அவரும் வீட்ட போய்ட்டார்.
ajan_news_1288707822626
இவன் மினிஸ்டர் காமினி எல்லாம் யாழ்ப்பாணத்தில தான் நிக்கிறான். ராவைக்கு தொடங்கீட்டான்கள். ஜேஆரும் சப்போர்ட். ரெண்டு மூண்டு நாளைக்கு எரிஞ்சுது. ரெண்டு மூண்டு சனத்தையும் கொண்டிட்டான்கள் ... அவங்கள் சதிராடுறாங்கள் .. எங்களால ஒண்டும் செய்ய ஏலுதில்ல!
இவன் அல்பிரட் துரையப்பா கலாதியா தொடங்கின லைப்ரரி. அரண்மனை மாதிரி… கிட்ட போனாலே சும்மா நிமிர்த்திக்கொண்டு நிப்பார்! இந்தியால இருந்தெல்லாம் வந்து படிக்கிறவங்கள். ஒரு லட்சம் புத்தகங்கள்.. .. ஏடெல்லாம் இருநதுது ..ஸ்கந்தாவில படிக்கேக்க நானும் தம்பியும் அடிக்கடி போய் நிறைய வாசிச்சிருக்கிறம். நல்லூர் மாதிரி தாண்டா எங்களுக்கு அது .. கோயில்.
ச்சே .. எரிச்சிட்டாங்கள் .. நாயள்!

வாரணம் மூன்று!

ElephantAsian
என்னுடைய “புலம்பெயர் இலக்கியத்தில் வலைப்பூக்கள்” என்ற சாரத்தில் எழுதிய “வாரணம் மூன்று” என்ற கட்டுரைக்கு ஏன் அப்படி ஒரு தலைப்பு? என்று கேட்கிறார்கள்! சம்பந்தமே இல்லையே?சம்பந்தர் பேசுவதில் மட்டும் ஏதும் சம்பந்தம் இருக்கோ?
எழுதும்போது ஏதாவது உருப்படியாக சொல்லவேண்டும் என்று தான் தொடங்கினேன். ஆ ஊ என்றால் போர், அகதி, மரணம், கஷ்ட ஜீவனம், எங்கட ஊர் போல வருமா? என்ற புலம்பல்களை ... வாசித்து வாசித்து வெறுத்துப்போய், டேய் கொஞ்சம் ஹன்சிகாவை கண்ணுல காட்டுங்கப்பா என்று சொல்லும் விஷயம்! நீட்டி முழக்கி கட்டுரை பாணியில் எழுதியும் தள்ளிவிட்டேன். திரும்பவும் வாசிக்கும் போது தான் புரிந்தது. Its not me! ஏண்டா எழுதினோம் என்று இருந்தது!  வாசித்துக்கொண்டிருக்கும்போது அப்பா மொத்தமாக மூன்று தடவை “என்னடா பட்ட பகலில குறட்டை விடுறாய்” என்று தட்டி எழுப்ப வேண்டியிருந்தது. அப்படி அவர் தட்டி எழுப்பிய இடங்களில் ஒவ்வொரு நிறத்தில் ஒவ்வொரு யானையை புகுத்தினேன்! ஒன்று வெள்ளை யானை, மற்றையது கறுப்பு களிறு! கடைசியாக நீலப்பிடி!
images
மீண்டும் ஒருமுறை வாசித்துப்பார்த்த போது அந்த மூன்று யானைகளும் தான் கட்டுரையில் உருப்படியாக இருந்தது போல தோன்றியதால் தலைப்பை “வாரணம் மூன்று” என்று வைத்தாயிற்று.
இத்தால் ஈழத்து இலக்கியவாதிகளுக்கு சொல்லிக்கொள்வது என்னவென்றால், தமிழை வளர்க்கிறேன் பேர்வழி என்று பல்கலைக்கழகங்களில் தள்ளாத “வாலிப” வயதிலும் PhD படிப்பவர்கள் செய்யவேண்டிய விஷயத்தை, பொது ஜனங்கள் வரும் மேடைகளில் அலசவேண்டாம் பிளீஸ்.. மக்களுக்கு தமிழை சுவாரசியமாக கொண்டுசெல்லவேண்டும் .. “ஆவியை ஜனகன் பெற்ற அன்னத்தை அமுதில் வந்த தேவியை பிரிந்ததாலே திகைத்தனை போலும் செய்கை” என்ற வாலி வதை பாடலையோ, அல்லது, “நாணம் என் நாணம் ஒரு வானவில் வரைகிறதே, மௌனம் என் மௌனம் ஒரு வார்த்தைக்கு அலைகிறதே” என்ற சினிமா பாடலையோ கூட அழகாக ரசிக்கும்படி விமர்சித்து பேசினால் கூட்டம் கும்மும். அதை விடுத்து புலம்பெயர் இலக்கியம் என்றால் … தக்காளி புன்னாலைக்கட்டுவான் பஸ் கூட புத்தூரோட ப்ரேக் போட்டிடும்!
try-_white-elephant_-gift-exchange-800x800
இதில சின்ன கொமெடி ஒன்றும் நடந்தது. இங்கே தமிழ்முரசு சஞ்சிகை தளம்(முதலில் ஈழமுரசு என்று தவறுதலாக எழுதிவிட்டேன், மன்னிக்க),  .. என்னிடம் ஒரு வார்த்தை கேட்டிருக்கலாம்! கேட்கவில்லை .. அப்படியே கொப்பி பேஸ்ட் பண்ணி போட்டிருக்கிறார்கள் .. அதே யானைகளோடு! 

பிரெஞ் ஒபன்

inext_p_snc_GangulywithClarஅட போங்கப்பா .. தலைவரை ஐபிஎல் இல சப்போர்ட் Federer_Su12பண்ணினா தக்காளி பூனா வாரியர்ஸ் கட்டக்கடைசியா வந்திருக்கு. முக்காடு போடாக்குறையா facebookல அலையவேண்டியதா போச்சுது. இப்ப பிரெஞ் ஓபன். பாரிஸில் இருக்கும் மருமகள் ஏற்கனவே ரெண்டு மூன்று ஈமெயில் அனுப்பினாப்ள. மாமா யாருக்கு நீங்க சப்போர்ட்? வேற யாரு? ஒரே நிலா ஒரே சூரியன் நம்ம ரோஜர் பெடரர் தான். நமக்கு டெனிஸ் என்றால் அது பெடரர் தான்.  பெடரரை வெல்வதாலேயே வீணாய்ப்போன நடாலை எனக்கு கண்ணுல காட்டகூடாது. முப்பது வயதில் முதல் முதல் டெனிஸ் ராக்கட் பிடிச்ச போது கூட அடிச்ச முதல் அடி பாக் ஹாண்ட் ஸ்லைஸ் தான். பெடரரை அவ்வளவு பிடிக்கும். ஆனாலும் கிளே என்றால் அண்ணன் கொஞ்சம் அடங்கீடுவார். வயசு வேற போச்சுதா. இரண்டாம் சுற்றிலேயே லைட்டா பேஸ்மண்ட் நேற்று ஆடினாப்போல இருந்திச்சு…. ஆடும் வரை ஆடு ராஜா! ஆடாவிட்டாலும் நீ தான் எமக்கு ராஜா!

டொக் …டொக் …டொக்

விசுக்கென்று அறைக்குள் நுழைந்து கதவை உள்பக்கமாக தாழ்பாள் போட்டான் நரேன். பக்கத்தில் நடுங்கியபடியே, ஓடிவந்த மூச்சிறைப்புடன் அபி. பயத்தில் இன்னமும் சிவந்துபோய் இருந்தவளை பார்க்க நரேனுக்கு அந்த பதட்டத்திலும் முத்தமிடவேண்டும் போல் .. “ஏன் ..கதவை திறந்தால் உயிர் போய்விடும் இந்த இடத்தில் எதற்கு இப்பிடி ஒரு சிந்தனை?”, நரேன் அபியை அணைத்துக்கொண்டே அறை நடுவே வந்தான். ஒரே ஒரு பல்ப். எரித்துக்கொண்டிருந்தது.
நாங்க எங்கடா இருக்கிறம் இப்ப?
உஷ் … இது ..
ஆள்காட்டி விரலை அவளின் உதட்டில் வைத்து அழுத்தினான் நரேன். ஹார்ட் பீட் நூற்றி இருபது இருக்கலாம். ட்ரெட்மில்லில் ஓடும்போது, நூற்றி ஐம்பதை தாண்டினால் தான் இரத்தத்தில் இருக்கும் கொலஸ்டரோல் குறைய தொடங்குமாம். பிரவீன் சொல்லியிருக்கிறான். பிரவீன் … எங்கே போயிருப்பான் .. தப்பியிருப்பான் அவன் .. எமக்கு முன்னாலேயே ஓடிப்போனானே.
என்னத்தையாவது பேசடா … பயமா இருக்கு
கொஞ்சம் நேரம் பொறு அபி..
அபி பயத்தில் மூடிய கண்ணை இன்னும் திறக்கவில்லை. நரேன் இப்போது நிமிர்ந்து பார்க்கிறான். அறை மிக விசாலமாக தெரிந்தது ..மிக விசாலமாக .. வெளிச்சத்தில் அறையின் சுவர்களை கூட காணவில்லை. திரும்பிப்பார்த்தான். கதவு தெரிந்தது .. இரண்டு புறமும் சுவர் .. நீண்டு நீண்டு ..என்ன மாதிரியான கட்டடம் இது? ச்சே இப்படி வந்து மாட்டியாச்சு. அடியும் விளங்கேல்ல நுணியும் விளங்கேல்ல.  அபி இன்னமும் கண்ணை திறக்கவில்லை.
6306182-classic-light-bulb-on-the-dark-roomஅபி…
ம்ம்ம்..
இத பார்த்தா அறை போல தெரியேல்ல .. திடீரென்று ஒரு  மூலையில் இருந்து அதுகள் வந்திட்டா?
என்னடா சொல்லுற? பயமுறுத்தாத.. ..இது அறை தானேடா .. வெளிய இருந்து திறக்கும்போது ..உள்ளுக்க பல்ப் மேசை  கூட…
அபி பேசிக்கொண்டு இருக்கும்போதே அவசரமாக ஏதோ அரவம் கேட்டு அவளின் வாயைப்போத்தினான் நரேன். கதவுக்கு வெளியே தான் ஏதோ சத்தம் .. வந்துவிட்டுதுகளா?
டொக் …டொக்….டொக்
இந்த கதவு தான் தட்டப்படுகிறது. இருவருக்கும் ஐந்தும் கெட்டு அறிவும் கெட்டுவிட்டது. அபியை மேசைக்கு அடியில் ஒளியும் படி சொல்லிவிட்டு மெதுவாக நரேன் கதவடிக்கு போனான். ஆயுதம் இல்லை.
டொக் …டொக்….டொக் .. ப்ளீஸ் கதவை திற .. ப்ளீஸ்
உள்ளே நரேனும் அபியும் இருப்பது தட்டுபவனுக்கு தெரிந்திருக்கவேண்டும். இல்லை பொதுவாக தான் சொல்லுகிறானா? திரும்பி அபியை பார்த்தால் .. நடுங்கிக்கொண்டு இருந்தாள். இன்னமும் சிவந்து .. அவளை அப்படியே .. ச்சே புத்தி புத்தி..
நரேன் … நீ தான் எண்டு தெரியும் .. பிளீஸ் திற .. அவங்கள் வைகுண்டத்துக்கும் வந்திட்டாங்கள்!
திடுக்கிட்டான் நரேன். வைகுண்டமும் போச்சா. கடவுளே என்ன ஊழிடா இது.. கொஞ்சமே தைரியத்தை வரவழைத்துக்கொண்டு மெதுவாக பேசினான் நரேன்.brahma
நீ யார் என்று முதலில் சொல்லு .. உன்னை எனக்கு தெரியுமா?
தெரியுமாவா? உன்னை படைச்சதே நான் தாண்டா .. அப்பன்டா!
காலஞ்சென்ற சபாபதிப்பிள்ளை தணிகாசலம், நரேனின் அப்பன், ஐஞ்சாம் வகுப்பு ஸ்கொலர்ஷிப்பில பெயிலானதுக்கு முதுகுல போட்டது சன்னமாக அவனுக்கு ஞாபகம் வர,
நரகத்தையும் பிடிச்சிட்டாங்களா?
டேய் நான் வேத முதல்வன்டா .. உன்னை .. அபியை … இந்த அறையை .. எல்லாத்தையும் படைச்சவன்!
ஓ நீயா .. சொறி நீங்களா .. உங்களுக்கே ஆப்பு வச்சிட்டாங்களா? என்று சொல்லிக்கொண்டே தாழ்ப்பாளை மெதுவாக திறந்துகொண்டிருக்கும்போதே வெடுக்கென்று புகுந்தான் அவன்.
அவன்! வேத முதல்வனா அவன்? ம்ம்ஹூம். கன்னங்ககறுப்பாக .. மூன்று தலையை வேறு காணோம்.. ஏமாற்றிவிட்டான் பாவி. இவன் அவன் ஆளா? எங்களை போல அகதியா? மூன்று பேருக்கு இந்த அறைபோதுமா? நரேன் யோசித்துக்கொண்டே இருக்கும்போது இப்போதைக்கு நான்முகன் நடு அறைக்கு போய்விட்டிருந்தான். அபி பயத்தில் விறைத்து இன்னும் சுருண்டு  போயிருந்தாள்.
நீங்கள் நான்முகன் தான் என்பதற்கு என்ன அடையாளம்? நான்முகன் ஆரியன் அல்லவா? உங்களை பார்த்தால் கறுப்பாக இருக்கிறதே? சிவனா? இல்லை சுமந்திரனா? சொல்லுங்களேன்.

2255781557_d7148597a7சிரித்தான். பல்லெல்லாம் கறுப்பு. வெளியில் தெரியும் எந்த இடமும் வெள்ளை இல்லை. கறுப்பு. சனீஸ்வரன் போல .. ஏமாற்றுப்பட்டுவிட்டோம் ச்சே .. எழுந்து ஓடும்போது ஏழரை ஆரம்பித்ததை மறந்தேவிட்டேனே என்று நரேன் குழம்பிக்கொண்டிருக்க, நான்முகன் aka சனியன் இப்போது அபியை பார்த்தான். அபி இன்னமும் சுருண்டு, நடுங்கி .. முன்னே சொன்ன எல்லா விவரணங்களும் இன்னமும் அப்படியே.
சொல்லுங்க .. நீங்க யாரு … நீ..ங்க தான் பிரம்மன் எண்டதுக்கு
வாயை மூடுமாறு சைகை செய்துகொண்டே மேலே எரிந்துகொண்டிருந்த பல்ப்பை பார்த்து கை நீட்டினான் அவன்.. பல்ப் பட படவென்று மின்னத் தொடங்கியது .. வெளிச்சமும் இருளும் .. வெளிச்சமும் இருளும் … இருண்டபோது தான் தூரத்தில் சின்னதாய் இன்னொரு எல்ஈடி பல்ப்பும் இருந்தது தெரிய .. திடீரென்று ஒட்டுமொத்தமாய் பல்ப் அணைந்துவிட்டது. வீல்…… என்று கத்தினாள் அபி. எல்ஈடி இன்னமும் எரிந்தது. அந்த வெளிச்சத்தில், மிரண்டுபோயிருந்தாலும் அபியின் அழகு. எல்ஈடி தோத்துது போ!
ஹ ஹ ஹ .. சிரித்துக்கொண்டே “இப்ப பாரு” என்று நான்முகன் aka சனியன் சொல்ல மீண்டும் பல்ப் எரிந்தது. அறை முழுதும் வெளிச்சம்.  காய்த்துகொண்டிருந்த எல்ஈடியை காணவில்லை!
கடவுள் என்று சொல்லிக்கொண்டு வந்தவன் வித்தை காட்டுகிறான். அபி நரேனிடம் “இவனை எப்படியாவது வெளியே அனுப்பு” என்று கிசுகிசுக்கிறாள். நமக்கே சாப்பாடு இல்லை. மூன்றுபேரை இந்த அறை தாங்குமா?. நரேனுக்கு ஒன்றுமே புரியவில்லை. பிரச்சனைக்கு ஒளிந்து ஓடி அறைக்குள் வந்தால் இவன் இப்படி வந்து ஒட்டிகொண்டானே. பிரம்மஹத்தி!IMG2716-L
“பசிக்குதா அபி ?”
கேட்டுக்கொண்டே அவன் தன் கறுப்புக்கோட்டுக்குள் இருந்து எதையோ எடுக்கும்போது தான் அபி கவனித்தாள். அட … கறுத்தக்கொழும்பான். கோண்டாவில் உயர் சாதி மாம்பழம்! இப்போது அபியின் சிவந்த உதடுகளில் இலேசாக ஈரம் ஊறத்தொடங்கியது. “எத்தனை நாளாயிற்று இந்த மாம்பழத்தை சாப்பிட்டு. இவர் கடவுளே தான்!” என்று அபி யோசிக்கும்போது, அந்த கிரனைட்டை கண்ட நரேன் வெலவெலத்து போனான். இவன் ஏன் கிரனேட்டை எடுக்கிறான்?  .. என்ன இது! சோதனை உள்ளேயுமா? ஆண்டவா!
டொக் …டொக்….டொக்

இந்த வார பாடல் : Walking in the moon light!

எந்தா மலையாள ஓமணகுட்டி ஈ நித்யா இருக்காளோ .. அவள் அடிக்கடி பறையுமாக்கும். ஜேகே நேனு(டேய் இது தெலுங்கடா) வல்லிய சிந்து பாடும் கண்டேளா( இது பாலக்காடாக்கும்) .. ஈ பாட்டை ஒருக்காவேணும் நிண்ட படலையில் போடணுமாக்கும் குட்டா!
nithya-menon-free-wallpapers121
“குட்டா” என்று கூப்பிட்ட பின்னும் போடாவிட்டால் எங்கள் காதலுக்கு என்னப்பா மரியாதை? சத்யம் சிவம் சுந்தரம் படத்துக்காக வித்தியாசாகர் இசையில் தல ஹரிஹரன் பாடியது. முதலில் கேளுங்கள் .. அப்புறம் பாட்டுக்கு!


ஒலிப்பதிவு நடந்துகொண்டிருக்கும் போது வித்தியாசாகர் பாத்ரூம் போயிருக்கவேண்டும் போல … கிடைத்த காப்பில் ஹரிஹரன் கிறிஸ்கைல் ஆகிவிட்டார். வழமையான ஹரிஹர சங்கதிகள் பிர்க்காகள் மட்டுமில்லாமல் இந்த பாட்டில் எக்ஸ்ட்ராவாக ஒரு அழகான பாவமும் இருக்கும். “மெய்யோடு சேர்த்தால் ஆராய்ச்ச மேளம்” என்னும்போது கதகளி தாளமும் தவழ .. one of the best romantic songs மீண்டுமொருமுறை வித்தியாசாகர் பள்ளியில் இருந்து.
இந்த பாடல் வெளியானது 1999. இதே பாடல் தான் எட்டு வருடங்கள் கழித்து “கண்ணால் பேசும் பெண்ணே” ஆனது. எஸ்பிபி தேவையில்லாமல் “வாயை” கொடுத்துவிட்டார்.  என்ன தான் சிரித்து மழுப்பினாலும்  .. ஹரிஹரன் version உடன் ஒப்பிடும்போது மாற்று கொஞ்சம் குறைகிறது என்று சொல்… ஆ அம்மா.. யாரோ படலையடியில கல்லெறியிறாங்கள் .. ஓகே ஓகே எஸ்பிபி பாட்டும் நல்லாத்தான் இருக்கு.


குத்துங்க எஜமான் குத்துங்க!

இந்த மன்மதகுஞ்சுக்கு அப்பன் காரன் எந்த நேரத்தில ……. சாரி .. பெயர் வச்சானோ தெரியாது. அனுப்புற படங்கள் எல்லாம் அந்த மாதிரியாகவே இருக்கு!
AuN-DWFCIAAgmnk.jpg large
டேய் .. நாங்களும் என்ஜினியரிங் தாண்டா செஞ்சோம்! பைனல் இயர்ல ஒரு ஜில்லையும் காணோம் .. ஜங்கையும் காணோம் ஜக்கையும் காணோம். அப்புறம் சாப்ட்வேர் கம்பெனி .. அத ஏண்டா கேக்கிற? .. எச்ஆர்ல ஒரு சிங்களத்தி கொஞ்சம் ஓகே … சிரிச்சேன் ..சிரிச்சா. பார்ட்டிக்கு போனா, நான் கொறிச்சேன் .. அவ வெறிச்சாடா! அடுத்தநாளு கடற்கரைல எங்கூட ஆணி புடுங்கிற ஒரு நாதாறியோட பொரிச்சாடா! மக்கா கடலை பொரிச்சாடா! இனி குரைச்சென்ன வரப்போகுதெண்டு, ஆன் சைட்டுக்கு சிங்கப்பூர் போனா .. டிரெஸ்ஸு எல்லாம் ஓகே தாண்டா…போட்டத விட போடாதது தான் அதிகம் தெரியும்! ஆனா தக்காளி அதுக சைனீஸ்காரிக சிரிச்சாலே டெரரா இருக்கும்டா! பேசினா அதுக்கப்புறம் எந்த பொண்ணுங்கள பார்த்தாலும் பேதியாயிடுவ .. அப்படி ஒரு பிடாரிங்க! வேணாம்டா வம்பு .. பேசாமா நித்தியானந்தரா போய் அவ்வப்போ ஆன்மீக பரிசோதனைகளை செய்வோம் எண்டு ஆஸ்திரேலியா வந்தா .. கேதா சொல்லுறான்
“அண்ணே நீங்கல்லாம் ஆணியே புடுங்க போறதில்லை”

Contact form