டேய் ஜேகே : அண்ணாச்சி ஸ்பெஷல்!
அண்ணாச்சியை தெரிந்திருக்கும்! மக்கள் டிவியில் கலக்கிவிட்டு இப்போது ஆதித்தியா டிவியில் கலாயத்துக்கொண்டு திரிபவர்! ஆரம்பத்திலேயே அவர் இன்டர்வியூ ஒன்று.
இன்றைக்கு டேய் ஜேகே என்று கேட்பவர் நம்ம அண்ணாச்சி தான்!

“புறக்கோலம் காட்டுதல்” அப்பிடீன்னு உங்க யாழ்ப்பாணத்தில சொல்லுவீங்க இல்லையா? அப்பிடீன்னா என்ன?
ஒழுங்கா வெளிக்கிட்டு போகாம பீத்தல் சட்டைய போட்டுகொண்டு போறத தான் புறக்கோலம் காட்டுதல் எண்டு சொல்லுவாங்கள்
“காலைல எழுந்து வெளிக்கு போறதுதான்… “புறக்கோலம் காட்டுதல்” ன்னு இந்த பையன் சொல்லுது!

அட நீயி எழுத்தாளராமே… ஒரு திருமணம் முடிக்கும் பொண்ணு எப்பிடி இருக்கணும்னு சொல்லு பார்க்கலாம்?
ஆளாளுக்கு இப்பெல்லாம் தாலி கழுத்தில ஏறும்போதே ரிலேஷன்ஷிப் ஸ்டேடஸ் போட்டு ஹனிமூன் படம் எல்லாம் Facebookல போடுறாங்க. அதால பொண்ணு படிச்சிருக்கோ, பணியாரம் சுடுமோ, ஒரு மண்ணும் தேவையில்ல .. ஜோடியா Facebookல படம் போட்டா குறைஞ்சது நூறு லைக்கும், ஐம்பது கொமெண்டும் வரவேணும். அதுல .. “Beautiful Bride” என்று ரெண்டு கொமெண்டு நிச்சயம் கிடைக்கணும். கலியாணம் கட்டலையே என்று எல்லா பாச்சலர் பசங்களுக்கும், அவசரப்பட்டு கட்டீட்டமோ என்று கட்டினவங்களும் வவுறு எரியணும்! அப்பிடி இருக்கணும் சார் பொண்ணு!அட தம்பி Facebook ல தான குடும்பம் நடத்த போறாராம் .. சரி அவர் பாடு!

போன வாரம் இந்த அப்பிள் கம்பனி காரங்க ஏதோ புதுசா அறிவிச்சாங்கலாமே? கொஞ்சம் சொல்லுங்க தம்பி!
அப்பிள், தங்களது mobile system ஆன iOS இன் லேட்டஸ்ட் வேர்ஷனை வெளியிட்டு இருக்கிறது. SIRI தொழில்நுட்பம் இப்போது iPad3 க்கும் வந்துவிட்டது. Facebook பாவனை சிஸ்டத்துடன் integrate ஆகி, ஜேகே யின் பதிவுகளை வாசிக்கும்போதே “நல்லா இருக்கு”, “உங்கட நீளம் ரொம்ப அதிகம்!”, “குஷ்பு இடுப்பு தூக்கல்” என்றோ அல்லது வெறுமனே “Hey .. just like that bugger’s latest post” என்றோ SIRI க்கு சொன்னால் அதுவே கமென்ட்டிவிடும். கார்களில் கூட இனிமேல் iPhone integrated system வரப்போகிறது. Google Car, Google Glass என்று கூகிளின் எதிர்கால தொழில்நுட்பங்களுக்கான அடிப்படியே Google Maps தான். 30% Google Maps பாவனையாளர்கள் அப்பிள் காரர்கள் தான். அதற்கும் சங்கு. அப்பிள் TomTom போன்ற பிரபல கம்பெனிகளுடன் இணைந்து Maps மென்பொருளை தயாரித்து iPad, iPhone இல் வெளியிட்டுவிட, Google காரர்கள் பேயறைந்துபோய் நிற்கிறார்கள்.
மாப்பு வச்சிட்டாண்டா ஆப்பு!
புகைஞ்சு போச்சு! தல செமி பைனலோட அவுட்! அந்த பயல் நடால் வேற ஈஸியா வென்றுவிட்டான். கிளே கோர்ட் என்றால் நடாலை அடிக்க ஆளே இல்லை என்ற நிலைமை. இப்படியே போனால் பெடரரின் பதினாறு கிராண்ட்ஸ்லாம் எண்ணிக்கையும் முறியடிக்கப்படலாம். தல விம்பிள்டனிலாவது எதையாச்சும் செய்யும் என்று வெயிட்டிங். காய்ஞ்சு போய் கெடந்தவனுக்கு, லவுட் ஸ்பீக்கருக்கு பொறந்த ஷரபோவா கப் அடிச்சது கொஞ்சமே ஆறுதல்!தம்பி சொல்லுது, ஷரபோவா பொண்ணு ஒரு கப்புவாம்.. என்ன சொல்லுறது சர்தானே?
என்னத்த இலக்கியம்.. என்னத்த எழுதி!
இலக்கிய சந்திப்பு என்ற மிரட்டலோடு, சென்றவாரம் பாலாவும் கேதாவும் நானும் சிட்னி போனோம். போயிறங்கும் போது இரவு மணி பதினொன்று. மணிமேகலை அக்காவுடன் பேச உட்கார்ந்தால், பேசி பேசி பேசி நான்கு மணியாகி தொண்டை கட்டிவிட்டது. அந்தநேரம் பார்த்து அதர்வ வேதம், உபநிடதங்கள் சொல்லும் சக்திகள் பற்றி அண்ணன் கேதா ஆரம்பிக்க, அடக்கடவுளே… எங்கிருந்தோ குறட்டை சத்தம்! கடவுள் இருக்கிறார்.
அடுத்தநாள் நிகழ்வு. என் விஷயம் சிறுகதை. சிறுகதை என்றால் மனதில் அட்லீஸ்ட் ஒரு கூழாங்கல்லையேனும் நகர்த்தவேண்டும் என்று ஹெமிங்வேயை எடுகோள் காட்டி, அதுவே சிறந்த சிறுகதை என்றால் பத்துவருடம் கழிந்தும் கல்லு நகரவேண்டும் என்றேன். கோகிலா மகேந்திரனின் சிறுகதை சிறிது அசைத்தது. கல்லு நகருமா அல்லது வெறும் உரைகல்லா என்று பத்துவருடம் கழித்து தான் சொல்லமுடியும் என்றெல்லாம் ஏதோ உளறி முடிக்க விஷயங்கள் கவிதைக்கு நகர்ந்தது.கோகிலா மகேந்திரனும் கேதாவும், கவிதைக்கு சந்தம் வேண்டுமா, வேண்டாமா என பற்றியாட், ஸ்கட் ஏவுகணைகளை அங்கும் இங்குமாய் வீசியதில் அவ்வப்போது மகாகவி உருத்திரமூர்த்தி, நகுலன், புதுவை ரத்தினதுரை கவிதைகள் சன்னமாக தெறித்து விழந்தன.
“எனக்கென்று யாருமில்லை,நான் கூட!”

யசோ அண்ணேயும் சக்திவேல் அண்ணேயும் வந்திருந்தார்கள். உனக்கெல்லாம் என்ன இசை தெரியும் என்று கேட்டுக்கொண்டே எல். சுப்ரமணியத்தின் வயலின் டிவிடியை சக்திவேல் அண்ணே கொடுத்தார். வாசகி ஒருவர் மூன்றுமணிநேரம் டிரைவ் பண்ணி பார்க்க வந்திருப்பதாக யாரோ வந்து சொல்ல, அன்றைக்கென்று பார்த்து சனியன் பிடிச்ச தொப்பியை கொண்டுபோகவில்லை! சரி சக்திவேல் அண்ணேயின் தலையை பார்த்துவிட்டு, நம்பிக்கையில் பக்கத்தில் கூப்பிட்டு நிறுத்திக்கொண்டு, ஹாய் என்றேன்! என்ன மண்ணுக்கு ஆறாவடுவை இப்படி விமர்சித்தீர்கள்? என்று ஹாய்க்கு பதில் வந்தது! யாரோ “தொப்பி தொப்பி தொப்பி” என்ற மைன்ட் வாய்ஸில் சொன்னது கேட்டது!
முடிந்து ஒரு இந்தியன் ரெஸ்டாரன்ட்டில் கூடிப்பேசும்போது தான் சந்திப்பின் சுவாரசியம் இன்னும் அதிகரித்தது. பேச்சு ஷோபாசக்தி, வண்ணநிலவன், சுஜாதா, யோ.கர்ணன், புதுமைப்பித்தன், ஜெமோ, சாரு எல்லாம் தாண்டி கடைசியில் கடவுள் பற்றி முடிந்தது. கடவுளை விளக்கி வழமை போல ஒரே புள்ளியை வந்தடைந்தபோது நன்றாக இருட்டிவிட்டது.
தேடிவந்து வாழ்த்தியதும், மெல்பேர்ன் போய் சேரும் முன்னமேயே தொலைபேசியில் “கவனமாக போய் சேர்ந்தீயா?” என்று யசோ அண்ணா விசாரித்ததும், கேட்டவுடனேயே “பூவரசம் வேலியும் புலுனிக் குஞ்சுகளும்” என்ற புதுவை இரத்தினதுரையின் கவிதைத்தொகுப்பை மணிமேகலை அக்கா தூக்கித்தந்ததும், இரண்டு மூன்று புத்தகங்களை கேட்காமலேயே முருகபூபதி ஐயா என் பையில் வைத்ததும், வீடு வந்து ஈமெயில் செக் பண்ணினால் மயிலன் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியிருப்பதும் …. என்ன தான் சொல்லவருகிறார்கள் என்று யோசித்தேன்! கதையை விட்டிட்டு எழுது என்கிறார்கள்!
“குளிர் எலும்பைத் தொடுகிறது.புகைப்படலம் நகரை கவ்வுகிறது. குளிரில் பிளாட்பாரத்தில் சிறுமி ஒருத்தி சாக்குப்பையை தன்மேல் சுற்றிக்கொண்டு தன் தங்கச்சியையும் அணைத்துக்கொண்டு மரத்தடியில் தூங்குவதற்கு ஆயத்தம் செய்கிறாள். இலக்கியம் என்பதே ஒரு தேவையில்லாத சமாச்சாரமாக படுகிறது. அப்போது எல்லாக் கதைகளையும் கவிதைகளையும் எரித்து அவளை சூடு பண்ணவேண்டும் போலிருக்கிறது”-- கணையாழியின் கடைசிப்பக்கங்கள், ஜனவரி, 1980!
ஹைக்கூ!
ஹைக்கூ கவிதை என்பது வெறும் மூன்று வரியில் முடியும் ஜாலம் இல்லை. அது ஒரு அனுபவத்தை ஆளவேண்டும். இரண்டு வரிகளில் இருக்கும் வெறுமை, வேற்றுமை மூன்றாம் வரியில் நிறைந்து வழிந்து … சலனத்தை காட்டி சலனப்படும் இந்த படம் கூட ஒரு ஹைக்கூ தான்!
தூண்டில் வீசும் சிறுவன்.
விண்மீன் எல்லாம் கடலில் விழுந்து
மண்புழு தேடி அலைகிறது!
கேதா எடுத்த படம். National Geographic வெப்சைட்டில் வந்திருக்கிறது. நம்மிடையே இருந்து ஒருத்தன் பூவாகி, பிஞ்சாகி, காய்த்து பழமாகி National Geographic வெப்சைட்டில் பதமாகி நிற்கிறான். ஒரு லைக் கூட போடவேண்டாமா?
இந்தக்காதலை நான் அடைய!
தமிழில் ஆடிக்கொருமுறை மெலடி வரும். அதிலும் அமாவாசை பௌர்ணமிக்கு தான் அழகான வரிகளுடன் கூடி வரும். கரு பழனியப்பன், வித்யாசாகர் இணைந்தால் பல பௌர்ணமிகள் ஒன்று சேர்ந்து சூரியனை மறைக்கும். ச்சே .. கவிதையுமில்லாம கதையுமில்லாம என்ன எழுத்து இது? மாட்டருக்கு வருவோம்.
மந்திரப்புன்னகை, வசனங்களுக்காகவே வெற்றியடைந்த படம். படத்தின் இன்டெலிஜென்ட் ஸ்க்ரீன்ப்ளே ஏற்கனவே “Beautiful Mind” படத்தில் வந்திருந்ததால் ஊகிக்கமுடிந்தது. ஹீரோ ஒரு womaniser. கண்ணில் காணும் எந்த பெண்ணும் முழம் பூவுக்கோ, டொமினோஸ் பிஸ்ஸாவுக்கோ மடிவார்கள் என்று நினைக்கும் சைக்கோ. இவளை காண்கிறான். காதல். அட வெறும் கோகுலத்தில் சீதை, கள்வனின் காதலி ரக காதல் கதை என்று நினைத்தால் .. ஏமாந்து போவீர்கள் .. இது கரு பழனியப்பன் படம் பாஸ்! ஒரு அமைதியான மழை நாளில் அவரின் பிரிவோம் சந்திப்போம் படத்தை பாருங்கள். ஆளை அடித்து காயபோடவில்லை என்றால் … ப்ச்ச் .. காயப்போடும்!
“முத்தம் ஒன்று கொடுத்தால் முத்தமிழ்” என்று ஒரு கதை .. குட்டிக்கதை. கதையின் இறுதியில் சேர்த்த அத்தனை வரிகளும் இந்த பாடலில் இருந்து உருவியது தான். அறிவுமதி கவிதை. பாத்திரங்களின் குணாதிசயம் அறிந்து எழுதிய வரிகள்.
இந்தக் காதலை நான் அடையஅவன் அப்படி பாட, அவளுக்கு காதல் கழுத்து வரை நெரிக்கிறது. வார்த்தை வரமாடேங்கிறது.
எத்தனைக் காமம் கடந்து வந்தேன்
அப்புறம் ஒரு வரி!இந்த மௌனத்தை நான் உணர
எத்தனை வார்த்தைகள் கடந்து வந்தேன்
அடை மழை நடுவிலேஇதுக்கு மேலும் கவிதை எழுதமுடியுமா? என்று நினைக்கையில் தான் அறிவுமதிக்குள் இருந்த கவிஞன் வியாபித்து எழுகிறான்.
உடையிலே முழுவதாய்
வெயில் சுட நனைகிறேன்
தேனிதழாலே
இருவரே நெரிசலாய்என்ன கவிதைடா இது!
முதல் முறை உணர்கிறேன்
ஒரு வரிக் கவிதையாய்
ஆனவனாலே
யுரேகா!

தடுப்பை தாண்டிய இடுப்பு – கிள்ளிகடுப்பை மூட்டினான் உடன் பிறப்புதுடுப்பு கரண்டு போன உறுப்பு - ஜொள்ளிமடிப்பு கண்டான் இந்த கறுப்பு!
//மயிலன் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியிருப்பதும் …. என்ன தான் சொல்லவருகிறார்கள் என்று யோசித்தேன்! கதையை விட்டிட்டு எழுது என்கிறார்கள்!//
ReplyDelete:)
// தல விம்பிள்டனிலாவது எதையாச்சும் செய்யும் என்று வெயிட்டிங். காய்ஞ்சு போய் கெடந்தவனுக்கு, லவுட் ஸ்பீக்கருக்கு பொறந்த ஷரபோவா கப் அடிச்சது கொஞ்சமே ஆறுதல்! //
ReplyDeleteஅதே அதே... :(
//ஜோடியா Facebookல படம் போட்டா குறைஞ்சது நூறு லைக்கும், ஐம்பது கொமெண்டும் வரவேணும். அதுல .. “Beautiful Bride” என்று ரெண்டு கொமெண்டு நிச்சயம் வேணும்.//
ReplyDeleteநான் சுதாரிச்சுக்கிறேன் ...ஹி ஹி...
மொத்தத்துலயும் இடுப்புதான் டாப்பு
ReplyDelete//தடுப்பை தாண்டிய இடுப்பு –//
ReplyDeleteஅட அட அட...
//கிள்ளி கடுப்பை மூட்டினான் உடன் பிறப்பு //
ஆமா தல...
//துடுப்பு கரண்டு போன உறுப்பு //
பாஸ்...நீங்க எத சொல்றீங்க...? :)
நன்றி மயிலன் ..
ReplyDelete////துடுப்பு கரண்டு போன உறுப்பு //
பாஸ்...நீங்க எத சொல்றீங்க...? :)//
கலைஞரோட நம்மள கோர்த்து விடாம தூங்க மாட்டீங்க போல :)
நன்றி இரவுவானம் அவர்களே!
ReplyDelete//மொத்தத்துலயும் இடுப்புதான் டாப்பு//
நீங்கள் கலைஞர் தான்!!
good one
ReplyDelete/கலியாணம் கட்டலையே என்று எல்லா பாச்சலர் பசங்களுக்கும், அவசரப்பட்டு கட்டீட்டமோ என்று கட்டினவங்களும் வவுறு எரியணும்!//
ReplyDeleteஅனுபவம் பேசுகிறது . போட்டு தாக்குங்க .
இந்த வார ஹைகு கவிதையும் ,அந்த போட்டோ வும் அருமை .
நேற்றுக் கூட, ஈழம் மலர்ந்த பின்புதான் தன்னுடைய உயிர் பிரியும் என்று அறிக்கை விடுகிறார் இந்த கருணாநிதி . அவர் சொல்லுவதில் உண்மை இருக்கத்தான் செய்கிறது .
குஸ்புவின் இடுப்பை பார்த்தவுடன் அய்யா கலைஞர் எழுதிய இலக்கிய கவிதையாகவே இதனைப் பார்கிறேன் .
//தடுப்பை தாண்டிய இடுப்பு – கிள்ளி
கடுப்பை மூட்டினான் உடன் பிறப்பு
துடுப்பு கரண்டு போன உறுப்பு - ஜொள்ளி
மடிப்பு கண்டான் இந்த கறுப்பு!//
உங்களின் நையாண்டித்தனம் நாளுக்கு நாள் மிளிர்கிறது .
/////////கலியாணம் கட்டலையே என்று எல்லா பாச்சலர் பசங்களுக்கும், அவசரப்பட்டு கட்டீட்டமோ என்று கட்டினவங்களும் வவுறு எரியணும்! அப்பிடி இருக்கணும் சார் பொண்ணு!/////////
ReplyDeleteஎந்த அளவுக்கு டெவலப் ஆகிருக்காய்ங்கன்னு பாருங்க.!
///அண்ணாச்சியை தெரிந்திருக்கும்! மக்கள் டிவியில் கலக்கிவிட்டு இப்போது ஆதித்தியா டிவியில் கலாயத்துக்கொண்டு திரிபவர்!///
ReplyDeleteஅண்ணாச்சியை மக்கள் TV-யில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் சில ஆங்கில வார்த்தைக்கு தமிழில் என்ன அர்த்தம் என்று கேட்டு எல்லோரையும் விழிபிதுங்க வைத்துக்கொண்டிருப்பார்.! நான் அவருடைய சில ப்ரோகிராம் தான் பார்த்திருக்கேன் அதிலையே அவரை எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சு.! இப்போ நான் இந்தியாவை விட்டு வெளியில் இருப்பதால் இவருடைய நிகழ்ச்சிகளை பார்க்க முடிவதில்லை.!
Why JK khushboo idupellam? Thevai illai ena thondruhiradhu.
ReplyDeleteஅருமை ஹைக்கூ!
ReplyDeleteJK, I was busy now a days but continue to reading your posts but not commenting. I hope things will improve next month for me. Anyway, Thanks for sharing Ketha's nice photo. Do you think what happened to Kushboo is a funny incidence...one week in Q&A is OK, again now with picture...is it nice? please don't mistake me...it is my opinion.
ReplyDeleteநன்றி சமுத்ரா!
ReplyDeleteநன்றி முருகேசன் ..
ReplyDelete//அனுபவம் பேசுகிறது . போட்டு தாக்குங்க .//
பாஸ் சும்மா கடுப்ப கிளராதீங்க!
நன்றி வரலாற்று சுவடுகள் ..
ReplyDeleteநாங்களும் டெவலப் ஆவோம்ல!
நன்றி ckbhagirathi...
ReplyDeleteதேவையில்லை என்று தான் எனக்கும் தோன்றுகிறது .. லொள்ளு சேர்க்கவேண்டும் என்று எழுதியதில் .. இப்படி ஆகிவிட்டது .. இனி தவிர்க்க முயற்சி செய்கிறேன்.
நன்றி திண்டுக்கல் தனபாலன்.
ReplyDeleteThanks Mohan ...
ReplyDelete//.one week in Q&A is OK, again now with picture//
Yes, later I realized it was an overdose. It also distracted Ketha's photo and Haiku. My bad.. Will try to avoid in future.
இலக்கிய கூட்டத்திற்கு பின்னான எமது இலக்கிய அரட்டை மனதுக்கு நிறைவாக இருந்தது, குறுகிய நேர சந்திப்பானதால் எல்லாமே ஒரு அவசரத்தில் கதைக்கவேண்டியதாய்விட்டது, அடுத்த சந்திப்பில் நிறையவே பேசுவோம்..
ReplyDeleteசின்ன வேண்டுகோள், கூட்டத்துக்கு நேரம்சென்று வந்ததனால் உங்கள் உரையை முழுமையாக கேட்க்கமுடியவில்லை கூட்டத்தில் நீங்கள் பேசியதை பதிவாக போடுவீர்களா????
ஒழுங்கா வெளிக்கிட்டு போகாம பீத்தல் சட்டைய போட்டுகொண்டு போறத தான் புறக்கோலம் காட்டுதல் எண்டு சொல்லுவாங்கள்//
ReplyDeleteNot sure. Where is Shakthivel anna?
அட நீயி எழுத்தாளராமே… ஒரு திருமணம் முடிக்கும் பொண்ணு எப்பிடி இருக்கணும்னு சொல்லு பார்க்கலாம்
Nowadays you are spending more time in this section so its mean you are going to..........
பிரெஞ்சு ஓபன் என்னாச்சு தம்பி?
ReplyDeleteVery sad.I hate Nadal and Djokovic.We are also waiting for Wimbledon.
அன்றைக்கென்று பார்த்து சனியன் பிடிச்ச தொப்பியை கொண்டுபோகவில்லை!
Haa haa.........don't worry
மயிலன் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியிருப்பதும்
Hats off to Dr. Mailan.
கேதா எடுத்த படம். National Geographic வெப்சைட்டில் வந்திருக்கிறது. நம்மிடையே இருந்து ஒருத்தன் பூவாகி, பிஞ்சாகி, காய்த்து பழமாகி National Geographic வெப்சைட்டில் பதமாகி நிற்கிறான். ஒரு லைக் கூட போடவேண்டாமா?
Excellent.Done
யுரேகா
Again..Its toomuch JK.You are passing your line.
I don't have tamil typing system in my computer now,I know its very boring comments but better later than never.
யசோ அண்ணா .. அடுத்த சந்திப்பில் கலக்கலாம்!
ReplyDeleteஉரை ஒன்றும் பெரிய மாட்டர் இல்லை .. சிறுகதை பற்றிய பார்வையை அவ்வப்போது எழுதுகிறேன்.
நன்றி அண்ணா.
வாங்க கீதா
ReplyDelete//Again..Its toomuch JK.You are passing your line.//
Ouch .. அதான் காலில விழுந்திட்டோம்ல .. தவறு தான்.. வரமால் பார்த்துக்கொள்ளுறன்!
//Nowadays you are spending more time in this section so its mean you are going to..........//
Yea I am going to ... கடுப்பேத்தறார் மை லார்ட்!