வியாழ மாற்றம் 21-06-2012 : கரியனுக்கு கம்மாசுடா

Jun 21, 2012

டேய் ஜேகே


sakuntlaமேகலா,
இதயனூர்

அண்மையில் பாதித்த விஷயம்?
ஒரு புலம்பெயர்ந்தவர் பிறந்தநாள் விழா! இன்விடேஷன் கார்டில் “சூட் போட்டுக்கொண்டு வருக” என்று கிடந்தது. போனேன். ஒரு இரவு, இரண்டு மணிநேர பங்ஷன். மொத்தமாக இருபதினாயிரம் டொலர்கள்! சும்மா ஜஸ்ட் லைக் தட், இருபத்தஞ்சு லட்சம் ரூபாய் பறந்து போச்சுது!
ஷிவாஸ் ரீகலாகவும், மேர்லட்டாகவும், சாலமன் வறுவலாகவும், கேக்காகவும், லசானேயாகவும் இன்னமும் வாயிலில் நுழையாத பெயர் கொண்ட சாப்பாடுகள், பெயர் தான் அப்படியென்றால் சாப்பாடு இன்னமும் மோசம். பார்க்க… பார்க்க… பார்க்க… அன்றைக்கு ஒரு மழை இரவில், பாம்புக்கடிக்கு கூட கத்தாமல் முள்ளுக்கம்பியினூடே ஊர்ந்து ஊர்ந்து முகாமுக்குள் உள்ளிட்ட அந்த ஒரு இளைஞன் என்ன யோசித்து இருப்பான்? தங்கச்சியை யோசித்து இருப்பானா? தனக்காக அழும் அம்மாவை யோசித்திருப்பானா? முன் வீட்டு தாரிணியை யோசித்து இருப்பானா? சாகும்போது ஏன் சாகிறேன் என்றாவது புரிந்திருக்குமா? தன் பெயர் எத்தனையோ ஆயிரம் “ரெண்டாம் லெப்டினன்ட்”களில் ஒன்றாய் போகும் என்று உணர்ந்திருப்பானா? தன் படத்துக்கு அதிர்ஷ்டம் இருந்தால் மாத்திரமே, வீசப்படும் பூக்களில் ஒரு பூவாவது அஞ்சலியன்று படத்தடியில் விழும் என்றாவது தெரிந்திருக்குமா? யோசித்தபோது கிளாசில் இருந்த பச்சை தண்ணியை கூட குடிக்கமுடியவில்லை. பன்னிரெண்டாம் நாள் விடாய் தாங்காமல் கெஞ்சிய திலீபன் அண்ணாவுக்கு தண்ணி கூட கொடுக்காமல் … எல்லாம் எதுக்கு? கொஞ்சமாவது யோசிக்கவேண்டாமா? ஏன் இந்த ஆடம்பரம் என்று யோசிக்க…“பொன்னை உயர்வை புகழை விரும்பிடும், என்னை கவலைகள் தின்னத்தகாதென்று நின்னை சரணடைந்தேன்” என்றான் முண்டாசுத்தலையன். ஏன் சொன்னான் என்று புரிந்தது. bharathi
“தன் செயலெண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு, நின் செயல் செய்து நிறைவு பெறும் வண்ணம், நின்னை சரணடைந்தேன்” என்றும் சொன்னான் அந்த கிராதகன்.  
கடவுளே அவனின் வரிகள் எனக்கு புரியாமலேயே இருக்கட்டும். ப்ளீஸ்!


1306172313mahatma-gandhi-india-elites-2காந்தி,
யாரப்பா அது?
எங்கேப்பா ஆளு?
ஆங் சாங் சூகி இருபத்தொரு வருடங்களுக்கு பிறகு நோபல் பரிசை நேரில் பெற்றுக்கொண்டிருக்கிறாரே?
1991 இல் கிடைத்தபோது உதயனில் முன்பக்க செய்தி. ஒரு “ஒல்லி அக்காவுக்கு” நோபல் கிடைச்சு இருக்கு என்று நான் சொன்னது ஞாபகம் வருகிறது. அவருடைய பேச்சு நேரடி ஒளிபரப்பாகிறது என்று அப்பா சொன்னவுடனேயே ஓடிப்போய், கண் வெட்டாமல் அப்படியே பார்த்துக்கொண்டிருந்தேன். இருபது வருடங்களாக, வீட்டுக்காவலில் இருந்தபோதும், கணவர் புற்றுநோயால் மரணப்படுக்கையில் தளர்ந்தபோதும், பக்கத்தில் இருக்கமுடியவில்லையே என்ற ஏக்கம் மிகுந்தபோதும் அவர் தன் நோக்கத்தை தளரவிட்டாரில்லை. “I gotcha” என்ற ஒரு புன்னகை எப்போதுமே அவர் முகத்தில் இருக்கும். அதில் ஒரு பெருமை தெரியும். அவசரம், உணர்ச்சிவசப்படுதல் என்ற சொற்கள் எல்லாம் இவர் அகராதியிலேயே இல்லை. மேற்குலகை எப்படி தன்வழிக்குள் வைத்திருக்கவேண்டும் என்ற வித்தை தெரிந்தவர். எதுவுமே ஓவர் நைட்டில் நடந்துவிடாது என்று மெய்யாலுமே உணர்ந்து, எறும்பு போல ஊர்ந்து கல்லை தேய்த்த மேதை.
Often during my days of house arrest it felt as though I were no longer a part of the real world. There was the house which was my world, there was the world of others who also were not free but who were together in prison as a community, and there was the world of the free; each was a different planet pursuing its own separate course in an indifferent universe.

sujathaசுஜாதா,
வைகுண்டம்
தம்பி
இலையான் எல்லாம் அடிக்கிறீங்க! பேசாம ஒரு தொடர்கதை ஒன்று ட்ரை பண்ணுங்களேன்!
ஆகா, வேலையில்லாம இலையான் ஓட்டிக்கொண்டு இருக்கிறன் எண்டு சொல்லுறீங்க. ஓகே ஓகே. தொடர்கதை எழுதும் அளவுக்கு எனக்கு அவ்வளவாக வாசகர் பரப்பு கிடையாது. நான் சும்மா ஜாலியா எழுதுற ஆள். ஆனாலும் கோபி என்று ஒரு நண்பர் சிலநாட்களுக்கு முன்னர், எழுத்து என்பது ஓரளவுக்கு தொழில் புரட்சியை தூண்டும் விதமாகவும் அவ்வப்போது வரவேண்டும் என்று சொல்லியிருந்தார். கொஞ்சம் குத்திவிட்டது. இன்றைக்கு தகவல் தொழில்நுட்ப புரட்சி இந்த அளவுக்கு வந்திருக்கிறது என்றால் அதற்கு அணில் விஜய் போல, ஒரு புத்தகம், H2G2_UK_front_coverஒரேயொரு புத்தகம் மிகப்பெரிய அளவில் செல்வாக்கு செலுத்தியிருக்கிறது. வாசிக்கும்போது பரவசப்படுத்தும் விஞ்ஞான நாவல் அது. The Hitchhiker's Guide to the Galaxy” என்ற அந்த புத்தகம் உலகத்தையே அந்த காலத்தில் ஒரு ஆட்டு ஆட்டியது. இன்றைக்கு தொழில்நுட்பத்துறையில் கொடிகட்டி பறக்கும் ஜாம்பவான்கள் எல்லோரும் நிச்சயம் வாசித்திருக்கக்கூடிய நாவல். அதை தமிழில் கொண்டுவரவேண்டும் என்று ஒரு ஆவல். ஆனால் அதை அப்படியே தராமல், நமக்கு ஏற்றது போல, நாவலின் ஆதாரத்தை மட்டும் மாற்றாமல், மற்றபடி எங்கள் லோக்கல் விஷயங்களையும் கலந்து ஒரு தொடராக எழுதுவோமா என்று ஒரு நப்பாசை. தனி தொடராக எழுதாமல் வியாழமாற்றத்தில்(இந்த லொள்ளுகளை சற்று குறைத்து) கொஞ்சம் கொஞ்சமாக எழுதலாம் என்று ஐடியா? WDYT?

samantha-neethane-en-ponvasanthamசமந்தா,ஜேகேயின் சுவாமியறை!
மெல்பேர்ன்
ஷங்கர் அடுத்த படத்தை அறிவித்துவிட்டாராமே? என்னைய நடிக்க அழைத்திருக்கிறார். நிற்கட்டுமா? போகட்டுமா? நீலக்கருங்குயிலே, சோலைக்கருங்குயிலே?
ஆமா இல்ல? “ஐ” என்று பெயராம். ரகுமான் இசையை சங்கர் கெடுக்க, விக்ரம் ஓவர் அக்டிங்  பண்ணி வாயை சுளிக்க போகிறார் என்பது நிச்சயம். படத்துல உருப்படியாக வரக்கூடிய ரெண்டு விஷயங்கள், ஒன்று, பிசி ஸ்ரீராம், மற்றது நீ தான் கண்ணு! ….  ஷங்கர் “வடிவா” காட்டுவாரு என்று நம்பலாம்! ச்சே சமந்தா என்றவுடன் எழுத்தே டைப்படிக்க தொடங்கீற்று! அய்யோ .. அம்மா கொல்லுராளேடா! மன்மதகுஞ்சு ஒரு கவிதை சொல்லேண்டா!
41654_100001612310791_4570591_nஅட கருமம் பிடிச்சவனே! சமந்தா படத்தை சாமியறையில் வச்சு, மாதம் மும்மாரி மழை பெய்யோணும் எண்டு ஏதாவது வேண்டுதலா? மழை பொழிஞ்ச மாதிரி தான் போ!! வெளங்கிடும். நீ சுத்த வேஸ்டுடா! உனக்காக கவிதை எழுதுற நேரத்தில நாலு பிட்டு படம் பாத்திடலாம்!
.

அய்யம்பேட்டை, அம்மாபேட்டை, தேனாவட்டை அட தேங்காய் மட்டை!

543510_430777833619413_1502479603_n_

கரியனுக்கு கம்மாசுடா!

ஒரு நெருங்கிய நண்பன்! “க” வில் ஆரம்பித்து “ன்” இல் முடியும் பெயரின், நடுவிலே இருக்கும் “ஜ” எழுத்தை எடுத்துவிட்டால் தலைவர் “கன்” மாதிரி கம்பியை பிடிக்காமலே பஸ்ஸில் நிற்பார்! இதற்கு மேலே மூன்றெழுத்து பெயரில் குளூ கொடுக்க வேறெந்த எழுத்தும் இல்லை பாஸ்! ஸோ உங்களுக்கு கன்பியூஷன் வேண்டாமே, என்று அவருடைய ஈஸ்ட்மென் கலர் போட்டோ ஒன்றையும் தந்துவிடுகிறேன்! சாரி ஜனங்களே, எடுக்கும்போது பாக்கிரவுண்ட் கறுப்பா இருந்தத கவனிக்க இல்ல! ஆனாலும் அவன் மூஞ்சி தெளிவா விழுந்ததில சந்தோஷம்!
black-1.2
“கன்” னுக்கு திருக்குறள் என்றால் கொள்ளை பிரியம்! அதுவும் காமத்து பால் விளங்கவில்லை என்று சந்திரன் மாஸ்டரிடம் ஸ்பெஷல் கிளாஸ் எடுக்கும் அளவுக்கு வள்ளுவர் பாசம். பதினேழு வயசிலேயே வாசித்து(திருக்குறள் தான்), மொத்தமாக “கன்”னுக்கு 249 காதல்கள் என்றால் பாருங்கள். ஆனாலும் தலைவருக்கு செண்டிமெண்ட் ஜாஸ்தி! காமத்து பாலில் மொத்தம் 250 குறள்கள் என்பதால், குறளுக்கு ஒன்றாக தன்னும் காதலிக்கவேண்டும் என்று ஒற்றைக்காலில் நின்றார். அவருக்கென்று பார்த்து ஒரு கொக்கு மாட்டியது.
லொகேஷன் : முத்திரைச்சந்திக்கும் கிட்டுப்பூங்காவுக்கும் இடையில் இருந்த பலசரக்கு கடை.
கொக்கு காலமை வெள்ளன, அஞ்சரை மணி சங்கீத கிளாசுக்கு ஏசியா சைக்கிளில் அந்த வழியால் போகும். காகம், ஏழு மணிக்கு கடைக்கு வரும் உதயன் பேப்பரை, வந்திட்டா வந்திட்டா என்று செக் பண்ண அஞ்சு மணிக்கே கடையடிக்கு வந்திடும்.
நம்மாளு உசரம் கம்மி. கேட்டால், இட்ஸ் ஓகேமா, சூரியா எல்லாம் ஸ்டூலு மேல ஏறி நிண்டு அனுஷ்காவை லவ்வு பண்ணலையா? என்பார்! ஆனா இந்த கதையெல்லாம் நம்மோட மட்டும் தான். கொக்கை கண்டா பம்மிடுவார்! சின்ன சிரிப்பு கூட கொடுக்காம ஏதோ அப்ப தான் சைக்கிள் ரிம் நெளிவா இருக்கா என்று செக் பண்ணுவார். “ஏண்டா நீ இப்பிடி? பேசாம போய் சின்ன ஹாய் ஆவது சொல்லேன்” என்று கேட்டால், இன்ஸ்டன்டா ஒரு குறள் சொல்லுவார்! வேறென்ன? காமத்து பால் தான்!
கரத்தலும் ஆற்றேன் இந்நோயை நோய் செய்தார்க்கு
உரைத்தலும் நாணம் தரும்

577016_3735619181835_1239912884_n

இப்பிடியே வாரம் பத்து நாள், ஆறு மாசம் கூட போச்சுது. பொண்ணு கூட சங்கீத பரீட்சை சிக்ஸ்த் கிரேட் எடுக்கப்போறதா கேள்வி. இனியும் லேட் பண்ணினா சரிவராது மச்சி, பேசாம மிருதங்கத்த எடுத்து வாசி என்று நான் சொல்ல, தல அப்பவும் திங் பண்ணினார். அடுத்த நாள் காலமை சுருதி எல்லாம் செட் பண்ணிகொண்டு, தூக்கிக்கொண்டு வந்தார்; மிருதங்கத்தை! கடையடில மிருதங்கமும் ஆளும் .. தல சக்கரவர்த்தியாம்.. மூலைல சங்கிலியன் சிலை, மூக்கு நசிஞ்சு போனாலும் “வால்” பிடிச்சுக்கொண்டு நின்றது! கொக்கு இஸ் கமிங். ஏசியா பைக்கோட பெல் அடிச்சது தான் தாமதம். மிருதங்கத்தோட ஸ்ருதி டோட்டலி அவுட். சிங்கன் இரவோடு இரவாக பிளான் பண்ணி வச்ச, வசனம் எல்லாம் மறந்து போய், வாயை திறந்தா கொன்னக்கோல் தான் போ!
இந்தவாட்டி, கொக்கு பார்த்துது. நாதாரி ஆறுமாசமா கேவலம் ஒரு உதயன் கூட வாங்கேலாம திரியிது எண்டு நினைச்சுதோ என்னவோ, கடை தாண்டி ஒரு இருபது அடி போனாப்புறம்.. சைக்கிளை நிறுத்தி .. தலைவரை திரும்பிப்பார்த்திச்சு!

547576_3735619541844_684468067_n
“கன்” கதிகலங்கி போய்ட்டார்! திடீரென்று பொண்ணு பார்த்துதா? றோட்டில வேற யாருமே இல்லையா? அண்ணருக்கு எப்படி ரியாக்ஷன் கொடுக்கிறது எண்டு தெரியேல்ல! அவள் திரும்பிப்பார்க்காதவரைக்கும் ஆயிரம் ரொமாண்டிக் லுக் ட்ரை பண்ணினவர், இன்றைக்கு சடாரெண்டு திரும்பிப்பார்த்தவுடன், எட்ட நின்ற சங்கிலியன் சிலை தலைல, ஒட்டியிருக்கிற காகப்பீயை ரிசேர்ச் செய்யிறாப்ல அண்ணாந்து ஒரு லுக்கு விட்டார். பக்கிரவுண்டில “காதலில் தீபம் ஒன்று” சாங் போகுது! “ஏண்டா மச்சி, அவள் உன்னை பார்த்தும் நீ அவளை பார்க்கேல்ல?” என்று கேட்டால், கெட்டுது காமத்துப்பால்!
யான் நோக்குங்கால் நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்
போடாங்!

manastanஇது என்ன கருமம்டா? கதையா? பத்தியா? திருக்குறள் உரையா? வாசிச்சா வள்ளுவருக்கே சொர்க்கத்தில வவுத்தால போகுமேடா? அதுசரி எங்கிருந்தடா இந்த கொக்கு படம்? எடுத்தது சாட்சாத் “கன்” தானேடா? கொக்கு தேடி பயபுள்ள இப்பகூட அலையுது போல! ஆனாலும் தக்காளி நல்லா தாண்டா படம் பிடிக்கிறான்!

இரண்டு பாடல்கள்!

ராஜாவுக்கு மூடு வந்தால் எங்களுக்கு மூடு கெட்டுவிடும். அதுவும் ஒரு சில ராகங்களை தொட்டார் என்றால் சீவன் போய்விடும். அப்படி அவர் அடிக்கடி தொடுவது தான் சாருகேசி ராகம்.  “நெஞ்சைத்தொட்டு சொல்லு என் ராசா”, “மயங்கினேன் சொல்ல தயங்கினேன்”,  “காதலின் தீபம்” எல்லாமே இதே ராகம் தான். ராகத்தில் ஏதோ ஒரு சோகம் இருக்கிறது. It hurts!


“அரும்பாகி மொட்டாகி பூவாகி” என்று ஆரம்பித்து மீண்டும் ரிபீட் பண்ணும்போது “பூவாகி” நோட் சின்னதாக மாறி இருக்கும். இந்த அழகு ராஜாவுக்கே உரியது. “தொடுத்த மாலை எடுத்து வாறேன், கழுத்த காட்டு” என்ற காதலன் ஏக்கத்தை பார்த்த நமக்கு, அந்த சனியன் பிடிச்சவளை எங்கே இருந்தாலும் கண்டுபிடித்து அவன் முன்னால் நிறுத்தி தொலைக்கவேண்டும் போல இருக்கும்! சுசீலா சும்மா இருப்பாரா? “என் மச்சானுக்கு அட என்னாச்சுது? அது பூவாகி பின்னாலே வித்தானது” என்னும்போது, ... ரிஷி ரோஜாவிடம், காஷ்மீர் பாலத்தடியில் “பட்டிக்காடு” என்று சொல்லுவானே! அந்த feeling .. காட்சி தேவையில்லை .. ராஜாவும், தீபனும், சுசீலாவும் சேர்ந்து. அட போங்கப்பா .. இந்த உணர்வுகளை எல்லாம் விவரிக்க என்னால இயலாது!
இதே ராகத்தில் ராஜா அடித்த டபிள் செஞ்சரி அடுத்த பாட்டு!
சிட்னியிலிருந்து மெல்பேர்ன் வரும் வழியில் கேதா சொன்ன விஷயம். “அண்ணே இந்த கடல்புறா மஞ்சள் அழகி, பொன்னியின் செல்வன் குந்தவை, என்று தமிழில் பெண் என்றால் இப்படித்தான் என்றொரு மாயையை உருவாக்கிவைத்திருக்கிறோம். அந்த மாயைக்கு குரல் கொடுத்தால் அது சித்ராவின் குரலாக தான் இருக்கும்” என்றான். “மாயை தான்! விம்பம் தான்! ..ஆனாலும்..” என்று நான் முடிக்குமுன்னேயே .. “Yeah of course its a nice thing still” என்றானே பார்க்கலாம்! எழுதும்போது சிலவேளைகளில் அந்த மாயைக்குள் சிக்கவேண்டி வரும். சிலவேளைகளில் சிக்குவதற்காகவே எழுதுவதுமுண்டு! இந்த பாடலில் உள்ள சித்ரா குரலும் அந்த வகையறா. “தொட்டதும் பட்டதும் சுகமே தோன்ற மன்னவன் கைகளில் விழுந்தேன் நான்” என்று சித்ரா பாடும்போது நீங்களும் சிக்கும் வாய்ப்பு இருக்கிறது!

vadivel-300-300x205
தம்பிரி, வர வர ஒனக்கு லவ்வு பீலிங் ஜாஸ்தியாகுது! .. ஆனா பால்காரனோட எக்ஸ்ப்ரஷனை பார்த்தா டெரர் பீலிங்கா இருக்கேடா .. பொதுஜனங்களே தயவு செஞ்சு கண்ணை மூடிக்கிட்டே பாட்டை கேளுங்க!


இவன்தாண்டா நிஜ பவர் ஸ்டார்!

593700040

பருப்பாகி பொறுப்பாகி பட்டறையும் போட்டாச்சு
பருந்தாகி ஸ்பைடராகி நாயத்தையும் காத்தாச்சு
அரும்பாகி ஆளானா பெட்டையையும் கட்டியாச்சு - கொய்யால
அய்யா பிடிச்சாருன்னா பெய்யிறதும் சுனாமியாச்சு!

10xsxewமக்களே, எதுக்கு ஜேகே இப்படி லொள்ளு கவிதைன்னு கேட்பவர்களே! லொள்ளுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. மன்மதகுஞ்சு எழுதி அனுப்புவான். எனக்கு ஒண்ணுமே புரியாது. புரியாதது தான் நல்ல கவிதை என்று கேதா சொல்லுவான். ஸோ நானும் போட்டிடுவன்!
வாசித்துவிட்டு யாருக்காவது கோபம் வந்து மன்மதகுஞ்சுவை கொல்லவேண்டும் என்றோ, இல்லை கோத்தாவிடம் மாட்டிவிடவேண்டும் என்றோ தோன்றினால், ப்ளீஸ் மெசேஜ் மி. அவன் நம்பர் தருகிறேன்! அவசரம் என்றால் தலைவரை Facebook ல் பிடிக்கலாம்!
http://www.facebook.com/tkeerthiraj
Contact Form