வியாழ மாற்றம் 28-06-2012 : கந்தசாமியும் கலக்ஸியும்

Jun 28, 2012

டேய் ஜேகே

sampanthan1சம்பந்தர்,
தமிழர்களின் ஏக பத்தினி .. சாரி, ஏக பிரதிநிதி கட்சி
காணி அபகரிப்பு சம்பந்தமாக ஈழத்தில் ஆர்ப்பாட்டம் ஆரம்பித்துவிட்டோம். வெளிநாட்டில் இருந்துகொண்டு இதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?


நக்கல் நையாண்டி எகத்தாளம் .. புரிகிறது ஐயா! நான் யோக்கியவனாக இருந்தால், டிக்கட் எடுத்து அங்கேயே வந்து, வசித்துக்கொண்டு எதிர்ப்பை காட்டவேண்டும். மாட்டேன் போ! எனக்கு என் கார் வேண்டும். வீடு வேண்டும். வேலை முடிந்து வீட்டுக்கு வந்து டக்ஸ் ரிட்டர்ன் செய்யவேண்டும். ஆயிரம் டொலருக்கு DSLR வாங்குவேன். ஆனாலும் வெளிநாட்டில் உழைச்சு ஒரு சதமும் மிச்சம் முடிக்கமுடியாது என்று நொந்துகொள்வேன்!
பெட்டர் தான் நத்திங் என்பதால், சனிக்கிழமை பின்னேரம் பிளான் பண்ணும் ஆர்ப்பாட்டத்தில், மீடியாவுக்கு முகம் காட்டாமல், கொடியை பிடித்துவிட்டு (இத விட நீங்க பெட்டர் பாஸ்), அப்படியே இரவு BBQ பார்ட்டி போவேன். தண்ணி அடித்துவிட்டு டிரைவ் பண்ணினால் வெள்ளைக்காரன் காசு வறுகுவான். மனிசிக்கு தண்ணியடிக்க பழக்கமாட்டோம். ஆனால் டிரைவிங் பழக்குவோம். வீடு திரும்பும்போது அவள் டிரைவிங். இப்படி எதையும் பிளான் பண்ணி செய்ததால் தான் நாங்கள் வெளிநாட்டில் இருந்துகொண்டு சும்மா புரட்சி பின்னுறோம் தல!
வேலியடைக்காமல் விடுகையில், கட்டாக்காலி ஆடுகளே நுழையும்போது எருமைமாடுகள் எம்மட்டுக்கு? சான்ஸே இல்லை. Forced colonisation தவறு என்று வாய் கிழிய கத்தி என்ன பிரயோசனம்? அவனே பட்டியை கலைத்து விடாவிட்டாலும் கூட, நாளாவட்டத்தில் இந்த பரவலை தடுக்கமுடியாது. அண்மையில் யாழ்ப்பாணத்தில் வசிக்கும் பேராசியர் இங்கு வந்தபோது சந்தித்தேன். சொன்னார்.
“தம்பியவை நீங்க அங்க வராட்டியும் பரவாயில்லை. தயவு செஞ்சு இன்வெஸ்ட் பண்ணுங்கோ. சூப்பர் மார்க்கட் கட்டாத எண்டு அவனை சொல்ல ஏலாது. ஆனா நீங்க கட்டலாம் தானே. உனக்கு கொம்பியூட்டர் தெரிஞ்சா, அதில இன்வெஸ்ட் பண்ணு. கொடி பிடிக்கிறது அரை மணித்தியால விஷயம். ஆனால் காலத்துக்கும் நிலைக்கிற மாதிரி எதையாவது செய்யன். முயற்சி சரிவந்தா யார் கண்டா? நீ அங்க வந்தாலும் வரலாம்”
உரிமையுடன் மேலும் சொன்னார்.
உந்த வெளிநாட்டுகாரர் யாருமே, வன்னி மக்கள் பாவம், உதவி செய்கிறோம், மண்ணை நேசிக்கிறோம் என்று சுனாமி நிவாரணம் போல குடுக்கிறத நிப்பாட்டிட்டு, உங்கட வியாபாரங்களை, தொழில்களை, இன்வெஸ்ட்மெண்டை செய்யுங்கோ. மிச்சதேல்லாம் தானா நடக்கும். அவ்வையாரின் “வரப்புயர” விஷயம் தான் இது.
அத்தோடு நிறுத்தவில்லை அவர்! கடைசி பஞ்ச்.
“ஷோ காட்டுறதுக்காக தயவு செஞ்சு சின்ன பிள்ளையளிண்ட கையில மட்டும் டொலரை செருகிடாதீங்க தம்பியவை”
ouch!

mqdefaultடக்ளஸ் அண்ணே
ஊர்காவற்றுறை
தமிழர்களின் கவன ஈர்ப்பு போராட்டம் ஆயுதகலாச்சாரத்தை மீண்டும் தலைதூக்க ஊக்குவிக்குமாம் என்று யாழ் நீதிபதி சொல்லி கண்டிச்சு இருக்கிறாரே?

வாங்க எம்ஜிஆர்! அவர் இன்னொன்றையும் சொல்லி இருக்கிறார். நோட் திஸ் பாய்ன்ட் யுவர் ஆனர்!
‎//இந்த வழக்கிலுள்ள பிரச்சினையை ஆரோக்கியமான, புத்திசாலித்தனமான, சட்டமுறையான நடவடிக்கைகள் மூலம் அணுகியிருக்க முடியும். ஆவணங்களின் மூலம் உரிய நீதிமன்றின் முன்சென்று தமது உரித்தை நிலைநாட்டியிருக்க முடியும்//
வழக்கின் பிரச்சனையே “இராணுவம் காணி அபகரிப்பது தான்”. ஆக இந்த கண்டனத்தை இராணுவத்தை பார்த்து சொல்லுவதாகவும் எடுத்து கொள்ளலாம் இல்லையா? ஆக நீதிபதி இராணுவத்துக்கு எதிராக கருத்து தெரிவித்து .. அதாவது முப்படைகளின் தலைவரான ராஜபக்ஸ, கோத்தாவுக்கு எதிராக ஒரு நீதிபதி துணிந்து கருத்து தெரிவித்திருக்கிறார், என்றால் பாராட்டு விழா வைக்கவேண்டாமா!
இது எப்பிடி இருக்கு?
vadivelu09அட பாவி பிளேட்டை மாத்தி கோர்த்து விட்டாச்சா? அந்தாளு நீதிபதி பாவம்டா .. ராவுக்கு நித்திரை போச்சு போ .. இதான் மாட்டாருன்னு தெரிஞ்சா நாயை வெட்டி வாசலில போட போறாங்கடா! ஐயாவுக்கு நாளைக்கு மத்தியானக்கறி நாய்க்கறி தான் மச்சி!

steve_reflectingஸ்டீவ் ஜாப்ஸ்
டிசைனர் ஓப் iசொர்க்கம்
அட்டன்ஷன் டூ டீடெயில்ஸ் என்று சொல்லுகிறார்களே அது என்ன?

தலீவா .. நீயி கூடவா! அவசரத்துக்கு ரெண்டுக்கு வருகிறதா? போய் உட்கார்வீர்கள். அம்சமாக முடித்துவிட்டு டொய்லட் பேப்பரை விறு விறுவென்று இழுக்கும் டைமில, எப்போதாவது அந்த பேப்பர் எப்படி தொங்குகிறது என்று கவனித்ததுண்டா? அந்த விஷயத்திலேயே ஒரு பெரும் அக்கப்போர் நிகழ்ந்து இருக்கிறது. உலகம் முழுதும் விஞ்ஞான, உளவியல், மெக்கானிக்கல் ஏன், கணித ஆய்வுகள் கூட இது பற்றி நடந்திருக்கிறது. நடந்தபோது எங்கள் ஊரில் மேலால ஹெலி அடிச்சுக்கொண்டு இருக்க நாங்க பங்கருக்குள்ளேயே .. சரிவிடு.
அமெரிக்கர்களில் 70 வீதமானோர் பேப்பர் முன்னாடியை தான் விரும்புகிறார்களாம்!
நீங்க முன்னாடி கேஸ் என்றால், ஒரு அவுட் கோயிங், காசை தண்ணியா செலவழிக்கும், எக்ஸ்ட்ரோவர்ட் மனிதராம். “You get a kick in trying to sneak 11 items through the 10-items-or-less line at the grocery store” என்கிறது விக்கி! பின்னாடி ஆளா? எல்லோரையும் சந்தேகத்துடன் பார்ப்பீர்களாம். மனைவியை/கணவனை நம்ப மாட்டீர்களாம். சீதைக்கு சிதையூட்டி, யாரோ ஒரு நாதாரி சொன்னான் என்பதற்காக இரண்டு பிள்ளைகளோடு அவளை காட்டுக்கு அனுப்புவீர்கள். அல்லது, அனுப்பியவனுக்கு கோயில் கட்டுவீர்கள்.
இவ்வளவு சின்ன மாட்டருக்குள் ஒரு குடும்பமே பிரியக்கூடிய விஷயம் இருக்கிறதா! அட்டன்ஷன் டூ டீடைல்ஸ் என்பதை அப்பிளும் ஏஆர் ரகுமானும் மட்டும் செய்யவேண்டுமென்பதில்லை. நடைமுறை வாழ்க்கையில் ஒவ்வொரு சின்னவிஷயத்திலும் டீடெயிலிங் முக்கியம் மக்களே! நான் உளறுகிறேன் என்று நினைத்தால் விக்கியில் போய் பாருங்கள். மண்டை காயும்!
ஆண்களுக்கு ஒரு சின்ன டிப்ஸ்! உங்கள் வீட்டிலே பெண்கள் இருந்தால், டொய்லட் பவுலின் சீட் கவரை நிமிர்த்திவிட்டு, ஒண்ணுக்கடித்து விட்டு, அப்படியே மறந்துபோய் விட்டுவிடாதீர்கள். அது ஒருவித ஆணாதிக்க மனோபாவம் என்கிறார்கள். பெண், வீட்டில் இருக்கிறாள் என்ற பிரக்ஞை இல்லாத ஆண் செய்யும் வேலையாம்.  எப்போதுமே சீட் கவரை பழைய படி இருத்தி விட்டு வரவேண்டும். இத்தனை காலமும் நிமிர்த்தாமலேயே அடித்தவரா நீங்கள்! சுத்தம்!
http://en.wikipedia.org/wiki/Toilet_seat#Etiquette
e0c72363-28bf-4840-9129-b94bb59fa8c11வெயிட் எ மினிட் மச்சி .. அடுத்த செக்ஷனுக்கு போயிடாத .. ஒருக்கா நான் போய் நம்ம டொய்லட்டை செக் பண்ணீட்டு வாறன்!

10xsxewமன்மதகுஞ்சு , வவுனியா!
இளம் தலைமுறை நடிகர்களுக்குள் நம்பிக்கை தருபவர்கள் யார் என்று நினைக்கிற மச்சி?

விஜய் பத்து வருடங்களில் சச்சின், நண்பன் என்று ஓரிரு படங்களே நடிக்கிறார். அஜித் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேனுக்கு பிறகு சீன் மட்டும் போடுகிறார். இடையிலே சூரியா விக்ரம் போன்ற மஷ்ரூம்கள் குடுத்த காசுக்கு மேலாக கூவ, சிம்பு ஒரே ஒரு படம், கௌதம் புண்ணியத்தில், பாடகர் தனுஷ் ஆட்டத்திலேயே இல்லை. தமிழ் சினிமாவில் ஓரளவுக்கு நம்பிக்கை தரும் இளம் தலைமுறை யார் என்று கேட்டால்,
மொக்கை படங்களை கூட, “மே மே…“ என்றும், “matrimony may not be good but alimony” என்றும் தாழிக்க தெரிந்த இரண்டு “தல” பிரம்மா(கள்) தான் நம்பிக்கை நட்சத்திரங்கள்…. ஸ்டில்!
sivaji_photos-13_thumb_thumbkamal_hassan_manmadhan_ambu_thumb_thகந்தசாமியும் கலக்ஸியும்

தொடர்கதை எழுதடா என்று அக்கா அடிக்கடி கோல் பண்ணி சொல்லும். தயங்கி தயங்கி ஒரு கட்டத்தில் This is it என்று கால் வைத்தாயிற்று. ஆரம்பமே Sci-Fi யா? தமிழில் அதுவும் யாழ்ப்பாணத்திலிருந்து ஏன் உனக்கு தேவையில்லாத வேலை? என்று கேட்டான் நண்பன். எனக்கு “Hitchhiker’s Guide To Galaxy”  வெறும் Sci-Fi நாவல் கிடையாது. யோசிக்கும் முறையையே மாற்றியமைத்த நாவல் அது. அதை அப்படியே தமிழில் கொண்டுவரும் எண்ணம் துளியும் இல்லை. கொண்டுவருவதும் கடினம். அதனால் அதில் உள்ள மூலத்தை எடுத்து என் பாட்டுக்கு ஆடலாம் என்று ஐடியா. தொடர்ந்து அவுட் ஆகாமல் ஆடுவது கஷ்டம் என்று முகவுரை எழுதியபின் புரிந்தது.
“Kandasamy & Galaxy is bit different from ur own style. Not bad, but requires bit more work to smooth it. It seems to be the story triggered by movie Prometheus”
என்று “நொட்டை” அண்ணா டெக்ஸ்ட் வந்தது. கௌரி அன்றிரவே “ஸ்டார்ட்டிங் ஓகே”, “எழுத்துப்பிழை”, “பந்திகள் அதிகம் நீளம்”, என ஒரு லிஸ்ட் அனுப்பினார். இன்னொருவர் விவகாரமாக “சுஜாதா போல வர பார்க்கிறீங்களா?” என்று லொள்ளு பண்ணினாலும், பொதுவாக “விட்டுப்பிடிப்போம்” என்ற கருத்து இருக்கிறது. இவ்வளவு பேர் வாசித்து Facebook இல் ஷேர் பண்ணுவது ஆச்சர்யம், கூடவே பயமும்.
ரெண்டொரு வரிகளில் jkpadalai@gmail.com இற்கு ஒரு ஈமெயில் அனுப்பினாலோ, அல்லது கொமென்ட் போட்டாலோ கொஞ்சம் ஆசுவாசமாக இருக்கும்! தமிழில் தான் கொமென்ட் போடவேண்டும், இல்லாவிட்டால் டிலீட் பண்ணிவிடுவேன் என்றெல்லாம் சொல்லி தமிழ் வளர்க்கும் தீவிரவாதம் எல்லாம் இங்கே இல்லை. எழுதுவது தான் முக்கியம். எழுதுங்கள். வெறும் சுவற்றில் பந்தடிக்க .. சில நேரங்களில் அயர்ச்சி!
நாவலுக்கு ஒரு படம் வேண்டும். சும்மா, விண்வெளி, பறக்கும் தட்டு ம்கூம் என்று மண்டையை பிய்த்துக்கொண்டு இருக்கும்போது, சயந்தன் எடுத்த இந்த படம் ஞாபகம் வந்தது. கூடவே “ஷிரோடிங்கர் பூனை”யும் ஞாபகம் வர, கேட்டேன். “எடுத்துக்கோ தேவா” என்றான்! எப்போதாவது புத்தகமாக வெளியிட வந்தாலும் கூட இதுவே அட்டைப்படம்! Thanks சயந்தன்!
310691_10150312965606415_753825724_n
அதென்ன ஷிரோடிங்கர் பூனை? குவாண்டம் பிசிக்ஸின் நிறுவப்படாத கோட்பாடு இது. எந்த ஒரு இயக்கத்திலும் நிகரான இன்னொரு இயக்கம் (அல்லது இயக்கங்கள்), super positions இருக்கும் என்கிறார் ஷிரோடிங்கர். அதாவது ஒரு பூனை உயிருடன் வாழும்போது, இறந்தும் இருக்கிறது. இந்த வியாழமாற்றம் பதியப்பட்டிருக்கிறது/பதியப்படவில்லை, நீங்கள் இதை வாசிக்கிறீர்கள்/வாசிக்கவில்லை. இப்படி சமகாலத்தில் ஒன்றோடு ஒன்று பிளவு பட்ட நிலைகள் சாத்தியம் என்கிறார் ஷ்ரோடிங்கர். அப்போது எது நிஜம்?, எது பொய்? என்று ஒரு கேள்வி எழுகிறது இல்லையா? நிஜம் என்பது கவனிப்பு சார்ந்தது என்கிறார்கள். நான் பார்க்காத எங்கோ இருக்கும் வன்னி காட்டில் இப்போது நிலா பொழிகிறதா? என்றால் வாயை பிதுக்கி இல்லையாம். நான் பார்க்கும் போது தான் பொழியுமாம். அது ஒரு சுப்பர் பொசிஷன் ஸ்டேட் என்கிறார்கள். இதை அப்படியே விரிவாக்கி தான் டார்க் மட்டரை நிறுவுகிறார்கள். கேதாவை கேட்டால் இந்த தியரியை அதர்வ வேதம் ஏற்கனவே சொல்லிவிட்டது என்கிறான். கஜன் பட்டினத்தார் என்பான். விஷயம் ஒன்று தான். ஈசியாக விளங்குவதற்கு தமிழில் 12B யும் ஆங்கிலத்தில் Dejavu வும் பார்க்கலாம். 12B கிளைமாக்ஸில் சிமரனின் இரண்டு நிலைகள்! அது தான் ஷ்ரோடிங்கர் பூனை!

12B
800px-Schrodingers_cat.svg

 
ஆக நிஜம் எது என்ற கேள்விக்கு சிலவேளைகளில் பூனைக்கு அது தெரியலாம் என்கிறார்கள். ஜோக் இல்லை. நான் யார் என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருமாதிரி இருக்கும் இல்லையா. ஒருத்தனுக்கு நான் அயோக்கியன், இன்னொருவனுக்கு பொய்யன், இன்னொருவனுக்கு பாவம், இப்படி .. இதிலே உண்மையான நான் எது என்ற கேள்விக்கு என்னிடம் மட்டுமே பதில் கிடைக்கும். வெளிக்கு தெரியும் நான் ஒப்சர்வேஷன் சார்ந்தது என்பது இந்த விதி. நாம் பார்க்கிறோமோ, இல்லையோ, நிலா வன்னியில் பொழிந்தே தீரும் என்பது எங்கள் மனம் சார்ந்த, பகுத்தறிவு சார்ந்த விஷயமே ஒழிய நிஜம் கிடையாது. வெறும் ஆறறிவு இதை நம்ப மறுக்கிறது!
இப்போது சயந்தன் படத்தை பாருங்கள், பூனை அந்த தாத்தாவை பார்க்கிறதா? தாத்தா பூனையை பார்க்கிறாரா? சயந்தன் இந்த படத்தை எடுக்காமல் இருந்திருந்தால், இந்த பார்வை நடந்திருக்குமா? Momento படத்தில் வரும் வசனம் ஞாபகம் வருகிறது.
Memory can change the shape of a room; it can change the colour of a car. And memories can be distorted. They're just an interpretation, they're not a record, and they're irrelevant if you have the facts.I have to believe in a world outside my own mind. I have to believe that my actions still have meaning, even if I can't remember them. I have to believe that when my eyes are closed, the world's still there. Do I believe the world's still there? Is it still out there?... Yeah. We all need mirrors to remind ourselves who we are. I'm no different. 
261vivek


ஷப்பா இப்பவே கண்ணை இந்த கட்டு கட்டுதேபூவெழுதும் கவிதை

வைரமுத்துவை விஞ்ஞான கவிஞர் என்று சொல்லி கலாய்க்க பயன்படுத்திய பாடல். படம் பூவேலி. சாதாரண முக்கோண காதல் தான். கார்த்திக், கௌஷல்யா நடிப்பும், நல்ல திரைக்கதை இசையும், என்னுடைய பதினெட்டு வயசு ஹோர்மோன்களும் சேர்ந்து, பார்க்கும்போது உண்டு இல்லை என்று ஆக்கி .. கௌஷல்யாவை தேடி தேடி .. இப்போதும் முகம் கழுவும் போதும் முகத்தில் அப்பியிருக்கும் யாழ்ப்பாணம் புழுதி கரைந்து வடியும்!
“விசர்” பிடிக்கவைக்கும் பாட்டு இது. உன்னி மற்றும் சித்ரா! இசையமைத்த பரத்வாஜ் அவ்வப்போது “காடு திறந்து” பார்த்தார், என் போல ஒரு சிலரே ‘ஓ’ போட்டதால், அவரே “ஓ” போட ஆரம்பித்துவிட்டார்.
வைரமுத்து கும்பகர்ண தூக்கத்தில் கிடந்துவிட்டு திடீர் திடீர் எப்போதாவது தான் முழிப்பார். முழித்தால்? தீனி தான். இந்த படம் வேறு பாலச்சந்தர் தயாரிப்பாயிற்றா! கொம்பை முறித்து எழுத தொடங்க, கவிதை கவிதையாய் கொட்டியது… அர்த்தங்களுடன்!
ஊசி துளைத்த குமிழிகள் போலே
உடைவது உடைவது வாழ்வு
என்று காதலன் சொல்வது சும்மா கிடையாது. அவன் இன்னும் சில நிமிடங்களில் படத்தில் இறந்துவிடுவான்! அதற்கு அவள் சொல்லும் பதிலில் ஓராயிரம் அர்த்தங்கள்.
காற்று துரத்தும் கடலலை போல
தொடர்வது தொடர்வது காதல்
காதல் எப்போதும் துரத்திக்கொண்டே வரும் .. வாழ்வு உடைந்த பின்னும் கூட! படத்தின் இரண்டாம் பகுதியில் அவள் இன்னொருவனை இயல்பாக காதலிக்க தொடங்குகிறாள். கவிஞர் எப்படி செதுக்குகிறார் பாருங்கள்.
இப்போது வைரமுத்து ஏன் பேரரசர் என்பதை நிரூபிக்கும் இடம்!  
mqdefault (1)உலகம் திறந்து வைத்த முதல் சாவி காதல் தான்
திறந்தவன் தொலைத்து விட்டான்
இன்னும் அந்த தேடல் தான்
திறந்தவன் தொலைத்துவிட்டான் சரி. ஆனால் உலகத்தை தான் திறந்தாயிற்றே. இப்போது எதுக்கு சாவி? அதையேன் இன்னமும் தேடிக்கொண்டு? … தளம் விரிகிறதா?   இதை நான் கவிதை என்னும்போது, என்ன  மண்ணுக்கடா உனக்கு கவிதை தெரியும்? என்று கேட்பவருக்கு.
என்கிணறு என் கனவு எது சரியோ எது பிழையோ
இதுதான் நான்
எதுவோ நீ
-- கவிஞர் கேதா
 

ஹாட் நியூஸ்

வியாழமாற்றம் ரொம்ப நீளமாக இருப்பதால் வாசிப்பது கடினமாக இருக்கிறது என்று பலர் அடிக்கடி சொல்லுவார்கள். நேற்று ஸ்கைப்பில் மன்மதகுஞ்சுவுடன் சொல்லி புலம்பியபோது, “அட பாவிகளா .. அவுங்களுக்கு எப்படீடா புரியும் .. நீளமாக இருக்கும் வியாழமாற்றம் தாண்டா செக்ஸியா இருக்கும்” என்றான்! எதையும் எதையும் தொடுக்கிறான்? .. ஏதாவது “A” சேர்ட்டிபிகட் மாட்டரா என்று புரியவில்லை. ஆனாலும் அவன் வாசிப்பு அனுபவத்துக்கு முன்னால் நான் எல்லாம் சப்பை என்பதால், கேள்வி கேட்காமல் தாங்க்ஸ் சொன்னேன்.
நீளம் + செக்ஸி என்றவுடன் இலியானா மூக்கு ஞாபகம் வந்தது!  நித்யா மேனனுடன் பிஸியானதில் ரெட்டியை தாக்கி பொண்ணை தூக்கி பல நாட்களாகி விட்டது.
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்.
தாழாது உஞற்று பவர்

மன்மதகுஞ்சு உரை:
மனம் தளராமல் இடைவிடாது முயற்சி செய்பவர், இலியானாவும் புறமுதுகு காட்டக் காண்பர்.


Contact form