வியாழ மாற்றம் 05-07-2012 : கடவுளே கடவுளே கடவுளே

Jul 5, 2012 16 comments

டேய் ஜேகே

navanethem-pillayநவநீதம்பிள்ளை,
சிம்ம சொப்பனம்,
தென் ஆபிரிக்கா
படகு மூலம் வரும் அகதிகளை தடுப்பதற்காக அவுஸ்திரேலிய அரசு சட்டம் ஒன்று கொண்டுவர போகிறதாமே? என்ன சட்டம் அது?

அது செனட் சபையில் தோற்கடிக்கப்பட்டு விட்டது. முன்மொழியப்பட்ட சட்டமூலம் என்னவென்றால், படகுகள் மூலம் வரும் அகதிகளை மலேசியாவிற்கு கொண்டு போய், ஆற அமர விசாரித்து விசாக்களை வழங்குவது. மலேசியா ஒன்றும்  ஆஸி போன்று ஜெனீவா அகதிகள் பிரகடனத்தில் கையெழுத்து இட்ட நாடு இல்லை. ஆகவே விண்ணப்பங்களை அகதிகள் சாசனத்தின் படி பரிசீலிக்க வேண்டிய தேவையில்லை. இலகுவாக திருப்பி அனுப்பலாம். இந்த திட்டத்தை கடந்த ஆண்டு அரசாங்கம் கொண்டுவர, யாரோ ஒரு புண்ணியவான் நீதிமன்றத்துக்கு போக, “அது எப்படி, சாசனத்தில் கையெழுத்து போட்டு விட்டு, மலேசியாவில் கொண்டு போய் விசாரிக்கலாம்?” என்று நீதிமன்று கிடுக்கு பிடி போட, அதை சட்டம் மூலம் முறியடிக்கவே பாராளுமன்றத்தில் திருத்தம் கொண்டுவந்தார்கள். எதிர்க்கட்சி அதற்கு சம்மதிக்காததால் செனட்டில் அம்போ!
ஏன் மலேசியா? என்று கேட்டால், மலேசியாவுக்கு அனுப்பப்படுவோம் என்று தெரிந்தால் அகதிகள் யாரும் படகு மூலம் ரிஸ்க் எடுத்து வரமாட்டார்கள் என்கிறது அரசாங்கம். அப்படியென்றால் அகதிகளை ஆஸி வரவேற்கவில்லையா? என்று கேட்டால், வரவேற்கிறோம்! ஆனால் இது அபாயமான பாதை. உயிரிழப்பு ஆபத்து இருக்கிறது. ஸோ வேண்டாம் என்கிறது!
boat_people
சரி ஆபத்து என்றால், நீ இந்தோனேஷியாவில் ஒரு ஓபிஸ் திறந்து, அங்கேயே அகதிகளை பதிந்து அழைத்து வாவேன். அவர்களும் இத்தனை பணம் கொடுத்து கடல் தாண்ட வேண்டியதில்லையே? உனக்கு தான் அகதிகள் மீது அத்தனை கரிசனை ஆச்சே? என்று கேட்டால் சவர்னிட்டி அது இது என்று சப்பை கட்டு கட்டுவார்கள். விஷயம் அதுவல்ல. அரசாங்கம் படகு மூலம் வருபவர்களை கொஞ்சம் நேர்வஸாகவே அணுகுகிறது. அவர்கள் நாட்டுக்கு ஆபத்து ஏற்படுத்தலாம் என்ற பயம். படிக்காதவர்கள், இவர்கள் வந்தால் லண்டனில் நடந்தது போல கலவரம் ஏற்படுத்தி விடுவார்கள் என்று பயம். இதை ஒபனாகவே சொல்லியிருக்கிறார்கள்.
சொல்ல போனால், நியாயமான அகதிகள் அந்தஸ்துக்கு உரியவர்கள் பெரும்பாலும் படகு மூலம் வருபவர்களே. ஆனால் அவுஸ்திரேலியாவில் வசிக்கும் அகதிகளில் எண்பது வீதத்துக்கும் அதிகமானோர் படகு மூலம் வந்தவர்கள் அல்ல! அப்புறம்? அவர்கள் ஆகாயம் மூலம் வந்தவர்கள். உரிய விசா எடுத்து, எம்எஸ்ஸி, பிஎச்டி என்று படிக்க வருபவர்கள். சுற்றி பார்க்கவருகிறேன் என்று வந்து இங்கேயே தங்குபவர்கள். பிள்ளை பேறு பார்க்க வந்து டேரா போட்டவர்கள். நியாமான காரணங்களுக்காக அகதியானவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்கள் பெரும்பாலும் தங்களை மறப்பது அரிது. ஆனால் பெரும்பாலோனோர் அப்படியல்ல. வழக்குக்காக புலிகளிடமும், இராணுவத்திடமும் அடிவாங்கி; ஒருத்தன் மனிசியிடம் ஊரிலே விளக்குமாற்றால் முதுகில் அடிவாங்கி வீரத்தழும்பு பெற்றவன். புலி காசு கேட்டு பங்கருக்குள் வைத்தது என்று ஒரு புளுகை போட்டு இன்றைக்கு டபிள் ஸ்டோரி வீட்டில், எதற்கெடுத்தாலும் “What the !@#$?” என்று, ரஜனி ஸ்டைலில் கேட்டுக்கொண்டு திரிகிறான். இவர்களால், நிஜமாகவே போரில் பாதிப்புற்ற, தெரிந்த தம்பி ஒருவனின் உயர்கல்வி விசா மறுக்கப்படுகிறது. நாம் தமிழர்.
“அந்தஸ்து” கிடைக்கும் வரைக்கும் அதற்கு அலைந்து, அது வந்த பின் துறக்கும் முனிவர்கள் நிறைந்த தேசம் இது.

here_I_am_boy_cartoonவாலிபன்
வயது நாற்பது
அதேன்ஸ்!
அண்மைக் காலமாய் உணர்ச்சி வயப்படல், உணர்வாதல் பற்றி பெரும் விமர்சனம் ஒன்று முன் வைக்கப்படுகிறது - அதில் தப்பென்ன இருக்கு எண்டு விளங்கேல்ல?
உணர்ச்சி கவிதைகளுக்கு நான் எதிரியல்ல. பாரதியின் கவிதைகளை பற்றி சிவத்தம்பி சொல்லும்போது, "He used poetry as an emotional response to the concerns which move him" என்று சொல்கிறார்(ஏன் இதில இங்கிலீஷ்?). கவிதையில் உணர்ச்சி அதற்கு மெருகு சேர்க்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அந்த உணர்ச்சியில் பொய் இருக்கக்கூடாது. அலங்காரம் கூடாது. வாசிக்கும் போது நிஜம் முகத்தில் அடிக்கவேண்டும். இல்லையென்றால் அது வெறும் உணர்ச்சி குப்பை!
கேதா அண்மையில் எழுதிய கவிதை முழுக்க உணர்ச்சி இருந்தது தான். ஆனால் அவன் அதை புரிந்து எழுதியதால் தான் “வெறுங்கனவு” என்று தலைப்பிடமுடிந்தது.
kunti-and-karna-300x227என்கிணறு என் கனவு எது சரியோ எது பிழையோ
இதுதான் நான்
எதுவோ நீ
என்று துணிச்சலாக முடிக்கமுடிந்தது. இதை தான் நிஜம் என்கிறேன்.
இது இல்லாமல், மேலே பொம்மர் குண்டு போடும்போது பங்கருக்குள் இருந்துவிட்டு, அது போன பின்பு,
“உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே”
என்று எழுதினால், Facebook இல் நிறைய லைக்ஸ் கிடைக்கும். ஆனால் எழுதியது பாரதியேயானாலும்  என் வீட்டில் அது ஸ்ட்ரைட்டாக ரபிஷ் பின்னுக்குள் தான்.
முப்பது வருஷத்துக்கு பிறகு சந்தித்த போது, ரெண்டு சொட்டு கண்ணீர் விட முன்னமேயே, கர்ணனிடம் அத்தனை வரங்களையும் வாங்கிவிட்டு, போர்க்களத்தில் செத்தவுடன் குய்யோ முய்யோ என்று குந்தி அழுகையில், கர்ணனுக்கு அது அங்கீகாரம் தான். குந்தியின் அழுகையிலும் நிஜம் இல்லாமல் இல்லை. ஆனால் எனக்கு சிரிப்பும் கொஞ்சம் கோபமும் தான் வருகிறது!
 
resize_20110806011420டேய் பனங்கொட்டை தலையா? பெரிய இவன் மாதிரி ஏதாவது அப்படாக்கர் அட்வைஸ் பண்ணுவியே? இந்த வாரமும் எதையாவது கக்கி தொலைடா!
 
ஒரு வீட்டில் டின்னருக்கு அழைத்திருந்தார்கள். போனேன். மேசையில் இருந்தால், சிக்கன் வறுவல், மட்டன், மட்டை என்று எல்லாமே வந்தது. நிதானமாக விளையாடினால் நாலு நாள் தாங்கும் என்ற அளவுக்கு சாப்பாடு. ட்ராவிட் போல பாட் பண்ண தொடங்கும் போது தான் முன்னால் இருந்த நாதாறி ஆரம்பித்தது.
“இங்கத்த மட்டன் சாப்பிட்டா செமிக்காது. நாலு நாளைக்கு டாய்லட் போறது கஷ்டம் .. நீங்க சாப்பிடுங்க ஜேகே”
மட்டன் கறியை பார்த்தேன். அருவருத்தது. சபை நாகரிகத்துக்காக புட்டை எடுத்து தட்டில் வைத்தேன்.
“இப்ப தண்ணி பில் எல்லாம் அதிகமா வருது,  கதிர்காமர் சொன்னார், டோய்லட்ல ரெண்டு ‘அமத்திற’ பட்டன் இருக்காம். ஒண்டுக்கு போகேக்க…”
badtablemannersஇப்போது தண்ணீர் குடிக்கும் மனமும் இல்லை. 
“இவங்கள் என்ன கருமத்துக்கு கக்கூசை நடு வீட்டில வைக்கிறாங்களோ? எங்கட சாப்பாட்டுக்கு மணக்குது சனியன்”
That’s it. அதற்கு மேல் மேசையில் இருக்க முடியாமல், தொலைபேசி வருது என்று சொல்லி எழுந்து வந்துவிட்டேன்!
அடிப்படை சபை நாகரிகம் ஒன்று இருக்கிறது. சாப்பிடும்போது நாங்கள் என்ன பேசுகிறோம் என்பதில் கவனமாக இருக்கவேண்டும். சத்தம் போட்டு சாப்பிட கூடாது. எல்லோரும் முடிக்கும் மட்டும் எதையாவது மென்று கொண்டு இருக்கவேண்டும். இப்படி பல. சின்ன விஷயங்கள் தான். எங்களுக்கு ஏன் அக்கறை இல்லை?
 
10xsxewமன்மதகுஞ்சு
வவுனியா
அஜீத் ரசிகர்கள் தல தான் மாஸ் என்றும், விஜய் ரசிகர்கள் தளபதி தான் மாஸ் என்றும் சொல்லுகிறார்களே? இன்றைய தேதிக்கு யாரு நிஜமான மாஸ் ஹீரோ?
இன்றைய திகதிக்கு .. ஊப்ஸ் சொறி, நேற்றைய திகதியிலிருந்து நிஜமான மாஸ் ஹீரோ ஹிக்ஸ் போசோன் தான், சந்தேகமா? அடுத்த பகுதி ப்ளீஸ்!
 
 

கடவுளே கடவுளே கடவுளே!

இன்றைக்கு அலுவலகம் முழுதும், குளிக்கும் போது குஷ்புவை கண்ட ரஜனி கணக்கா ஒரே பரவசம். அரை நாள் பொழுது அதை பற்றி பேசுவதிலேயே கழிந்தது. அப்படி என்ன அதிசயம் நேற்று? கடவுளை கண்டு பிடித்துவிட்டார்கள். வெறும் கவர்ச்சி வார்த்தை இல்லை இது. பிரபஞ்சத்துக்கு உருவம் கொடுத்தவர், வலு கொடுத்தவர், சக்தி கொடுத்தவர் தானே கடவுள்? சிருஷ்டி தானே கடவுள்? அவரே தான்!
47794124965589900177
மாட்டருக்கு வருவோம். இந்த பிரபஞ்சம் எப்படி உருவானது என்ற மாட்டர். அட இது நிஜமாகவே மாட்டர் சம்பந்தமான விஷயம் தான். பிரபஞ்சத்தில் உள்ள பொருட்களின்(matter)  வடிவமைப்பு, அவற்றின் குணங்களுக்கென்று இரண்டு ஆதாரமான விஷயங்கள் இருக்கிறது. ஒன்று துகள்கள்(particles), மற்றையது விசை(Forces). இந்த துகள்களும், அவற்றின் செர்மானமும் அவற்றிக்கிடையேயான விசைகளும்( மின் காந்த விசை, ஈர்ப்பு விசை..) தான் அணுவை, மூலக்கூறுகளை, தனிமங்களை, செர்வைகளை, என்னை, உங்களை, ஹன்சிகாவை, கட்டதுரையை,  விண்வெளியில் இருக்கும் எல்லாவற்றையும் கட்டமைக்கின்றன.
பிரபஞ்சத்தில் “இருப்பவை” எல்லாமே துகள்களால் ஆனது. துகள்களை, அடிப்படையில் குவார்க் என்றும் லெப்டான் என்றும் பிரிப்பார்கள்.  இவை அணுவை விட,  பாடப்புத்தகத்தில் படித்த ப்ரோத்திரன், இலத்திரனை விட, சிறிய ஆதாரமான கூறுகள். இவற்றுக்கு என்ன ஸ்பெஷல் என்றால், இவை பல சேர்மானத்தில் இணைந்து விசைகளை மேலும் கீழுமாக உருவாக்கி, இணைந்து பிரிந்து, அணுவை உருவாக்குகின்றன. பல அணுக்கள் சேர்ந்து மூலக்கூறு ஆகி.. அவை எல்லாம் சேர்ந்து .. புல்லாகி, பூடாய் புழுவாய் மரமாகின்றன!
350px-CMB_Timeline300_no_WMAP
முடிவில்லா பிரபஞ்சத்தை பார்த்தால், நட்சத்திரங்கள், கலக்ஸிகள், மனிதர்கள் பேய்கள், அவட்டார்கள் என இவ்வளவு விஷயம் இருக்கிறது இல்லையா? ஆனால் இப்படியான “பொருட்கள்” வெகு கொஞ்சமே. இருக்கும் மாட்டரை விட இல்லாத மாட்டர் தான் அதிகம்! அந்த இல்லாத மாட்டரை டார்க் எனேர்ஜி என்கிறோம். அவை வெறும் சக்தி தான். அவற்றுக்கு என்று ஒரு திணிவு, எடை இல்லை. ஒளி போல. ஒளி வெறும் போட்டோன்களால் ஆனது. அதற்கென்று ஒரு எடை இல்லை. ஆனால் கலர் இருக்கு. போட்டோன்களின் இயல்பு அது!
ஒளி போல ஓடிக்கொண்டே இருக்காமல், ஆற அமர கூடி இருப்பதற்கு, அதாவது பொருள் என்ற ஒன்று அமைவதற்கு, இந்த குவார்க்குகள் மத்தியிலே ஒரு ஈர்ப்பு விசை, தள்ளு விசை வேண்டும். அதற்கு, அடிப்படையில், திணிவு(Mass) அவசியம். திணிவு இல்லாவிட்டால், ஏனைய ஒன்றுமே இருக்காது. பிடிமானம் இருக்காது. ஒரு விசையை கட்டுப்படுத்த திணிவு அவசியம்(F=MA). ஆனால் அந்த திணிவு எப்படி இந்த பொருட்களுக்கு வந்து சேர்ந்தது என்பது தான் எல்லோரையும் குடையும் கேள்வி. திணிவு ஒவ்வொரு குவார்க்கிலும் இருக்கிறது. அதாவது புரோட்டன், நியூட்ரான் இரண்டுக்குமே! இலத்திரனுக்கும் கூட இருக்கிறது. ஆனால் போட்டோனுக்கு இல்லை. இன்னும் சில கூறுகளுக்கும் இல்லை. ஆளாளுக்கு திணிவு மாறுது. சிலதுக்கு இல்லவே இல்லை. ஆக திணிவு என்பது ஆதாரமான விஷயம் இல்லை. அதை யாரோ கொடுக்கிறார்கள் என்று ஒரு முடிவுக்கு வந்தார்கள். யார் கொடுக்கிறார்கள் என்று தெரியாததால் அதை கடவுள் என்று பெயரிட்டு விட்டார்கள்!
கடவுள் தான் திணிவு கொடுத்தார் என்றால், அந்த கடவுள் எங்கே என்று ஒரு கேள்வி எழுகிறது. ஒரு சிலமனும் இல்லை. ஆக திணிவை கொடுத்துவிட்டு அவர் அழிந்துவிட்டார். அதாவது தோன்றி, கொடுத்ததெல்லாம் கொடுத்துவிட்டு மறைந்துவிட்டார். இதை பரிசோதிக்கும் முயற்சி தான் பிக்பாங்!
பரிசோதனை அவ்வளவு எளிதல்ல. கணக்கிட்டு பார்த்தால், கடவுளை காண்பதற்கு, மிக வேகமாக எதிரும் புதிருமாய் துகள்களை பாய்ச்சவேண்டும். அவை மோதும்போது சும்மா தண்ணி பீச்சுவது போல வெடிக்கும். அப்போது .. அந்த கண பொழுதில் ஒரு விஸ்வரூபம் எழுகிறது. அந்த விஸ்வரூபத்தை ஹிக்ஸ் வெளி(Higgs Field) என்கிறார்கள். அது ஒரு மாஜிக் வெளி. அந்த வெளிக்கூடாக போகும் துகள்கள், திணிவை பெறுகின்றன. மழை போல. மழைக்குள் நனையும்போது ஓட்டும் ஈரம் போல, அந்த கணம் மட்டுமே தோன்றும் இந்த ஹிக்ஸ் வெளிக்கூடாக போகும்போது இந்த துகள்களுக்கு திணிவு கிடைக்கிறது. போகும் வேகத்தை பொறுத்து கிடைக்கும் எடை மாறுகிறது. சிதரும்போது பெரிய, சிறிய குவார்க் கூறுகள் இந்த வெளியால் போகையில் வெவ்வேறு அணுத்திணிவுகள் வருகின்றன. அப்படி திணிவை, அந்த வெளியில் இருந்து கடத்தி தரும் போர்ட்டர் வேலையை செய்பவர் தான் இந்த ஹிக்ஸ் போசோன்(Higgs Boson)! இவரும், இந்த வெளியும் .. கண்ணிமைக்கும் நேரத்தில், பிக் பாங்கின் போது தோன்றி அதே வேகத்தில் அழிந்துவிடும். அந்த கேப்பில உருவானது தான் யூனிவேர்ஸ்! இதை தான் நேற்று நிரூபித்திருக்கிறார்கள்!
ஆக அந்த வெளியை கடவுள் என்றும் அதை கடத்தும் ஹிக்ஸ் போசனை கடவுளின் தூதர் என்றும் சொல்லலாம் இல்லையா? இப்போது பிரபஞ்சம், அதிலும் நட்சத்திர தொகுதி, பால்வீதி, பூமி, நித்யாமேனன், எல்லோரும் தோன்றியதன் ஆதாரம் கடவுள் தானே. இறைவனும் இறை தூதனும் நம்மையெல்லாம் படைத்துவிட்டு, எஸ்கேப்பாகிவிட்டார்கள். அவர்களின் திணிவு தான் நம்மில். இதை தான் கமல் அன்பெசிவத்தில் “நீ நான் சிவம்” என்கிறார்.  தாதாவஸ்கி “we all came out of Gogol’s overcoat” என்கிறார். நம்ம டிஆர் .. “தட்டிப்பார்த்தேன் கொட்டாங்குச்சி” என்கிறார். அட ஒரு ப்ளோவில வந்திட்டு பாஸ்!

சொல்லு சொல்லு சொல்லு!

எங்கள் பசங்களிடம் இதான் பெரிய ஒரு பிரச்சனை. காதலிப்பார்கள். ஆனால் சொல்ல மாட்டார்கள். சொல்லுபவர்களை காதலிக்கமாட்டார்கள். நண்பன் ஒருவன் “விம்பிள்டன்” நான்காம் ரவுண்டில் பறந்து பீல் பண்ணும்போது சொன்னது இது.
“மச்சி நான் லவ் பண்ணும்போது அவளுக்கு தெரியாதடா. அவ லவ்வும் போது எனக்கு தெரியாதடா. அவ கல்யாணத்துக்கு இன்விடேஷன் தரும்போது தான் இந்த விஷயம் ரெண்டு பேருக்குமே தெரிஞ்சுதடா… ஒரே அழுகை அழுகையா முட்டுது! பீரும் தான்!”
நம்ம பசங்க கிட்ட இருக்கும் கெட்ட பழக்கம் இது. பசங்களாவது ஓரளவு ஓகே. பொண்ணுங்க, லவ் பண்ணாதவரைக்கும் கூலா பேசிவிட்டு, பண்ண தொடங்கிய பிறகு விலக ஆரம்பிப்பார்கள். இந்த விஷயம் தெரியாம, நம்ம நாதாறி பசங்க வேறு பொண்ணுங்கள நூலு விட போக, “டீல் ஓர் நோ டீலில்” ஒரு ரூபா நாணயம் தான் இறுதியில் மிஞ்சும்!
“கண்ணெதிரே தோன்றினால்” சிம்ரனும் அதே ரகம் தான்.

ஆணின் இனம் அது கிளை மாதிரி
பெண்ணின் இனம் அது வேர் மாதிரி
கிளை பேசினால் அதை ஊர் கேட்குமே
வேர் பேசினால் அதை யார் கேட்பது
என்று ஹரிணி பாடும்போது .. “என்ன மண்ணுக்கடி நான் இருக்கிறேன்” என்று பூமி கேட்பது எனக்கு கேட்கிறது!
இதே சிட்டுவேஷனில் இன்னொரு பாட்டு. அனுராதா ஸ்ரீராம் குரல் .. அமிர்தமாகி நஞ்சாகும் பாட்டு!

“தாம் கொண்ட காதல் மொழிவதற்கு தமிழ்நாட்டு பெண்கள் துணிவதில்லை”
என்னும் போது … யார் யார் எல்லாம் சொல்லத்துணியாமல் இருந்திருப்பார்கள் என்ற ஒரு curiosity வருவதை தவிர்க்கமுடியவில்லை.
 
sakuntla

சொல்கின்ற மொழிகள் தீர்ந்துவிடும்! சொல்லாத காதல் தீர்வதுண்டா? மொழியே போ போ, அழகே வா வா வா.. வாடா டேய்!


இந்த வார கடிதம்!

அன்புள்ள ஜேகே,
simran180108_14சிம்ரன், விஐபி படத்தில் பாஸ்கட் பால் விளையாடிய நாள் முதல் நான் ஆடாத ஆட்டம் இல்லை. நிறைய தடவை ஷூட் பண்ணியும் உயரம் கம்மி என்பதால் பந்து விழமாட்டேங்கிறது!வாழ்ந்தால் அவளோடு தான் இல்லையேல் நித்தி வழியில் பிரமச்சரியம் போய்விடுவேன்! அப்படியாவது அவள் என் பக்தையாக தன்னும் வரமாட்டாளா என்ற ஆதங்கம் தான்! வீழ்ந்தாலும் அவள் மடியில் ஒரு வீரனாய் வீழ்வேன் என்று வாலி படம் பார்த்த நாள் முதல் சபதம் இட்டேன். ஆ..ஆ…ஆஆ!
என் காதலை புனிதப்படுத்த உங்கள் வியாழமாற்றத்தில் என் ஆதர்ச நாயகி சிம்ரனின் பாட்டு ஒன்று தரமுடியுமா.
இப்படிக்கு
ஆம்பிளை ஆண்டாள்,
பயந்தன்!

ஜேகே : டேய் நீங்களா ஈமெயில் அனுப்புவீங்க. சரி எழுதி போட்டா, ஏதோ பெரிய “இவன்” மாதிரி முகத்த திருப்புவீங்க! அவனவன் என்னா சீனு காட்டுறான் தெரியுமா? ஏதோ படத்த போட்டு இல்லாததையும் சொல்லாததையும் எழுதிபூட்டனாம்! அப்பிடி தாண்டா .. நாங்க எழுதுவோம்! என் நெஞ்சில் குடியிருக்கும் ரசிகர்கள் இருக்கும் மட்டும் எழுதுவோம்! நீ முத்திர சந்தில லவ் பண்ணினா என்ன ..மூ… மன்மதகுஞ்சு ப்ளீஸ் பினிஷ் த லைன்! .. நான் கெட்டவார்த்தை எழுத கூடாது என்று வாசகர் வட்ட கடிதங்கள் காட்டமாக வந்துகொண்டிருக்கு!

மன்மதகுஞ்சு ஸ்பெஷல்

AxBD1GSCIAA8K-F
10xsxewஉலக நாயகன்னு உலகம் பூரா  சுத்தி சம்பாதிக்கிறாரு அப்பன் காரரு! இவளவை தலமயிருக்கு நல்லெண்ண பூச வக்கில்லாம, கிழிஞ்ச டவுசரை  போட்டிட்டு திரியுறாளவை. ச்சே .. இப்போ பாரு! உன்னோட அக்கா புருஷன் ஜேகேக்கு தானே அவமானம்?Comments

 1. //நிஜமாகவே போரில் பாதிப்புற்ற, தெரிந்த தம்பி ஒருவனின் உயர்கல்வி விசா மறுக்கப்படுகிறது. நாம் தமிழர்.//

  What is the connection between, getting affected by war and applying for student visa? Do you think Aus government should give visa because he got affected by war?

  If a person got trouble there was a scheme to apply through Humanitarian visa directly from Sri Lanka earlier.(I think someone should be in Aus from that person's family-not sure)

  But a person should not tell the Visa Officer if the person got trouble because of war. Isn't it obvious, the person might apply for assylum? It is not necessarily to be true. But the probability of people, apply with problems to assylum is very high.

  //சொல்ல போனால், நியாயமான அகதிகள் அந்தஸ்துக்கு உரியவர்கள் பெரும்பாலும் படகு மூலம் வருபவர்களே.//

  I don't agree with this. The right way may be, you can say anyone come from North & East of Sri Lanka directly had the right to get assylum. How much, the people who come in boat paid? Where did they get the money?

  One more question, can you list some justifiable reasons to apply for assylum?

  J

  ReplyDelete
 2. அவுஸ்திரேலியா அகதிகள்விவகாரம் காலத்துக்கேற்ற தகவல்.. போன கிழமை யாழ் போய் நின்ற போது எனது உறவுக்காரரும் படகு மூலம் வெளிக்கிடுரேன் எண்டு சொன்னார்.. நானும் விவாதித்து பார்த்தேன்.. அவர் காசை கரியாக்குவதில் மட்டும் குறியாக இருந்தார்.. பலருக்கு உண்மை நிலை தெரியாமல் பயணம் செய்கிறார்கள் பின் விளைவு தெரியாமல்..

  பாரதியார், பாரதிதாசன் உணர்ச்சிக்கவிதைகள் தாண்டி புதுவையின் ரத்த அழுத்தம் சட்டென்று அதிகரிக்கச்செய்யும் சுகந்திர தாக கவிக்தைகள் வரை உணர்ச்சிப்பெருக்கு அதிகம் இருந்தவை தான்.. ஆனால் அவையெல்லாம் கனவாகிப்போகும் போதுதான் இவ்வாறான கவிதைகள் மீது நாட்டம் குறைந்து விடுகிறது

  ஆமா அந்த ஹிக்ஸ் போசன் கடவுள் / கடவுளின் தூதர் இந்துவா,முசுலீமா,கிறீஸ்டியனா எண்டு சொல்லமா விட்டிட்டியேடா..

  அடேய் நீ இப்ப எந்த ஊரில இருக்கிறாய்.. இப்பல்லாம் காலம் மாறீப்போச்சு.. காதல் என்பது குறுஞ்செய்தியிலேயே முடிந்து போய் விடுகிறது.. ரிஸ்க் எல்லாம் எடுக்க தேவையில்ல.. பிடிச்சிருந்தா யெஸ்ஸு பிடிக்காட்டி நோ என்ற குறுஞ்செய்தியில் ஒரு காதல் காலத்தை ஓட்டிட்டு இருக்குடா. ஆனாலும் அந்த படத்தில் சிம்ரனுக்குள்ளே இருந்த காதல் பீலிங் இருக்கே.. சே சான்சே இல்லை.. அதை அப்படியே எவ்வளவு அழகா வெளிப்படுத்தியிருப்பா.. காதல் அவஸ்தை... தழும்பி வழியாது பொங்கிட்டேயிருக்கும் அவரோட முக ஏக்கத்தில்.. நினைவு படுத்தியதுக்கு நன்றீ மச்சி

  ReplyDelete
 3. மூன்று நாட்களுக்கு முன்பாக thatstamil.com இல் " கடவுளை கண்டுபிடித்து விட்டார்கள்" என்னும் தலைப்பில் செய்தி ஒன்று வெளியிட்டிருந்தார்கள் .அந்த செய்தியின் விளக்கம் அப்போது எனக்கு முழுமையாக புரியவில்லை . உங்களுடைய வியாழமாற்றத்தின் வாயிலாக ,என்னுடைய சிறு அறிவுக்கு எட்டும் வகையில் நல்லதொரு விளக்கம் அளித்தீர்கள் நன்றி !!

  // அக்கா புருஷன் ஜேகேக்கு தானே அவமானம்? //
  தல, நீங்க ஒலக நாயகனின் மருமகனா? சொல்லவேயில்லை ,...

  ReplyDelete
 4. Hi J,

  Thanks for creating this discussion.

  //What is the connection between, getting affected by war and applying for student visa? Do you think Aus government should give visa because he got affected by war?//
  The connection is simple. Since more people got student visas, came to Australia and applied Asylum out of nowhere, the genuine student, who wants to come here, study and then properly migrate wouldn't get the Visa. If Aus government is genuine, they should stop giving Asylums to those who applied coming as students. Students, they submitted all the support documents from Sri Lanka for a genuine student visa, I still don't understand how they been given asylum. Instead of stop giving asylums to those students, what government does it, they stop giving student visas for others. Guess what? Genuine students lose their chances.

  //If a person got trouble there was a scheme to apply through Humanitarian visa directly from Sri Lanka earlier.(I think someone should be in Aus from that person's family-not sure)//
  That student doesn't wanna come as a refugee. He just wants a student Visa. He is been denied the visa. That's my point. Why an Indian is easily getting a visa but not a Sri Lankan Tamil? ... That's was my argument.

  //How much, the people who come in boat paid? Where did they get the money?//
  I have no issues with getting Asylum. All the Tamils have one or the other reason to claim it. My point is, we as Tamils have some responsibilities. If I come as student and study here for two years(MSc), I can easily get a PR. But I am applying for Asylum to get rid of the student fee, probably abandon the study to work and earn more. I know a PhD scholar student did this. Can you imagine it? Why should we do this when we can genuinely get a PR without going back to the country? If we don't apply for Asylums with student visas, government wouldn't stop giving student Visas. That opens up more students to migrate yea?
  But I can’t make the same argument for those who come in boats. They got no other means to come here, so possibly they deserve the chance, but people come as students, they better get through the academic period and get PRs. That's a fair game I think.

  //One more question, can you list some justifiable reasons to apply for asylum?//
  The reason I moved here is solely the situation in the country. I wouldn't be here if I didn't have to go through the embarrassments in Sri Lanka. That makes me a refugee. My move had nothing to do with financial wealth, and I am sure is the same for most of the people. Money is the reason why we didn’t go to India but Australia. But not the reason for leaving our loving birth place. So still we all are refugees. That's a justifiable reason I guess.
  So Asylum seeking is perfectly fine in this regard. My point is, setup a fair ground to play. If you have a chance to get PR, then wait and get it gracefully. Leave other non-opportunistic people to seek asylum.

  ReplyDelete
 5. அண்ணை. உந்த கடவுளின் துகள் பற்றிய விளக்கம் நல்லா இருக்கு. இருந்தாலும் மற்ற மேட்டர் எல்லாம் கொஞ்சம் மொக்கையா இருக்கு. நல்ல விசயங்கள்தான் இருந்தாலும் ஏதோ ராவணன் படம் பார்த்த மாதிரி எல்லாம் இருக்கு ஆனா ஏன் இருக்கோணும் ஏன்டா மாதிரி சில கேள்வியள் வருகுது. வாசிச்சுகொண்டு இருக்கேக்க நித்திரையாகி கீபோர்டில விழுகிற அளவுக்கு இருக்கு. இந்தமுறை வியாழன் ஏழில இருந்து எட்டுக்கு போய்ட்டுது போல கிடக்கு. திங்கள் கந்தசாமியாரும் சுமந்திரனும் சேர்ந்து கலக்கீட்டு விட வியாழன் இப்பிடி செய்திருக்கபடாது. அதுக்க என்னை வேறை இழுத்து... மாத்தணும் ஏதோ ஒண்டை மாத்தணும்.

  ReplyDelete
 6. JK,

  //If you have a chance to get PR, then wait and get it gracefully. Leave other non-opportunistic people to seek asylum.//

  It is acceptable and theoretically correct. BUT
  In Australian Universities, the course fee more than $10,000 per year. If A person want to get PR, he /she should study in Australia at least 2 years. Is everyone have that amount when apply for visa? They get money from someone else and show the bank account to get the visa. Once come to Aus, they apply for the asylum. Those people may have less money than the people who come through boats. The PhD student may be an exception.

  Australian government cannot reject an application for refugee status, if the person can prove he/she eligible to refugee visa under the refugee convention. So the government can’t do anything other than not giving student visas.

  J

  ReplyDelete
 7. Hi JK,

  I always afraid to talk about this asylam because it may others feelings. I have same questions as you have. I think, It should be each persons responsibility and moral ethics to follow the procedure and get through the system.

  ReplyDelete
 8. Hi J,
  //In Australian Universities, the course fee more than $10,000 per year. If A person want to get PR, he /she should study in Australia at least 2 years. Is everyone have that amount when apply for visa? They get money from someone else and show the bank account to get the visa. Once come to Aus, they apply for the asylum. Those people may have less money than the people who come through boats. The PhD student may be an exception.
  //
  I do not understand, Why do you compare the students and people coming in people. The people who are coming in boat are not obstacle for any other people to claim asylum.

  Money isn't everything. I know it is difficult but I am 100% sure students can do it without seeking asylum. Once you complete the degree and joined work. You could repay everything within two years !!!.

  ReplyDelete
 9. Hi

  It is not comparing. It is a reply to JK for the previous comment.

  J

  ReplyDelete
 10. நன்றி மன்மதகுஞ்சு ...
  // இந்துவா,முசுலீமா,கிறீஸ்டியனா//
  பிஸ்கா என்ற மதம். ஆனால் அது தோன்றிய போதே மறைந்துவிட்டது.

  ReplyDelete
 11. நன்றி முருகேசன்.

  //தல, நீங்க ஒலக நாயகனின் மருமகனா? சொல்லவேயில்லை ,...//
  என்னப்பா .. ஊருக்கே தெரிந்த விஷயம் உங்களுக்கு தெரியாதா?

  ReplyDelete
 12. நன்றி கேதா

  //மாத்தணும் ஏதோ ஒண்டை மாத்தணும்.//
  ஒண்டை அல்ல, பலத்தை மாத்தோணும் .. வியாழமாற்றத்தில் இன்னமும் செழுமை படுத்தியிருக்கவேண்டும் .. இந்த வாரம் கொஞ்சம் மொக்கை தான்.

  ReplyDelete
 13. HI J,

  //Is everyone have that amount when apply for visa? They get money from someone else and show the bank account to get the visa.//
  Its not about having more or less money. Its about opportunities. People still go to UK, pull their skin out to study and earn(many wouldn't do it if GOVT does give Asylum). I suggest we can do the same thing here. Most of the people I know, could have been easily studied and paid the debts after/during the studies. Obviously getting the Asylum is an easy way getting out. But its not fair.

  People come via boats, they didn't get any visas upfront, so they technically don't spoil others' chances.


  //Australian government cannot reject an application for refugee status, if the person can prove he/she eligible to refugee visa under the refugee convention. So the government can’t do anything other than not giving student visas. //
  No, Government still can go for Nauru policy, sending all the people back there(both students visa applicants and people come from boat). But government only doing this for people come from boats, but not air. Why? cos they want to makeup for refugees number still to show off, yet want to feel safe. They are ok for educated refugees!

  If they start sending everyone to Nauru for processing, gradually people applying Asylum from student visa will decrease, that will let more students to come to Australia as well as more people to getting Asylums if then intend.

  ReplyDelete
 14. Thanks Joker, year pretty much agree with your comments.

  ReplyDelete
 15. நன்றி திண்டுகள் தனபாலன்.

  ReplyDelete

Post a comment

Contact form