வாடைக்காற்று!
“நெத்தலி மீன் மட்டும் எழுபது அந்தர் வரை தேறும்” என்றான் செமியோன்.
“இந்த கடலில் நெத்தலியிருப்பது முந்தி தெரியாது” என்று வியந்தார் யூசுப்பு சம்மாட்டியார்.
மரியதாஸ் தோணியை விட்டு கீழே குதித்தான். எல்லோரும் மரியாதையோடு பார்த்தார்கள். அவன் ஏளனமாக எல்லோரையும் ஒருமுறை சுற்றிபார்த்தான். அவனுடைய கண்கள் ஓரிடத்தில் ஒருகணம் நிலைத்தன. ஒருகணப்பொழுது தான்.
நாகம்மா தலையைக் குனிந்துகொண்டாள்.




இரண்டாண்டுகளுக்கு முன்னர் யாழ்ப்பாணம் போனபோது செங்கை ஆழியானின் மருமகனோடு பேசிக்கொண்டிருந்தேன். “மாமா இப்ப ஒரு புத்தகம் எழுதிக்கொண்டிருக்கிறார்” என்றான். முடித்துவிட்டாரா தெரியவில்லை. கேட்கவேண்டும். அடுத்தமுறை ஊருக்கு போனால் “அவருக்கு முன்னால போய் நிண்டா வாய் டைப் அடிக்குமே” என்ற பயத்தை ஒதுக்கி விட்டு அவர் வீட்டுக்கு விசிட் அடிக்கவேண்டும். சுஜாதாவை தான் சந்திக்கமுடியவில்லை. செங்கை ஆழியானை மிஸ் பண்ணிவிட கூடாது.
மண்டைக்காய்
“என்னட்ட இருக்கிற கெட்டித்தனத்துக்கு நானெல்லாம் அமெரிக்காவுல பிறந்திருந்தா நிலைமையே வேற. போயும் போயும் யாழ்ப்பாணத்தில் போய் பிறந்தனே”
என்று அனேகமாக எங்களில் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு தருணத்தில் நினைத்திருக்கலாம். அதையெல்லாம் மீறி அடுத்தகணமே “தமிழனாய் பிறப்பது பெருமை” என்று உட்டலாக்கடி அடித்தாலும், இவ்வளவு காலத்தில் ஒரு கணம் கூட அந்தவகை சிந்தனை தெரிந்தோ தெரியாமலோ உங்களுக்கு வராமல் போயிருக்காது.
“முக்கி முக்கி தமிழில எழுதிறாய், ஏதாவது ரெஸ்போன்ஸ் இருக்கிறதா?” என்று நேற்று பீட்டர் லஞ்ச் டைமில் கேட்டபோதும் இதே அமெரிக்க ஸ்டேட்மெண்டை விரக்தியாய் விட்டேன். சத்தம் போடாமல் ஜோக்கட்டை வழிச்சு முடிச்சுவிட்டு அவன் சொன்னான், “உனக்கு அமெரிக்காவின் அதிபுத்திசாலி யாரு? அவன் என்ன செய்கிறான் என்று தெரியுமா?”…. “தெரியாது யாரு?”….. “அவர் ஒரு பவுண்ஸர்!” …. “வாட் த …”
புத்திசாலித்தனத்தை அளப்பதற்கு இப்போதைக்கு இருக்கும் ஒரே தியரி இந்த IQ தான். பலதரப்பட்ட aptitude சார்ந்த சாதுரிய கேள்விகள், வேறு சில அளவிடைகளை கொண்டு அளக்கிறார்கள். இல்லை இது செல்லாது என்று DRS ஐ நிராகரிக்கும் BCCI போல IQ வை ஏற்றுக்கொள்ளாத ஒரு கூட்டமும் இருக்கிறது. சரி விடுவோம்.

திறமை இருந்தும் அதை எப்படி பயன்படுத்தலாம் என்று லங்கனுக்கு தெரியவில்லை. சின்னவயதில் அப்பாவை இழந்து, அம்மா மறுமணம் முடித்தவனின் அடி உதைகளில் துன்பப்பட்டு ஒரு கட்டத்தில் ஜிம்முக்கு போய் உடம்பை ஏற்றினால் தான் அந்த அப்பனை சமாளிக்கலாம் என்று உடம்பை தேற்றி அப்பன்காரனின் கொட்டத்தை அடக்கியிருக்கிறார். குடும்பத்தில் சீன் இப்படிப்போனால் படித்து விஞ்ஞானி ஆகவேண்டும் என்ற எண்ணம் எங்கிருந்து வரும்? இருபது வயதாகிவிட்டது. கல்லூரி படிப்பு கூட முடிக்கவில்லை. பணம் வேண்டும். உடம்பு கட்டுமஸ்தாக இருந்ததால் பாரிலே பவுண்ஸர் வேலை. அதாவது யாரை உள்ளே விடுவது, யாரே வெளியே தள்ளுவது, எவனாவது குடித்துவிட்டு ரவுடித்தனம் பண்ணினால் தூக்கிக்கொண்டுபோய் ரோட்டில் போடும் வேலை. அமெரிக்காவின் அதி புத்திசாலி செய்யும் வேலை.
ஆடுறகாலும் பாடுறவாயும் சும்மா இருக்காது என்பது போல, அதி புத்திசாலியான லங்கன் ஓய்வு நேரங்களில் தன்பாட்டில் ஒரு தியரியை கூட உருவாக்கி வருகிறார். பிரபஞ்சத்தை பற்றி அறிய வெளிப்புற கணித விஞ்ஞான அமைப்புக்கள் போதாது, பிரபஞ்சம் புறத்தையும் அகத்தையும் ஒருங்கமைக்கும் ஒரு அசாதாரணமான அமைப்பு, அதை கொஞ்சம் ட்ரை பண்ணினால் நிறுவலாம். நிறுவிக்காட்டுகிறேன் என்று அவர் தன் தியரிக்கு “Cognitive-Theoretic Model of the Universe” என பெயரிட்டிருக்கிறார். கந்தசாமியும் கலக்ஸியும் எழுத பயன்படுமே என்று வாசித்துப்பார்த்தேன். ஒன்றிரண்டு வரிகள் மாத்திரமே புரிந்தது. அந்த அளவில் எங்கள் உபநிடதங்களை எழுதியவர்களின் IQ கூட கிட்டத்தட்ட் 200 வந்தாலும் வரும் என்றும் தெரிந்தது. அவருடைய தியரியும் உபநிடதங்களில் சொல்லப்படும் ஏகாதசம், துவாதசம் மாட்டர்களும் அவ்வளவுக்கு பொருந்துகிறது.

இன்னொரு மண்டைக்காய், கிட்டத்தட்ட 150, 160 வரை IQ வரக்கூடிய ஒருவர் என்னோடு படித்த தர்மினி என்ற நண்பி. அகில இலங்கை ரீதியாக இரண்டாம் இடம். டியூஷன் ஒன்றுக்கும் பெரிதாக போகாமல் சாவகச்சேரியில் இருந்தே படித்து கலக்கிய பெண். மொறட்டுவவில் ஒரே பிரிவு என்பதால் அவளின் திறமையை நேரில் காணும் வாய்ப்பு கிடைத்தது. கணக்கில் புலி என்பார்களே, அது தர்மினி தான். கோயில் கட்டி கும்பிடலாம். எந்த கணித பாடம் என்றாலும் 100 மார்க்குகள் சாதாரணமாக எடுப்பாள்.
Signals & Systems மிட்செமிஸ்டர் பரீட்சை. முதல் நாள் இரவு கொன்கோர்டில் “ரன்” பார்த்துமுடித்து நானும் கஜனும் ரோலக்ஸில் கொத்துரோட்டி சாப்பிட்டுவிட்டு, வெள்ளைவத்தையில் ஊர் உலாத்திக்கொண்டு அடுத்தநாள் போனால் பரீட்சை என்றார்கள். எக்ஸாம் பேப்பரில் ஜிலேபியை பிச்சு போட்டது போல ஒரு தொகை x, y, z, சிக்மாக்கள். ஒன்றுமே புரியவில்லை. பத்து நிமிஷங்கள் விறைச்சுபோய் என்ன செய்யிறது எண்டு யோசித்தவன், சடாரென்று பின்னால் திரும்பினேன். தர்மினி விடைகளை எழுதிமுடித்துவிட்டு ஏதோ ஒரு பாட்டை ஹம்மிங் பண்ணிக்கொண்டிருந்தாள். அந்த இடத்திலேயே குனிந்து காலில விழுந்து “ப்ளீஸ் ஆன்சரை சொல்லும்” என்று கேட்டால், கையை எனக்கு பக்கத்தில் சுட்டிக்காட்டினாள். அங்கே என்னவென்றால் இந்த நாதாறி கஜன் முன்னமேயே காலில விழுந்து ஆன்சரை வெட்கம் மானம் இல்லாமல் அப்பிக்கொண்டிருந்தான். அப்புறம் நான் அவன் காலில் விழுந்து ஆன்சரை கொப்பி பண்ணி, மூவருக்குமே A+ வந்ததும் மிச்ச வகுப்பு வெறும் B களிலேயே நின்றதும் தர்மினியின் திறமைக்கு ஒரு சாம்பிள் தான். ஆனால் ஸ்ரோடிங்கர், ஐன்ஸ்டீன் பாதையில், தகுதியும் திறமையும் இருந்தும் தர்மினி பயணப்பட முயலவில்லை.
பார்த்தி என்று இன்னொருவன், இப்போது CEB இல் எஞ்சினியராக இருக்கிறான். செம இன்டெலிஜென்ட். “மச்சான் உங்கள் எல்லாரையும் விட நான் மண்டைக்காய்” என்று வேறு அடிக்கடி சொல்லி வெறுப்பேத்துவான். எப்படிப்பட்ட IQ கேள்வி என்றாலும் படார் படார் என்று பதில்வரும். அதிக திறமை. அதைவிட அதிகமாக அவனுக்கு தன் திறமை மீது நம்பிக்கை. இப்போதும் அவன் அப்படித்தான் என்று நண்பர்கள் சொல்வார்கள். அவனும் ஒரு அளவுக்கு மேலே உயரவில்லை. ஆராய்ச்சி, கணிதம் சார்ந்த துறைகளில் மிளிரக்கூடியவன் இப்போது பொறியியல், மேலதிகாரி என்று பியுரோகிராடிக் வட்டத்தில் இருக்கிறான். இப்படி லிஸ்ட் நீண்டுகொண்டே இருக்கும்.
லங்கன் கதையை சொல்லிவிட்டு பீட்டர் கேட்டான்.
“ஆணியே புடுங்கியிருக்க ஏலாது… ஒடம்பு கூட வெறும் சக்கை .. பவுன்சர் வேலை கூட கிடையாது”இப்ப சொல்லு .. “நீ எழுதுற பதிவுகளுக்கு ரெஸ்போன்ஸ் கிடைக்குதா”“ஓ கிடைக்குதே .. என் ரேஞ்சுக்கு குடுத்த காசுக்கு மேலாகவே கொண்டாடுறாங்க பாஸ்”“அது!”
பூ முடித்து பொட்டு வைத்த வட்டநிலா!

பார்த்துக்கொண்டிருக்கிறவன் ஏற்கனவே நாலு தரம் வவுத்தால போயிருப்பான். ஆனாலும் அதிரடி சீன் இனித்தான் இருக்கு மாப்ள. அப்படியே அவள் திரும்புவாள். உச்சி வகிட்டில் பதக்கம், முகத்தில் அவள் நிறத்தை விட மிகுதி அத்தனை நிறமும் வியர்வையோடு ஹோலிப்பண்டிகை கொண்டாடும். கண்ணிமைகளில் அடித்த கறுப்பு வழிந்து கண்ணீராய் ஓடும். இது போதாது என்று மணமகளை யாரோ ஒரு பொறாமை பிடித்த நண்பி சிரிக்கச்சொல்லுவாள். இவளும் தான் ஏதோ ரேவதி, மதுபாலா நினைப்பில் சிரிக்க, அப்போது தான் உதடுகளில் அப்பியிருக்கும் நாலாந்தர லிப்ஸ்டிக் எரிமலை லாவா போல பூரணமாக தெரிய ஆரம்பிக்கும்.
வீடியோகாரனும் இந்த இடத்தில், எண்பதுகளில் மொக்கை படத்துக்கெல்லாம் மாய்ஞ்சு மாய்ஞ்சு மெலடி போட்ட இளையராஜாவாக மாறி, சிட்டுவேஷன் சோங் போடுவார். அப்படி ஒரு பாட்டு தான் இது.
ராகம் ஹம்சத்வதனி. கண்டுபிடிப்பது அவ்வளவு கடினமில்லை. “மாலைகள் இடம் மாறுது” கூட ஒரே ராகம். “மழைநேர காற்றே காற்றே மணம் தின்ன வா வா, குடையோர ஊற்றே ஊற்றே குணம் சொல்லி தா தா” என்று ஹர்ணி பாடும்போது யுரேகா சொல்லத்தோன்றுதா? சாட்சாத் ஹம்சத்வதனியே தான்!
அண்மையில் எம்எஸ்வியும் ராஜாவும் சேர்ந்து இசையமைத்த விஸ்வதுளசியிலும் இந்த ராகம் ஒரு சின்ன பிட்டு பாடலில் அடித்து ஆளப்பட்டிருக்கும். கேட்டுக்கொண்டே இருக்கும்போது இறுதி புல்லாங்குழல் போய் ஒரு வீணையோடு இணையும். அதே சுரத்தை பிடித்துக்கொண்டு பூ முடித்து பொட்டுவைத்த்த வட்டநிலா என்று ஆரம்பியுங்கள். அப்போது புரியும் இந்த ராகம் எப்பிடிப்பட்ட சாத்தான் என்று.
சென்ற வருடத்தில் அதிக தடவை நான் கேட்ட பாடல் இந்த “பூ முடித்து பொட்டு வைத்த வட்ட நிலா”. கேட்க கேட்க லீவு போட்டு ஒரு பார்க்கில் போயிருந்து தனியனாக கூட கேட்கச்சொல்லும், இன்னும் நூறு குமரன்-மேகலா சிறுகதைகள் எழுத வைக்கக்கூடிய “கெட்ட சனியன்” இது!
விஸ்வரூபம்

&&&&&&&&&&&
Well said, I had a chance to read all of செங்கை ஆழியான் books before 1994 after that I had only chance to read the blogs.He wrote with most of our feelings. I wish you to write more in the future.So we can read it freely.
ReplyDeleteAs you said to Peter, There are lot of people with high intelligent power in our society. Each of them got affected in different stage of their life and couldn't retrieve due so many reasons. Hope someone will come through and prove their talent as மண்டைக்காய்.
Ajanthan
Thanks Anna .. I kinda having his most of the collection with me (I think). Need to collect the rest too.
Delete//Hope someone will come through and prove their talent as மண்டைக்காய்.//
I am sure it will happen eventually. We just need to realize our potentials at the same time get the proper exposure too.
This is about the book "IQ".
"The book offered research on human DNA and discussions on whether we are the product of our genes or of our experiences. As much as genetic coding is important to who we are, the book suggests that genes don’t necessarily shout commands at us, but at the very best, whisper suggestions. Paul Ehrlich argued that cultural and environmental factors may actually play a bigger role to how we are, than our DNA. "
my friend's father was also invooved in the making of Film vaddikatru in 1978.
ReplyDeleteMy friend left to Europe in 1985 and settled his father's debts.
You are writing for your self-satisfaction. It is important.
Vairamuttu says every poem he writes as a mother gives birth to a child.
Wish you all the best.
siva59s@yahoo.com
//My friend left to Europe in 1985 and settled his father's debts.// That's the shame and fateful situation .. mhmm
DeleteThanks a lot, every post I work hard and try to perfect as much as possible, there are flaws of course yet I try my best. Hope that gets paid off someday. Thanks for the continuous encouragement again.
Thanks JK. I haven't read 'Vaadai kaatru'. Hope we can watch Vishwaroopam today!
ReplyDeleteCheers Veena .. I am thinking of writing about Viswaroobam if we enjoy the movie .. Kamal never disappointed us in the recent past .. so thrilled and excited!
Deleteதாங்கள் ஒவ்வொரு வாரமும் நல்லதொரு புத்தகத்தை அறிமுகம் செய்கிறீர்கள். ஆனால் இங்கு துபாய் நகரில் தமிழ் புத்தகங்கள் கிடைப்பதில்லை.சென்னை சென்றவுடன்தான் தாங்கள் அறிமுகம் செய்த ஈழத்து எழுத்தாளர்களை எல்லாம் வாசிக்க உத்தேசித்துள்ளேன்.
ReplyDeleteவழக்கம் போல துள்ளலான மொழிநடையில் கலக்குறீங்க சூப்பர் தல!!. கூழைக்கடாக்கள் என்பதன் அர்த்தம் என்ன?
நன்றி முருகேசன் .. கூழைக்கடாக்கள் என்று சொல்வது ஒருவகை Pelican பறவைகளை. வேடந்தாங்கலுக்கு பருவத்துக்கு வரும் பறவைகள் போல நெடுந்தீவு என்று யாழ்ப்பாணத்துக்கு அண்மையில் இருக்கும் ஒரு தீவுக்கு இந்த பறவைகள் வாடைக்காற்று சீசனுக்கு வந்துசேரும்.
Deleteஏட்டு சுரைக்காய் கறிக்காகது எண்டு சொல்றது சரிதான் போல. இந்த வாழ்க்கை pressure இல்லாட்டி அது பண்ணலாம்னு இது பண்ணலாம்னு தோணும், முழிச்சு பார்த்தால் bus இன்னும் trafficல தான் மாட்டிண்டு நிக்கும். ஆன இது அமெரிக்காவுல பிறந்தாலும் இருக்கும்ணுதான் தோணுது. வெற்றி பெற்றவரதான் நமக்கு தெரியுது.
ReplyDeleteசேம் மச்சி .. கொஞ்சம் பிடிவாதமா இருந்தால் ஒன்றிரண்டு ஆணிகள் புடுங்கலாம் .. அவ்வளவே.
Deletehttp://www.ourjaffna.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3
ReplyDeleteநன்றி இணைப்புக்கு.
Deleteஈழத்து நாவல் உலகே கண்டிராத அதிசயமாக, செட்டிக்குளம் வாழ் மக்கள் 1974 ஆம் ஆண்டு மாசி 22 ஆம் திகதி விழா எடுத்ததும் இந்த நாவலுக்குத் தான்.
ReplyDeleteஇலங்கையின் அனைத்து மாகாணங்களிலும் பரவலாகத் தமிழர் அதிகம் வாழும் பகுதிகளில் திரையிடப்பட்டது. அதிக நாட்கள் ஓடிய தியேட்டர் யாழ் ராணி தியேட்டர் 41 நாட்கள்
முதற்தடவையாக சிறந்த படத்துக்கான ஜனாதிபதி விருது (1978) கிடைத்த தமிழ்த் திரைப்படம் இது.....
எம்மவர் பற்றி நாம் இன்னமும் தேட வேண்டும் என்ற ஆர்வத்தை உண்டாக்கி விட்டீர்கள்...
அண்ணா.... smalllllll request ,,...////.... நிலக்கிளி நாவல் நன் மிகவும் ரசித்தது... வீரகசேரி பிரசுரமாக வந்தது என்று நினைக்கிறேன்... நூல்கள் வரிசையில் அந்த புத்தகத்தையும் பதியலாமே... ப்ளீஸ்.........please ...
நிலக்கிளி நான் வாசிக்கவில்லை .. வாசித்தவுடன் எழுதலாம்.
Deleteஎம்மவர் பற்றி நாம் இன்னமும் தேட வேண்டும் என்ற ஆர்வத்தை உண்டாக்கி விட்டீர்கள்...
ReplyDeleteஅண்ணா.... smalllllll request ,,...////.... நிலக்கிளி நாவல் நன் மிகவும் ரசித்தது... வீரகசேரி பிரசுரமாக வந்தது என்று நினைக்கிறேன்... நூல்கள் வரிசையில் அந்த புத்தகத்தையும் பதியலாமே... ப்ளீஸ்.........please ...
/ப்ளவுஸ் தைப்பவருக்கும் இந்த சீனில் தான் ஸ்கோப். முதுகுவெட்டு விதம் விதமான ஸ்டைலில் இருக்கும். சிலவேளை V ஷேப்பில். சிலவேளை முள்ளு முள்ளாக, சிலவேளை குறுக்க மறுக்க லேஸ் போகும். யன்னல் எல்லாம் வைப்பார்கள். சிலது நல்லா இறங்கும். சிலது மேலேயே நின்றுவிடும். அதில ஒரு போர்டர். தெரியும் மேனிப்பகுதியில் கொஞ்சம் மிணுங்கல்கள் கூட தெரியும். வியர்வைத்துளிகளில் வீடியோ லைட் பட்டுத்தெறிக்கும்./
ReplyDelete/பார்த்துக்கொண்டிருக்கிறவன் ஏற்கனவே நாலு தரம் வவுத்தால போயிருப்பான். ஆனாலும் அதிரடி சீன் இனித்தான் இருக்கு மாப்ள. அப்படியே அவள் திரும்புவாள். உச்சி வகிட்டில் பதக்கம், முகத்தில் அவள் நிறத்தை விட மிகுதி அத்தனை நிறமும் வியர்வையோடு ஹோலிப்பண்டிகை கொண்டாடும். கண்ணிமைகளில் அடித்த கறுப்பு வழிந்து கண்ணீராய் ஓடும். இது போதாது என்று மணமகளை யாரோ ஒரு பொறாமை பிடித்த நண்பி சிரிக்கச்சொல்லுவாள். இவளும் தான் ஏதோ ரேவதி, மதுபாலா நினைப்பில் சிரிக்க, அப்போது தான் உதடுகளில் அப்பியிருக்கும் நாலாந்தர லிப்ஸ்டிக் எரிமலை லாவா போல பூரணமாக தெரிய ஆரம்பிக்கும்./
நீங்க ஒரு ரசிகனையா!!
Just I read about mandaikkai.........http://www.examiner.co.uk/news/rastrick-child-genius-sherwyn-sarabi-6401101
ReplyDeleteAjanthan