கந்தசாமியும் கலக்ஸியும்: காட்டமான விமர்சனம்

Jan 12, 2013

 

கந்தசாமியும் கலக்ஸியும் ஆரம்பித்தது முதல் மூன்று விதமான விமர்சனங்கள். “நனைவிடை தோய” (தொடர்ச்சியாக தோய்ந்தால் சளி பிடிச்சிடாது?) தெரிந்த நீ ஈழத்து வாழ்க்கையை எழுதாமல் என்ன மண்ணுக்கு விஞ்ஞான கதைக்கு போனாய்? என்பது. இரண்டாவது விமர்சனம் வாசகர்களுக்கு இவ்வளவு ஆழமாகவும் அதே நேரம் நகைச்சுவையும் சேர்க்கும்போது போய்ச்சேராது. அதுவும் பதிவுகளை மேம்போக்காக தான் வாசிப்பார்கள். நீ ஏன் குத்தி முறிகிறாய்?. மூன்றாவது மொக்கை அதிகமாக இருக்கிறது என்பது, இதிலே எங்கே நல்ல விஷயம் இருக்கபோகிறது?

 

நேற்று டெனிஸ் விளையாடிக்கொண்டிருக்கும் போது நிவேரன் திடீரென்று கேட்டான், “எவன் வாசிக்கிறான்?” என்று இந்த நாசமறுந்த “படிச்சதென்ன பிடிச்சதென்ன” எழுதுகிறீர்கள்.?நான் சொன்ன, சொல்லும் பதில் வாசகர்களை தவறாக எடைபோடக்கூடாது. குமரப்பெருமாள் மாமா, எண்பது வயதுக்கு மேலே இருக்கலாம். கனடாவில் இருக்கிறார். படலை வாசிக்காமல் ஒரு நாள் கூட தூங்குவதில்லை என்று அம்மாவுக்கு எடுத்து சொல்லியிருக்கிறார். அம்பா, அயில் பாரதி என்று பிள்ளைகளுக்கு இலக்கிய பெயர்களை வைத்த யசோ அண்ணா போன்ற வாசகர்கள் வருகின்ற தளம் என்ற பெருமை என் செல்ல படலைக்கு இருக்கிறது!

ஒன்றை நினைவில் வைக்கவேண்டும். சின்னவயதில் எங்கள் வகுப்பறையில் எத்தனை பேருக்கு சுஜாதாவையோ கல்கியையோ தெரிந்திருக்கும்? மூன்று பேர்? ஓஎல் மட்டும் ராணி காமிக்ஸ் வாசித்த பலரும் ஏஎல் இல் “இப்பவெல்லாம் வாசிங்க எங்கேடா நேரம்” என்று தொடங்குவார்கள். பல்கலைக்கழகத்தில் இந்த “வாசிப்பு டைம் வேஸ்ட்” ஆகும். வேலை செய்யும்போது “முந்தி போல வாசிக்க நேரம் இல்லை”. திருமணமான பின்ன “மனிசி தாலியறுக்குது”. குழந்தைகள் பிறந்தபின் “கலியாணம் கட்டி ரெண்டு குழந்தை பிறந்தாதான் அண்ணருக்கும் தெரியும்”. கேட்டுவிட்டேன். அம்மா இப்போது “அப்பம் வடை தயிர் சாதம்”  வாசித்துக்கொண்டிருக்கிறார். எப்போது எழும்புகிறார், வீடு மோப் பண்ணுகிறார், சமைக்கிறார்? ஒன்றுமே விளங்குவதில்லை. எல்லாமே நடக்கிறது. வாசிப்போடு. அவரே சொல்லுவார். வாசிப்பதற்கு நேரம் தேவையில்லையடா. உன்னை மாதிரி எழுதி டைம் வேஸ்ட் பண்ணாம, எப்பவுமே வாசிக்கிற ஆர்வம் இருந்தால் அதுவே போதும். பொறாமையாய் இருக்கிறது.

ஆரம்பத்தில் என் பதிவு நீளம், அது இது என்று விமர்சனங்கள் வரும். இப்போது அந்த வாசகர்கள் காணாமல் போய், என்னை வாசித்து பிடித்து முட்டி மோதி குட்டி கொண்டாடுபவர்கள் மாத்திரமே அவ்வப்போது எட்டிப்பார்க்கிறார்கள். அது ஒரு சௌகர்யம். பயப்படாமல் பரிசோதனைகள் செய்யலாம். எழுதும் ஒவ்வொரு எழுத்துக்கும் யார் வாசகன் என்பதை தீர்மானிக்கவேண்டும். எல்லோருக்கும் எல்லாவற்றையும் எழுத ஆரம்பித்தால் ஒருவருக்குமே சொல்லும் விஷயம் போய்ச்சேராது, எழுதுபவனை தவிர்த்து.

உலகில் எழுத்தாளர்களை விட வாசகனுக்கென்று ஒரு திமிர் இருக்கும். எழுத்தாளர்கள் கூட ஒரு வித பாணிக்குள் தேங்கிவிடுவர் (ஸ்டீபன் ஹோகிங்க்ஸ், டெரி பிரச்சட், செங்கை ஆழியான், ஏன் தலைவர் கூட). வாசகன் தேங்கமாட்டான். அவன் வேலை வாசிப்பது. தேடி தேடி, அவனுக்கு மட்டும் வாசிப்பதற்கு எப்படியோ நேரம் கிடைக்கும். அரக்க பறக்க வன்னியில் இடம்பெயர்ந்துகொண்டிருந்த அவசரத்திலும் மாயவனூர் நூலகத்தில் காலத்தை கழித்தவன் நான். இடையிடை பங்கருக்குள் போய்வந்துகொண்டு. அண்மையில் ஒரு நண்பர் சின்னவயதில் உனக்குள் இவ்வளவு விஷயம் இருக்கும் என்று தனக்கு தெரியாது என்றான். அவனை மொத்த பாடசாலையே அறியும். என்னை இரண்டு மூன்று நண்பர்களே அறிவார்கள். ஆனால் என்னை யாழ்ப்பாணத்தில் யாழ் நகரத்தில் இருந்த அத்தனை நூலகங்களும், பூபாலசிங்கம், மக்மிலன் புத்தகசாளைகளும், ஏன் ஸ்ரீலங்கா பிரஸ்காரருக்கும் கூட தெரியும். ஐநூறு ரூபாய் சில்லறைக்கும்பியை கொண்டு போய் நீட்டி “அங்கிள் என்ர புத்தகம் ஒண்டு பிரிண்ட் பண்ணி வெளியிடோணும்” என்று சொல்லி ஏச்சு வாங்கியிருக்கிறேன், இது ரங்கன் பிரேம்நாத் போன்ற ஒரு சில நண்பர்களுக்கு தெரியும்.

அடி முட்டாளாக இருந்தவன் ஓரளவுக்கு படித்து எனக்கு நானே சோறு போடும் அளவுக்கு வளர்ந்திருப்பதற்கு வாசிப்பை விட வேறு காரணம் எதுவும் இல்லை. கொஞ்சம் மூளை அதிகம் இருந்திருந்தால் நாவல்களுக்கு பதிலாக ஸ்ரோடிங்கரையும், ஐன்ஸ்டீனையும் வாசித்திருப்பேனோ என்று வருத்தம் எப்போதுமே இருந்திருக்கிறது. வீட்டில் அப்பா ஐன்ஸ்டீனுக்கு பதிலாக சேர் பொன் அருணாசலம் வைத்திருந்தார். அம்மா சிவசங்கரியும் அக்கா எண்டமூரியும் வாசித்தார்கள். அது என்னில் அப்படியே தெறித்தது.

“எடிசன் பல்பை கண்டுபிடித்த ஆண்டு எது?” என்று பரீட்சையில் கேள்வி கேட்டு சாகடிக்காமல் “புரதக்குழம்பில் இருந்து முதல் உயிர் தோன்றி இருக்கலாம் என்ற ஐன்ஸ்டீன் ஊகத்துக்கு மறுப்பாக உருவான வாதம் எது?” என்று யாராவது கேட்டிருந்தால்,  சிலவேளைகளில் மயூரதன் தர்மினி போன்ற ஈழத்து அதிசயங்கள் நாசாவிலோ, வாட்சனிலோ எதாவது லாபில் இப்போது இருந்திருக்கலாம். எதுவுமே நடக்கவில்லை. யாழ்ப்பாணத்து விஞ்ஞானம் விஞ்ஞானிகளுக்கானதல்ல. அப்டிடியூட் எக்ஸாம் எடுப்பவர்களுக்கானது.

Douglas_Adams_by_ZakThePelican

டக்லஸ் அடம்ஸ் வாசிக்கும்போது உள்ளூர ஒரு குறுகுறுப்பு ஏற்படும். கூகிள், அன்றோயிட் என்று ஒவ்வொரு பெயர்களின் தோற்றுவாய் எல்லாம் அவர் நாவல்களின் பாத்திரங்களே. சிவாஜி எம்ஜிஆரை பார்த்து அவனவன் கோடம்பாக்கம் பஸ் டிக்கட் வாங்கியது போல, டக்லஸ் அடம்ஸ் வாசித்து அவனவன் விஞ்ஞானி ஆனான். சிலிக்கன் வாலிக்கு பஸ் பிடித்தான். இத்தனைக்கும் நக்கலும் நையாண்டியில் அனல் பறக்கும். எளிமை ஒவ்வொரு எழுத்திலும் இருக்கும். டக்லஸ் அடம்ஸ் விஞ்ஞானத்தை எழுதவில்லை. விஞ்ஞானியாவதற்கு தேவையான அடிப்படை சிந்தனை முறையை தூண்டினார். He stimulated the fundamental questioning ability to become a thinker thus the scientist.

நான் டக்ளஸ் அடம்ஸ் கிடையாது. அனால் அவர் வாசகன். ரசிகன். வெறியன். அவரை அப்படியே தமிழாக்கினால் சங்கு என்றும் எனக்கு தெரியும். சும்மா ஒரு டிரையிலர் விட்டு பார்ப்போம் என்று தான் கந்தசாமியும் கலக்ஸியும் எழுதுகிறேன். கொஞ்சம் கொஞ்சமாக ஊசி ஏற்றிக்கொண்டு வந்து கடைசியாக வெளிவந்த பாகத்தில் துணிந்து இந்த பேனாக்கள் சமாச்சாரத்தை எழுதலாம் என்ற நம்பிக்கையை சக்தி அண்ணாவும் அன்புவும் கொடுத்தார்கள். மேலோட்டமாக தொட்டுவிட்டு யோசித்துப்பார் என்று வாசகர்களிடம் சொன்னேன்.விளைவு இரண்டு மூன்று பேர் என்றாலும் பொசிட்டிவ் தான். ஒருவர் “அண்ணா, சில இடங்கள் புரியவில்லை, விளக்குங்கள்” என்று ஒபினாக கேட்டார். அப்படி கேட்பது இந்த தேடலில் முதலடி. எனக்கு புரியவில்லை என்பதை ஏற்றுகொள்வது சாதாரணமான விஷயமில்லை. ஆனால் நடக்கிறது.

வீணாவோடு நடந்த கலந்துரையாடல் கொஞ்சம் டீடைல் ரகம். அப்படியே தருகிறேன் பாருங்கள். தமிழாக்கினால் லைவ்லிநெஸ் போய்விடும் என்பதால் அப்படியே தந்திருக்கிறேன். நன்றி!

Braveena: grrrrrrrrrrr/.................
JK : what?
Braveena: mokkai!
JK : Well  I made it look like mokkai :) But its not .. ever wondered what might happened to those lost pens?
Braveena: அதை விடுங்க சார்..... check your previous episodes,
கேள்வி அல்லா கண்டுபிடிக்கோணும் எண்டு சொன்னீங்க?
விடை கையில இருக்கு கந்தசாமி .. ஆனா அந்த கேள்வி என்னெண்டு கண்டுபிடிக்க தான் இவ்வளவு சிக்கலும் போராட்டமும் ..
விடை கண்டு பிடிச்சாச்சா? என்ன தான் விடை அது …?
விடை அவ்வளவு சிக்கல் இல்ல கந்தசாமி .. கேள்வி தான் ..

But this time you were talking about the answer to the question? are both the same?
JK: Well spot. yes but this is about how they found the answer before the question. The answer was Thinnaveli .. and Sakkai is explaining how Thinnaveli was found out ... This episode is all about it. And next episode .. the machine will come and say the answer is Thinnaveli! Oops I revealed the obvious I guess!
Braveena: Then what was the question asked to find the answer? What was the question asked to find thinnaveli as the answer at the 1st place?
JK: That's what the confusion will be. Every body were asking the answer to life, universe and everything. But nobody didn't realise they didnt know the question. Carefully read it ... they ask the computer about the answer to life, not the question to life. Yeah? and without knowing both .. neither will make sense in the end.
Braveena: Then what's life?
JK:  nope that’s not what I am trying to say.... the point is .. all of us looking for something .. an answer thats what everybody searching for! That's where the unhappiness feeling .. so they asked it from the machine. But actually we are in the middle of something .. neither knowing the question .. nor the answer
Braveena: confused! will read later again....
JK: Bram computer will tell the answer .. but then they will have to find the question. Without knowing the question, the answer will make less sense if not nothing. Now Bram will make another computer to find the question .. that is earth! U need to wait for that episode next week
Braveena: ah ok.... getting there :)

JK: you know what .. this is towards the end .. so I won't have full and full details there .. I need to create enuf confusions to readers .. but this time it was too much, I admit.
Braveena: ! 
JK : With that context .. pen and umbrella researches are significant :) though it looks a mokkai. I feel like readers would get distracted with the simplicity of the writing unfortunately
JK: Ketha thinks I attacked you a bit in Kanthasamy's last episode :(
Braveena: of course you did ;) any researcher would be offended ;). But it's also a element of sacarsm on the type of research they do in phd. I got it in that way.
JK: it does look like in that way .. but not the case .. its the way the researches should go .. when people look for answers .. these researches always should try to get the questions right, and when people don't know the answer, researchers try to then find the answers. They should look to find something which ordinary people don’t know, otherwise there isn't any place for researches.
Braveena: But its still offending.

JK : That's the tone of the writing .. its bit of a shame we dont see the internal value of the points I tried to make there. Kanthasamy & Galaxy characters never tell anything serious .. but they all make very sense if you cut the humour out.

Braveena: All the researches are done in the way you mentioned, coming up with proper research questions itself a big challenge. and nobody knows it or understands it.

JK : I think even researches think they look for an answer .. but a perfect research shud look for a question and answer on confusing topics. In this case, a topic is life, universe and everything. The research is to find the answer and the question.
Braveena: even in my research asking a proper question is the challenge for me!
JK: yea . then why the hell u thought the episode was offending! apart from the usual mockery of the narration!
Braveena:  I think the example you mentioned wasn't serious enough for ppl to grasp that concept. the humour part overrides the concept. 
JK: It could be true. Because you don’t expect something thought provoking in a mockery narration. But pen is a classic example. It cant go simpler and easier than that. Ever wondered where the pens did go? .. usually I go and look for another pen instead of searching for the lost pen.
Braveena: I'm offended by the type of research I do... the depth of it.... why bother so much about loosing a pen if you have another pen to move on....
JK: that's the problem :). Now with the same state of mind, you can relate, why do we need to worry about who am I, as long as I enjoy and move on! But then people do question about life still. Even for you research .. I dont bother too much but u do care. Hope u see the point.
Braveena: i see the point, but without worrying so much about some issue, we wouldn't have come up with some brilliant stuff.....so you can't generalize and say there is no point in worrying...it depends on what are you searching.
JK: yes its like sending a ship to mars when life on earth not in danger. But we still do. The space research is important in many way even we don’t foresee any apocalypse any time soon. Likewise pen is a simple example, shouldn't we care where the pen did go even when we get a chance to find another new pen? some people would say yes, some would say no. That itself is more than enough to start a research!

JK : Umbrella is a different type of example. We lose the umbrella when not using it, long ago, but realise it only when its needed (applicable to pen also).

JK : Anyway, there its a thought provocation .. nothing else. No right and wrong thoughts there. Just a provocation.


Braveena: today morning in the news, they were saying that some researchers have found how insulin binds to the molecules to keep diabetes under control.... so far they were using insulin without knowing how it works actually. So this understanding and finding would lead up to better solution.
JK : there u go
Braveena: I was wondering how many ppl would have finished phd in the process of finding the actual answer, not all get to see the ultimate answer.... but contribute to the process. But so hard to keep motivated without having immediate answers... not being able to see the bigger picture is the issue
JK: What u just said is what Kanthasamy episode emphasizes. That justifies the theory a bit. People were unhappy, asking questions everyday .. and its all programmed in such way inorder to find the ultimate question. ipad's creation process started 200 years back they say. Not by apple, it could have been from even Henry Ford. 

JK : We all ask questions, look for something for a purpose, which the purpose we are not aware of. Insulin itself found accidently u know.
Braveena: when I chat with you, I get the point you were trying to make, but just by reading the blog, not sure whether that was conveyed enough...
JK: That may be the writing failure I admit. But I couldn’t come up with a better script. .. neither Douglas Adams did. He just had one line on researches and moved on :). I at least dedicated few paragraphs!
Braveena: :) so hard to provoke this thought
JK: But these r intrinsic feeds .. u wont realise but its fed when u read .. and u wont and be able to admit it ever :)
Braveena: may be....
JK: I didn't pick most of Douglas Adams at very first shot. When read first time .. second time .. little bit .. when I write .. it was more clear :)
JK : I am happy to edit and put this in my blog :) to let others know people can think to this extent after reading the episode. FYI .. Thinnaveli is 42 .. and 42 didn’t mean anything :)
JK: It was depth of the mockery Douglas Adams went ... u shud read this damn book Hitchhiker’s guide to galaxy.. forget about Galaxy & Kanthasamy
Braveena: :)
JK:
http://en.wikipedia.org/wiki/Answer_to_The_Ultimate_Question_of_Life,_the_Universe,_and_Everything#Answer_to_the_Ultimate_Question_of_Life.2C_the_Universe.2C_and_Everything_.2842.29
Braveena: Some readers subsequently noticed that 613 × 913 = 4213 (using base 13). Douglas Adams later joked about this observation, saying, "I may be a sorry case, but I don't write jokes in base 13."
:)

JK: ha ha ha typical. Read the book .. u will realise kanthasamy is nothing
Braveena: will give it a try
Douglas Adams was asked many times why he chose the number 42. Many theories were proposed, including the fact that 42 is 101010 in binary code, the fact that light refracts off water by 42 degrees to create a rainbow, the fact that light requires 10−42 seconds to cross the diameter of a proton.[6] Adams rejected them all. On November 3, 1993, he gave an answer.

The answer to this is very simple. It was a joke. It had to be a number, an ordinary, smallish number, and I chose that one. Binary representations, base thirteen, Tibetan monks are all complete nonsense. I sat at my desk, stared into the garden and thought '42 will do'. I typed it out. End of story.------ Many of the researches have been wasted finding what's 42 in real life as well..... since Adams's alive, he was able to say they are shit. But in practical scenario, no one know that there is no meaning for 42!
 
poor us :)

JK: see, you now don't find kanthsamy offending! It makes lot of sense when things revealed

Braveena: :) if I'm researching on 42, then I will be offended
 
Braveena: i always think this happens to Shakespeare's novels, valluvan, kamban all... since they are not alive, we interpret differently and argue among ourselves
JK: obviously, Definitely for Kamban.
JK: not sure abt Valluvan .. he was little straightforward most of the times.

Braveena: no....even valluvan's some kurals I didn't agree with what's said in the urai
JK: yea three people interpreted in three different ways.
Braveena: will chat with ketha and let u know which ones!

 

என்றாவது ஒருநாள் ஒரு பள்ளி மாணவன் கலக்ஸியும் கந்தசாமியும் வாசிப்பான். அதை தொடர்ந்து டக்லஸ், டெரி பிரச்சட், ஹேக்கிங்க்ஸ், ஸ்ரோடிங்கர் என்று முன்னேறி எங்கேயோ போவான் என்ற நம்பிக்கை, யாருக்கு இல்லாவிட்டாலும் எனக்கிருக்கிறது.

&&&&&&&&&&&&

Contact Form