வியாழமாற்றம் 21-02-2013 : வால்வெள்ளி

Feb 21, 2013

 

 

Comet-Elenin-coming-pass-earth-2011

நான் முதன்முதல் வால்வெள்ளி பார்த்தது காற்சட்டை வயதில். மச்சாளின் பொன்னுருக்கல் என்று வெள்ளனை மூன்று மணிக்கே எமகண்டத்துக்கு முதல் போகவேண்டும் என்று எழுப்பி விட்டார்கள். சால்வையை இடுப்பில் கட்டி, அப்பா சைக்கிள் மிதிக்க, முன் பாரில் ஏறி இருந்தது இன்றைக்கும் மறக்கவில்லை. யாழ்ப்பாண குளிரில், மேகம் மறைக்காத,  நட்சத்திரங்கள் சிணுங்கிக்கொண்டு இருக்கும் தெளிந்த வானம் பார்ப்பது ஒரு தனி அனுபவம். பனி வேறு ஒருபுறம். அப்பாவிடம் கேள்வி கேட்டு அலுப்படித்த நாட்கள். “துருவ நட்சத்திரம் தெரியோணுமப்பா, காணேல்ல?”. “பெருங்கரடி கண்டுபிடிச்சிட்டியா? வாலை நீட்டிப்பார் .. தெரியும்”

 

399px-Big_dipper_from_the_kalalau_lookout_at_the_kokee_state_park_in_hawaiiஅன்றைக்கு பெருங்கரடி தேடிக்கொண்டிருந்த சமயம் தான், நல்லூர் தேர் முட்டிக்கு மேலால் சர்ர்ர் என்று சீறிக்கொண்டு ஏதோ எரிந்த படியே போய் மறைந்தது. “அப்பா அந்தா பாருங்க ஆமிண்ட பரா அடிக்கிறான்” என்றேன். “அவனேண்டா நல்லூருக்க அடிக்கிறான். இது வால் வெள்ளி” என்றவர் குரலில் சின்ன கவலை தெரிந்தது. “நல்ல காரியத்துக்கு போகேக்க குறுக்கால போயிட்டுது, டக்கென்று ஏழு சிவன் கோயில் சொல்லு” என்றார். “வண்ணார்பண்ணை, தின்னவேலி, முன்னேஸ்வரம், கோணேஸ்வரம், கேதீஸ்வரம், இராமநாதண்ட பொன்னம்பலவானேஸ்வரம் … பிறகு”. “குவிக்கா சொல்லு”. “ம்ம்ம் ஆ துர்க்கை அம்மன்” என்றேன். “அது அம்மன் கொயிலடா” என்றார். “இல்லையப்பா, அது அவர்ட்ட மனிசி தானே, வீட்டோட மாப்பிள்ளையா இருக்கலாம்..” என்று நான் சொல்லி முடிக்கமுன்னமேயே காது கிண்ணென்று வலிக்க தொடங்கியது.

anushka-shetty-in-arundhati-movie-pics

பாடசாலையில் உடுத்தொகுதி என்ற பாடம் வந்த சமயம். அப்பாவிடம் கெஞ்சி கூத்தாடி அவர் தியோடலைட்டை வீட்டு முற்றத்தில் செட் பண்ணி ஸூம் பண்ணி பார்த்தது தான் சப்தரிஷி மண்டலம். எங்களுக்கு ஏழு மட்டுமே தெரிந்ததால் சப்தரிஷி என்கிறோம். கூர்ந்து பார்த்தால் அட்டு தெரியும். பக்கத்திலேயே பத்து பதினைந்து நட்சத்திரங்களை சேர்த்தால் ஓரியன் என்று வேட்டைக்காரன் படம் வரைந்துவிடும். சப்தரிஷி மண்டலத்தில், நான்கு நட்சத்திரங்களால் ஆன சாய்ந்த பெட்டிக்கு மேலே வால் போல மூன்று நட்சத்திரங்கள் நீண்டிருக்கும். கொஞ்சம் போகஸ் பண்ணி பார்த்தால் அந்த மூன்று நட்சத்திரங்களின் நடுவில் இருப்பது இரண்டாக பிரிந்து தெரியும். அதில் அதிகம் மின்னுவது வசிஷ்டராம். பக்கத்திலே அதிகம் அலட்டிக்கொள்ளாமல் தெரிவது தான் அருந்ததி என்பார்கள். விதி. முற்றும் துறந்தவனுக்கெல்லாம் அனுஷ்கா கிடைக்குது. கடவுளே உன்னுடைய கொடுமைக்கு அளவே இல்லையா?

ஷூமேக்கர் லெவி ஞாபகம் இருக்கிறதா? அந்த நாட்களில் உதயனில் முதல்பக்கத்தில் தொடர்ச்சியாக செய்தி வந்துகொண்டிருந்தது. ஞாயிறு சஞ்சீவி என்றால் நடுப்பக்க முழு கவரேஜ் வரும். தன் பாட்டுக்கு எங்கேயோ போய்க்கொண்டிருந்த வால்வெள்ளி தெரியாத்தனமாக முப்பது வருடங்களுக்கு முன்னாலே வியாழனின் அலை இயக்கத்துக்குள் ஆட்பட்டு, போன வேலையை மறந்துபோய் வியாழனை சுத்திவர ஆரம்பித்துவிட்டிருந்தது. அதையும் ஒழுங்காக சுற்றாமல் jupiterநெருங்கி வருவதும் விலகிப்போவதுமாய் இருக்க, 1994 இல் வியாழனின் மொத்த ஈர்ப்பிலும், ஒரு வித அலை சக்தியிலும் இழுபட்டு இறுதியில் மோதியே விட்டது. முதன் முதலாக ஒரு பெரிய ஐட்டம் ஒன்று ஒரு கிரகத்தை மோதும் காட்சி பூமியில் இருந்து பார்க்ககூடியதாக இருந்தது இதன் விசேஷம். விளைவு ஆளாளுக்கு கையில் கிடைத்த டெலஸ்கோப், பைனாகுலர் என்று அன்றைக்கு இரவு வெள்ளி பார்த்தார்கள். நானும் தியோடலைட்டை செட் பண்ணிவிட்டு பூந்து பார்த்துகொண்டிருந்தேன். எதுவுமே தெரியவில்லை.  தெரிந்தது என்று வகுப்பில் போய் பீலா விட்டு பார்த்தேன். எவரும் நம்பவில்லை.

ஷூமேக்கர் லெவி மாணவர் மத்தியில் விண்வெளி பற்றிய ஒரு எழுச்சியையே அந்த காலத்தில் ஏற்படுத்தியிருந்தது. Do you know? குவிஸ் போட்டிகளில் இந்த கேள்வி வந்தால் எல்லோருமே கை உயர்த்துவார்கள். சமூகக்கல்வி பாடத்து தவணைப்பரீட்சையில் முதல் MCQவாக வரும். அந்த சமயத்தில் நூலகத்தில் விண்வெளி சார்ந்த எந்த புத்தகங்களும் இலகுவில் கைகளில் கிடைக்காது. கச்சேரிக்கு முன்னால் இருக்கும் YMCA நூலகத்தில், “புத்தகங்களை வீட்டுக்கு கொண்டுபோக முடியாது, இங்கேயே வைத்து வாசியுங்கள்” என்று சொல்வார்கள். அவ்வளவு கிராக்கி.  வியாழனுக்கு போய் வருபவருக்கு எங்களை விட வயசு குறைவு தெரியுமா? என்று டைம் ரிலேட்டிவிட்டியை வைத்து வாத்திமார் கப்ஸா விட்டார்கள். எங்கள் கண்ணுக்கு தெரியும் நட்சத்திரங்கள் இந்த கணம் அங்கே அந்த இடத்தில் இல்லாமல் எப்போதோ வெடித்து சிதறியிருக்கலாம் என்று ஒளியாண்டு தாமதங்களை மேற்கோள்காட்டி அக்கா விளங்கப்படுத்தினதெல்லாம் ஆவென்று கேட்டுக்கொண்டிருந்தேன். கந்தசாமியும் கலக்ஸியும் எழுதுவதற்கு சிலவேளை சின்னவயதில் ஷூமேக்கர் லெவி ஏற்படுத்திய ஆர்வமும் ஒரு காரணமாக இருக்கலாம். இப்போது நினைக்க ஆச்சர்யமாக இருக்கிறது.  Those were the days.

வால்வெள்ளி. எரி கல், எரி நட்சத்திரம் எல்லாமே ஒத்த சொற்கள் என்றே நினைக்கிறேன். ஆங்கிலத்தில் asteroid, meteoroid,  comet என்று அவற்றின் கட்டமைப்பு, சைஸ், அடர்த்தியை கொண்டு வகை பிரிப்பார்கள். நமக்கு வால் இருந்தா அது வால் வெள்ளி. எரிஞ்சா எரிகல். அவ்வளவு தான். இந்த வாரம் அவுஸ்திரேலியாவுக்கு மேலால் 50m நீளமுள்ள ஒன்று சீறிக்கொண்டு போய்விட்டது. அதே சமயம் இன்னொரு சின்ன வால்வெள்ளி உள்ளே நுழைந்து அதிர்வுகளை ஏற்படுத்தியவாறே ரஷ்ய நீரோடைக்குள் வெடித்து சிதறியிருக்கிறது. சம்பந்தமில்லாத ரெண்டு சம்பவங்கள் ஒரே நாளில் நடந்ததால் மீண்டும் இதைப்பற்றியே பேச்சு. எங்கிருந்து வருகின்றன? பெரிதாக ஒன்று நிஜமாகவே வந்து மோதிவிட்டால் என்னாவது? மோதாமல் தடுக்க என்ன செய்யலாம்? என்ன செய்கிறார்கள்?

solar_system_formationஒன்றுமேயில்லாத வெறுமையில் இருந்து பிக் பாங்கின் போது காலம், பருப்பொருள், கரும்பொருள் தொன்றியதில்லையா. அந்த பிக் பாங் இன்னமுமே முடியவில்லை என்கிறார்கள். தூர நட்சத்திரங்களில் இருந்து வரும் ஒளிக்கதிர்களின் விலகல்களை அவதானித்து பிரபஞ்சம்(பருப்பொருள்) இன்னமும் விரிவடைந்து கொண்டே போகிறது என்று அடித்து சொல்லுகிறார்கள். அந்த விரிவின் தொடர்ச்சிகளில் முகில் முகிலாக பரவிய பருப்பொருள் துகள்கள் பின்னர் காலம் போக போக தமக்குள் வெடிக்க ஆரம்பித்தன. நெபுலா என்ற அந்த வகை முகில் ஒன்று 4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முதல் சடக்கென்று வெடிக்க சூரியன் தோன்றியது. சுற்றிவர உருவான தூசி மண்டலம் அடர்த்தி, ஈர்ப்புக்கேற்ப குட்டி குட்டி கிரகங்களாக உருட்டப்பட, வட்ட இயக்கம் உருவாக சூரிய தொகுதி நாள் நட்ச்சத்திரம் பார்த்து உருவானது.

ஒரு சூரியன், எட்டு கிரகங்கள், அதது தகுதிக்கேற்ற மாதிரி சந்திரன்கள் எல்லாமே ஒரு வழியாக செட்டில் ஆனா பிறகும் குட்டி குட்டியாய் பல கற்கள் செய்வதறியாமல் திகைத்திருக்கின்றன. இவையெல்லாம் நெபுலா வெடிப்பு ஏற்பட்ட சமயம் உருவாகியவை தான். வெள்ளி பார்த்துக்கொண்டு இருந்ததோ என்னவோ, சூரியனோடோ, ஏதோ ஒரு கிரகத்தோடோ சேர முடியாமல் போய்விட தனியங்களாகிவிட்டது. வடிவங்கள் அல்லாதவை. தம்பாட்டுக்கு கிடைக்கும் ஈர்ப்புக்கு ஏற்றபடி இப்போது பல சுற்றிவருகின்றன. சுற்றாமல் எழுந்தமாறாக அலைபவையும் உள்ளன.  இந்த எழுந்தமாறு கேசுகள் தான் எமக்கு ஆபத்தானவை. அவை கூட மில்லியன் கணக்கில் இருக்கும். அனேகமானவை சிறியவை. வளி மண்டலத்துக்குள் வந்து சில வினாடிகளிலேயே உராய்வால் தீப்பிடித்து வால் முளைத்து எரிந்து கருகிவிடும். கொஞ்சம் பெரிசுகள் ரஷ்யாவில் நடந்தது போல எரிந்தபடியே கீழே விழுந்து சின்ன தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால் இன்னமும் பெரிதாக வந்தால் என்ன செய்ய?

DeepImpactBlast600x389

நாஸா இப்படியான பெரிய கல்லுகளை ஓரளவுக்கு கண்டறிந்து வைத்திருக்கிறது. எண்ணூற்றிச்சொச்சம் ஆபத்தான கல்லுகள் இப்படி தறிகெட்டு திரிகின்றனவாம். ஆனாலும் பூமியை தாக்கும் சாத்தியங்கள் இப்போதைக்கு குறைவு. அப்படியே நெருங்கினாலும் பலவழிகளால் சமாளிக்கலாம் என்கிறார்கள். கொஞ்சநாளைக்கு முன்னர் Deep Impact என்ற ஒரு படம் பார்த்திருப்பீர்கள். பூமியை 7Km நீளமான கல் நெருங்குகிறது. நாஸா விஞ்ஞானிகள் ஒரு விண்கலத்தில் அங்கே போய் இறங்கி, குழி தோண்டி அணுகுண்டை நுழைத்து வெடிக்க வைப்பார்கள். ஒருவித தற்கொலை தாக்குதல் அது. Armageddon என்ற படத்தில் இதையே புரூஸ் வில்லிஸ் செய்வார். ஆனால் இந்தவகை பம்மாத்துகள் படத்துக்கு தான். நிஜத்தில் அணுகுண்டு வேலை எல்லாம் தேவையில்லை.

Don Quijote என்று ஒரு முறை இருக்கிறது. வெகு தூரத்திலேயே வைத்து ஒரு விண்கலத்தால் அந்த கல்லை மோதிவிடும் வழிமுறை. ஒரு சின்ன ஆட்டம் போதும்.  போகும் திசையில் ஒரு கால் பாகை விலகினால் கூட, பூமியை அது தாக்காமல் தப்பிவிடும். இதை ஓரளவுக்கு தயாராக வைத்திருக்கிறார்களாம் பிரான்சில்.

ஆனால் உள்ளதிலேயே சிறந்த வகை வெறுமனே சூரிய ஒளிக்கற்றைகளை வைத்து காட்டும் வித்தை தான். சூரிய கதிர்களை குவித்து லேசர் போல தொடர்ந்து அந்த கல்லை நோக்கி பாய்ச்சினாலே போதும். போட்டோன் சக்தி சீறிப்பாயும் போது கிடைக்கும் சக்தி அபரிமிதமானது. 50கலிபர் அடிப்பது போல.  விலகி ஓடிவிடும். லேசர் கதிரை செறிவாக்கினால் கல்லு எரிந்தே விடும்.  இலகுவான முறை. செலவும் குறைவு. ப்ரூஸ் வில்லிஸும் தேவையில்லை.

என்ன இதில் ஒரு ஆபத்து என்றால், உலக நாடுகள் அணு ஆயுதம் செய்வதை நிறுத்திவிட்டு, இந்த வகை லேசர் கற்றை கருவிகளை உருவாக்க தொடங்கிவிடும். வடகொரியா போன்ற நாடுகள் எங்கேயோ போய்க்கொண்டிருக்கும் கல் ஒன்றை இந்த கருவியாலேயே அமெரிக்கா பக்கம் கூட திருப்பிவிடலாம். கமல் படம் எடுத்தால் ஆப்கானிஸ்தானுக்கு திருப்பிவிடுவார். சிலர் சொறிவார்கள். சொறி சொல்லிவிட்டு அந்தார்டிகா என்று கமல் பெயரை உல்டா பண்ணிவிடுவார். படம் பிச்சுக்கொண்டு ஓடும்.

mass-extinction_1077_600x450

சிலநேரங்களில் இயற்கையை தன்பாட்டில் விட்டுவிட்டாலும் நல்லதே என்று தோன்றுகிறது. 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முதல் வந்து மோதிய கல்லின் தாக்கத்தால் மொத்த டைனோசர்களும் அழிந்துபோயின. அப்போது இருந்த 75% உயிரினங்கள் குளோஸ். இன்றைக்கும் கடல் மடிப்புகளில் கிடைக்கும் இரிடியம் அந்த கல்லில் இருந்து வந்தது என்கிறார்கள். விளைவு? மீண்டும் தொடங்கிய பூமியின் மிடுக்கு. இம்முறை உயிரினங்கள் கதிரியக்கங்களை தாங்க கூடியதாக உருவானது. கூர்ப்படைந்தது. குதிரை,  வவ்வால், திமிங்கலம் எல்லாமே உருவாகி காலப்போக்கில் குரங்குகள், மனிதர்கள் என்று சிலது வியாழமாற்றம் வரைக்கும் ஆட்டம் போட்டுக்கொண்டிருக்கிறது. பூமி நக்கல் சிரிப்புடன் அது பாட்டுக்கு சுற்றிக்கொண்டே இருக்கிறது.

“மண் தான் கடைசியில் ஜெயிக்கிறது”


தனியே தன்னந்தனியே!

ரிதம் படம். நதியே நதியே, கல கல, காற்றே என்று பாட்டுகள் வந்து ஒரு கலக்கு கலக்கி  படத்துக்கு பலத்த எதிர்பார்ப்பு. பூதத்துக்கொன்றாய் ஐம்பூதங்களுக்கும் பாட்டுகள். முதல்நாளே சந்திரனில் பார்க்கபோனால் அது ஒரு டிப்பிகல் வசந்த் படம். முதல் தடவை “என்னடா ஸ்லோவாக இருக்கிறது” போல தோன்றும். ஒரு வருடம் கழித்து சோபாவில் சரிந்துகிடந்து சண் டிவியில் பார்க்கும்போது “அட இவ்வளவு இருக்கா இந்த படத்தில?”

rhythm_mஐம்பூதங்களில் நிலத்துக்கு போட்ட பாட்டு “தனியே தன்னந்தனியே”.

தனியே தன்னந்தனியே நான் காத்து காத்து நின்றேன்
நிலமே பொறு நிலமே பொறுமை வென்று விடுவேன்.

 

அவ்வளவு தான். அதற்கு மேல் நிலத்தை பற்றி ஒரு வார்த்தை இல்லை. பொறுமைக்கு இலக்கணம் பூமி என்ற விஷயத்தை மாத்திரமே எடுத்து வைரமுத்து அப்பாலே விளையாடியிருப்பார். பூமித்தாய் பொறுமை என்று நாம் சொல்வதன் காரணம் நாங்கள் என்ன செய்தாலும் பேசாமல் அவள் இருப்பாள் என்பதால் தான். சில நேரங்களில் டென்ஷனாகி நிலம் நடுங்கி, சுனாமி குடுத்தாலும் அனேகமாக தருணங்களில் எதையும் தாங்கும் தியாகி தான் பூமி. அப்படி என்றால் ஏன் பூமியை போயும் போயும் பெண்ணோடு ஓப்பிடுகிறார்கள்? என்று யாராவது கேட்டால், I can’t answer!

 

ஆனால் இது காதல் பாட்டு. பாட்டை கொஞ்சம் உன்னிப்பாக கவனியுங்கள். “நிலமே பொறு நிலமே, உன் பொறுமை வென்று விடுவேன்”. காதலன் சொல்லும் இந்த பொறுமை காத்திருப்புக்கானது. சகிப்புத்தன்மைக்கானதல்ல(ஹலோ சொல்லி கைக்கொடுக்க தங்கமுகம் கருகிவிட்டாள் வரிகளை கவனிக்க). இது வேறு வகை பொறுமை. என்றேனும் ஒருநாள் அவன் வருவான். வந்து என்னை ஆட்கொள்வான் என்கின்ற காத்திருப்பு. பூமி தான் ஆண்டாளாக அவதரித்தாள் என்று திருப்பாவை சொல்கிறது. அதற்காகவே உயிரை கையில் பிடித்து ஜீவனம் நடத்தும் காத்திருப்பு. இதை வெறும் மழைக்கான காத்திருப்பு என்று சொல்லமுடியாது. பில்லியன் ஆண்டுகளாக அடி வாங்கி அடிவாங்கி கலங்காமல் தொடரும் காத்திருப்பு. அவளை போய் “பொறு நிலமே உன் பொறுமை வென்றுவிடுவேன்” என்று நாம் சொன்னால் சிரிக்கமாட்டாள்?

 


ஒரு வெள்ளைக்காரன் வெள்ளி பார்க்கிறான்!

காலையிலேயே மன்மதகுஞ்சு சாட்டுக்கு வந்து ஹாய் சொன்னான். அவன் வராத நாட்களிலெல்லாம் வியாழமாற்றம் கொஞ்சம் உருப்படியாக வெளிவந்தது போல தோன்றியதால் உள்ளூர டிக்கடித்தது. தயக்கத்துடன் ஹாய் சொன்னேன்.

10xsxew

“மச்சான் வியாழமாற்றம் ரெடி பண்ணீட்டியா … டக்கரான குமுதம் மணியம்மை மாட்டார் இருக்கு, தாக்கிடுவோமா?”
“வேண்டாம்டா அவங்கள் செய்ததே படு மோசம் .. அதுக்கு எதுக்கு கவரேஜ் குடுப்பான்?”
“அப்பிடீண்டா என்ன எழுதப்போராய் .. கம்பராமாயணம் … சீதை மாட்டாரா?”
“இல்லடா”
“குவாண்டமா?”
“போடாங்”
“அப்ப என்ன தாண்டா எழுத போறாய்?”
“விண்வெளி மச்சி .. முந்தாநாள் வால்வெள்ளி விழுந்துதல்லோ … நிறைய விஷயம் எழுதோணும்டா..”
“இப்பிடியே எழுதிக்கிட்டிரு .. அவனவன் தமிழ்சினிமா.கொம்முக்கு எஸ்கேப்பாயிடுவானுக .. எதுக்கும் ஒரு பிட்டு படம் போடு.. பின்னும்”
“அருந்ததி அனுஷ்கா இருக்காடா”
“செல்லாது செல்லாது,  .. அது அரத பழசு … நல்லா இறங்கி தாக்கோணும் மச்சி, சமந்தாவோட டேஞ்சரஸ் ஆங்கிள்ல ஒரு படம் இருக்கு தரவா?”
“இல்லடா, திருந்தீட்டன்.. நோ மோர் சமந்தா ஹன்சிகா.. இப்பெல்லாம் வியாழமாற்றத்துக்கு பெண் வாசகிகள் தான் 90 பர்சன்ட் மச்சி”
“நாடு வெளங்கின மாதிரி தான் … அப்பிடீனா புஷ்ஷு ஏமலாந்திற படம் ஒன்று அனுப்பவா?”
“அதுக்கும் வால் வெள்ளிக்கும் என்ன சம்பந்தம்டா?”
“’ஒரு வெள்ளைகாரன் வெள்ளி பார்க்கிறான்’ என்று லக்கியத்தனமா ஜெயகாந்தன் ஸ்டைல் டைட்டில் போடு.. பிச்சிக்கும்”
“எதடா?”
“படலை தான்!”

 

funny_fail_george_bush_binoculars[2]bush-pet-goat-book-upside-down-photoGeorge-Bush-Funny_gif

 

&&&&&&&&&&&&&&&

Contact Form