வியாழமாற்றம் 30-05-2013 : குரு பெயர்ச்சி பலன்கள்!

May 30, 2013

 

guru_aishwariya-rai

மாதா, பிதா, குரு, தெய்வம், இவிங்கள மதிக்காதவங்க வாழ்க்கைல உருப்படமாட்டாங்க என்று தில்லுமுல்லுவில் சூப்பர் ஸ்டார் சொல்லுவார். இந்த லிஸ்டில் மாதா பிதா பிரச்சனை இல்லை. ரெண்டு பேருமே எப்போது வேதக்கோயிலுக்கு போனாலும் இருப்பார்கள்.  இந்த தெய்வம் வேற எங்கேயுமே இல்லை, நமக்குள்ளேயே இருக்கு என்றார் மொக்கை பிஃகர் கிரனை கூட கோட்டை விட்ட நம்ம நல்லசிவம் aka நல்லா. ஸோ இந்த கியூல மூணாவதா நிக்கிற குரு தான் கொஞ்சம் கவனிக்கபடவேண்டிய ஆசாமி என்பது கலட்டி சந்திக்கு பக்கத்தில் இருக்கும் குச்சொழுங்கையில் வசித்த யாழ்ப்பாணத்து சித்தர் ஒருவர் பதினெட்டாம் நூற்றாண்டில் சொல்லிவிட்டு போய்விட்டார்.

வியாழன்,  இவர் வருடா வருடம் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு தாவும் பழக்கத்தை கொண்டவர். அந்த ராசிக்கு தாவிய பின் அங்கிருந்து எல்லா ராசியையும் பார்த்து ஒரு இளிப்பு இளிப்பார். அவர் பார்த்து இளிக்கும் இராசிகள் அந்த வருஷம் நல்ல பலனையும் ஏனைய ராசிகள் அந்த வருடம் முழுதும் பழிப்பையும் சுமக்கும் என்பது ஒரு ஐதீகம். இட்ஸ் ட்ரூ மா.

இரண்டு நாளைக்கு முதல் தான் சிங்கன்(Not சிங்க ராசி) ரிஷபத்தில இருந்து மிதுனத்துக்கு ஜம்பானார். அதனால எல்லோருடைய பலன்களும் மாறப்போகுது. Which means, இவ்வளவு நாளும் ஆடாத ஆட்டம் ஆடினவங்க எல்லோருமே இந்த வருஷம் பாலா படத்து ஹீரோ ஆயிடுவாங்க. அம்மிக்கொண்டு இருந்தவங்க எல்லாம் அஞ்சலியை திரும்பவும் கடத்தலாமா என்று யோசிப்பாய்ங்க. 

இந்த வருடம் உங்கள் ராசிக்கு அமலா பால் செம்போடு பாலும் செவ்விதழ் தேனும் (சந்தம்லே) கொடுப்பாளா? இல்லை நீங்க தான் உங்கட  ஊர்க்கோயிலுக்கு போய் வியாழனுக்கு எட்டு குடம் பாலூத்தி பரிகாரம் பண்ணனுமா? என்பதை இந்த வாரம் பார்ப்போம்!

Get ready folks.


மேஷம் – நாய் கடிக்கும் ஜாக்கிரதை

உங்களுக்கு வெரி ரிஸ்கி பீரியட் கைஸ். சூதானமா நடந்துக்கணும். அப்பிடியே நடந்திட்டாலும்  கூட ஆணியே புடுங்க போறதில்லை. வியாழன் இந்த வருஷம் பூரா மூணாவது வீட்டுக்கு போகிறார். மூணாவது வீட்டில இருக்கும் வியாழனின் பார்வை என்பது கிட்டத்தட்ட, மோகம் முப்பது நாளைக்கப்புறமா விடியக்காலமை கட்டிலில பக்கத்தில படுத்துக்கிடக்கிற மனிசியை பார்க்கிறமாதிரி. கெலிச்சு போயிடுவீங்கள். “சப்பா பேய் மாதிரி” என்பானே நடுவுல கொஞ்ச பக்கத்தில படத்து ஹீரோ. அதே எபஃக்ட் தான். செம இன்டெலிஜெண்டா மூவ் எடுக்கோணும்.

அடங்கிப்படுத்திருக்கும் நாய், அலையின்றி கிடக்கும் நீர் நிலை இரண்டிலும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்!  இதை ஒரு பிரபல ஜோதிடரே சொல்லியிருக்கிறார். பேசிக்கலி யாரையும் நம்பாதீர்கள். உங்களை கூட நம்பாதீர்கள். தனியாக அறையில் இருக்கும்போது மேலே ஒரு சீலிங் பாஃன், பக்கத்திலேயே எட்டுமுழ சேலை இருக்குமென்றால், ஒரு பம்பலுக்கு தொங்கிப்பார்ப்போம் என்று தூங்கி விடுவீர்கள்! தொங்குவது என்று எழுதும்போது தான் ஞாபகம் வருகுது.

ஒரு கேள்வி கேட்கிறேன். ‘உக்காருங்க சார்…நான் சில சந்தேகங்களை கேக்கிறேன்…தெரிஞ்சுதுன்னா சொல்லுங்க…நான் ரொம்ப சாதாரணமான ஆளு. இதான் கேள்வி.

jeyamohan-jain-trip‘தூக்கணாங்குருவிக்கூடு தூங்கக் கண்டான் மரத்திலேன்னு கண்ணதாசன் பாட்டு இருக்கே…அதிலே தூங்குறதுன்னா என்ன?…தெரிஞ்சா சொல்லுங்க…நல்லா யோசிச்சு சொல்லணும்!’

சொன்னா நீங்களும் எழுத்தாளர் தான். என்னடா இவன் லொஜிக்கே இல்லாமே மொக்கை போடுறானே என்று யோசித்தால், இந்திய தத்துவஞான மரபறிஞர் ஜெமோ ஐயா என்ன சொல்லுகிறார் என்று நீங்களே போய் பாருங்கள்.

பரிகாரம் : சாரி கைஸ் .. பரிகாரமே இல்லாத அளவுக்கு உங்களுக்கு கெட்ட காலம். இல்ல வேணும்னு அடம்பிடிச்சால் மனைவி தூரத்தில் தெரிந்தவுடனே நாணிக்கோணி வெட்கப்படுங்கள். முகத்தை பார்க்கவேண்டி இருக்காது.


 

விருச்சிகம் - வருங்கால முதல்வர்

TNA81

நீங்கள் சம்மதிக்கவேண்டும். சம்மதித்தாலும் ஏனைய மூத்த உறுப்பினர்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும். கொண்டாலும் வீட்டு வாசலில், நாய் தலை, மேசை லாச்சியில் பாலான பட டிவிடி, வச்சவனே வந்து கண்டெடுக்கிற நிலை மாறவேண்டும். கள்ள வோட்டை விட நல்ல வோட்டுகள் அதிகம் விழ வேண்டும். எல்லாவற்றையும் விட வடமாகாண தேர்தல் நடைபெறவேண்டும். இதெல்லாம் நடந்தால்,

அனேகமாக வடமாகாண முதல்வராக நீங்கள் வரலாம். வந்தால் எம்மக்களின் ஜட்டி கொஞ்சமேனும் காப்பாற்றப்படலாம்!


மிதுனம் - பொண்டாட்டி தேவை

மக்களே. நீங்க யாரு இன்னான்னு எனக்கு தெரியாது. ஆனா பக்கா வேஸ்டு பார்ட்டிங்க என்னு மட்டும் தெரியும். பின்ன என்னங்க? ஜூஸு இருந்தா அதை குடிக்கோணும். காசு இருந்தா அதை கரைக்கோணும். அதை விட்டிட்டு எப்ப பாரு நப்பி நமசிவாயமா இருந்து யாருக்கு என்ன பயன்? ஸோ நான் சொல்லுறத கேளுங்க.

வியாழமாற்றத்தில இதுக்காலும் கம்பனின் விருத்தப்பா, வெண்பா, புதுக்கவிதை, சந்தக்கவிதை, சந்தைக்கவிதை, டிஆர் கவிதை தொட்டு ஆங்கில இலக்கியம் வரைக்கும் பீலா விட்டேனுங்க. நீங்களும் புரிஞ்சா திட்டுவீங்க. புரியாட்டா அருமைன்னு சொல்லுவீக. இன்னிக்கு ஒரு கவிதைங்க. ஜோதிட கவிதைங்க.  கேளுங்கண்ணா. எல்லாம் ஒரு காரணமா தாங்க.

ஜென்ம ராமர் வனத்திலே சீதையை சிறை வைத்ததும்.
தீதிலாதொரு மூன்றிலே துரியோதனன் படை மாண்டதும்
இன்மை எட்டினிலே வாலி பட்டம் இழந்து – போகும்படியானதும்
ஈசனானொரு பத்திலே தலை ஓட்டிலே இரந்துண்டதும்
தர்மபுத்திரர் நாலிலே வனவாசம்படி போனதும்
சத்தியமாமுனி ஆறிலே இரு காலிலே தலை பூண்டதும்
வன்மையுற்ற இராவணன் முடி பன்னிரண்டில் வீழ்ந்ததும்

பார்த்தீங்களாணாச்சி வியாழன் 3, 8, 10, 4, 6, 12 வீடுகளுக்கு போகும்போது கதை கம்மாசு. இதிலே நீங்க எந்த இடம்னா முதலாம் இடம். நம்பர் வன். இளைய தளபதி விஜய் ரேங்! ஜென்மத்து ஸ்தானம். ராமனுக்கு ஜென்மத்து வியாழன் இருக்கும்போது தான் சீதையை இராவணன் அசோகவனத்தில் கொண்டு போயி சிறை வச்சானாம். ஆக கணவன் மனைவிக்கிடையில் பிரிவுகள் வரலாம். கவனமாக இருக்கணும். செரியா?

03.RavanaLustsSita_thumb[2]

எதோ சொல்லுதீக .. ஒண்ணுமே புரியல? ஓ சந்தோஷமா இருக்கா? ட்ரீட் தரப்போறீங்களா? பார்த்தியா மாப்ள .. வியாழன் ஒண்ணோட நாக்கில ஒக்காந்துகிட்டான். நீ ட்ரீட் தர்ற மாட்டர் மனைவிக்கு தெரிஞ்சா, அவளே புய்ப்பக விமானத்தை ஹையர் பண்ணி அசோகவனத்தில போயி ஒக்காந்துப்பாளே.

இந்த நக்கல் நிக்கல் எல்லாத்தையும் மிதுன ராசிக்காரங்க கொறைச்சுக்கணும்.

பரிகாரம் : மக்களே ஒண்ணு மட்டும் சொல்லிப்புட்டேன். கேட்டுக்க. மனைவி எப்படிப்பட்டவளா இருந்தாலும் .. எவ்வளவு கொடுமைக்காரியா இருந்தாலும். ஏன், ஒங்க மனைவியாகவே இருந்தாலும் கண் கண்ட தெய்வமா தொழுங்க. கண்ட கண்ட பொண்ணுகள பார்த்து லொள்ளு வீடாதீக. அது உங்க தேக ஆரோக்கியத்துக்கும் நீண்ட ஆயுளுக்கும் முக்கியம்.

(நேசமா நீயாடா பேசுறே? ஆமா நாந்தான்!)


துலாம் - ஒன்பதில குரு

lakshmi rai


 

கடகம் - குவா குவா

நோட் ரியலி தி பெஸ்ட் பீரியட். பட் இட்ஸ் ஒகே. கண்ணா உங்கள்ல எனக்கு பிடிச்ச விஷயம் எதுன்னா, எதையுமே சும்மா டக் டக்குன்னு செய்வீங்க. அஞ்சே நிமிஷத்தில மாட்டரை முடிச்சிட்டு அடுத்த பஸ்ஸு பிடிச்சு ஊருக்கு போற பசங்க நீங்க!

நம்ம தோஸ்த்து ஒருத்தன். அவனுக்கு கலியாணம். அவரு சொமாலியாவில இருக்காரு என்று வையுங்களேன் (கனடாவில இருக்காரு என்ற உண்மைய சொன்னா தக்காளிய கண்டுபிடிச்சிடுவாங்க). சொமாலியாவில இருக்கிற அவருக்கு அப்பன்காரன் போட்டோஷாப் எக்ஸ்போஷர் புண்ணியத்தில பயல கரிக்கறுப்பில இருந்து கறுப்பு கலருக்கு மாத்தீட்டாரு. அதை வச்சு ஒரு புரோக்கரு இந்த சோமாலியா சோமாரிக்கு ஒரு சோனாபிரியாவையே பிக்ஸ் பண்ணீட்டாரு. முற்றாகிட்டுது.

இப்ப அண்ணருக்கு பெரும் பிரஷர். பொண்ணோட போன்ல பேசணும். பேசிறது கூட ஒகே பாஸ். என்கிட்டே நாலு ஸ்கிரிப்டு வாங்கி சிங்கன் வாசிச்சு சமாளிச்சிட்டார்! நம்ம சொனாபிரியா இஸ் நவ் இம்ப்ரஸ்ட். காதல்னா அப்பிடியொரு காதல். பொண்ணு போஃனை எடுத்தா ஒரே கவிதை தானாம். அதுவும் டியூனோட. “சூப்பரா இருக்கு மச்சி, வேணும்னா லிரிக்சை படலைல யூஸ் பண்ணு” எண்டான். நான் ஜெர்க் ஆயிட்டேன். கவிதையும் சொல்லி அதுக்கு டியூனும் குடுக்கிற பொண்ணா? அதுவும் நம்ம யாழ்ப்பாணத்திலேயேவா? கடவுளே நோக்கு கருணை இல்லையோ? சொமாலியாவுக்கு போயும் போயும் ஒரு சோக்கான பொண்ணு. நமக்கு பொண்ணு கிடைக்காததை விட இவனுக்கு இப்பிடி ஒரு பொண்ணு கிடைச்சதில தல டென்ஷன். அது கிடக்கட்டும் கழுத. மாட்டருக்கு வருவோம்.

53796995

“எங்க அந்த பொண்ணு டியூன் பண்ணின பாட்டு ஒன்ன சொல்லு” என்றேன். அவனே பாடினான். “எங்க போன ராசா .. சாயங்காலம் ஆச்சு” என்றான். “கஞ்சி ஆறி போச்சு நெஞ்ச ஏரி வாயேன்” என்று நான் மிச்ச பாட்டை பாடினேன். “அட! உனக்கெப்படி அவளோட லிரிக்ஸ் தெரியும்”னான் சந்தேகத்தோட. அட நாதாரி இது மரியான் படத்து பாட்டுடா. அவ உனக்கு அல்வா குடுக்கிறா. நம்பாத. நம்பரை என்கிட்டே கொடு. வச்சிக்கிறேன்னேன். “ஹலோ .. ஹலோ .. சிக்னல் கிளியர் இல்லே” ன்னு கட் பண்ணீட்டான். பாவி.

ச்சே. எதையோ எழுத ஆரம்பிச்சு சாரு மாதிரி எங்கேயோ போயிட்டேன். ஆ .. அந்த பொண்ணுக்கு இவன் மேலே லவ்வோ லவ்வு.  அண்ணரும் ரீசெண்டா வந்த ஒன்னிரண்டு பாட்டுகளிண்ட லிரிக்கசை எங்கேயோ கொத்தி பொண்ணுக்கு போனில அடிச்சிருக்காரு. பொண்ணுக்கு லவ்வு எகிறிப்போச்சு. அப்புறம் என்ன? அக்காகாரி ஸ்கைப்ல இவரோட வதன அழகை தரிசிக்கோணும்னு சொல்லியிருக்கு. அரவிந்சாமியை ஸ்கைப்ல பார்த்தாலே தனுஷ் ரேஞ்சில அசிங்கமா இருக்கும். நம்ம சொமாலியாவை பார்த்தா? நம்மாளு வெவரமானவரு. மூணாவது இடத்தில சுக்கிரன் இருக்கு. கலியாணம் கட்ட முதல் மூஞ்சி பார்க்ககூடாது என்றிருக்கார்.

images

கலியான நாளும் வந்திச்சு. அதுக்கு மூணு நாளு முதல் பொன்னுருக்கல். அன்னிக்கு தான் தலைவர் ஏர்போர்டில இறங்கியிருக்கார். பொன்னுருக்கினா பொண்ணை அப்புறம் மணவறையில் தான் பார்க்கமுடியும் என்று ஐபிஎல் ரூல் ஒன்று இருக்கு. அத வச்சு தல அடுத்த மூணு நாளையும் சமாளிச்சிட்டான். மணவறையில் அப்பன்காரன் அதிகமா சாம்பிராணி புகையையும் போட்டு பொண்ணு மாப்பிள்ளையை பார்க்கவிடாமலேயே பண்ணீட்டாங்க.

முதலிரவு!

பொண்ணு குனிஞ்ச தல நிமிராம சொம்போட உள்ள வருகுது. “நீயும் நானும் சேர்ந்தா அந்த வானம் கொண்டாடும்” என்று ஹம்மிங் போகுது. அண்ணருக்கு அதுக்கெல்லாம் நேரமில்ல. ஒரே ஜம்பு. மாயாவி படத்தில ஜோதிகாவை கடத்துவது போல அப்பிடியே பின்னாலிருந்து கரந்தடித்தாக்குதல் நடத்தி, பொண்ணை மூஞ்சிய திருப்பவிடாமா, காஞ்சமாடு கம்பில விழுந்து, “அடியே .. நீ நில்லுன்னா நிக்காதடி” என்ற சிலுக்கு பாட்டை வேற பாடி (அண்ணருக்கு தெரிஞ்ச ஒரே ரொமண்டிக் மெலடி அது தான்) ஐஞ்சு நிமிஷத்திலேயே ஆள் அவுட்டு! இது நடந்து ஆறு நாளில தலைவர் லீவு கிடையாது என்று சோமாலியா போயிட்டார். சொனாபிரியா இப்போ ஆறுமாத கர்ப்பம். இன்னமும் மூணு மாசத்தில கொயந்தை.

நம்ம சோமாலியா கடகராசி!


மகரம் - என்ன செய்ய ராசா?

சோமாலியாவின் கதையை சோனாபிரியா பாயிண்ட் ஒப் வியூவில யோசியுங்க. பாவம்ல?

dhanush-s-mariyaan-stills_13521923105

சோனாபிரியா மகர ராசி!


கன்னி -  ரிஷபம்

பத்தாம் இடம் பதிய விட்டு கிளப்பும் எண்டுவாங்கள். கன்னிராசிக்காரர் எதுக்கும் IELTS எடுத்து பார்க்கலாம். தப்பித்தவறி ஆறுக்கு மேலே வந்துது எண்டா நியூசிலாந்து போகலாம். ஏழு வந்தா ஆஸ்திரேலியா போகலாம். ஏழரை வந்தால்? … Forget it. அதெல்லாம் சனி மாற்றத்தில தான் வரும். IELTS சான்சே இல்ல!

கன்னிக்காரர் பதியை விட்டு கிளம்புற டைம்ல ரிஷபகாரருக்கு ரெண்டாவது வீட்டில வியாழன் பார்க்கிறதால நிறைய காசு வரும். காட்டுக்கு போன மனைவி திரும்பி வருவாள். ஆட்டைய போட்ட கடன்காரன் கட் அண்ட் ரைட்டாக கடனை திருப்பி தருவான். குட் டைம் அஹெட் கைஸ்.

சொன்னாப்ல இந்த ரெண்டு ராசிகளும் திரிகோண ராசிகளாம். செம பொருத்தமாம். திரிகோணத்தில் இரண்டு ராசிகள் இணைந்தால் திருமண பந்தம் ஒபாமா மிச்சல் ரேஞ்சுக்கு நல்லா இருக்கும் என்கிறார்கள். சுந்தரி நீயும் சுந்தரன் நானும் சேர்ந்திருந்தால் திருவோணம் என்பாரே கமல். அகுதே. அகுதே!

ஸோ உங்களில் யாராவது கன்னி ராசி, waiting to get married என்றால், எவனாவது இடப கேஸ் available ஆ இருந்தா, ரெண்டு பேருமே Facebook ல பிரெண்ட் ஆகி, போன் நம்பர் மாத்தி, மொக்கை போட்டு பார்க்கலாம். பிடிச்சிருந்தா லைப் பூரா மொக்கை போட முடிவு எடுக்கலாம். இல்லையா “போடாங் மொக்கை பயலே” என்று சொல்லீட்டு நம்ம மொக்கையை வந்து வாசிக்கலாம்!

இந்த Facebook About Us பக்கத்தில ராசிக்கு ஒரு drop down லிஸ்ட் டெவலப் பண்ண சொல்லி சாக்கர்பேர்க் பயலுக்கு சொல்லோணும். யூஸ்புஃல்லா இருக்கும்ல.

படலை வாசிக்கும் கன்னிகாஸ்திரிகள், இடபக்காளைகள். நம்ம ஐடியா வர்க்அவுட் ஆனா ஒரு கொமெண்டை போடுங்க. இந்த பதிவுக்கு கிடைக்கும் ரேஸ்போன்சை வச்சு நிரந்தரமாகவே சாத்திரியாக மாறிடலாமா என்றும் ஒரு ஐடியா இருக்கு.

Now lets go to a song.

குமாரவிஜயம் படம். இசை தேவராஜன். ஜேசுதாஸ். சுசீலா. இதுக்கு பிறகு இந்த பாடல் இனிமை என்று ரிப்பீட் பண்ண தேவையில்லை. கேளுங்கள். வரிகளும் கலக்கல். கண்ணதாசனாக இருக்கலாம்.

கன்னி ராசி என் ராசி
காளை ராசி என் ராசி...ஆ
ரிஷப காளை ராசி என் ராசி
பொறுத்தம் தானா நீ யோசி
அது பொருந்தாவிட்டால் சன்யாசி


 

சிம்மம் - ஒம் மொகமே ராசி தான்

பதினொறாம் எடத்துல வியாழன் பார்ப்பதால உங்களுக்கு செம ஜாலி பாஸ். நீங்க தொட்டதெல்லாம் துலங்கும். டுத் பேஸ்ட் எடுத்து விளக்குங்க. பல்லு பளிச்சிடும். குசினி பேசினை துலக்குங்க, மினுங்கும். பிஃக்சே பண்ணாம பக்கு(bug) சரியாகும். (சூப்பர்டா டேய்) (தாங்யூ தாங்யூ).

சூப்பர்சிங்கர்ல பாடினா ஆன்ரியா ச்சோ ஸ்வீட் சொல்லுவா. நீச்சல் குளத்தில நின்னு பாடினாலும் சுருதியே வழுக்காது (எப்பிடிடா?). ஆஞ்சலினா ஜூலி (வேண்டாம்னே .. அவுகளை விட்டிடுங்க) ஒகே ஜெசிக்கா அல்பா உங்களுக்கு ஸ்லீப்பிங் டிக்ஷனரியா வருவாக. ஒரே நாளில நீங்களும் சிங்களமும் படிச்சிடுவீங்க (வாய்க்கேல்ல மச்சி, வேற ட்ரை பண்ணேன்).

ரொம்ப வேணாம். சிம்ம ராசிக்காரங்க புரோபைல் படம் போட்டா பொண்ணா இருந்தா மொக்கை பிஃகரே ஆனாலும் முன்னூறு லைக்கு மினிமம் காரண்டி. அதுவே ஆம்பிளை என்றால் உன்னுடையதும் சேர்த்து மூணு லைக்கு விழும்னா பார்த்துக்கேயன். இதைவிட நீ ஒரு ஸ்டேட்ஸ போட்டு பாரு. மைந்தன் சிவாவை விட பத்து லைக்கும், இரண்டு கொமேண்டும் அதிகமா வாங்குவ!

ஏன்னா உன்னோட ராசி அப்பிடி. சிங்கம்லே!

 


கும்பம் – ஹைக்கூ

சென்ற வருடம் பூரா சொம்பு ரொம்ப அடி வாங்கிச்சில்ல? டோண்ட் வொரி இந்த வருஷம் நெளிவெடுத்திடலாம்! ஒங்களுக்கு ஒரு ஹைக்கூ. இந்தா .. பிடிச்சிக்க!

 

images (1)2474873897_23e74262faஅடி நசுங்கிய தண்ணிச்செம்பு

தள்ளாடி சிரித்தது

மேசையில் பூரண கும்பம்!

 


 

 தனுசு - என்னோட ராசி நல்ல ராசி!

பிரம்மா ஒரு நாள் ரொம்ப சந்தோஷமா இருக்க ஏன்னு. சரஸ்வதி கேட்டாங்களாம்.

“வாட் ஹப்பின்ட் ஹனி .. ஹப்பியா இருக்காப்ல?”

yoga_saraswati“பதினொரு ராசியையும் டிசைன் பண்ணின போது வராத சந்தோசம் இதை பண்ணியபோது கிடைத்தது?”

“அப்பிடி என்ன டிசைன்ல ஸ்பெஷல் பிரபோ? காட்டுங்க பார்ப்பம்”

“Click. Boom. Amazing!”

பிரம்மா கையை உதற ஒருவன் ஒருவன் முதலாளி ஸ்டார்டிங் மியூசிக்கோடு தனுஷு ராசி வந்திறங்குகிறது. பிரம்மலோகம் முழுக்க கைதட்டல்கள். தனுஷு, மன்மதன் அம்பு ஒரு ஆங்கிளில் கோணங்கியாக தெரிய சரஸ்வதி கேட்கிறார்.

“பார்க்க மொக்கை பீஸா இருக்கும் போல தெரியுதே பிரபோ? இதுவா சூப்பர் டிசைன்?”

“"Design is a funny word. Some people think design means how it looks. But of course, if you dig deeper, it's really how it works. The design of the Dhanush wasn't what it looked like, although that was part of it. Primarily, it was how it worked."

steve09“கொப்பி பேஸ்ட் பண்ணீங்களா பிரபோ? எங்க சுட்டீங்க?”

“Good Artists Copy, Great Artists Steal!”

“இதில சால்ஜாப்பு வேறயா?”

“சொன்னது ஸ்டீவ் ஜாப்ஸ்… தனுஷை பார்த்தா பிடிக்காது. ஆனா பார்க்க பார்க்க பிடிக்கும்.”

“அதுவும் ஸ்டீவ் ஜாப்ஸ் சொன்னதா?”

“நை நை .. அதை தனுஷே சொன்னது”

“சுத்தம்!”

ராசிகளுக்கெல்லாம் ஆத்தா, நவக்கிரகங்களின் கோத்தா. ஐபில் இன் சென்னை சூப்பர் கிங்ஸ். ஆஃப் சைட் டைமிங்கின் சவுரவ்கங்குலி, The most powerful ராசி on the planet. (பாஸ் ராசிகள் பிரபஞ்சத்துக்கானது). ஒகே. The most powerful rasi in the universe. நம்ம சூப்பர்ஸ்டார் ராசியான,

தனுஷு ராசி நேயர்களே!

உங்களுக்கு மச்சம் உச்சி மண்டைல இருக்கு மக்களே. முடிவிலி இலக்கங்களிலேயே முதன்மையான இலக்கம் ஏழு. கடவுள்கள் மட்டுமே அந்த நம்பர்ல பொறப்பாங்க என்று இன்கா நாகரிக மக்கள் மத்தியில ஒரு ஐதீகம் இருக்கு. (அப்பிடியா?) (நல்ல போர்மல இருக்காப்ல, குழப்பாத) .

அந்த ஏழாம் நம்பர்ல வியாழன் மாறியிருக்கு. இதுக்கு என்ன அர்த்தம் தெரியுமா?

தினம் காலைல வீட்டு கதவை தடக் தடக்கென்று தட்டுவாங்க. யோசிக்காம திறந்திடாதீங்க. யன்னல நைசா விலத்தி யார்னு பாருங்க. நீண்ட கியூவில ஆளாளுக்கு ஒரு சூட்கேசும் கையுமா நீங்களே கதின்னு …. கூர்ந்து பார்த்தா. அட பொண்ணுங்க! அதிலயும் தூரத்தே ஒரு பொண்ணு கியூவில எடமே கெடைக்காம வாலிபனுக்கு நம்பர் ட்ரை பண்ணிக்கிட்டிருக்கும். வேறு யாருமில்ல பாஸ். நம்ம நயன்தாரா தான் அது! சரி அவன் பிரச்சனை. நம்ம மாட்டருக்கு வருவோம்.

384477_428896383872945_1338786074_n

இன்னும் மேலே பாரு கண்ணா. வரிசைல பத்தாவதா நிக்கிற பொண்ணே ஹன்சிகாவா இருக்கும். காஜல் அகர்வால், அனுஷ்கா, இலியானா, என்று எல்லா மொக்கை பிகரையும் தள்ளிவையுங்க பாஸ். இரண்டாவதையும் மூணாவதையும் கவனியுங்க. அதுக ரெண்டும் தங்களுக்குள்ள அடிபட்டுக்கொண்டிருக்கும். கவனிச்சா அட நம்ம நஸ்ரியா நசீமும் சமந்தாவும்! சமந்தா நம்பர் த்ரீ. நஸ்ரியா நம்பர் டூ!

அப்ப நம்பர் வன் யாரா? அது தான் தனுஷு ராசில பொறந்த பொண்ணுங்க பாஸ்.

ஆணோ பொண்ணோ .. தனுஷு தனுஷு தான் பாஸ்! உச்சம்!


 

மீனம் - டீ ஆர் ராசி!

T-Rajendarஅடியே காலம் கூடாது காணும்

ஆவெண்டு பார்க்காத நீ வானம்

ஏலவே எனக்கு வாய் ரொம்ப நீளம்!

என்ர அப்பரோட ராசி வேற மீனம்

எதுக்கு தேவை இல்லாத வீண் சோகம்.

ராசி நட்சத்திரம் பார்ப்பது ரொம்ப ஈனம்!

ஏய் டண்டணக்கா டனக்கு டாக்கா


&&&&&&&&&&&&&&&&&&&


நன்றி

படங்கள் : Google Images.

Contact Form