வாக்கினிலே இனிமை வேண்டும்
“I owe my life to this country. I was born in a country called Sri Lanka… and we saw the way .. people lost their freedom. The years civil war …”
இந்த நாட்டுக்கு(அமேரிக்கா) நான் வாழ்நாள் கடமைப்பட்டிருக்கிறேன். நான் ஸ்ரீலங்கா என்ற நாட்டிலே பிறந்தேன். அங்கே மக்கள் சுதந்திரத்தை எப்படி தொலைத்தார்கள் என்பதை பார்த்தோம். உள்நாட்டு யுத்தத்தை பார்த்தோம். என்னுடைய தந்தை தாய் இருவருமே ஆசிரியர்கள். கல்வியோடு, சொந்தக்காலில் எப்படி நிற்பது என்பதையும் அவர்கள் எனக்கு கற்பித்தார்கள். உன்னுடைய சுற்றத்துக்கு எவ்வளவு உதவமுடியுமோ அவ்வளவு உதவவேண்டும் என்று சொல்லிக்கொடுத்தார்கள். வீட்டிலே நான் ஆறாவது பிள்ளை. எனக்கு இன்னமும் ஞாபகம் இருக்கிறது. நான் தேங்காய், மாங்காய் கூட விற்றிருக்கிறேன். கஷ்டம். உங்களுக்கு தெரியும். குடும்பத்திலிருந்து ஒரு பிள்ளையை வெளிநாட்டுக்கு அனுப்பும் செலவில் இருக்கிற காசு எல்லாமே தீர்ந்துவிடும். அவ்வளவு கஷ்டம். ஆனாலும் கௌரவம் என்று ஒன்றிருக்கிறது. அதை நான் அப்பாவிடம் இருந்து கற்றுக்கொண்டேன்.
அமெரிக்காவுக்கு நான் 1982ம் ஆண்டு வந்தேன். இலோனோய் பல்கலைக்கழகத்தில் படிக்கவென்று நான் ஓஹையோ விமானநிலையத்தில் தரை இறங்கிய பொழுதுகள் இன்னமும் ஞாபகம் இருக்கிறது. அக்கறை ... மனிதர்களின் மீது அமெரிக்கர்கள் காட்டிய அக்கறை நம்பமுடியாததாக இருந்தது. விமானநிலையத்தில் இருந்து எந்த வழியால் செல்லவேண்டும், எங்கே போகவேண்டும், எனக்கு தங்குமிட வசதிகள் எல்லாம் சரியாக இருக்கிறதா, சின்ன சின்ன விஷயங்களை கூட பார்த்து பார்த்து செய்தார்கள். அதிசயிக்கத்தக்க அக்கறை அது. இந்த நாடு, மனிதர்கள் மீது கொண்டுள்ள வலுவான பெறுமதியை அது காட்டியது. ஒரு மனிதனை அவனுடைய நிறத்துக்காகவோ அல்லது அவனிடம் என்ன இருக்கிறதோ என்பதை வைத்து மதிப்பிடாமல் மனிதனை மனிதனாகவே பார்க்கும் பாங்கு என்னை பெருமளவில் பாதித்தது.
சிக்காக்கோவில் வந்திறங்கியவுடன் முதலில் பார்த்த விளம்பர பலகை Hotdogs தான். அமெரிக்கர்கள் நாய் இறைச்சி சாப்பிடுவார்கள் என்பது எனக்கு தெரியாமல் போயிற்றே என்று யோசித்திருக்கிறேன்… சிரிப்பு… சொசெஜ் என்றால் என்னவென்று தெரியும். ஆனால் Hotdogs கேள்விப்பட்டிருக்கவில்லை. அமரிக்காவை பற்றிய இந்தளவு அறிவு கொண்ட என்னை பல மில்லியன் டொலர்கள் கொண்ட இன்பிராரெட் நாவிகேஷன் ஆராய்ச்சிசாலையில், பொறுப்பான முதலாவது மாணவனாக எந்த நம்பிக்கையில் சேர்த்தார்கள் என்று எனக்கு இன்னமும் விளங்கவில்லை!
என் திறமையை முழுமையாக பயன்படுத்தினார்கள். திறமையின் உச்சப்பட்ட எல்லையை அடையும்வரை ஊக்குவித்தார்கள். வழிகாட்டினார்கள். சென்ஸர் கனியங்கள்(material) சார்ந்த ஆராய்ச்சி. இந்த பொருளை இப்போது பல விஷயங்களில் பாவிக்கிறார்கள். அப்போது அது வெறும் ஆராய்ச்சி நிலையிலேயே இருந்தது. இதை இப்படியே விட்டுவிடாமல் பயன்பாட்டுக்கு உரியதாக, இந்த தொழில்நுட்பத்தை பாதுகாக்கவேண்டுமானால், பல்கலைக்கழகத்தை தாண்டி அதை சார்ந்த தொழில் நிறுவனம் ஆரம்பிக்கவேண்டும் என்று 1997ம் ஆண்டு உணர்ந்து கொண்டேன். ஆரம்பித்தேன். வீட்டில் பேஸ்மண்டிலே மனைவியின் அனுசரணையோடு ஆரம்பித்த நிறுவனம். என் மனைவி ஒரு டென்டிஸ்ட். கொஞ்சநாட்களில் தன்னுடைய டெண்டல் கிளினிக்கிலேயே இந்த நிறுவனத்தை நடத்துவதற்கு உதவி புரிந்தார். இப்போது இந்த நிறுவனம் 30,000 சதுரஅடியில் எழுபது தொழிலாளர்களுடன் இயங்குகிறது.
பிரச்சனை என்ன? ஆராய்ச்சிகளுக்கும் நிறுவனப்படுத்தலும் இங்கே தொடர்புகள் இல்லை. அமெரிக்காவின் 17வீதமான பௌதிகவியல் நிபுணர்கள் midwest(சிக்காக்கோ, இலியோனாஸ், ஓஹியோ…) பிராந்தியத்தில் இருக்கிறார்கள். ஆனால் ஆராய்ச்சியை சந்தைப்போருளாக்கும் நிறுவனங்கள் தான் இங்கே இல்லை. அதை ஆரம்பிக்கவேண்டும். நான் அமெரிக்காவுக்கு வரும்போது பெல் லாப்ஸ், ஐபிம் லாப்ஸ் பற்றிய கனவுகளுடனேயே வந்தேன். இப்போது நான் ஆரம்பித்திருக்கும் நிறுவனம் கூட அந்த கனவு நிறுவனங்களை மனதில் வைத்தே ஆரம்பித்தது. இந்த நிறுவனம் வளர்ந்து மேலும் மேலும் இந்த நாட்டுக்கு சேவை செய்யும் என்று நம்புகிறேன்.
ஒரு நாட்டுக்கு குடிபெயர்ந்து அங்கே சாதிக்க என்ன செய்ய வேண்டும்? முக்கிய விஷயம். நீங்கள் பல இடங்களில் விழுவீர்கள். விழுபவன் எப்படி எழுந்து நடக்கிறான் என்பதில் தான் வெற்றி தங்கியிருக்கிறது. “இது கஷ்டம் .. முடியாது” என்று சொல்ல பலர் இருப்பார்கள். ஆனால் இந்த நாடு சாத்தியங்கள் நிறைந்த நாடு. தவறுகளை திருத்திக்கொண்டு எழுந்து நடக்க ஆரம்பியுங்கள்.
தரணியிலே பெருமை வேண்டும்.
பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு மற்றும் அமெரிக்காவை முன்னணி நாடாக மாற்ற பாடுபட்ட குடியேற்றவாசிகளுக்காக வழங்கும் “Champion of Change” விருது சிவலிங்கம் சிவானந்தனுக்கு கிடைத்திருக்கிறது. தலைவர் நம்மாளு. அந்த நிகழ்வில் நம்மாளு கொடுத்த ஏற்புரையை தான் மேலே கொஞ்சம் தமிழில் தழுவியிருக்கிறேன்.
பிறந்தது மட்டுவிலில். அப்பா வல்வெட்டித்துறை. “வடாகாரன்”. சொல்ல தேவையில்லை. அண்ணே மண்டையாய் பிறந்தது ஆச்சர்யமில்லை. படித்தது மட்டுவில் சரஸ்வதி மகாவித்தியாலயம். அப்புறம் சாவகச்சேரி டிறிபேக் கல்லூரி. பின்னர் உயர்தரத்தில் யாழ் இந்துவிலும் படித்திருக்கிறார். பின்னர் பேராதனை படிப்பு, மட்டகளப்பில் கொஞ்சக்காலம் படிப்பிப்பு என்று கழிந்து, அதற்குப்பின்னர் 1982 இல் அமேரிக்கா போயிறங்கிவிட்டார். செட்டிலான பிறகு மனைவியை கூப்பிடலாம் என்ற ஐடியா.
1983 இல் பல்கலைக்கழக அனுமதி பரீட்சைக்கு சிக்காக்கோவில் தயார் பண்ணிக்கொண்டிருக்கும்போது தான் இலங்கை கலவரம் பற்றிய செய்தி வருகிறது. மனைவியோடு தொடர்பு கொள்ளமுடியவில்லை. அவர் உயிரோடு இருக்கிறாரா? எங்கேயாவது ஒளிந்திருக்கிறாரா? எதுவுமே தெரியவில்லை. மனைவியை தேடி திரும்பவும் இலங்கைக்கு போவதா? இல்லை சிக்காகொவிலேயே இருந்து பரீட்சை எடுப்பதா? என்ற குழப்பம். போய் எதுவுமே நீ சாதிக்கப்போவதில்லை, அகப்படுவாய். அதைவிட இங்கிருந்தே விசாரித்து பார்க்கலாம் என்று சிவானந்தனின் பேராசிரியர் சொல்ல, இவரும் அப்படியே செய்ய, கொஞ்சநாளில் மனைவி பாதுகாப்பாக இருக்கிறார் என்று தெரியவருகிறது. சிவானந்தனும் படித்து நுழைவுத்தேர்வில் சித்தியடைகிறார். கூடவே மனைவியும் இவரோடு வந்திணைகிறார்.
What followed was then became a history!
கொஞ்சநாளிலேயே புதிதாக ஆரம்பித்த பல்கலைக்கழக ஆராய்ச்சி சாலையின் பேராசிரியர் பிரான்ஸ் திரும்பிவிட, ஆராய்ச்சியின் பொறுப்பு சிவானந்தன் கைகளில் வருகிறது. அப்புறம் என்ன? தல அந்த துறையிலேயே தேர்ச்சி அடைந்து, தனியாக நிறுவனம் ஆரம்பித்து, தொழில்நுட்பத்தை சந்தைப்படுத்தி …. பலதை கண்டுபிடித்து, பலருக்கு வேலைவாய்ப்பை கொடுத்து, வெள்ளைமாளிகை விருது வரைக்கும் போய்விட்டார். இவர் வெற்றிக்கு எது உறுதுணையாக இருந்தது? என்று கேட்கும்போது சிவானந்தன் சொல்லும் பதில்.
ஆசிரியர்களான என் பெற்றோர்கள் எனக்கு கொடுத்த நம்பிக்கை அலாதியானது. எல்லா சமயங்களிலும் எனக்கு போதிக்கப்பட்ட வார்த்தை ஒன்று தான். அது.
“உன்னால் முடியும்”
உண்மை நின்றிட வேண்டும்!
சிவானந்தனுக்கு விருது கிடைத்தவுடன் “தமிழன்டா!”, “ஈழத்தமிழண்டா”, “இந்துவின் மைந்தனே வாழிய”, “சிவானந்தன் சத்தம்போடாம நிறைய வேலை இயக்கத்துக்கு செஞ்சவர்”, “1987ம் ஆண்டு அவர் தமிழில கவிதை எழுதியிருக்கிறார்”, “திருக்குரல் கூட தெரியுமாம் பாஸ்” (எழுத்துப்பிழையோடே!) என்று ஒரு இரவுக்குள்ளேயே பேஸ்புக் ஸ்டேடஸுகள் பொங்க ஆரம்பித்துவிட்டன. “எங்கட ஒண்டை விட்ட மாமிண்ட பக்கத்து வீட்டில தான் சிவானந்தனிண்ட மனிசி இருந்ததாம்” என்று சாட்டில் ஒருத்தன் வந்து வெடியை கொழுத்திப்போட்டான்.
“ஒசாமா பின் லேடனை கொலை செய்யும் அமெரிக்காவின் திட்டத்தில் இலங்கைத் தமிழர்” என்று ஒரு வீரகேசரி தலைப்பு போட்டிருந்தது. உதயன் இன்னும் ஒரு படி அதிகமாக போய் “ஒசாமா பின் லேடனை கொலை செய்யும் அமெரிக்கன் திட்டத்தில் யாழ் தமிழன்“ என்று எழுதிவிட்டது. ஒரு நண்பன், இந்துக்கல்லூரி பழையமாணவன். டென்ஷன் ஆகிட்டாப்ல. “ஒபாமாவை கொலை செய்யும் திட்டத்தில் இந்துவின் மைந்தன்” என்று அடிச்சுவிட்டு அறுபது லைக் வேற வாங்கிவிட்டான். “ஒபாமா இல்லடா அது ஒசாமாடா” என்று ஒரு கொமெண்ட் விழுந்தது. சிங்கன் ஜெர்க் ஆயிட்டார். ஸ்டேடசை இனி எடிட் பண்ணவும் ஏலாது. டிலீட் பண்ணினா அறுபது லைக்கும் வீணாக போயிடும். இன்டெலிஜெண்டா தலைவர் அந்த “ஒபாமா இல்லடா அது ஒசாமாடா” என்ற கொமெண்டை டிலீட் பண்ணீட்டு கம்முன்னு இருந்திட்டாரு. அதுக்கு பிறகும் ஒரு முப்பது லைக்கு வந்தது. டேய் அப்பிரசிண்டுசுகளா அந்த அண்ணே இதை நோட் பண்ணி ஒபாமாவுக்கு அறிவிச்சா உங்களை எல்லாம் பகலிலேயே தூக்கிடுவாங்கடா. ஜாக்கிரத.
இப்படியான அவசர அவசரமான பெருமைகளில் நாங்கள் ஆதாரமான விஷயம் ஒன்றை தவறவிட்டுவிடுகிறோம். அது தான் அந்த விருதுக்கான காரணம் என்னவென்பது. சிவானந்தன் செய்த ஆராய்ச்சி சுவாரசியமானது. அதை பிரித்து மேய்ந்தோமானால், பார்க்கும் பத்து பதினைஞ்சு வயசு சிறுவர்கள் டென்ஷன் ஆகலாம். சிவானந்தனுக்கு பெல், ஐபிம் லாபுகளில் இருந்த ஆர்வம் போல இந்த சிறுவர்களுக்கு சிவானந்தன் லாபு மேலே ஆர்வம் வரலாம். இன்னொரு சிவானந்தன் பத்து வருடங்களுள் சிக்காகோ போயிறங்கலாம். ஆக பெருமைகள் பேசுவது, மொக்கைகள் போடுவது தவறில்லை. ஆனால் இவற்றுக்கு மத்தியில் சிலவிஷயங்களை செய்யாமல் விட்டுவிட கூடாது. இளையராஜா இதைப்பற்றி அழகாக ஒருமுறை சொல்லியிருந்தார்.
மியூசிக்கில தவறு என்று ஒன்றில்லை. எது வேணும்னாலும் பண்ணிக்கலாம்…. அப்பிடி ஆகிப்போச்சு! ஆனால் எது பண்ணணுமோ … எது பண்ணணுமோ அத பண்ணாம விட்டிட கூடாது!
காரியத்தில் உறுதி வேண்டும்
ஒசாமா மாட்டரில் இருந்தே ஆரம்பிப்போம். நிலவே இல்லாத நட்ட நடு சாமத்தில் கூட முன்னே இருக்ககூடிய விஷயங்களை பார்க்ககூடிய கருவியை ஒசாமா தாக்குதல் படையணி பயன்படுத்தியதாம். வேவு விமானங்கள் இரவில் கண்காணிப்பதற்கு இந்த கருவி பொருத்தப்பட்டிருக்கிறது. அப்படி என்ன தான் இந்த கருவிகளில் இருக்கிறது? என்ன மாதிரியான தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த கருவிகளால் இரவில்ல பார்க்கமுடிகிறது?
அதை விளங்குவதற்கு, நமக்கு இரவில் ஏன் பார்வை தெரிவதில்லை என்ற சப்பை மாட்டரை முதலில் டிஸ்கஸ் பண்ணவேண்டும்.
ஒரு பொருள் எங்கள் கண்ணுக்கு தெரியவேண்டுமென்றால் அந்த பொருளில் இருந்து ஒளிக்கதிர் எங்கள் கண்களை வந்தடையவேண்டும். இரவில் பின்னாலே ஒண்டுக்கு போகும்போது பற்றைகளோ, மரங்களோ கொஞ்சமேனும் தெரிவதற்கு, நிலவு ஒளி, நட்சத்திரங்கள், பக்கத்துவீட்டு அரிக்கன் லாம்பு, தெரு விளக்கு இதெல்லாம் தான் காரணம். இவற்றில் இருந்து சன்னமாக வரும் ஒளிக்கதிர்கள் பற்றையில் பட்டு தெறிக்க, பருமட்டாக மாட்டர்கள் புலப்படுகிறது. ஒகேயா பாஸ்?
ஆனால் இரவில் எங்களை விட நாய் பூனைக்கு பார்வை துல்லியமாக புலப்படும். ஏன்? இது சுவாரசியமான விஷயம் டாபிடம் லூசிடம் (Tapetum lucidum) என்று ஒன்று இருக்கிறது. பெயர் வாய்க்குள் நுழையாவிட்டால் நமிதா என்று வைத்துக்கொள்ளுங்கள். இந்த நமீதா ஒரு குட்டி நிலைகண்ணாடி போன்று, கண்களின் விழித்திரைக்கு பின்னால் இருக்கிறது. இரவில் தட்டுத்தடுமாறி வரும் ஒன்றிரண்டு ஒளிக்கதிர்களை வந்த வீச்சுக்கு தெறிப்படைய செய்து மீண்டும் விழித்திரைக்கு அனுப்புகிறது. விளைவு? விழித்திரைக்கு ஐஞ்சு ஒளிக்கதிர் வந்தால் அது இப்போது டபிள் ஆகி பத்து ஆகிறது. வெளிச்சம் இரட்டிப்பாகி தெளிவாக தெரிகிறது. இந்த நமீதா, நாயின் கண்களில் இருக்கிறது. பூனையின் கண்களில் இருக்கிறது. ஆனால் நம்ம கண்களில் இல்லை. இதனால் தான் இரவில் டோர்ச் அடித்தால் நாய் பூனையின் கண்களில் நமீதா பளீரென்று கலர் கலராக மின்னும். நம்ம மூஞ்சியில் டோர்ச் அடிச்சா சக்கென்று இருக்கும்.
ஆனால் ஒசாமா அட்டாக் நாளின் போது இந்த வெளிச்சமும் இல்லை. அரிக்கன் லாம்பு, தெருவிளக்கு எதையுமே எதிர்பார்க்கமுடியாது. Pitched dark என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள். நம்ம கஜன் போல. அப்படியான சமயத்தில் கண்காணிப்பு கருவியில் நமீதாவை ஒட்டிவிட்டாலும் பயனில்லை. ஏதாவது உள்ளே நுழைந்தால் தானே டபிள் ஆகும்? ஆணியே இல்லை என்றால்? இங்கே தான் சிவானந்தன் அண்ணே சிங்கனாகிறார்.
ஒளியை குவாண்டம் துணிக்கைகளின் கற்றைகளாகவும் கருதலாம், அதே சமயம் மின் காந்த அலையாகவும் கருதலாம் என்று ஐன்ஸ்டீன் சொன்னார் இல்லையா (சொன்னாரா என்ன?). குவாண்டம் விஷயத்தை இன்னொரு நாள் கவனிப்போம். இன்றைக்கு ஒளியை மின்காந்த அலையாக பார்ப்போம். லோஷன் சக்தியில் பேசினாலும், வெற்றியில் பேசினாலும் சூரியனில் பேசினாலும் நம்மை சேர்ந்து அடையும் ரேடியோ அலை(ஒலி அல்ல) மின்காந்த அலை தான். X-Ray அது இன்னொரு மின்காந்த அலை. ஆனால் ஒளி ஒரு பொருளில் பட்டு தெறித்து நம் கண்களை அடைந்தால் அந்த பொருளை பார்க்கமுடிகிறது. ஆனால் எல்லா மின்காந்த அலைகளையும் அப்படி எம்மால் பார்க்கமுடிவதில்லை. அதற்கு காரணம் நம் கண்களின் உணர்வுத்திறன் குறிப்பிட்ட அலைநீளத்துக்கே டிசைன் பண்ணப்பட்டிருக்கிறது. (எல்லாமே முதலில் ஒளி போன்று ஒரு பொருளில் பட்டு தெறிக்குமா என்பது அடுத்த கேள்வி,ரேடியோ அலை அநேகமான பொருட்களில் ஊடுருவிவிடும்!)
ஆனால் இந்த பிரச்சனையே இங்கே ஆதாயமாகிறது. Infrared கதிர்கள். ஒளியின் அலைநீளத்துக்கு அண்மையாக இருப்பவை. வெற்றுக்கண்களால் உணரமுடியாத கதிர்கள். இப்போது இந்த கதிர்களை நட்ட நடு சாமத்திலே பீய்ச்சி அடித்தால் யாருக்குமே ஒன்றுமே தெரியாது. ஒசாமா மூஞ்சியில் அடித்தாலும் அவருக்கு ஒரு மண்ணுமே விளங்காது. அதே சமயம் அவரில் தெறிச்சு வரும் Infrared கதிரை உணரக்கூடிய கருவி எம்மிடம் இருந்தால் ஒசாமாவை நாங்கள் அந்த கருவியில் பார்க்கமுடியும். அப்படிப்பட்ட கருவியை இரண்டாம் உலகமகாயுத்த காலத்திலேயே கண்டுபிடித்துவிட்டார்கள். என்ன ஒன்று, அந்த உணர்வு கருவியை மெய்ன்டைன் பண்ணுவது பயங்கர கஷ்டம். தசாவதாரம் படத்து வையில் போன்று எப்போதுமே கடும் குளிர்ச்சியான இடத்தில் பொத்திவைக்கவேண்டும். இதுக்காக பிரிட்ஜையும் தூக்கிக்கொண்டா ஒசாமாவை தாக்க போவாங்க? இங்கே தான் நம்மாளு ஒரு மாட்டரை கண்டுபிடித்தார்.
Mercury cadmium telluride. பாதரசம், கட்மியம் சேர்ந்த டெலூரியப்பொருள். சுருக்கமாக MCT, எங்கள் பாஷையில் மேகலா, கன்சிகா கலந்த ஒரு பொண்ணு என்று அழைப்போமா? இந்த பொண்ணு சாதாரண பார்வை அலைநீளத்தை விட ஏனைய அலைநீளங்களையும் உணரும் ஆற்றல் கொண்டது. இதிலே இருக்கும் கன்சிகாவின் அளவைப்பொறுத்து வெவ்வேறு அலைநீளங்களையும் உணரலாம். முக்கியமா இந்த பொண்ணை பிரிட்ஜுக்குள் பூட்டி வைக்கத்தேவையில்லை. சாதாரண காலநிலையிலும் இது இப்படியே இயங்கும். சென்சிட்டிவிட்டி கூட இதற்கு அதிகம். இந்த துறையில் இவ்வளவு காலமும் இருந்த தொழில்நுட்பத்தை தூக்கிச்சாப்பிடும் திறன் கொண்ட பொண்ணு இது.
ஒசாமாவை கண்காணிக்க பயன்படுத்தப்பட்ட கருவிகளில் இந்த பொண்ணை சகட்டு மேனிக்கு பாவித்திருக்கிறார்கள். செலவு குறைவு. பராமரிப்பதும் இலகு. ஒசாமா மாட்டர் இதன் ஒரு பகுதி தான். மருத்துவம், வானியல் என்று ஆரம்பித்து இப்போது இதை சோலார் சக்திக்கு பயன்படுத்த ஆராய்ச்சிகளை செய்ய சிவானந்தன் பணிகளை முடக்கிவிட்டிருக்கிறார். அமெரிக்க அரசாங்கமும் மில்லியன் கணக்கில் அள்ளிக்கொடுக்கிறது!
இதன் அடுத்த கட்டமாக குவாண்டம் போட்டோ …
எக்ஸ்கியூஸ் மீ பாஸ்
என்ன டவுட்டா? டெல் மீ மீ ..
இல்ல பாஸ் .. தூக்கம் தூக்கமா வருது .. நஸ்ரியா மாட்டர் இல்லையா?
இல்லையே ராஜா
வழமையா சீரியஸ் ஆன்மீக பதிவிலும் எதையாவதை செருகுவீங்களே பாஸ். ப்ளீஸ் .. அட்லீஸ்ட் சமந்தா?
இல்லடா ராஜா … நீ போய் தூங்கு .. அடுத்தவாரம் நஸ்ரியா சமந்தா ஹன்சிகான்னு மும்முனை தாக்குதல் ரெடி பண்ணிடலாம்.
ஒகே பாஸ்
மன்னிக்கவேண்டும் மக்களே. நல்ல புளோவில இருக்கேக்க ஒரு நாதாரி இடைக்க பூந்து மூடை குழப்பீட்டான். அவ்வளவு தான் சயன்ஸ். அடுத்த செக்ஷன்!
கைவசமாவது விரைவில் வேண்டும்!
அண்மையில் ஊரில் இருந்து ஆஸிக்கு குடிபெயர்ந்த ஒரு நண்பனை நேற்று சந்தித்தேன். “மச்சான் எல்லாம் முடிஞ்சு போச்சு” என்றே ஆரம்பித்தான். “ஏண்டா அப்பிடி சொல்லுறாய்?” என்று கேட்டதுக்கு அவன் கொட்ட ஆரம்பித்தது, நள்ளிரவு பன்னிரண்டு தாண்டியும் புலம்பல் அடங்கவில்லை. அத்தனையும் ஊரில் நடக்கும் அடக்குமுறை அட்டூழியங்கள் சம்பந்தமானது. இங்கே வேண்டாம்.
அங்கே இருக்கிறவர்களால் ஒன்றுமே செய்யமுடியவில்லை. வெளிநாட்டு தமிழர்கள் ஏதாவது செய்வார்கள் என்றால், இங்கே பிள்ளைகள் தமிழில் கூட பேசுகிறார்கள் இல்லை என்றான். “தேவையில்லை” என்று நான் சொல்ல, ஆச்சர்யமாக பார்த்தான். தமிழ் தேவையில்லை என்று மொத்தமாக சொல்லவில்லை. ஆனால் பிள்ளைகளுக்கு தமிழ் தெரிந்தால்தான் அவர்கள் தமிழுணர்வோடு வளர்வார்கள் என்று எந்த கட்டாயமும் இல்லை, ஒருமுறை மாவீரர் தினத்தில் ஒரு குழந்தை மைக்கல் ஜாக்சனின் “what about sunrise” பாடலை உணர்ந்து பொருத்தமாக பாடியது என்றேன். அடிக்க வந்தான். இதை விளக்க வேண்டும். அதற்கு மீண்டும் ஜூதர்களிடமே செல்லவேண்டும்.
ஜூதர்கள். உலகின் அத்தனை மூலைகளிலும் அடி வாங்கினார்கள். ஜெர்மன் மொழி பேசியவர்கள், ரஷ்ய மொழி பேசியவர்கள், இத்தாலி மொழி பேசியவர்கள். யாரென்றில்லை. எல்லோருமே அடி வாங்கினார்கள். ஜெர்மனியர்கள் ஓவராக இந்த விஷயத்தில் நடந்ததால் மற்ற நாட்டுக்காரன் நல்லவனாகினான். அவ்வளவே. மற்றும்படி நிஜத்தில் ஜூதன் மீதான துவேஷம் அப்படியே இருந்தது.
இந்த பாங்கு இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் நாஸிக்களின் கொடுமையின் விளைவாக ஏனைய இடங்களில் கொஞ்சம் கொஞ்சமாக மாற தொடங்கியது. அதற்கு காரணம் ஜீதர்கள் தாங்கள் வாழும் நாட்டின் தவிர்க்கமுடியாத பிரஜைகள் ஆனதும் தான். ஐன்ஸ்டீன், மக்ஸ் போர்ன், ஹேபர், நீல் போர் என்று நம்ம ஹீரோக்கள் எல்லோருமே ஜூதர்கள். இன்றைக்கு ஹாலிவுட்டை ஆட்டிப்படைப்பது கூட ஜூதர்கள் தான். அமெரிக்காவின் ஒவ்வொரு கட்டமைப்பின் வளர்ச்சியிலும் ஜூதர்களின் பங்களிப்பு இருக்கும். அவர்கள், அவர்களின் குழந்தைகள் எல்லோருமே அமெரிக்கர்களாகவும் அதே சமயம் ஜூதர்களாகவும் வளர்ந்தார்கள். வளர்கிறார்கள். அந்த நாட்டின் தவிர்க்கமுடியாத பிரஜைகள் ஆனார்கள். ஆனவர்கள் சும்மா இருந்தார்களா?
Jewish Lobby என்று அலுவலகத்தில் நண்பர் ஒருவன் சொல்லுவான். ஜூதர்கள் தங்களுடைய கொள்கைகளை, கருத்துக்களை, தம் இனத்தின் மீதான கொடுமைகளை, தேவைகளை சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் மற்றவர்களுக்கு சொல்வார்கள். அலுவலம், வீடு, தெருவில் ஆரம்பித்து வெள்ளை மாளிகை கொள்கை வகுப்பு வரை இது இடம்பெறும். ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அமெரிக்காவில் வாழ்ந்த நாட்களில் சந்தர்ப்பம் கிடைத்தபோதெல்லாம் இந்த வேலையை செய்தார். இஸ்ரேல் உருவாக அமெரிக்க ஜூதர்களின் பங்கு சாதாரணமானதல்ல. ஜனாதிபதி நிக்ஸன் 1973ம் ஆண்டு அரேபிய இஸ்ரேலிய யுத்தத்துக்கு இராணுவ உதவிகளை இஸ்ரேலுக்கு செய்தமைக்கு கூட இந்த Jewish Lobby தான் காரணம்.
மடலின் அல்ப்ரைட் என்ற பெயரை என் வயதுக்காரர்கள் மறந்திருக்கமாட்டார்கள். கிளிண்டன் ஆட்சிக்காலத்திய அமெரிக்க இராஜாங்க செயளாளர். அவர் பிறந்தது செக்கோஸ்லோவேகியாவில். தாய் தந்தையர்கள் ஜூதர்கள். பின்னர் கத்தோலிக்க மதத்துக்கு மாறிவிட்டார்கள். என்றாலும் ஹிட்லர் நாட்டை கைப்பற்றியபோது இங்கிலாந்துக்கு தப்பியோடவேண்டி வந்தது. பிறகு போர் முடிந்தபின் நாட்டுக்கு திரும்பினாலும், கம்யூனிச ஆட்சி. சோவியத் யூனியனின் தொல்லை, தாங்க முடியாமல், மடலின் குடும்பம் அவருக்கு பத்து வயசு இருக்கும்போது அமெரிக்க வந்தார்கள். மடலின் தந்தையை போலவே அரசியல் விஞ்ஞானத்தில் கலக்க, ஐந்தாறு மொழிகளில் தேர்ச்சி அடைந்த இந்த பெண் ஜனநாயக கட்சி ஏணியில் ஏறி ஏறி ஏறி .. இறுதியில் நாட்டின் இராஜாங்க செயளாளர் ஆகிவிட்டார். Secretary of the state.
மடலின் சிறுவயதில் சர்வாதிகாரிகளின் ஆட்சியில் பந்தாடப்பட்டதும், அவரின் பால்கன் பிராந்தியம் மீதான அக்கறையும், கொசோவா யுத்தத்தில் அமெரிக்காவின் கொள்கையை தீர்மானித்தது என்கிறார்கள். 98ம் ஆண்டுவரை தீவிரவாத இயக்கமாக பிரகடனப்படுத்தப்பட்ட கொசோவோ விடுதலை இயக்கம் எந்த விளக்கமும் இல்லாமல் அந்த லிஸ்டில் இருந்து ஒரே நாளில் தூக்கப்பட்டது. நேட்டோ களத்தில் இறங்கியது. இதை விமர்சகர்கள் மடலினின் யுத்தம் என்றே அழைக்கிறார்கள். கொசோவோ இன்றைக்கு தனிநாடாக இருப்பதற்கு, அதுவும் கிளிண்டன் போன்ற மிதவாத ஜனாதிபதி காலத்தில் இது நிகழ்ந்தமைக்கு மடலின் தான் தனிக்காரணம்.
Are you getting it? நான் சொல்லவந்த செய்தியின் ஆதாரத்தை உணர்ச்சிவசப்படாமல் யோசியுங்கள். ஆரம்ப உரையில் சத்தம்போடாமல் சிவானந்தன் செய்தது ஒருவித lobbying தான். வெளிநாடுகளில் எங்கள் பிள்ளைகளை அந்தந்த நாட்டு பிரஜைகளாகவே வளரவிடுவோம். அவர்கள் போக்கிலேயே சாதனைகளை செய்யவிடுவோம். மருத்துவம், விஞ்ஞானம், பொறியியல், வியாபாரம், துப்பரவாக்கல், தொழிற்சாலை, Blue collar, Red Collar எதுவானாலும் சரி. வளரவிடுவோம். ஆனால் சில விஷயங்களை சொல்லாமல் மாத்திரம் வளர்த்துவிடவேண்டாம்.
யார் கண்டது, இன்னும் முப்பது வருஷத்தில் என்ன நடக்கும் என்று. விருட்சம் இதுவென்று விதையை பார்த்து கண்டுபிடிக்க முடியுமா என்ன? தண்ணியை மறக்காமல் ஊற்றிப்பார்ப்போம்.
கனவு மெய்ப்படவேண்டும்!
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
மூலங்கள்
http://www.youtube.com/watch?v=2V0HXyha6Hs
http://www.tamilnet.com/art.html?catid=13&artid=36373
http://www.jaffnahindu.org/news/dr-sivalingam-sivananthan-honored-as-a-white-house-champion-of-change-57.html
http://news.bbc.co.uk/2/hi/special_report/1999/03/99/kosovo_strikes/315053.stm
http://en.wikipedia.org/wiki/Jewish_lobby
http://news.medill.northwestern.edu/chicago/news.aspx?id=182831
http://onlineuthayan.com/News_More.php?id=129722076802280301#
http://www.virakesari.lk/article/local.php?vid=4968
www.sivananthanlabs.us
சுப்பரா இருக்கண்ணா...
ReplyDeleteI hope you already check this website.
http://www.sivananthanlabs.us
Thanks .. yep .. updated the references too. :D
Delete"வெளிநாடுகளில் எங்கள் பிள்ளைகளை அந்தந்த நாட்டு பிரஜைகளாகவே வளரவிடுவோம். அவர்கள் போக்கிலேயே சாதனைகளை செய்யவிடுவோம். மருத்துவம், விஞ்ஞானம், பொறியியல், வியாபாரம், துப்பரவாக்கல், தொழிற்சாலை, Blue collar, Red Collar எதுவானாலும் சரி. வளரவிடுவோம். ஆனால் சில விஷயங்களை சொல்லாமல் மாத்திரம் வளர்த்துவிடவேண்டாம். யார் கண்டது, இன்னும் முப்பது வருஷத்தில் என்ன நடக்கும் என்று. விருட்சம் இதுவென்று விதையை பார்த்து கண்டுபிடிக்க முடியுமா என்ன? தண்ணியை மறக்காமல் ஊற்றிப்பார்ப்போம்."
ReplyDeleteremba.remba..pidichathu..intha..lines..JK!
ungada..thalaippaiyae..thiruppi..solraen!..கனவு மெய்ப்பட வேண்டும்!
thanks..for..the..wonderful..article..JK!
Thanks Anugraka.
Deleteஆஹா சூப்பர் பகிர்வு அண்ணாச்சி அதுவும் சிந்திக்கும் வண்ணம் வாழ்த்துக்கள்!
ReplyDeleteநன்றி தலைவரே.
Delete“1987ம் ஆண்டு அவர் தமிழில கவிதை எழுதியிருக்கிறார்”, “திருக்குரல் கூட தெரியுமாம் பாஸ்”
ReplyDeleteநெஞ்சில் உரமும் இன்றி நேர்மைத் திறமும் இன்றி
வஞ்சனை சொல்வாரடி கிளியே வாய்ச் சொல்லில் வீரரடி :P
நன்றி JJ ... அதே!
DeleteJK, it is a very nice writing, but in my opinion காரியத்தில் உறுதி வேண்டும் is a bit too much technical word of you, engineer like you only can easily understand.. I am missing the flow of interest somewhere when you go too serious in Quantum matter... but over all nice...
ReplyDeleteThanks for the comment. Comments like this helps me to relook into it. I thought its simplified to its lowest level :D ... and obviously I haven't talked about the quantum matter there anyway...
DeleteStill I think the technical part was the core of the post. As Raja told,
எது பண்ணணுமோ அத பண்ணாம விட்டிட கூடாது!
Cheers,
JK
Few hours ago I sent and email to my friend in connection with Charu Nivethithas last article in the Blog:
ReplyDeleteI may be good at Arts,
you may be in sports,
Another one in music.
Our Asian system failed to recognise this.
So we do not have Ravi Varma, Beckam, or Michel Jackson.
We think in same wavelength as per your last para. But I wonder, it will take very vey long time.
siva
Thanks Siva .. it may happey in 30 years time .. may in 50 years. May be not in our life time. But it doesn't matter. We will do what we can do leave the rest to future!
DeleteGood one again JK...... but it is too complex to achieve these things. Complexity in science, better i will read it again.
ReplyDeletewho saw the things (good and bad) before 1982 can achieve this one mean whoever saw later events and thing can aim for further...............example you.
Ajanthan
Thanks Anna ... Its not complex. Actually its a very simple thing to do and we all can do. Without worrying too many things and look beyond what we can see, lets do the first things first. Start from your own child :D
DeleteAre you kidding???????? If you consider first things first, I think you have to do as our Y generation is good at achieving things. (http://www.heraldsun.com.au/news/victoria/generation-y-drivers-claim-to-be-better-than-parents/story-e6frf7kx-1226609145156). I strongly believe they are the people that experienced so many good and bad things in their life in order to get the motivation like Dr சிவலிங்கம் சிவானந்தன். I'm escape......
DeleteI couldn't do any thing except writing this comments, then how can I ask my son to do.................D.
once JK achieved then I will tell my son to look at you..............
Ajanthan
Oh yeah .. they are smart and we don't need to tell them what shud they do .. but we still need to tell them how we come this far... there is a famous dialog in the book The Namesake which never ceased to exist in my memory :)
Delete“Try to remember it always," he said once Gogol had reached him, leading him slowly back across the breakwater, to where his mother and Sonia stood waiting. "Remember that you and I made this journey together to a place where there was nowhere left to go.”
― Jhumpa Lahiri, The Namesake
JK, you have conveyed a very sensitive message in a diplomatic way...Appreciate the effort..People may conflict and you may get 1000s of criticisms too for this article...but its a bitter truth Lobbying is also a strategy for the survival due to the circumstances.
ReplyDeleteAs you said, எந்த ஒரு நாடும், மனிதர்களின் வலுவான பெறுமதியை மதிக்க வேண்டும்..அதைவிடல் மனிதர்களை மனிதராக நடத்த வேண்டும். it's a big philosophical topic..social network is not a good place to put forward...
Thanks Janani .. // it's a big philosophical topic// .. again its a very simple fundamental thing but hard to follow. Lot of people go hard and americans. But they do the simple things right. They learnt to respect their own people over the time. And I am sure, they will do it to rest of the world in time too.
DeleteGood Structure + Informative - ”மனதில் உறுதி வேண்டும்”
ReplyDeleteThanks Ba La
DeleteThanks JK, very informative blog.....
ReplyDeleteThanks Veena.
DeleteMe too, so informative, thanks for explaining it in a simple way.
DeleteThanks Dhanya.
DeleteHi JK,
ReplyDeleteI would say this is greatest posting in your blog, even though read only first part as short of time.
Please write more like this and i hope that this sivananathan's achievement and words will open up at-least few of our hidden gems living all over world.
Regards
Senthil
Thanks Anna ... One in hundred thousands would blossom like this. But then to get someone to flourish we need to prepare hundred thousands people. Lets hope for the best.
DeleteCheers.
அழகான, அறிவூட்டும் பதிவு. சொல்லிய விடயத்தை பொருள் உணர்ந்து சொல்லி இருப்பதும், அதை சுவைபட தொகுத்திருப்பதும் மிக அருமை. யூதர்களையும் ஈழ தமிழர்களையும் ஒப்பு நோக்கி பார்க்கும் தன்மையில் அண்மையில் ஒரு கட்டுரை இணையத்தில் வாசித்தேன். அதன் இறுக்கமான மொழிநடை அதன் "காத்திரமான" கருத்துக்களை உணர்ந்துகொள்ள முடியாமல் செய்துவிட்டது. நீங்கள் பாரதியின் வரிகளையும் தொட்டு, பௌதிகத்தின் நுட்பத்தையும் விளக்கி, காலத்தின் தேவையை கூறி, எண்கள் கடமையையும் வலியுறுத்தி, என்னைபோல பாமரனுக்கும் புரியும்படி எழுதியதற்கு பாராட்டுகள், நன்றிகள்.
ReplyDeleteNanri thalaivaa...
Delete//"காத்திரமான" கருத்துக்களை உணர்ந்துகொள்ள முடியாமல் //
Ithu illaaatti ilakkiyam illayae machchi
//என்னைபோல பாமரனுக்கும் புரியும்படி எழுதியதற்கு பாராட்டுகள், //
Ketukkunga makkalae, annarukku avai adakkamaam!
நாங்களும் சமந்தாவுக்காக வெய்ட்டிங் பாஸ்..! :p
ReplyDelete//எக்ஸ்கியூஸ் மீ பாஸ்
என்ன டவுட்டா? டெல் மீ மீ ..
இல்ல பாஸ் .. தூக்கம் தூக்கமா வருது .. நஸ்ரியா மாட்டர் இல்லையா?
இல்லையே ராஜா
வழமையா சீரியஸ் ஆன்மீக பதிவிலும் எதையாவதை செருகுவீங்களே பாஸ். ப்ளீஸ் .. அட்லீஸ்ட் சமந்தா?
இல்லடா ராஜா … நீ போய் தூங்கு .. அடுத்தவாரம் நஸ்ரியா சமந்தா ஹன்சிகான்னு மும்முனை தாக்குதல் ரெடி பண்ணிடலாம்.
ஒகே பாஸ்//
thaakkuvom baas .. samantha kooda call panni tension aayittaanga .. aduththa vaaram thaakkarom!
Deleteசிறந்த தன்னம்பிக்கை பதிவு வாழ்த்துக்கள் சகோ.
ReplyDeleteநன்றி கிராமத்து காக்கை!
Deleteநான் வாசிக்கிற பதிவுகளில நீங்கள் தான் விஞ்ஞான மேட்டர்களை தமிழ்ல சூப்பரா எழுதுறீங்க.. வாசிக்க சும்மா அப்பிடி இருக்கு.. எவ்வளவு வேலை வந்தாலும் பதிவு எழுதுறதை விட்டிடாங்கோ.. ப்ளீஸ்..
ReplyDeleteமுந்தி பவான் அண்ணாவும் (புல்லட்) சூப்பரா விஞ்ஞானத்தை தமிழிலை போட்டு தாக்கீட்டிந்தார்..இப்ப பதிவு எழுதுறதை விட்டிடார்..இப்ப உங்க Aus ல தான் ஆள்..கேதா அண்ணாட Batch.
His blog - http://ariyalion.blogspot.com
நன்றி தொடக்கம்.... Yeah I know him . infact he was my java students ten years back :D
Deleteசெல்போனில் கேமரா பயன்படுத்தும் உத்தியை கண்டுபிடித்தது உசிலம்பட்டி தமிழன், சிவானந்தன் கண்டு பிடித்தது ஒரு மகத்தான உத்திதான்.....உலகத்தில் இந்தியா, இலங்கை தவிர அனைவரும் தமிழனை பயன்படுத்திக்கொள்கின்றார்கள். “யாதும் ஊரே யாவரும் கேளீர்” இதை நம் குழந்தைகளுக்கு மனப்பாடம் செய்ய வைப்போம்..! அதைத் தவிர நமக்கு வேறு என்ன தெரியும்.
ReplyDeleteகட்டுரை நன்று!
நன்றி வீடு சுரேஸ்குமார்.
DeleteAnother mind blowing sleep killing post, yes, you explain all this tough complex science in easy tamil, no matter how we are fluent in English, but always get more understanding when I read something in tamil, hats off to you JK, please so continue writing, :)
ReplyDeleteThanks Zahra ... என்னால் ஆளை இந்த பக்கம் இப்போ காணேல்ல!
DeleteNice and useful post.
ReplyDelete//தமிழில் கூட பேசுகிறார்கள் இல்லை என்றான். “தேவையில்லை”// I agree with you 100% and thanks for mentioning it. I tried and failed to explain this to a brother (http://kishoker.blogspot.com/2012/06/blog-post_17.html). It may not be an Ideal situation but it is reality. First, we need to accept it before planning for the future.
Jewish lobby kind of things are long way to go. We need to understand the people living around us (whichever be the community) and we have to think about that community's prosperity. Do you remember, I mentioned to you about an incidence in Canada where Tamil people turned down local government's partnership request to build a common facility for SaiBaba worship and elementary school. We need to avoid those kind of behaviors.
Thanks Mohan.
Delete//Do you remember, I mentioned to you about an incidence in Canada where Tamil people turned down local government's partnership request to build a common facility for SaiBaba worship and elementary school. We need to avoid those kind of behaviors.//
Yes that's the thing. To be honest, people who are in the limelight don't have clear vision and those who got clear vision are not in the limelight. It always pisses me of when someone takes a stage and talks rubbish and claiming to be the leaders of the community. It happens in Melbourne, it happens in Sydney, and rest of world is no different either.
Great post. I am learning a lot from you JK!
ReplyDeleteThanks Vani.
Deleteநன்றாக சொல்லியுள்ளிர்கள் ஐயா.
ReplyDeleteஇந்த செந்நிற கீழ்க்கதிர்களையும் , ஒரு பிரயோசனமான வழியில் பயன்படுத்த வழி கண்டு பிடித்த விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்கள். அதை எங்களுக்கு இலகுவாக விளங்கப்படுத்திய தமிழ் அறிவியல் எழுத்தாளர் JK க்கு நன்றிகள்.
இதில் நம்மாளை- அப்படியும் சொல்லலாமோ தெரியவில்லை; என்னவென்றுதான் அழைப்பதாம்? தமிழன் என்றால் சின்ன வட்டத்திற்குள் நிற்கிறது போல இருக்கு என்றால், மிச்சதெல்லாம் அதைவிட சிறியதாகதானே இருக்கிறது? யாழ்ப்பாணத்தான், இந்துக்கல்லூரியான், சாவகச்சேரியான், மட்டுவிலான்....ஏதாவது ஒரு அடைமொழி தேவைதானே, அவர் அவர் தனக்கு தேவையானதை பாவிக்கிறார்கள். இதில் எது குறை? நான் நினைக்கிறன் பொதுவாக எங்களுக்கு வால்பிடிக்க தெரியாது என்று..நீங்கள் அது கூட என்று சொல்லுகிறீர்களே இது என்ன ஞாயம் ஐயா?
நீங்கள் சொல்லுகிற வாழ்வில் தெரிந்த/விரும்பிய பாதையில் முன்னேறி விட்டு, அதன் உச்சியில் இருந்து எங்கள் பிரச்னையை சொன்னால் இன்னும் கூட நாலு பேர் பார்ப்பார்கள் என்பது உண்மைதான். அதைவிட திறமான இலகுவான பிரச்சார மேடை கிடைக்கவே கிடைக்காது. அது காலம் காலமாக நடந்து வரத்தான் செய்கிறது, ஆனாலும் சில/பல சந்தர்பங்களில் மேலே போகப்போக உள்நாட்டில் நடக்கிற பிரச்சனைகள் பலருக்கு பத்தோடு பதினொன்றாக, "Barbecue topic" ஆக (மட்டும்) மாறிவிடுகிறது.
என்னவோ நாங்களும் உங்களை பார்த்து; "இவர் முந்தி ப்ளாக் இல் எழுதும்போதே எங்களுக்கு தெரியும்" என்று சொல்ல வேண்டி வந்தால், அதோட சேர்ந்துவாற அதில் இருக்கிற சின்ன சின்ன பிழைகளையும் - அவருக்கு முந்தி தோகை மாதிரி முடி எண்டு சொன்னாலும்- ஓம் ஓம் என்று சொல்ல வேண்டும்- அதற்காக ஒசாமாவும் ஒபாமாவும் ஒன்று என்று கருத்தல்ல..எனக்கும் சிலவேளைகளில் கொஞ்சம் டாங் சிலிப் வரப்பக்கிறதுதான், எங்கே முறையாக மாட்டுபடுவனோ தெரியாது :(
அவர் அமெரிக்காவை பற்றி சொன்னது மிகவும் உண்மை. அமெரிக்காவின் வெளியே தெரியும் உருவதிற்கும் உள்ளே இருக்கிற உருவதிற்கும் நிறைய வேறுபாடு. நான் பல நாடுகளுக்கு போனவன் அல்ல ஆனால் பலருடன் கதைத்திருக்கிறேன், முன்னேறுவதற்கு அமெரிக்காவை விட இலகுவான நாடு இல்லை. இங்கே உள்ள சமூக உதவிகள் இலகுவானது அல்ல, ஆனால் உழைக்கும் வலு இருக்கும் மட்டும் வாழ நல்ல நாடு.
வாழ்த்துக்கள்..
கோபாலன்
நன்றி அண்ணே!
Delete// செந்நிற கீழ்க்கதிர்//
ஏன் அண்ணே இப்படி மிரட்டறீங்க? பயந்தே போனன்
// ஆனாலும் சில/பல சந்தர்பங்களில் மேலே போகப்போக உள்நாட்டில் நடக்கிற பிரச்சனைகள் பலருக்கு பத்தோடு பதினொன்றாக//
இதை நானும் கவனிச்சிருக்கிறேன் .. கவலையோடு .. இங்கே ஒருமுறை ஒன்றுகூடலில் என்னை ஒரு அண்ணா அறுபது வயது பிரபல வைத்தியருக்கு அறிமுகப்படுத்தியபோது, அவர் கேட்டது "Is padalay the gate or the fence?". மறந்துவிட்டார்கள் என்பதைவிட ஞாபகப்படுத்தவேண்டும் என்று அவர்களுக்கு தோன்றவில்லை. தவறு அவர்கள் மீது இல்லை. சுயநலமாக வாழ நாங்கள் பழகிவிட்டோம்.
// அவருக்கு முந்தி தோகை மாதிரி முடி எண்டு சொன்னாலும்//
பாஸ் நம்ம பழைய படம் பார்த்தா உங்களுக்கு நிலைமை விளங்கும்!
நன்றி மீண்டும்.
நான் ஒன்றும் கண்டு பிடிக்கேல்ல பாஸ். பாடப்புத்தகத்தில்/டியூஷன் நோட்ஸ் இல் முந்தி படித்ததுதான்
Deleteகழிஊதா - கழி- கழிந்த/கடந்த ஊதா; பார்வை விச்சை விட கூடியது,- அதிர்வெண்ணைத்தான் கருதுகிறது. அதே போல செந்நிறகீழ்,- கீழ்- கீழான/குறைந்த, பார்வை வீச்சை விட குறைந்தது.
அகச்சிகப்பு கதிர்கள் - Is this OK or still frightening?
ReplyDeleteஎனக்கு அதை அப்பிடியே இன்ப்ரா ரெட் எண்டு எழுதிறதே ஈஸியா இருக்கு. ஆளாளுக்கு அது மாறலாம் :)
Deletehttp://www.sbs.com.au/yourlanguage/tamil/highlight/page/id/271949/t/What-is-the-actual-reason-for-the-White-House-to-honour-Prof.-Sivalingam-Sivananthan/
ReplyDelete