ஒரு முட்டாளும், இரண்டாயிரத்து நானூறு அறிவாளிகளும் - #RIP

Mar 23, 2015

பாகம் ஏழு : #RIP

இஸ் இட் விமலினி?
Like · Comment · January 28, 2015 ·

அந்தப்பக்கம் ஒரு தயக்கம் தெரிந்தது. பதில் வரவில்லை.
Like · Comment · January 28, 2015 ·

இஸ் இட் மிஸிஸ் கேப்பையினார் கேதீஸ்?
Like · Comment · January 28, 2015 ·

யெஸ்.... ஹவ் கான் ஐ ஹெல்ப் யூ? .... ஷிட் 
Like · Comment · January 28, 2015 ·


அவளேதான். விமலினியிடம்தான் நான் பேசிக்கொண்டிருக்கிறேன். கடவுளே. இது நிஜம்தானா? மட்டக்குளி ஏரியாவே செரிப்பூக்களால் நிரம்பிய யப்பானிய பூந்தோட்டம் போன்று காட்சியளித்தது. ரோமியோவின் ஜூலியட் .. தேவதாஸின் பார்வதி .. ரெண்டு பேரும ஒன்று சேர்ந்த மாதிரி ... அப்பிடியே ஹஸ்கியா .. 

"கனவு காணாதே அமுதவாயன். யூ ஆர் ஒன் லைன்.. நீ வந்திருப்பது கொலை செய்யவே", நிதானத்துக்கு வந்தேன். அவள் குரலிலே இன்னமும் ஒரு பதட்டம் தொனித்தது. என் குரலை கண்டுபிடித்திருப்பாளா? நிச்சயம் அவள் கழுத்தடி இப்போது வியர்த்திருக்கும். ஏதாவது சொல்லி சமாளிக்கவேண்டும். 
Like · Comment · January 28, 2015 ·

“என்னுடைய புது மெடிக்கல் கிளினிக்கின் வெப்சைட் பாஸ்வேர்டை தொலைத்துவிட்டேன். எப்படி ரீ-செட் பண்ணுவது என்று தெரியவில்லை” என்றேன். “ரீ-செட் பட்டினை கிளிக் பண்ணிணீங்களா? ஈமெயில் வந்திருக்குமே” என்றாள். எனக்கு ஐ.டி அறிவு பூச்சியம் என்றேன். அவளுக்கு இப்போது கொஞ்சம் நம்பிக்கை வந்திருக்கவேண்டும். “பறுவாயில்லை, இப்படியான சிக்கலான பிரச்சனைகளை தீர்த்து, வாடிக்கையாளர்களை சந்தோசப்படுத்துவதே இந்தக்கம்பனியின் நோக்கம்” என்று தடக்கி தடக்கி சொன்னாள். கேப்பையினார் கொம்பனியின் விஷன் ஸ்டேட்மென்டாம். ச்சீ தூ என்று மனதுக்குள் காறித்துப்பினேன்.  கேப்பையினாரை சந்திக்கவேண்டும் என்றேன். அப்பொயின்ட்மெண்ட் இருக்கா என்றாள். இல்லை என்றேன். பரவாயில்லை இன்னமும் அரைமணி நேரத்தில் வாருங்கள், வந்துவிடுவார், பெயரையும் போன் நம்பரையும் தாருங்கள் என்றாள். கட் பண்ணிவிட்டேன்.
Like · Comment · January 28, 2015 ·

என்னை என்னாலேயே நம்பமுடியவில்லை. இரண்டு நாட்களுக்கு முன்னர் அனஸ்தாசியா, ருசியா, பனிக்குளிர் என்று படுத்துக்கிடந்தவன் இப்போது மட்டக்குளியில் ஒருவனை கொலை செய்வதற்காக நிற்கிறேன் என்பதை நம்பவே முடியவில்லை.
Like · Comment · January 28, 2015 ·

மீண்டும் ஒரு டீ குடித்தேன். அந்த ஏரியாவை ஒரு நோட்டம் விட்டேன். ஒரு பக்கம் இரும்புக்கடை. மறுபுறம் கருவாட்டுக்கடை. இன்னொருபுறம் ஒரு மிடில் ஈஸ்ட் ஏஜென்சி. எதிர்த்தவிருந்த ஓடையில் ஒரு கில்மா மினி சினிமா. இன்னொரு வெறிச்சோடிய ஒடைக்குள் சம்பந்தமேயில்லாமல் காலை ஒன்பது மணிக்கு நாய்கள் தூங்கிக்கொண்டிருந்தன. சிவப்பு விளக்கு ஏரியாவாக இருக்கலாம். 
Like · Comment · January 28, 2015 ·

இப்படி ஒரு ஏரியாவில் ஐடி கொம்பனி வைத்திருக்கும் ஒரேயொரு ஸீஈஓ கேப்பையினார் கேதீசாகத்தான் இருப்பான். எல்லாமே பேஸ்புக்கில் தான் ஒரு ஸீ.ஈ.ஓ என்று சீன் போடுவதற்காக. ஒரு ரிசப்ஷனிஸ்டை மட்டும் வைத்துக்கொண்டு தொழில் அதிபர். “அடுத்ததாக மங்கல விளக்கு ஏற்றிவைப்பதற்காக திருவாளர் கேப்பையினார் கேதீஸ் அவர்களையும் அவர்தம் பாரியாரையும் அன்புடன் மேடைக்கு அழைக்கிறோம்” என்னும்போது சேர்ட்டுக்கூட இன் பண்ணாமல் நம்மாள் மேடை ஏறுவார். டேய், ஆனானப்பட்ட அப்பிள்காரனே இன்டரிமாத்தான் கனகாலம் இருந்தான். உங்களுக்கு உருப்படியா ஒரு பிஸினஸ் கூட ஆகேல்ல. அதுக்குள்ளே ஸீஈஓ எண்டா எப்பிடி? கேதீஸைக் கொன்ற கையோடு உப்புமாக்கொம்பனி ஸீ.ஈ.ஓக்கள் ஒவ்வொருவரையும் கொன்றுபோடவேண்டும் என்று திட்டம் தீட்டினேன். பின்னர் அத்தனை ரிசப்ஷனிஸ்டுகளையும் …. விமலினி பாவம்.
Like · Comment · January 28, 2015 ·

விமலினி…என் குரலை மட்டுக்கட்டிவிட்டாயா விமலினி? நான் அமுதவாயன் விமலினி.
Like · Comment · January 28, 2015 ·

ஓ. எல் படிக்கிறகாலத்தில் பெருமாள்கோயில் ஒழுங்கையில் எத்தனை நாள் உன்னைத்துரத்தியிருப்பேன் விமலினி? பாவாடை சட்டை, இரட்டைப்பின்னல், கண்ணாடிக்காப்பு, லுமாலா சைக்கிளில நீ வருவியே விமலினி. ஒருக்கா சைக்கிள் காரியரிலயிருந்து உன்னுடைய கொம்பாஸ்பெட்டி கீழே விழுந்து, நான் புட்ரூலர் எல்லாம் பொறுக்கித்தந்தது ஞாபகம் இருக்கா விமலினி? தாங்க்ஸ் சொன்னனி. மறந்திட்டியா விமலினி. அண்டைக்குப்பிறகு ரோட்டில எப்ப பார்த்தாலும் ஒரு சிரிப்பு சிரிப்பாய் விமலினி. அதையும் மறந்திட்டியா? சின்னதான சிரிப்புத்தான் விமலினி. சும்மா அப்பிடி இருக்கும். கேப்பை ஒருநாள், இல்ல ஒருதடவையாவது உண்ட சிரிப்பை ரசித்திருப்பானா விமலினி? நான் நாள் கணக்கா நினைச்சு நினைச்சு ரசிச்சனான் விமலினி... உன்னை நினைச்சுக்கொண்டே திரைத்தென்றல் கேட்டா சும்மா ... பாதி ஜீவன் கொண்டு தேகம் வாழ்ந்து வந்ததோ. மீதி ஜீவன் உன்னை பார்த்தபோது வந்ததோ ... ஏதோ சுகம் உள்ளூருதே .. ஏதோ மனம் தள்ளாடுதே .. விரல்கள் தொடவா .. விருந்தைப்பெறவா .. மார்போடு கைகள் கோர்க்கவா … அடுத்த சீனில நானும் நீயும் யப்பானில செரித்தொட்டத்தில நின்று மலரே என்று சிரிப்போமே விமலினி .. ஞாபகம் இருக்கா? இந்த மட்டக்குளி சரியில்ல விமலினி. நாங்கள் யப்பானுக்கே போவோம்.
Like · Comment · January 28, 2015 ·

இன்னொரு பிளேன்ரீ குடித்தேன். மீண்டும் விமலினிக்கு கோல் பண்ணினேன். “இன்னமும் வரவில்லை” என்றாள். “இப்போ எங்கே இருக்கிறார் என்று சொன்னால் அங்கேயே நான் போகிறேன் ” என்றேன். “ஹூ இஸ் திஸ் ஸ்பீக்கிங்?” என்றாள். கட் பண்ணிவிட்டேன்.
Like · Comment · January 28, 2015 ·

அமுதவாயன் … விமலினி. உன்னோட கூடப்படிச்ச அமுதவாயன். அதுக்குள்ள மறந்திட்டியா? உன் போட்டோக்களுக்கெல்லாம் லைக் பண்ணினேனே விமலினி. நீ கூட என்னுடைய பல கொமேண்டுகளை டிலீட் பண்ணினாயே. மறந்துவிட்டாயா? இப்போது புரிகிறது விமலினி. நீ உன் பேஸ்புக் பாஸ்வேர்டை கேப்பையினாருக்கு கொடுத்துவைத்தியா. அவன் செக் பண்ணுகிறான் விமலினி. உனக்கு யார் யார் லைக் பண்ணி இன்பொக்ஸ் பண்ணுகிறான் என்று அந்த நாய் செக் பண்ணுகிறான். பாஸ்வேர்டை மாற்றிவிடு விமலினி. அவனுக்கு கொடுக்காதே.
Like · Comment · January 28, 2015 ·

மீண்டும் கோல் பண்ணினேன். இம்முறை கேப்பையினாரைப்பற்றி விசாரிக்கவில்லை. இனியும் தாமதித்தால் அலெர்ட் ஆகிடுவாள். சொல்லிவிடலாம். அவள் போனை எடுக்கவில்லை. மீண்டும் கோல் பண்ணினேன். ம்ஹூம்.
Like · Comment · January 28, 2015 ·

கோலை அட்டெண்ட் பண்ணு விமலினி. நான்தான் அமுதவாயன். உன்னோடு சின்ன வயதில் கூடப்படித்த, புட்ரூலர் பொறுக்கித்தந்த அன்பு நண்பன் அமுதவாயன். கவலைப்படாதே விமலினி. நான் வந்திட்டன். “வெள்ளி நிலவே, வெள்ளி நிலவே, வீண் சோகம் ஏனடி மானே ஏனடி” அங்கால லிரிக்ஸ் ஞாபகம் வரேல்ல. ஆனாலும் பாடினேன். மட்டக்குளியில் அந்த ட்ராபிக்கில் நின்றபடி பாடினேன். சாப்பாட்டு வேன்காரன் என்னை ஒருமாதிரி பார்த்தான்.
Like · Comment · January 28, 2015 ·

எனக்கு இருப்புக்கொள்ளவில்லை. இருபது மீற்றர் தொலைவில், அந்த அலுவலகத்துக்குள் என் விமலினி இருக்கிறாள். நான் இங்கேயிருந்து என்ன பண்ணிக்கொண்டிருக்கிறேன்?
Like · Comment · January 28, 2015 ·

அலுவலகத்துக்குள் நுழைவோமா? விமலினி எப்படி இருப்பாள்? என்னைக்கண்டால் என்ன பேசுவாள்? மிரளுவாளா? பொலிசைக் கூப்பிடுவாளா? கேப்பைக்கு வாழ்க்கைப்பட்டதற்காக அழுதுகொண்டு இருப்பாளா? நான் உன்னை காதலித்ததுக்கூட தெரியுமா விமலினி? நீ சந்தோசமா இருக்கிறியா? ஏஸிக்குள்ளால்கூட நாற்றமெடுக்கும் இந்த அலுவலகத்தில் யாருக்கெல்லாம் நீ பல்லிளிக்க வேண்டிவருமோ? இந்த ஏரியாவே சரியில்ல விமலினி. நான் டீ குடித்த வேன்காரனே சரியில்ல. எல்லாரையும் கொன்றுவிடலாம். முதலில் கேப்பையினாரை கொன்றுவிடுவேன் விமலினி. கவலைப்படாதே. கேப்பையினார் கேதீஸை கொன்றுவிடுவேன்.
Like · Comment · January 28, 2015 ·

கேப்பையினார் இன்னமும் வரவில்லை. இந்த சந்தர்ப்பத்தை விட்டோமானால் விமலினியை கேப்பையினாரின் செத்தவீட்டில்தான் அவன் இல்லாமல் பார்க்கமுடியும். விமலினியை பார்க்கப்போவோமா விடுவோமா? ஐந்தே ஐந்து நிமிடம். எட்டிப்பார்த்துவிட்டு வந்துவிடலாம். செக்கியூரிட்டி கூட கிடையாது.
Like · Comment · January 28, 2015 ·

துணிவு வந்துவிட்டது. அலுவலக வளாகத்துக்குள் இறங்கிவிட்டேன். கேட் திறந்திருந்தது. அலுவலக முன்கதவு பஸ்ஸரை அழுத்தினேன். தானாக திறந்தது. “யெஸ். கம் இன்.”
Like · Comment · January 28, 2015 ·

விமலினியைக் காணவில்லை. ரிசப்ஷனில் ஒரு நடுத்தரவயது பெண்மணி இருந்தார்.
Like · Comment · January 28, 2015 ·

“இஞ்ச விமலினி .. விமலினி கேதீஸ் எண்டது?”, தயங்கினேன்.
Like · Comment · January 28, 2015 ·

“யெஸ் நான்தான், நீங்க யாரை தேடுறீங்க?” என்றார் அந்த ... நடுத்தர வயதுக்காரி.
Like · Comment · January 28, 2015 ·

இவர்தான் விமலினியா? … இவள் விமலினியா? ஹோலி கிராப் .. உனக்கு இவ்வளவு வயதாகிவிட்டதா விமலினி? எனக்கு மட்டும் வயதும் உருவமும் அப்படியே இருக்கிறதே. நீ எப்படி மாறினாய் விமலினி. உன்னை கேப்பையினார் மாற்றிவிட்டான். ராஸ்கல். வயதெல்லாம் போய், முகமெல்லாம் சுருக்கம் விழுந்து, உடல் பருத்து, கழுத்து புடைத்து. நரைகூட எட்டிப்பார்த்தது அவளுக்கு. உன்னை அந்த பள்ளிக்கூட பிள்ளைபோலவே காலம் முழுதும் வைத்திருந்திருப்பேனே விமலினி. பேஸ்புக் படங்களில் நீ இப்படி இருக்கவில்லையே விமலினி. எப்படி நேரில் இப்படி இருக்கிறாய்? 

Like · Comment · January 28, 2015 ·

எனக்கு இயலாமையும் கோபமும் சேர்ந்துகொண்டது. நெஞ்சு படபடத்தது. இரண்டு நிமிடங்களுக்கு முன்னர் இருந்த அத்தனை உணரவுகளும் வடிந்தொடிவிட்டன. ஒன்றுமே பேசவில்லை. எழுந்து எக்ஸ்கியூஸ்மீ கூட சொல்லாமல் நேரே பாத்ரூம் தேடி ஓடினேன்.
Like · Comment · January 28, 2015 ·

கொமோடில் அமர்ந்திருந்து ஐபோனில் விமலினியின் பேஸ்புக் புரபைலில் நான் லைக் பண்ணின அத்தனை படங்களையும் ஒவ்வொன்றாக அன்லைக் பண்ணினேன். அவள் இளமைத்தோற்றத்தோடு இருக்கும் படங்களை எல்லாம் பேஸ்புக்குக்கு அப்ரோபிரியேட் இல்லை என்று ரிப்போர்ட் பண்ணினேன். எல்லாமே போர்ஜரி. பேக். லைக்குக்காக செய்த போட்டோஷொப் தகிடுதாளம். ஐந்தாறு வருடங்களுக்கு முன்னர் எடுத்ததை போட்டு லைக் வாங்குகிறாள். விமலினி, உன்னிடம் நான் இதை எதிர்பார்க்கவில்லை. ஏமாற்றிவிட்டாய் விமலினி. யூ பிளடி … முதலில் உன்னைக்கொல்லவேண்டும்.
Like · Comment · January 28, 2015 ·

அழுகை வந்தது. நான் எதற்காக கொலைசெய்ய வந்தேன்? கேப்பையினாரை கொலைசெய்வதற்கு ஆயிரத்தெட்டு நியாயங்கள் தேடினாலும், எல்லாமே நான் மாற்றான் மனைவியை ரசிக்கவில்லை, நான் நல்லவன்தான் என்று உலகுக்கு வேடம் காட்டத்தானே. எனக்கே அந்த கன்வின்சிங் தேவைப்பட்டதே. எல்லாமே இந்த விமலினிக்காகத்தானா? இது காதலா? என் காதலிக்கு வயதே ஆகவில்லையே. காந்தாரி இன்னமும் அப்படியே இருக்கிறாளே. திருமணம் முடிக்கையில் இருந்தே, காந்தாரி மேக்கப் கூட மாற்றாமல், துரியோதனன் பிறந்து சாகும்வரை அப்படியே இருக்கிறாளே. ஒரு மெல்லிய வெள்ளை நரை பெயின்ட் கூட அடிக்கவில்லையே காந்தாரி. இவளைப்பார்த்தால் காந்தாரியின் அம்மா மாதிரி இருக்கிறதே. விமலினிக்கு எப்படி வயதாகியது? நான் கேப்பையினாரை கொன்று அடையப்போகும் பயன் என்ன? விமலினி மீதான ஈர்ப்பு ஒரு நொடியில் எங்குபோனது? இன்பக்சுவேஷனா? நாப்பது வயதிலும் அது வருமா? எனக்கேன் இங்கிருந்து தப்பியோடவேண்டும் போலுள்ளது? காந்தாரி நீ எங்கே இருக்கிறாய்? என்னை மன்னித்துவிட்டு காந்தாரி. நான் உனக்கு பொய் சொல்லிவிட்டேன் காந்தாரி. என்னை இவளிடமிருந்து காப்பாற்று. ச்சீ. என்ன மனிசன் நான். பெரிய வளர்ப்பு படிப்பு குடும்பம் எண்டு கதைக்கிறதெல்லாம் பொய்தானே. எல்லாருமே உள்ளுக்குள்ள என்னை மாதிரித்தானா? இல்லை நான்தான் இப்பிடியா?
Like · Comment · January 28, 2015 ·

படிப்பு படிப்பு படிப்பு படிப்பு படிப்பு படிப்பு.
Like · Comment · January 28, 2015 ·

அறிவு அறிவு அறிவு அறிவு அறிவு அறிவு.
Like · Comment · January 28, 2015 ·

அனுபவம் அனுபவம் அனுபவம் அனுபவம் அனுபவம் அனுபவம்.
Like · Comment · January 28, 2015 ·

நல்லது. நல்லது. நல்லது நல்லது. நல்லது. நல்லது.
Like · Comment · January 28, 2015 ·

அறம். அறம். அறம் ஆறம். அறம். அறம்.
Like · Comment · January 28, 2015 ·

எல்லாமே பேய்க்காட்டு வித்தை. இது எந்தச்சனியனும் ஒரு நல்ல மனுஷனை உருவாக்காது. நீ நல்லவன் எண்டால் நல்லவன். கெட்டவன் எண்டால் கெட்டவன். அது உன்னுடைய பிறப்புச்சொத்து. எந்தக்குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே எண்டது ஒரு முட்டாள்தனமான வாதம். பண்பு என்பது பிறப்பால் வருவது. வளர்ப்பால் அல்ல. வளர்ப்பு பட்டை மட்டுமே தீட்டும். அவ்வளவே. மற்றும்படி அடிப்படை டி. என். ஏயில் இருக்கும் விஷயம். ஐன்ஸ்டீனையும் உன்னையும் ஒரே ரூமில் வாழ்நாள் பூராக வைத்து படிப்பித்திருந்தாலும் நீ மொக்கைதான் போட்டிருப்பாய். அந்தாள் சார்புவிதியை கண்டுபிடித்துத்தான் இருக்கும். காரணம் டி.என்ஏ. நாப்பத்தாறு குரோசோம்கள்ல இருக்கிற மூன்று பில்லியன் சோடிகள். அங்கே எல்லாத்தையும் எழுதி வச்சிருக்கிறாங்கள். நீ இப்படியான சிட்டுவேஷனில இப்பிடித்தான் யோசிப்பாய். உணர்ச்சிமயமானவனா இல்லையா. யோசிக்கிற ஆற்றல் இருக்கா? இல்ல சும்மா மொக்கை போடுவியா? என்று எல்லாமே உய்த்தறியலாம். ஆயிரம் திருவள்ளுவரோ. அறுநூறு பாரதியோ எவன் வந்தாலும் வேலையில்லை. அவங்கள் சொல்லுறதை புரிந்துகொள்ளும் டி.என்.ஏ உனக்கு இல்லை எண்டால் எதையுமே மாற்ற ஏலாது. அதாலதான் மனிசனின்ட குணங்கள் அன்று தொடக்கம் இன்றுவரை மாறாமலேயே இருக்கு. திருக்குறள் கடையில பிஸினஸ் ஆகுது. அறிவு எல்லாம் சும்மா முகப்பூச்சு. பவுடர். பேசியல். அறிவு உனக்கு எல்லாமே புரிஞ்சுட்டுது எண்டு உன்னையும் மத்தவனையும் நம்பவைத்து கழுத்தறுக்கும். நல்லவன்மாதிரி நடிக்கச்சொல்லித்தரும். அதுவும் கொஞ்சநாள்தான். ரெண்டு நாள் பழகினா வண்டவாளம் தானா வெளியவரும்.
Like · Comment · January 28, 2015 ·

ஒரு பெண் பிள்ளை முன்னே வரும்போது, அவள் சட்டை இல்லாமல் இருந்தால் எப்படி இருக்கும் என்று நினைக்கிற புத்தி டி.என்.ஏ யில இருந்து வருவது. நீ படிச்சவன் எண்டால் வெளிய சொல்லாமல் அந்தப்பெண்ணுக்கு ஹாய் சொல்லுவாய். வளர்ப்பு சரியில்லையா, போய் அந்தப்பெண்ணோடு உரசுவாய். சமயத்தில் பலாத்காரமும் செய்வாய். நீ மனதிலேயே பலாத்காரம் செய்வியா இல்லை வெளியிலேயே செய்வியா என்பதை வேண்டுமென்றால் ஒரு அன்னை வளர்ப்பு தீர்மானிக்கும். ஆனால் நீ அந்தப்பெண்ணை பார்க்கும் பார்வையை, அந்தக்குணத்தை டி என். ஏ தான் தீர்மானிக்குது. பள்ளிக்கூடங்களில அறநெறி எல்லாம் சொல்லித்தாறதே வேஸ்டு. எல்லா வாத்தியையும் பொலிஸ்காரன் ஆக்கி ஒவ்வொரு வீட்டிலையும் மப்டியில போடோணும். பிறந்த உடனேயே டி.என்.ஏ டெஸ்ட் பண்ணி உன்னை எல்லாம் என்ன செய்யோணும் எண்டத முடிவு பண்ணோணும். அந்தகாலத்தில கெட்டவன் பிறந்தா நரி எல்லாம் ஊளையிடுமாம். அவனோட டி. என். ஏ சரியில்ல. ஆளைக்கொன்றுவிடு என்று சொல்லுக்கின்ற ஊளை. நரிகள்தான் பூமியின் முதலாவது ஜெனடிக் என்ஜினியர்ஸ். ஆனா நாங்கள் பிள்ளைப்பாசத்தில நரி எல்லாத்தையும் காட்டுக்க கலைச்சிட்டம். 
Like · Comment · January 28, 2015 ·

கேப்பையனாரை டி.என்.ஏ டெஸ்ட் பண்ணியிருந்தால், டெலிவரிக்கு முன்னாலேயே தாய்க்காரி அவனை அபோர்ட் பண்ணியிருக்கும். விமலினியும் கிழவியாகி இருக்காது.
Like · Comment · January 28, 2015 ·

மாட்டர் தங்கமா இருந்தா தேய்காட்டியும் ஒளிரும். பித்தளை தேச்சாதான் ஒளிரும்.
Like · Comment · January 28, 2015 ·

ஒரு கரித்துண்டை தேய்ச்சாலும் கரித்துண்டுதான். தேய்க்காட்டியும் கரித்துண்டுதான்.
Like · Comment · January 28, 2015 ·

அமுதவாயன் என்கின்ற நான் ஒரு கரித்துண்டு. உயர்திணையில் கரியன்.
Like · Comment · January 28, 2015 ·

கேப்பையினார் வெறும் சில்வர் பிளேட்டிங். தேச்சுப்பார்த்தால் உள்ளே வெறும் கறல் தகடுதான் தெரியும். அதையும் சுரண்டினால் எதுவுமே மிஞ்சாது.
Like · Comment · January 28, 2015 ·

விமலினி ஒரு விளக்கு. செழும்பு பிடிச்ச பித்தளை விளக்கு. சாமியறைத்தட்டில தினமும் எரிந்து எரிந்து எண்ணை படிந்து பிசுபிசுப்பால் மழுங்கி பச்சையம் பிடித்த பித்தளை. எல்லாமே அந்த கறல் பிடிச்சவன் செய்த வேலை. தங்கமாய் மின்னியவளை தேச்சு தேச்சு பித்தளை ஆக்கி இப்போ கரிக்கட்டை ஆக்கிட்டான்.
Like · Comment · January 28, 2015 ·

விமலினி என்ற செழும்பு பிடிச்ச விளக்கை, அடுப்புக்கரியை எரித்து அதன் சாம்பல் கொண்டு மினுக்கவேண்டும்.
Like · Comment · January 28, 2015 ·

கேப்பையினார் என்கின்ற கறல்தகட்டை வெட்டித்தாக்கவேண்டும். இல்லாவிட்டால் காலில் மிதிபட்டு ஏற்பு ஆக்கிவிடும்.
Like · Comment · January 28, 2015 ·

ஒருமாதிரி தெளிவாகக் குழம்பி முடித்தேன். இனி மாற்றமில்லை.
Like · Comment · January 28, 2015 ·

அவசரமாக வெளியே வந்து குமாருக்கு கோல் பண்ணினேன். “ஓர்டர் கான்சல்” என்றேன். குமார் இனி தேவையில்லை. பேசிவிட்டு என்னுடைய ஐபோனையே வெறித்துப்பார்த்துக்கொண்டிருந்தேன். புது ஐபோனின் அலுமினிய கவரும் கண்ணாடியும் சூரியஒளியில் பட்டு மின்னிக்கொண்டிருந்தது.
Like · Comment · January 28, 2015 ·

ஒரு நினைப்பு வந்து மீண்டும் விமலினியின் படங்களை லைக் பண்ண ஆரம்பித்திருந்தேன். பேஸ்புக்கில் அது பழைய படங்களாகவே இருந்தாலும் விமலினி அழகாகவே இருந்தாள். எனக்கு அந்த விமலினியே போதும். நான் ஏன் கேப்பையினாரை கொல்ல வந்தேன்? ரசியாவிலேயே இருந்திருக்கலாமே. அனஸ்தாசியாவும் பேஸ்புக்கும் கொண்டு வாழ்க்கையின் அத்தனை இச்சைகளையும் தீர்த்திருக்கலாமோ.
Like · Comment · January 28, 2015 ·

லைக் பண்ணிக்கொண்டிருந்ததில் ஹோர்ன் சத்தத்தை கவனிக்கவில்லை. நிமிர்ந்தேன். சிவப்பு நிற மாருதி. உள்ளே …. ஷிட்.
Like · Comment · January 28, 2015 ·

அவனேதான். கேப்பையினார் கேதீஸ். எவனுக்காக இவ்வளவுதூரம் வந்தேனோ, எவனை கொலை செய்யவேண்டும் என்று துடியாய் துடித்தேனோ. அவன் முன்னே காருக்குள் இருக்கிறான். மங்கலவிளக்குப்பயல். கறல் பிடிச்ச இரும்பு. கேப்பையினார் என்னை மட்டுக்கட்டவில்லை. மீண்டும் ஹோர்ன் அடித்தான். நான் அசையாமல் நின்றேன். மீண்டும் ஹோர்ன் அடித்தான். சிரித்தேன். கதவைத்திறந்து சிங்களத்தில் எதையோ திட்டிக்கொண்டு என்னை நெருங்கினான்.
Like · Comment · January 28, 2015 ·

நான் அமுதவாயன்!
Like · Comment · January 28, 2015 ·

கேப்பையினார் என்னை அந்த இடத்தில் எதிர்பார்க்கவில்லை.ஆடிப்போனான்.
Like · Comment · January 28, 2015 ·

கேப்பையினார் முகமெல்லாம் வெளிறிப்போய் நின்ற அந்தக்கணத்தை நான் எப்பிறப்பிலும் மறக்கமாட்டேன். யூ நோ. அப்பிடியே பேல் ஆகிப்போய்.
Like · Comment · January 28, 2015 ·

ஆயிரக்கணக்கான லைக்குகளோடும் ஜால்ராக்களோடும் என்னை பேஸ்புக் ஸ்டேடஸில் எதிர்கொண்டு நாறடித்தவன். என் முன்னே இப்போ நிராயுதபாணியாகி நாணிக்கோணி நிற்கும் சமயம் என்னை இராமனாக உணர்ந்தேன். கொல்லுவோமா? இல்லை கொஞ்சநேரம் விளையாடுவோமா? போயிட்டு நாளைக்கு வரப்போறியா மச்சி?
Like · Comment · January 28, 2015 ·

கேப்பையினார் சுதாரித்துக்கொண்டு என்னை சமாளிக்கப்பார்த்தான். எதுக்கு வந்தனி. உள்ளே வா. டீ குடிசசியா? ரசியாவில குளிர் எப்பிடி? .. இத்தியாதி .. இத்தியாதி. நானோ கேட்கும் மனநிலையில் இல்லை. “உன்னைக் கொல்லப்போகிறேன்” என்றேன். அவன் இரண்டடி பின் வாங்கினான். நான் சீரியசாகத்தான் பேசுகிறேன் என்பது புரிந்திருக்கவேண்டும்.
Like · Comment · January 28, 2015 ·

கெஞ்சத்தொடங்கினான். அந்த பேஸ்புக் ஸ்டேடசை டிலீட் பண்ணுவதாக சொன்னான். மன்னிப்பு கேட்பதாக சொன்னான். நான் உண்மையிலேயே ஒரு தமிழன்தான் என்று புதிதாக ஒரு ஸ்டேடஸ் போட்டு என்னை டாக் பண்ணுவதாக சொன்னான். நான் இதையெல்லாம் கேட்கும் மனநிலையில் இல்லை. கடைசியில் என் காலில் விழுந்தான்.
Like · Comment · January 28, 2015 ·

எப்போதுமே நம் காலடியில் ஒருத்தன் மிதிபட்டுக்கிடக்கும்போது கிடைக்கும் சந்தோசத்தை அனுபவித்திருக்கிறீர்களா? அவனை உதைக்கவும், அறுக்கவும், திருகவும் என்ன கொடுமைகளை செய்தாலும் நீதான் என் ராசா என்று காலிலேயே ஒருவன் கிடப்பான் பாருங்கள். அது கொடுக்கும் மகிழ்ச்சி அளவிலாதது. அவனை எவ்வளவு கேவலப்படுத்தினாலும் கேட்டுக்கொண்டேயிருப்பான். அவன் ஒரு திருடன் என்று சொல்லிப்பாருங்கள். புரூவ் பண்ணுவதற்காக திருடிவிட்டு வருவான். அவன் அப்பா உண்மையிலேயே அவனது இல்லை என்று சொல்லுங்கள். தகவலுக்கு நன்றி என்பான். அவனுக்கு கோபமே வராது. அவன் பெயரே அவனது இல்லை என்று நாம் சொல்லி வாய்மூட முன்னமேயே தனக்கு புதிதாக பெயரை வைத்துவிடுவான். வீட்டு நாய்கூட ஏறி மிதித்தால் கடித்துவிடும். மாடு முட்டவரும். சேவல் சிலிர்த்து நிற்கும். ஆனால் இவன் காலில் விழுந்து அழுதுகொண்டேயிருப்பான். அவன் அப்படி அழுவதைப் பார்க்க சந்தோசமாக இருக்கும். அழுவதில் அவனுக்கும் ஒரு சந்தோசம் கிடைக்கும். இது ஒரு புரிந்துணர்வுச் செயற்பாடு. நான் அடிவாங்கப் பிறந்தவன். நீ அடிக்கப்பிறந்தவன். நீ என்னை அடிடா. நான் அழோணும். எனக்கும் இன்னொருத்தன் கிடைப்பான். என் வன்மம் எல்லாவற்றையும் அவனில் காட்டுவேன். நீ கவலைப்படாமல் என்னை அடிடா.
Like · Comment · January 28, 2015 ·

தமிழர்கள் சிங்களவர்களை என்றைக்கும் புரிந்துகொள்ள முயன்றதில்லை. ஏன் சிங்களவன் நமக்கு அடிக்கிறான் என்ற உளவியல் விளங்கினால் பேசாமல் காலில் விழுந்து கெஞ்சிக்கொண்டேயிருப்போம்.
Like · Comment · January 28, 2015 ·

கேப்பையினார் தன்னுடைய இருப்புக்காக தன் இருப்பையே தொலைத்து நின்றான். வேடிக்கையாக இருந்தது. பேஸ்புக்கிலே அவன் சிங்களவன். நான் தமிழன். இங்கே நான் சிங்களவன். கேப்பையினார் தமிழன். கேப்பையினாரைப்பார்த்து சிரித்தேன். மச்சி ஒரு பாட்டுப்பாடுடா. அவன் முழுசினான். நான் பாடு பாடு என்று தொந்தரவு பண்ணினேன். அவன் அழுதுகொண்டே பாடினான்.
Like · Comment · January 28, 2015 ·

“அம்மான்னா சும்மா இல்லடா”
Like · Comment · January 28, 2015 ·

டேய் என்ன பாட்டு பாடுற? எண்ட அம்மா சிங்களம்டா. உண்ட அம்மா தமிழா இருந்தாலும் இது ஒரு நாடுடா. எல்லாருக்குமே ஒரே அம்மாதான். சிங்களத்தில பாடுடா. 
Like · Comment · January 28, 2015 ·

பாடிய கேப்பையினார் சிறிது தயங்கினான். நான் ஓங்கி அறையப்போனேன். மீண்டும் காலில் விழுந்து பாடத்தொடங்கினேன்.
Like · Comment · January 28, 2015 ·

“மாவ சரள டேயக நெவா”
Like · Comment · January 28, 2015 ·

எனக்கு சிங்களம் தெரியாது. ஆனாலும் அவன் அழுது அழுது பாடியதை ரசித்தேன். அவன் பெரும் இப்போது விசும்பி விசும்பி அழத்தொடங்கினான். அவன் பெரும் குரல் கொடுத்திருந்தால், உள்ளேயிருக்கும் விமலினி ஓடி வந்திருப்பாள். மட்டக்குளி கடைக்காரர் எல்லோரும் ஓடி வந்திருப்பார்கள். அவ்வளவு ஏன், அவன் திருப்பி அடிக்க வந்திருப்பானேயானால் நானே ஓடியிருப்பேன். என்ன காரணத்தாலோ அவன் நான் சொல்வதை எல்லாம் கேட்டான். எனக்கு சிரிப்பு சிரிப்பாக வந்தது. எதிரி என் காலில் விழுந்துகிடந்து, தன்னுடைய ஈகோவை எல்லாம் தொலைத்துவிட்டு அழுது புரண்டு நான் என்ன சொன்னாலும் செய்யும்போது எவ்வளவு சந்தோசமாக இருக்கிறது. கடவுள் இந்த சந்தொசத்துக்காகத்தானே உலகையே படைத்து பக்தர்களை உலாவ விட்டிருக்கிறார்.
Like · Comment · January 28, 2015 ·

விமலினி ஒரு கோழையை நீ கலியாணம் கட்டியிருக்கிறாய். இங்கே பார் விமலினி. இவனுக்கா உன்னுடைய கழுத்தை நீட்டினாய். உயிருக்காக அழுகிறான் விமலினி. வெறும் கோழைகளுக்காக உன் வாழ்க்கையை தொலைத்துவிட்டாயே. இவன் வேண்டாம் விமலினி.
Like · Comment · January 28, 2015 ·

அமுதவாயன் ....
Like · Comment · January 28, 2015 ·

ச்சிக். காந்தாரி சனியன் வந்திட்டுது..
Like · Comment · January 28, 2015 ·

“அமுதவாயன் நீ என்ன செய்துகொண்டிருக்கிறாய்? உன் மனநிலை மிகவும் குழம்பிப்போய்க்கிடக்கிறது. இங்கிருந்து போய்விடு. ஒரு சின்ன ஸ்டேடஸ் விவகாரம் இவ்வளவு கீழே உன்னை கொண்டுவந்துவிட்டதே”. காந்தாரி சொல்லிக்கொண்டே கேப்பையினாருக்கு கவர் எடுத்தாள். என்ன சொல்கிறாய் காந்தாரி? நான் கீழே இறங்கிவிட்டேனா? நான் எப்போதுமே கீழேதான் இருந்தேன் காந்தாரி. நீதான் என்னை மேலானவனாக நினைத்தாய். நான் ஒரு எளிய கடவுள் என்று முன்னமேயே சொல்லவில்லையா காந்தாரி? முதலில் வழியை விடு. எனக்கு வேண்டியது நீயல்ல. கேப்பையினாரே. “வேண்டாம் அமுதவாயன், நீ நல்லவன் … இது வேண்டாம்”. காந்தாரி என்னிடம் கெஞ்சினாள்.
Like · Comment · January 28, 2015 ·

நான் நல்லவனா காந்தாரி? அழுக்காறு அவா வெகுளி இன்னாச்சொல் என்று எல்லாவற்றையும் செய்து அதனை கூச்சமில்லாமல் வெளியிலும் சொல்லுகிறேன்.. நான் நல்லவனா காந்தாரி? உன்னைப்போல நாலுபேர் உள்ளவரைக்கும் இந்த உலகம் இருட்டாவே இருக்கும் காந்தாரி.
Like · Comment · January 28, 2015 ·

“இப்பிடி பேசுறதும் இந்த அமுதவாயன்தான்” என்றாள் அவள்.
Like · Comment · January 28, 2015 ·

அது கும்பகர்ணன் காந்தாரி. எனக்குள் இருக்கும் ஒரு சாப்பாட்டு ராமன். அவ்வப்போது எழுந்து சாப்பிட்டுவிட்டு தூங்கிடுவான். அவனை நான் நல்லவன் என்று உலகத்துக்கு காட்டுவதற்காக அவ்வப்போது பயன்படுத்துவேன். ஆனால் அவன் நானில்லை. நீ அங்காலே போ காந்தாரி. காந்தாரியை தள்ளி விழுத்திவிட்டேன்.
Like · Comment · January 28, 2015 ·

கேப்பையினார் குனிந்ததலை நிமிராமல் இன்னமும் அம்மே அம்மே என்று விசும்பிக்கொண்டே இருந்தான். சுற்றும் முற்றும் பார்த்தேன். வெளியே இருப்பவர்களுக்கு உள்ளே என்ன நடக்கிறது என்று தெரிய சந்தர்ப்பமில்லை. உள்ளே இருக்கும் விமலினிக்கும் இவன் வந்தது தெரிந்திருக்காது. குனிந்து தலையைக் காட்டுகிறான். சாட்சியமில்லை. சுவாரசியமில்லை. இதுவே சந்தர்ப்பம்.
Like · Comment · January 28, 2015 ·

வேண்டாம் அமுதவாயன். சொன்னாக்கேளு. காந்தாரி மறித்தாள். என்னை விடு காந்தாரி. இது எப்போதோ முடிந்த காரியம். அவனைக்கொல்ல விடு. காந்தாரி. தடுத்தாள். அவளை ஊதித்தள்ளிவிட்டு கேப்பையினாரை நெருங்கினேன். அவன் இன்னமுமே காலில் விழுந்தபடி விசும்பிக்கொண்டிருந்தான். தன்னை அப்படியே என்னிடம் சமர்ப்பித்திருந்தான். அமுதவாயன் ஆகிய நான் ஒரு எளிய கடவுள்.
Like · Comment · January 28, 2015 ·

சட். சட். சட்.
Like · Comment · January 28, 2015 ·

பிடரியில் ஐபோனால் மூன்றே மூன்று சாத்துத்தான் எனக்குத் தேவைப்பட்டது. இம்மீடியட் கொன்கசன். அசுமாத்தம் இல்லை. தூக்கி அதே மாருதிக்குள் இருத்தி பெல்ட் மாட்டினேன். கண் திறந்திருந்தான். எபிசொடிக் பக்கம் இன்னமும் வெள்ளம் பாயவில்லை. இயங்கிக்கொண்டிருந்தான். முகமெல்லாம் வியர்த்து விட்டேத்தியாக வெறித்ததுப் பார்த்தான். காரை ஸ்டார்ட் பண்ணி ஏ.ஸி போட்டேன். காந்தாரி அழுதாள். பின்னிருக்கையில் அமர்ந்திருந்து கேப்பையினாரை நிமிர்த்திப்பிடித்தாள்.
Like · Comment · January 28, 2015 ·

ரெண்டு செக்கன்கள் யோசித்தேன். கெப்பையினாரை பார்த்துக்கொள்ளும்படி காந்தாரியிடம் சொல்லிவிட்டு மீண்டும் அலுவலகத்துக்குள் நுழைந்தேன். நடந்தது எதுவுமே விமலினிக்கு தெரியாது. என்னைக்கண்டதும் “இன்னமும் அவர் வரவில்லை” என்றாள். வரும்வரையில் இங்கே வெயிட் பண்ணலாமா? என்று கேட்டேன். அவள் தயங்கினாள். “அவரை கோல் பண்ணிக் கேக்கிறீங்களா?” என்றேன். அவள் ரிசப்ஷனில் அமர்ந்து கேப்பையினாருக்கு டயல் பண்ணினாள். நான் அவளை வெறித்துப் பார்ப்பதை உணர்ந்து லப்டப்பை முன்னே வைத்து எனக்கு மறைப்பு போட்டாள்.
Like · Comment · January 28, 2015 ·

எனக்கு இப்போது அழுகை எட்டிப்பார்த்தது. அன்று பார்த்த விமலினி இவள் இல்லை. தலையில் உச்சி இல்லை. முடியில் சுருள் இல்லை. ஸ்ட்ரயிட் பண்ணி கக்கா கலரில் பிளீச் பண்ணியிருந்தாள். இவளுக்காக முதன்முதலில் எழுதிய காதல் கவிதை ஞாபகம் வந்தது.
Like · Comment · January 28, 2015 ·

விண்ணிலே ஒரு வெண்மதி. 

விமலினி நீஎந்தன் கண்மணி. 

நில்லடி நின்பதில் சொல்லடி.

கல்லடி தந்தாலும் நீயென் இல்லடி!
Like · Comment · January 28, 2015 ·

நான் எழுதிய முதல் சந்தக்கவிதை. அன்றைக்கே கிழித்துப்போட்டுவிட்டாள். இப்போது இவள் இருக்கும் நிலையில் அந்தக்கவிதையை நானே கொடுக்காமல் கிழித்துப்போட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது.
Like · Comment · January 28, 2015 ·

திருமதி விமலினி கேப்பையினார் கேதேஸின் லப்டப் மூஞ்சியைப் பார்ப்பதற்காக நான் எதற்கு விடியக்காலமை இப்பிடி சோபாவில் உட்கார்ந்திருக்கவேண்டும்?
Like · Comment · January 28, 2015 ·

என் சந்தோசம் கேப்பையினார் கேதீஸ். என்னை சுப்பீரியர் ஆக்கும் அடிமை. என் விளையாட்டுபொம்மை. அவன் காரிலே மயங்கிக்கிடக்கையில் இவளோடு எனக்கென்ன வேலை.?
Like · Comment · January 28, 2015 ·

விமலினியிடம் சொல்லாமலேயே எழுந்து வந்துவிட்டேன். ஜஸ்ட் லைக் தட் என விமலினியை விட்டுவிட்டேன். திரும்பிப்போன என்னை காருக்குள் கேப்பையினார் இன்னமும் வெறித்துப்பார்த்துக்கொண்டிருந்தான். கண்களுக்கு கீழே கண்ணீர் காய்ந்துபோய்க்கிடந்தது. காந்தாரியும் அழுதுகொண்டிருந்தாள். காரை ஸ்டார்ட் பண்ணினேன். இளையராஜா பாட்டுப்போனது. யாராரிரோ பாடியதாரோ, தூங்கிப்போனதாரோ? யேசுதாசொடு சேர்ந்துபாடித்தான் எவ்வளவு நாட்களாகிவிட்டன?
Like · Comment · January 28, 2015 ·

கார்க்கண்ணாடியில் அடிக்கடி கேப்பையினாரை பார்க்கும்போது பாவமாக இருந்தது. இவன் செய்த தவறுதான் என்ன?
Like · Comment · January 28, 2015 ·

பேஸ்புக்கில என்னோடு தனகினான். அது பெரிய தவறா? விமலினியை திருமணம் முடித்தான். நான் விமலினியை சிறுவயதில் காதலித்தேன். அது காதலா. வயசுபோய் விமலினி இப்படியெல்லாம் மாறுவாள் என்று தெரிந்திருந்தால் நான் அவளை காதலித்திருப்பேனா? அவள் குணத்துக்காகவா நான் காதலித்தேன். ம்ஹூம். சரியாக இரண்டு வார்த்தைகூட அவளோடு நான் பேசியதுகூட கிடையாது. அவள் குணம் எனக்கு எப்படி தெரியும். அது வெறும் இச்சை. அது அப்படியே மனதில் படிந்துவிட்டது. விமலினி எப்படி இருந்தால் எனக்கென்ன? ஹூ கேர்ஸ் நவ்?
Like · Comment · January 28, 2015 ·

சொல்லப்போனால் இவனைக்கொல்லவேண்டிய தேவையே இல்லை எனக்கு. ஆனால் கொன்றேயாகவேணும். இதுதான் என் கொள்கை என்று ஊருலகத்துக்கே அறிவித்தபிறகு கொள்கையிலிருந்து மாறினால் எப்படி? உயிரேபோனாலும் கொள்கையை மாற்றலாகாது. நல்லதோ கேட்டதோ, நாளைக்கு உலகம் என்னை கொள்கையிலே பிடியாய் இருந்து கொலையை செய்தான் என்று போற்றவேண்டாமா? பிரக்மட்டிசம் என்பதே சந்தர்ப்பவாதிகள் தமக்கு சாதகமாக பயன்படுத்தும் வார்த்தை. எதிலுமே உறுதியாக இரு. எதையுமே மாற்றாதே அமுதவாயா. அப்பிடியே பிடிச்ச பிள்ளையாராட்டம் இரு. யாரு என்ன சொன்னாலும் காத்து குடுத்து கேட்காதே. கொள்கையிலிருந்து தன்னை அடிக்கடி மாற்றிக்கொள்பவன் பச்சோந்தி.
Like · Comment · January 28, 2015 ·

அது சரி பச்சோந்தி தன் நிறத்தை அடிக்கடி மாற்றுவதில் என்ன தவறு கண்டீர்கள்?
Like · Comment · January 28, 2015 ·

மட்டக்குளி லொட்ஜிலே காரைப்பார்க் பண்ணிவிட்டு கேப்பையினாரை மேலே அழைத்துச்செல்வதில் அவ்வளவு சிக்கல் வரவில்லை. அவன் நன்றாகவே ஒத்துழைத்தான். வெறும் கொன்கசன்தான். அவனுடைய ஆழ்மனது எபிஸோடிக் நினைவுகள் அவனை இயக்கிக்கொண்டிருக்கின்றன. ஆனால் நிலைமையை உய்த்தறியும் பக்குவம் மட்டும் கொஞ்சம் கலங்கியிருக்கிறது. சொல்வதை தட்டாமல் கேட்டான். படியைக்கண்டால் ஏறினான். கதவைக்கண்டால் திறந்தான். விமலினியை போய் கொன்றுவிட்டு வா என்றால் செய்வான்போல் இருந்தான். கொஞ்சநேரம்தான். இன்னமும் அரை மணிநேரத்தில் எழுந்துவிடுவான்.
Like · Comment · January 28, 2015 ·

கேப்பையினாரை கட்டிலில் படுக்கவைத்தேன். தண்ணீர் தெளித்தேன். புதிதாக ஒரு சிங்களப்பாட்டு ஒன்றை முணுமுணுத்தான்.
Like · Comment · January 28, 2015 ·

படாங். திடீறேன்று என் பின் மண்டையில் யாரோ அடித்தார்கள். மண்டை கலங்கியது. திரும்பிப்பார்த்தேன்.
Like · Comment · January 28, 2015 ·

காந்தாரி. கையில் நேற்றிரவு நான் சாப்பிட்ட சில்வர்தட்டு அவள் கையில் இருந்தது. நீயா என்னை அடித்தாய் காந்தாரி? என்னை அடிக்க உனக்கு எப்படி மனம் வந்தது காந்தாரி? என்னைக்கொன்றால் நீ ஊரில் இனி ஆரைத்திருத்துவாய் காந்தாரி? நான் சிரித்தேன். நிறைய விஷமத்தோடு சிரித்தேன். காந்தாரி பின் வாங்கவில்லை. மீண்டும் ஓங்கிக்கொண்டு அடிக்கவந்தாள். பாவம் கண் கட்டுக்குள்ளால் என்னை சரியாக கவனிக்கவில்லை. நான் விலக அடி கேப்பையினாரின் மண்டையிலேயே பட்டது.
Like · Comment · January 28, 2015 ·

“மாவ சரள டேயக நெவா..” கேப்பையினார் விழுந்த அடியில் தன்னியக்கமாகவே பாடத்தொடங்கினான். இப்போது பாட்டு அவனுடைய எபிசோடிக் மேமரிக்குள் போய்விட்டது. இப்படியே விட்டால் இவனின் இரண்டாவது தலைமுறையின் ஜீனில் இந்த அடிமைத்தனம் உறைந்துவிடும். விடலாகாது.
Like · Comment · January 28, 2015 ·

காந்தாரி மீண்டும் அடிக்க வந்தாள். முதலில் இவளை ஒரு வழிப்பண்ண வேண்டும். அவள் கையிலிருந்த சாப்பாட்டுத்தட்டை பிடுங்கி படார் என்று ஒரு போடுபோட்டேன். தன் பிரேதத்தையும் இழுத்துக்கொண்டு ஓடிவிட்டாள். பயந்தாங்கொள்ளி. பெரிய லோ கதைத்தாள். ஒரு அடியோடு ஓடிவிட்டாள். நீ எல்லாம் எதுக்கு எனக்கு அட்வைஸ் பண்ண வருகிறாய் காந்தாரி. போய்ச்சேரு. உனக்கு மொத்தமாகவே பாய் சொல்கிறேன் காந்தாரி. 
Like · Comment · January 28, 2015 ·

#RIP காந்தாரி திருஷ்டி.
Like · Comment · January 28, 2015 ·

கையில் இருந்த சாப்பாட்டுக்கோப்பையை அப்போதுதான் கவனித்தேன். நேற்று சாப்பிட்டுவிட்டு கழுவி வைக்கவில்லை. பாத்ரூமில் போய் நன்றாக தேய்த்துக்கழுவினேன். பழைய சில்வர். மங்கிப்போன சில்வர். தேய்க்க தேய்க்க மாறவேயில்லை. அப்போதுதான் பாத்ரூம் தட்டில் இருந்த பழைய கறல் பிடித்த பிளேடைப்பார்த்தேன். கறல் பிடித்த பிளேட். அந்த தருணம் வந்துவிட்டது. நரி ஊளை இடும் கணம்.
Like · Comment · January 28, 2015 ·

கேப்பையினார் இன்னமும் ஏதோ அரற்றிக்கொண்டிருந்தான். அவன் அருகில் வந்தேன். நன்றாக கவனித்தேன். அவர் ஏதோ புலம்பிக்கொண்டிருந்தான். கழுத்து நரம்புகள் புடைத்து புடைத்து அமைதியாயின. கனவில் அவன் என்னைக் கொன்றுகொண்டிருக்கலாம். எனக்கு அது அவசியமில்லை. அந்த நரம்பில் கை வைத்தால் என்ன?
Like · Comment · January 28, 2015 ·

என் மடியில் கேப்பையினாரின் தலையை வைத்தேன். லைப் ஒப் பையில் அந்த புலியை மடியில் வைத்திருப்பானே ஹீரோ. அப்படி. நான் கடவுள். நீதான் அந்தப் புலி கேப்பையினார். இது திக்குத்தெரியாத கடல். உன்னைக் கரை சேர்க்கப்போகிறேன் கேப்பையினார். கறல் பிடித்த பிளேடை எடுத்தேன். ஒரே இழுவை.
Like · Comment · January 28, 2015 ·

சரக்.....
Like · Comment · January 28, 2015 ·

புலி படகால் பாய்ந்து என்னையும் கடந்து ஓடியது. காட்டுக்கருகே சென்று சற்றே தாமதித்தது.
Like · Comment · January 28, 2015 ·

திரும்பிப்பாரு கேப்பையினார். ஒரே ஒருக்கா. ப்ளீஸ். ஒரு குட்பாய் சொல்லிவிட்டாவது போ. உன்னை விடுவித்தமைக்கு நன்றி சொல்லு. கேதீஸ். நீதான் என்னை இதுவரையும் இயக்கினாய் கேதீஸ். உனக்கு ஒரு வணக்கம் சொல்லக்கூட எனக்கு அருகதை கொடுக்கமாட்டாயா. திரும்பி ஒரு சின்ன சிரிப்பாவது சிரித்துவிட்டு போ கேதீஸ். அப்படி சொல்லாமல் கொல்லாமல் போய்விடாதே.  புலி தயங்கியது.
Like · Comment · January 28, 2015 ·

கேப்பையினார் கேதீஸ் திரும்பிப்பார்க்காமல் ஓடிவிட்டான். ஜஸ்ட் லைக் தட்... ஓடிவிட்டான். நான் விமலினியை விட்டு ஓடி வந்ததுபோல, காந்தாரி என்னைவிட்டு ஓடியது போல, கேப்பையினாரும் ஓடிவிட்டான். நான் அழத்தொடங்கினேன். உயிரோடு இருக்கும்போதுதான் உனக்கு நன்றியில்லை. செத்தும் நீ எனக்கு நன்றி காட்டவில்லையே. பாவி. பாவி. உன்னைக்கொன்று நான் பாவம் தேடினேனே. அழுதுகொண்டே எழுதினேன்.
Like · Comment · January 28, 2015 ·

#RIP கேப்பையினார் கேதீஸ்
Like · Comment · January 28, 2015 ·

என்னை வாசித்து முடித்துவிட்டாயா காந்தாரி? நீ என்னை விட்டு ஓடினாலும், நான் உன்னை அடித்தாலும், நீ என்னை அடித்தாலும் உன்னை விட்டால் நானில்லை காந்தாரி. கும்பகர்ணனும் இறந்துவிட்டான் காந்தாரி. எனக்கு யாருமே இப்போ இல்லை காந்தாரி. விமலினி எனக்கு வேண்டாம். அவள் வெறும் பிரமை. கனவு. நீதான் நிஜம் காந்தாரி. நீ என்னைத்தேடி வருவாயா காந்தாரி. வேண்டாம். நானே உன்னிடம் வருகிறேன் காந்தாரி. உன் காலில் விழுந்து அழுது தீர்க்கிறேன். அப்போதாவது என்னை புரிந்துகொள்வாயா காந்தாரி. கடவுள்களை புரிந்துகொள்வது கடினம் காந்தாரி. ஏனெனில் கடவுள் மனிதன் கிடையாது. நானே கடவுள். நானே அந்த கிருஷ்ணன். தவறுகளும் நானே. தண்டனையும் நானே. கண்ணனுக்கே பாவம் தந்த பாவம் எங்கு போகுமென்றோ என்றாயே. அந்தப்பாவம் உன்னிடமே திரும்பிவரும் காந்தாரி. காரணம் நீயே கண்ணன். நீயே கர்ணன். நீயே அம்பு. நீயே வில்லு. நீயும் நானும் வேறல்ல. புரிகிறதா காந்தாரி. என்னைத்தேடிவந்து என்னை மடியில் சாய்த்து அழுவாயா காந்தாரி. குந்திமாதா செய்யாததை நீ செய்வாயா? யசோதா அம்மா செய்யாததை நீ செய்வாயா? விமலினி செய்யாததை நீ செய்வாயா? தேவகி செய்யாததை நீ செய்வாயா? காந்தாரி. என்னருகே வா காந்தாரி. ப்ளீஸ். உன் உடலையும் இழுத்துக்கொண்டு ஓடினாயே காந்தாரி. என்னையும் இழுத்துக்கொண்டு ஓடு. ப்ளீஸ்.”
Like · Comment · February 14, 2015 ·

என் நிலையைப்பாரு காந்தாரி. என் தலையை நானே என் மடியிலே கிடத்தி அழுகின்ற அவலத்தைப் பார்த்தாயா காந்தாரி? கழுத்து நோகிறது காந்தாரி. என்னைக்கொன்றுவிடு. இந்தக்கடவுளுக்கு முக்தி கொடு. 
Like · Comment · February 14, 2015 ·

இதுவரையும் இந்த உலகமே பயன்படுத்தாத ஆயுதத்தை நான் பயன்படுத்தி என்னைக் கொன்றுவிடு காந்தாரி. அந்த ஆயுதத்தைக் கண்டு உலகமே வியக்கட்டும். இது செய்தியாகட்டும். என் மரணம் தலைப்புச்செய்தியாகட்டும். பேஸ்புக் ஷெயாருகளையும் லைக்குகளையும் அள்ளட்டும். கொன்றுவிடு. வா காந்தாரி. வா. ... ஆ ... 
Like · Comment · February 14, 2015 ·

Contact form