Skip to main content

Posts

Showing posts with the label கட்டுரை

நண்பர்கள் மற்றும் பிறர்

சென்றவாரம் எனக்கொரு தொலைப்பேசி அழைப்பு வந்தது. புதிய இலக்கம்.  “தம்பி நான் மகாலிங்கம் கதைக்கிறன். உங்கட அப்பாண்ட பழைய பிரண்ட். ஒஸ்ரேலியால வந்து நிக்கிறன் … அவரோட கதைக்கலாமா?” அப்பாவிடம் போனைக் கொடுத்தேன். அப்பாவும் அந்த மகாலிங்கம் அங்கிளும் பேச ஆரம்பித்தார்கள். தியத்தலாவை, நொச்சியாகமை, குமரப்பெருமாள் அண்ணன், சேர்வெயிங் டிபார்ட்மெண்ட், ரெமி மார்டின், பெர்ணாண்டோ, எச்.என்.பெரேய்ரா, டோஹா, பாரெயின், தியோடலைட், டோடல் ஸ்டேசன், ஶ்ரீகரன், ஒரேட்டர் சுப்ரமணியம் என்று பொதுவாகவே இரண்டு நில அளவையாளர்கள் பேசிக்கொள்ளும்போது அடிபடும் சொற்கள் மீண்டும் கேட்டன. அவர்கள் சொல்லிக்கொண்ட பெயர்களில் பலர் இப்போது உயிரோடு இல்லை. அந்த நில அளவை உபகரணங்களும் பாவனையில் இல்லை. கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் பேசினார்கள். பேசிமுடியும்போது அப்பா மகாலிங்கம் அங்கிளுக்கு வீட்டின் முகவரியைக் கொடுத்தார். அவ்வளவுதான். இனி ஒரு வார இறுதியில் மகாலிங்கத்தாரின் மகனோ மகளோ காலையில் கொண்டுவந்து அவரை இறக்கிவிட்டுப்போனால் இரவு உணவு முடிந்து பத்துப் பதினொரு மணிவரைக்கும் அவர்களிருவரும் பேசிக்கொண்டிருப்பார்கள். அம்மா அப்...

ஒரு காண்டாமிருகத்தைப்போல

"This is a bondage, a baited hook. There's little happiness here, next to no satisfaction, all the more suffering & pain." Knowing this, circumspect, wander alone like a rhinoceros.” "இது ஒரு கட்டு, இரையுள்ள தூண்டில். இங்கு இன்பம் குறைவு, கொஞ்சமும் திருப்தி இல்லை, துக்கமும் துன்பமுமே அதிகம்." இதை அறிந்து, எச்சரிக்கையோடு இருந்து தனித்து நடமாடு காண்டாமிருகத்தைப் போல.” கடந்துபோன இரண்டாயிரத்துப் பதினெட்டு சற்று விசித்திரமான ஒரு ஆண்டு. எதிலுமே பிடித்தமில்லாமல், எவற்றிலுமே நம்பிக்கை கொள்ளாமல் எல்லாவற்றிலுமிருந்து விடுபட்ட மனநிலை மேலோங்கியிருந்த ஆண்டு இது. என் தொலைப்பேசி முழுதும் தவறவிடப்பட்ட அழைப்புகள் நிறைந்திருந்த வருடம். தகவல் பெட்டிகளும் மின்மடல்களும் வாசிக்கப்படாமல் முடங்கியிருந்த காலம். வாசிப்பில் பிடித்தம் அருகிக்கொண்டு வந்ததும் எழுதும் எழுத்தை வெளியிடும் ஆர்வம் குறைந்ததும் இதே காலப்பகுதியில்தான். சமூக வலைத்தளங்கள் மீதான வெறுப்பும் மேலோங்க ஆரம்பித்ததும் அப்போதுதான். மனிதர்களின் போலித்தனங்கள் மேலும் மேலும் பட்டவர்த்தன...

அயல்

நேற்று வீடு கூட்டிக்கொண்டிருக்கும்போது துணைக்குப் ப்ளே லிஸ்ட் ஒன்றைக் கொஞ்சம் சத்தமாகவே ஒலிக்கவிட்டிருந்தேன். ‘நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ’. கூடவே சேர்ந்து பாடியபடி. கூட்டிக் குவித்து குப்பையை அள்ளி வெளியே தொட்டியில் போட்டுவிட்டுத் திரும்பும்போது, பின்கதவை இழுத்துச்சாத்த மறந்துவிட்டேன். அடுத்து ‘திமு திமு தீம் தீம்’ ஒலித்தது. அதன் இதமான தாளத்திற்கேற்ப தும்புத்தடி மெதுவாகவே கூட்டிக்கொண்டிருந்தது. பாட்டு முடியும்போது வாசல் மணி அடித்தது. முதலும் பல தடவைகள் அடித்திருக்கவேண்டும். எனக்கு அப்போதுதான் கேட்டது. போய்த்திறந்தேன்.  பக்கத்துவீட்டு மனிசி. முறைத்துக்கொண்டு நின்றது. இத்தாலிக்காரி. 

குஷி

நேற்றிரவு கீர்த்தி யாழ்ப்பாணத்திலிருந்து அழைப்பு எடுத்தான். அவனோடு பேசிக் கனகாலம். ஏண்டா பேஸ்புக்குக்கு இப்போதெல்லாம் வருவதில்லை என்று கேட்டேன். ‘அது அலுப்படிக்குது, ஆனால் டுவிட்டர் சூடாகப்போகுது’ என்றான். பிக் பாஸ் ஆரம்பித்துவிட்டது. தான் இம்முறை ‘மும்தாஜ் ஆர்மி’ என்று சொன்னான். ஏன் என்று கேட்டதற்கு,  ‘ஏண்டா மறந்துட்டியா, குஷி வந்த மூட்டம் மாஸ்டரிட்ட மோர்னிங் ஷோ இல்லை எண்டு கல்வியங்காட்டு மினி சினிமால போய்ப்பார்த்தோமே’ பதிலுக்கு நான்,  ‘இல்ல மச்சான் நான் அண்டைக்கு சிவால மோர்னிங் ஷோவே பாத்திட்டன்’ சிவா அதிகம் பேசப்படாத, ஆனால் ஈழ சினிமா உலகத்தின் மிக முக்கிய திரையரங்குகளில் ஒன்று. ‘ஜீன்ஸ்’, ‘ஆசைத்தம்பி’, ‘சுயம்வரம்’ போன்ற உலக சினிமாக்களை அங்கேதான் நான் பார்த்தேன். வைத்தீஸ்வராக்கு அருகில் இருந்தது. உள்ளே மின்விசிறி ஒழுங்காக வேலை செய்யாது. ஆரேனும் சிகரட் ஊதினால்தான் அங்கே காத்துவரும். இப்போது யோசித்துப்பார்க்கையில் ஒவ்வொரு பிரபல பாடசாலைகளுக்கும் அருகே ஒவ்வொரு மினிசினிமா இருந்திருக்கிறதுபோலத் தெரிகிறது. திட்டமிட்டு செய்தார்களா தெரியவில்லை. 

உலகப் பழமொழிகள்

மொழிபெயர்ப்புகளில் கீதா மதிவாணன் அக்காவுக்கு எப்போதுமே தனியிடம் உண்டு. நிறைய அவுஸ்திரேலிய படைப்புகளை அவர் மொழிபெயர்த்திருக்கிறார். அண்மைக்காலங்களில் அவர் பல்வேறு சமூகங்களில் வழக்கத்திலுள்ள் பழமொழிகளைத் தமிழ்ப்படுத்தித் தந்துகொண்டிருக்கிறார். மூலம் சிதறாமலும் அதே சமயம் மொழிபெயர்ப்பு என்று தெரியாதவண்ணமும் அவை மிக இயல்பாக இருக்கின்றன. உதாரணத்துக்கு சில. முட்டாள்கள் சந்தைக்குப் போகாவிடில் மோசமானவை எல்லாம் எப்படி விற்பனையாகும்? - ஸ்பெயின் கழுதையிடம் பூக்களை முகர்ந்துபார் என்று நீட்டினால் அது தின்றுவிடும். - ஆர்மீனியா சேவலைத் தலைவனாய்க் கொண்டு நடந்தால் கோழிப்பண்ணைக்குத்தான் வழி நடத்தப்படுவாய். - லெபனான் பட்டப்பகலை அரசன் இரவென்று சொன்னால், அதோ நட்சத்திரங்கள் என்று சொல். - அரேபியா உலகம் முழுதுமே மனிதர்களும் குணங்களும் ஒரேமாதிரியாகவே இருந்திருக்கின்றன என்பது இவற்றை வாசிக்கும்போது மீளவும் உறுதிப்படுத்தப்படும். மிக எளிமையான இவ்வகை பழமொழிகளை நம் தமிழ்போட்டிகளில் பயன்படுத்தக்கொடுக்கலாம். மாணவர்களிடம் இவற்றின் ஆங்கில வடிவத்தைச் சொல்லி தமிழில் மொழிபெயர்க்குமாறு கேட்கலாம். கீதா அக...

விருந்து

ஶ்ரீயும் நிர்மாவும் ஒன்றாகப் படகில் அவுஸ்திரேலியா வந்தவர்கள். கிட்டத்தட்ட ஆறரை வருடங்களாக அவர்கள் புரோட்மெடோஸில் இருந்த தடுப்பு முகாமில்அடைத்து வைக்கப்பட்டிருந்தார்கள். வெளியில் விட்டபின்னரும் அவர்களுக்கு இங்கே ஒழுங்கான ஒரு வேலை கிடைக்கவில்லை. ஒரு வழியாக உதவிநிறுவனம் ஒன்றினூடாக அவர்கள் ‘விருந்து’ என்கின்ற ஒருநாள் உணவகத்தை ஆரம்பிக்கிறார்கள். நான்கு மாதங்களின் பின்னர் நிரோவும் தடுப்புமுகாமிலிருந்து வெளியே வருகிறார். பின்னர் நியேதனும் முகாமிலிருந்து வெளியேறி இவர்களோடு இணைகிறார். இப்போது உணவகம் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி என்று நான்கு நாள்களும் நடைபெறுகிறது.

யாரு நீங்க?

கண்ணா என் பேரு ரஜினிகாந்த். எனக்கு இன்னொரு பேரும் இருக்கு (ரசிகர்கள் பாஷா பாஷா என்று அலறுகிறார்கள்). ஏய், சும்மா இருக்கமாட்டீங்களா?  தம்பி மன்னிச்சுக்குங்க. என் பேரு ரஜினிகாந்த். என் இன்னொரு பேரு சிவாஜிராவ். நான் ஒரு நடிகனுங்க. முள்ளும் மலரும், தில்லுமுல்லு, தளபதி, பாஷா இப்பிடி சில படங்கள் பண்ணியிருக்கேன். இப்போ காலான்னு ஒரு படம் ரிலீஸ் ஆகப்போகுதுன்னு நினைக்கிறேன். 2.0 ன்னு ஒரு படத்தில சிக்கி சின்னாபின்னமாகிட்டிருக்கேன். அடுத்ததா கார்த்திக் சுப்புராஜு படமும் இருக்கு. அது பேய்ப்படமா பேசும்படமா என்னன்னே புரியமாட்டேங்குது. சரி அதை விடுங்க.

மனிசர் கொலையுண்டார்

“கல்லொன்று வீழ்ந்து  கழுத்தொன்று வெட்டுண்டு  பல்லோடு உதடுபறந்து சிதறுண்டு  சில்லென்று செந்நீர் தெறிந்து  நிலம் சிவந்து  மல் லொன்று நேர்ந்து  மனிசர் கொலையுண்டார்”  — தேரும் திங்களும், மஹாகவி உருத்திரமூர்த்தி  மே மாதம் என்பதே அயர்ச்சியும் கழிவிரக்கமும் இயலாமையும் நிரம்பியிருக்கும் மாதம்தான். எதை வாசித்தாலும் எதை எழுதினாலும் எதை நினைந்தாலும் அவை எல்லாம் வெறும் அபத்தத்தின் மறுவடிவங்கள் என்ற எண்ணமே இக்காலத்தில் மேலோங்குகிறது. ‘மனிசர் கொலையுண்டார்’ என்ற வார்த்தைகள் அர்த்தப்படும் நாள்கள் இவை. மஹாகவி சொல்லும் அந்த ‘கொலையுண்ட மனுசர்’ யார் என்று யோசிக்கிறேன். வீழ்ந்துபட்டவர்களை அது குறிக்கவில்லை. மாறாக வீழ்த்தியவர்களையும் மனுசர் வீழும்போது பார்த்துக்கொண்டு வெறும்வாய் மெல்லுபவர்களையும்தான் அது குறிக்கிறது. அதிகாரத்தைவிட அதிகாரத்துக்கு எதிராக வாளாவிருப்போர்தான் ஆபத்தானவர்கள். அவர்களே அதிகாரத்துக்கான உரத்தைக்கொடுப்பவர்கள். அவர்கள் இருக்கும் நம்பிக்கையில்தான் அதிகாரம் மேலும் கிளை பரப்பி விரிகிறது. அவர்கள் வேறு யாருமிலர். நானும் எ...

பூமியை அழகாக்குபவர்கள்

இன்றைக்கு மெல்பேர்ன் அநியாயத்துக்குக் குளிர்ந்தது. வழமையாக ஐந்து மணிக்கு அடிக்கும் அலாரம் நடுச்சாமம் மூன்று மணிக்கே அடித்ததுபோல உணர்ந்தேன். குறண்டிக்கொண்டு தூங்கியதில் ஐந்தாவது தடவை ஸ்னூஸ் பண்ணும்போது நேரம் ஆறே கால் ஆகிவிட்டிருந்தது. அரக்கப்பறக்க எழுந்து, கம்பளியைச் சுற்றிக்கட்டிக்கொண்டு தேநீர் ஊற்றலாம் என்று குசினிக்குப்போனால், தேநீர் பைகள் தீர்ந்திருந்தன. மச்சான் ஒருவர் ஊரிலிருந்து வரும்போது கொண்டுவந்திருந்த தேயிலைத்தூள் பக்கற் ஞாபகம் வர, வடியையும் தேடி எடுத்து, ஒருமாதிரித் தட்டித்தடவி தேநீரையும் ஊற்றி முடிக்க நேரம் ஏழு மணி ஆகிவிட்டிருந்தது. கொஞ்சநேரம் எதையாவது வாசிக்கலாம் என்று உட்கார்ந்தால் மனம் ஒருபட்ட நிலையில் இருக்கமாட்டேன் என்று அடம்பிடித்தது. மனைவியும் தமிழ் பள்ளிக்குச் சென்றுவிடுவார். வீட்டில் இருந்தால் வேலைக்காகாது என்று ஒன்பது மணிக்கு அருகிலிருக்கும் கஃபே ஒன்றுக்கு வந்தேன். ஒரு பெரிய கப்புசீனோவை ஓர்டர் கொடுத்துவிட்டு சோஃபா ஒன்றினுள் புதைந்திருந்து கணினியை வெளியில் எடுத்தேன். சிறுகதை ஒன்று தொங்கிக்கொண்டிருந்தது. முடிக்கவேண்டும். இரண்டு வரிகள் எழுதி முடித்திருக்கமாட்ட...

உடல்களின் துயர்

மரணவீடுகளுக்கு துக்கம் பகிரச்செல்வது என்பது மிகச்சங்கடமானது. நுழையும்போதே அந்த வீட்டுக்காரர்களஒ எப்படி எதிர்கொள்வது என்று மனம் பதைபதைக்க ஆரம்பித்துவிடும். அனேகமான சந்தர்ப்பங்களில் இறந்தவர் நமக்கு அதிகம் பரிச்சயமானவராக இருந்திருக்கமாட்டார். சமயத்தில் அவரை நாம் நேரில் சந்தித்திருக்கவே மாட்டோம். தெரிந்தவரின் தந்தையோ, தாயோ, தாத்தாவோ, பாட்டியோ. முகத்தை எப்படி வைத்திருப்பது? எப்போதும் சந்திப்புகளின்போது முதலில் புன்னகைத்தே பழக்கப்பட்டிருக்கும் நம் முகம் அங்கும் நம் அனுமதியைக் கேளாமல் அதையே பதிவு செய்யத் தலைப்படும். எப்படி அதைத் தவிர்ப்பது? அல்லது தவிர்க்கத்தான்வேண்டுமா? நம்மைக் கண்டதும் நண்பரோ, உறவினரோ அழும் பட்சத்தில் அதை எப்படி எதிர்கொள்வது? பதிலுக்கு நாமும் அழுவது என்பது அபத்தம். வலுக்கட்டாயமாக, இல்லாத சோகத்தை வரவழைப்பதும் போலித்தனமே. இந்தச் சூழலை எப்படி நேர்மையுடன் சமாளிப்பது? 

புலம் (பெயர்) பொதுமைப்படுத்தல்கள்

“புலம்பெயர் தமிழர்கள் நடைமுறைச்சாத்தியமில்லாத தமிழீழத்துக்கான தீர்வையும் தேவையேயில்லாத தேசியத்தையும் கள நிலவரங்கள் தெரியாமல் உளறிக்கொண்டிருக்கிறார்கள்” சமீப காலங்களில் இப்படியான அல்லது இந்தக்கருத்து சார்ந்த பலகருத்து நிலைகளைக் காணமுடிகிறது. என்னுடைய கேள்வி நடைமுறைச்சாத்தியங்கள் சம்பந்தப்பட்டவை அல்ல. நடைமுறைகள் என்றாலே அது காலத்துக்காலம் மாறுபவை அல்லது மாற்றப்படுபவைதான். அப்போது சாத்தியங்களும் மாறும். அதல்ல விசயம். விசயம் இதுதான்.

கடற் கோட்டை - கிண்டிலில்

செங்கை ஆழியானின் நூல்களை அமேசன் கிண்டிலில் கொண்டுவரும் முயற்சியை நண்பர் தாருகாசினி ஆரம்பித்திருக்கிறார். முதல் நூலாக “கடற் கோட்டை” வெளிவந்திருக்கிறது. தாருகாசினி முறையாக செங்கை ஆழியான் குடும்பத்தோடு காப்புரிமை ஒப்பந்தத்தைச் செய்து இதனை ஆரம்பித்திருக்கிறார். கிண்டிலில் நூல்களை வாசிக்கும் பழக்கம் இன்னமும் நம்மத்தியில் பெரிதாக இல்லை. இந்த சந்தை மிகக் குறுகியது. இப்போதைக்கு உழைப்புக்குப் பலன் கிடைப்பது சந்தேகமே. ஆனால் கிண்டிலில் இருப்பது நீண்ட காலத்துக்குப் பயனளிக்கக்கூடியது. பலர் இப்போதெல்லாம் சப்ஸ்கிரிப்சன் முறையில் கிண்டில் நூல்களை வாசிக்கிறார்கள். அப்போது செங்கை ஆழியான் அறிமுகமற்ற பலரையும் சென்றடையும் சந்தர்ப்பங்கள் அதிகம். காலப்போக்கில் இது இடம்பெறும். தாருகாசினி ஒரு கர்மவீரர்போல சலிப்படையாது தான் எடுத்துக்கொண்ட தன்முயற்சியைத் தொடருமாறு கேட்டுக்கொள்கிறேன். வற்றா நதி, வாடைக்காற்று, குவேனி என்று ஒரு பெரிய லிஸ்டே இருக்கிறது. அடுத்த நூலுக்கான என்னுடைய பரிந்துரை “24 மணி நேரம்”. “கடற் கோட்டை” கிண்டில் விலை இரண்டு டொலர்கள். இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னர் ஒரு பேச்சுப...

சொல்லவேண்டிய கதைகள்

எழுத்தாளரும் பத்திரிகையாளருமான லெ. முருகபூபதி எழுதிய “சொல்லவேண்டிய கதைகள்” என்கின்ற நூலின் வெளியீட்டு நிகழ்வு வரும் சனிக்கிழமை மாலை இடம்பெற இருக்கிறது. முருகபூபதி நிறைய அனுபவங்களைச் சுமந்து திரிபவர். அவர் அவற்றைச் சொல்லும்போது ஒருவித பத்திரிகைத் துணுக்குத்தனம் தொனிக்கும். பெரும்பாலும் புனைவு கலக்காமல், முன்முடிபுகள் சேர்க்காமல் செய்தியாகவே அனுபவங்களை முருகபூபதி சொல்வார். ஒரு அனுபவத்தைப் பகிரும்போது மூலச் செய்தி என்று ஒன்று இருக்குமல்லவா? ஏனைய விடயங்கள் எல்லாம் அந்த மூலச் செய்தியைச் சுற்றி, அல்லது அதனை நோக்கியே நகருவதுண்டு. ஆனால் முருகபூபதியின் அனுபவப்பகிர்வுகள் அப்படியானவை அல்ல. செய்தியின் மூலம் என்பது அவருக்கு எந்நேரமும் நகர்ந்துகொண்டே இருக்கும். அல்லது பல மூலங்களின் வழியே செய்தி கடத்தப்படும். அல்லது ஒரே மாட்டை முருகபூபதி பல மரங்களில் கட்டிவிட்டுப் பல மரங்களைப்பற்றிப் பேசுவார். மாடும் அவ்வப்போது வந்து வந்து போகும். இதன் சிறப்பு என்னவென்றால், அவரே அறியாமல், உணராமல் பல பொக்கிசங்கள் அவர் பேச்சின்வழி வந்து வீழும். அதற்காகவே அவரின் கதைகளை நான் குறுக்கிடாமல் தொடர்ந்து கேட்பதுண்டு.

மச்சாங்

“ஐ,நா கோஷ்டியோடு சங்கமித்து ரோகிங்கியா மக்களுக்கு ஆதரவு தெரிவிப்பவர்களுக்கு ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். இதே ஐநா கூட்டம்தான் இலங்கைக்கு எதிராகவும் “fake news” பிரச்சாரத்தை, நாம் தீவிரவாதத்தை முறியடித்துக்கொண்டிருக்கையில் நமக்கெதிராகக் கையாண்டது. நான் அந்த மக்கள் கொல்லப்படவில்லை என்று சொல்லவில்லை. ஆனால் எதையும் இலகுவில் முடிவு செய்துவிடாதீர்கள்”

நாம் தமிழர்

ஒரு தமிழ்நாட்டுத் தமிழரோடு தேநீர் குடிக்கும் சந்தர்ப்பம் அமைந்தது. பேச்சுவாக்கில் “ஈழத்தமிழர்களுக்கு என்று என்ன அடையாளம் இருக்கிறது? மொழி முதல் கலாச்சாரம், உணவுவரை எல்லாமே எங்களிடமிருந்து வந்ததுதானே?” என்று நெல்லிச்சாக்கைத் தெரியாத்தனமாக அவிழ்த்துவிட்டார். எனக்கு அன்றைக்கு என்ன மூடு இருந்ததோ தெரியவில்லை. அவருக்குப் பதிலளிக்கவேண்டும்போலத் தோன்றியது. ஆரம்பித்தேன்.

அங்காடிப் பெண்

இரவு உணவுக்கு நண்பர்கள் வருவதாக இருந்தது. வீடு படு குப்பையாக இருந்தது. சமையல் சாமான்கள் எல்லாம் தீர்ந்திருந்தது. வாங்கவேண்டும். சமையலறை சின்ங் முழுதும் ஒருவாரத்துப் பாத்திரங்கள் நிறைந்திருந்தன. மினுக்கவேண்டும். வேலைக்கு லீவு போடலாம் என்றால் அன்றைக்கு என்று பார்த்து ஒரு ரிலீஸ் இருந்தது. போயே தீரவேண்டும். அவளும் பிஸி. காலை ஐந்தரைக்கே அன்றைய நாள் மிரட்ட ஆரம்பித்தது. மிக நீண்ட நாளுக்கான காலை மிக அலுப்புடனேயே விடியும். அன்றும் அப்படித்தான். எல்லாவற்றையும் மறந்துவிட்டு சற்றுநேரம் தூங்கினால் என்ன என்று இருந்தது. முடியவில்லை. தேநீரை ஊற்றி ஒரு புத்தகத்தைக் கையில் எடுத்தேன். “மாஸ்டர் அண்ட் மாகரிட்டா” நாவல் அலுப்படித்தது. கடவுள் தத்துவ விசாரங்கள் எல்லாம் இப்போது பயங்கரமாக அலுப்படிக்கின்றன. இருக்கு இல்லை என்ற விவாதங்கள் வெறும் வெற்று. இருக்கு என்றால் இருக்கு. இல்லை என்றால் இல்லை. இரண்டாலும் எந்தப்பயனும் இல்லை என்பதே உண்மை. புத்தக வாசிப்பு மனிதர்களின் இயல்புகளைப் பெரும்பாலும் மாற்றியமைப்பதில்லை. அவை கொடுக்கும் விசுவரூப தருணங்களின் நீளம் மிகக்குறைவு. அதிகம் போனால் சேம் பின்ஞ் சொல்ல வ...

நாயகிகள்

எங்கள் அலுவகத்தில் இரண்டு நாய்கள் இருக்கின்றன. அல்லது இருக்கிறார்கள். ஒருத்தி பெயர் லூசி. மற்றையவள் கிரேஸ். நிறுவனத்தின் உரிமையாளர்கள் வளர்க்கும் நாய்கள் அவர்கள். இருவருமே அவுஸ்திரேலிய ஷெப்பர்ட் வகை. லூசிக்குப் பத்து வயது ஆகிறது. அனுபவம் நிறைந்தவள். புலோண்ட் முடி. கிரேஸுக்கு இரண்டு வயதுதான். கறுப்பு வெள்ளை. ஒரு இளம் நாய்க்குரிய துடிப்பும் விட்டேற்றியும் பரபரப்பும் அவளிடம் எப்போதுமே குடிகொண்டிருக்கும்.  அவ்விரு நாய்களையும் அவர்கள் தம் குழந்தைகள்போலவே வளர்த்தார்கள். அவர்கள் ஈழத்தமிழர்களாக இருந்திருந்தால் எக்கணம் லூசியையும் கிரேசையும் ஊருக்குக் கூட்டிப்போய் மண்டபம் பிடித்து சாமத்திய வீடு செய்திருப்பார்கள். அவ்வளவு பாசம். நான் அந்த அலுவலகத்துக்கு முதன்முதலாக நேர்முகத்தேர்வுக்கு உள்ளே நுழையும்போது லூசியும் கிரேசும்தான் குரைத்தபடி என்னை வரவேற்றார்கள். நேர்முகத்தேர்வுக்கேயுரிய சிறு பதட்டத்தோடுதான் உள்ளே நுழைந்தேன். நாய்கள் குரைத்ததும் “என்னடா ரிசல்ட் இப்பவே வந்துட்டுதா?” என்று சிறு அதிர்ச்சி. பின்னாலேயே வந்த நிறுவன உரிமையாளர் அவ்விருவரையும் அதட்டி, நட்போ...

தமிழ் ஊக்குவிக்குப்போட்டிகள்

அவுஸ்திரேலிய பட்டதாரிகள் தமிழர் சங்கத்தின் 'தமிழ் ஊக்குவிப்புப் போட்டி 2017' இற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. கடந்த நான்கைந்து வருடங்களாக இந்தப்போட்டிகளில் நடுவராகப் பணிபுரிந்துவந்துள்ளேன். நூற்றுக்கணக்கில் மாணவர்கள் கலந்துகொள்ளும் போட்டிகள் இவை. அவுஸ்திரேலியாவின் அத்தனை மாநிலங்களிலும் போட்டிகள் நடைபெறும். மாநில அளவில் வெற்றி பெறுபவர்கள் பின்னர் தேசியமட்டப் போட்டிகளிலும் தோற்றுவார்கள். சீரிய ஒழுங்கோடும் மிக நீண்ட தயார்படுத்தல்களோடும் நடத்தப்படும் போட்டி இது.  போட்டித்தினமன்று என் மனம் எப்போதுமே ஒரு கொண்டாட்ட நிலையை அடைவதுண்டு. அந்தச் சூழலை அணு அணுவாக ரசிக்கலாம். அலிஸ் அதிசய உலகத்துக்குள் நுழைந்ததுபோலவே சிறுவர்கள் போட்டி மண்டபத்துக்குள் நுழைவார்கள். பின்னேயே பயங்கரப் பதட்டத்துடன் பெற்றோர்கள். அப்பாமார்கள் அதிகம் அலட்டிக்கொள்வதில்லை. ஆனால் அம்மாக்கள்தான் கடைசிக்கணத்திலும் அக்கம்பக்கம் இருக்கும் யூகலிப்டஸ் மரங்களுக்கடியில் மீண்டுமொருமுறை குழந்தையோடு ஒத்திகை பார்ப்பார்கள். போட்டியென்று வந்துவிட்டால் நம் குழந்தைகளுக்கு இயல்பாகவே ஒரு ஓர்மம் வந்துவிடுகிறது. அம்மாக்...

"ஜெயக்குமரன்" என்கின்ற...

என் அக்காமார்களுக்கு அம்மா தனக்குப் பிடித்தமாதிரியே பெயர் வைத்துக்கொண்டார். அறுபதுகளின் இறுதியில் வீரகேசரியில் ரஜினி என்றொரு எழுத்தாளர் தொடர் நாவல் எழுதிக்கொண்டிருந்திருக்கிறார். அவரின் பெயரையே எங்கள் மூத்த அக்காவுக்கும் வைத்ததாக அம்மா சொல்வார். அந்த எழுத்தாளர் ரஜினி இப்போது எங்கே, என்ன செய்கிறார் என்று தெரியவில்லை. அவர் நாவலை யாரேனும் ஞாபகம் வைத்திருக்கிறார்களா என்றும் தெரியாது. ஆனால் எப்படியோ அக்காவின் பெயரில் ஏறிக்குந்திவிட்டார். இப்படி எழுத்தாளர்களின், இலக்கியப்பாத்திரங்களின் பெயர்களை பிள்ளைகளுக்கு வைக்கும் பழக்கம் பலரிடம் இருக்கிறது. லாகிரியின் “The Namesake” அதை அடிப்படையாகக்கொண்டு எழுதப்பட்டதுதான். “லாகிரி”யே ஒரு அழகான பெயர்தான். பொன்னியின்செல்வனிலிருந்தும் பலர் பெயர் எடுப்பதுண்டு. வர்மன், அருண்மொழி, குந்தவை, குந்தவி, நந்தினி, மணிமேகலை என்று பல பெயர்களைக் கவனித்திருக்கிறேன். இரண்டு தமிழ் திரைப்பட இயக்குநர்கள் தம் பெயரை கதைப்பாத்திரங்களிலிருந்து வைத்திருக்கிறார்கள். சுஜாதாவின் வசந்த் ஒன்று. தாஸ்தாவஸ்கியின் மிஷ்கின் இன்னொன்று.

கொட்டக் கொட்ட விழித்திருத்தல்

மழை, தந்தையிடம் ஏச்சு வாங்கிய மகளைப்போல இடைவெளி விட்டு இரவு முழுதும் விம்மிக்கொண்டிருந்தது.  இப்போதெல்லாம் எலார்ம் அடிக்கமுதலேயே காலையில் எனக்கு நித்திரை கலைந்துவிடுகிறது. இன்றும் அப்படித்தான். ஐந்துமணி எலார்முக்கு நான்கே முக்காலுக்கே எழுந்துவிட்டேன். ஒரு சூடான தேநீரை ஊற்றிக்கொண்டு வரவேற்பறையில் வந்து அமர்ந்தேன். வெளியே அந்தச்சிறுமியின் அழுகை இன்னமும் நின்றபாடில்லை. நேற்று எழுதிமுடித்த சிறுகதையின் பிழைகளைத் திருத்தலாம் என்று அதனைத் திறந்தால், முதல் அடிக்குமேலே வாசிப்பு நகர்வதாக இல்லை. இதே சிறுகதையோடு அணு அணுவாக கடந்த இரண்டு வாரங்களின் காலைப்பொழுதுகளைக் கழித்திருக்கிறேன். ஆனால் எழுதி முடித்ததும் அதற்கு நான் ஒவ்வாமையாகிவிட்டேன். “சந்திரா என்றொருத்தி இருந்தாள்” கதையின் வரிகள்தாம் ஞாபகம் வருகின்றன.