Skip to main content

Posts

Showing posts with the label சிறுகதை

நிஸ்ஸி

நேற்று காலை, வேலையிலும் பாட்டிலும் மூழ்கியிருந்தபோது பென் வந்து முதுகில் தட்டினான். “உன்னோடு வேலை செய்யக்கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியானது” “என்ன நடந்தது?” என்றேன். “வேலை போய்விட்டது … இப்போதே வெளியேறுகிறேன். இந்த கக்காவை இனிமேலும் சகித்துக்கொள்ள முடியாது” தூக்கிவாரிப்போட்டது. பென் என்னைவிட அதிகக்காலம் இங்கே வேலை செய்பவன். செய்தவன். வேலையை விட்டு ஆள்கள் போவதும் வருவதும் சகஜமான விசயம்தான். ஆனால் இந்த இக்கணத்தில் போட்டது போட்டதுபடியே அவனை வெளியேறச்சொன்னதுதான் அதிர்ச்சியாக இருந்தது. வார்த்தைகள் வரவில்லை.

அயல்

நேற்று வீடு கூட்டிக்கொண்டிருக்கும்போது துணைக்குப் ப்ளே லிஸ்ட் ஒன்றைக் கொஞ்சம் சத்தமாகவே ஒலிக்கவிட்டிருந்தேன். ‘நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ’. கூடவே சேர்ந்து பாடியபடி. கூட்டிக் குவித்து குப்பையை அள்ளி வெளியே தொட்டியில் போட்டுவிட்டுத் திரும்பும்போது, பின்கதவை இழுத்துச்சாத்த மறந்துவிட்டேன். அடுத்து ‘திமு திமு தீம் தீம்’ ஒலித்தது. அதன் இதமான தாளத்திற்கேற்ப தும்புத்தடி மெதுவாகவே கூட்டிக்கொண்டிருந்தது. பாட்டு முடியும்போது வாசல் மணி அடித்தது. முதலும் பல தடவைகள் அடித்திருக்கவேண்டும். எனக்கு அப்போதுதான் கேட்டது. போய்த்திறந்தேன்.  பக்கத்துவீட்டு மனிசி. முறைத்துக்கொண்டு நின்றது. இத்தாலிக்காரி. 

பக்

அலுவலகத்தில் புதிதாக ஒரு நாயை நேற்று கொண்டுவந்தார்கள். ஒரு பக். எனக்கு நாய்கள் மீது எந்தப்பிரச்சனையும் இல்லை. நாய்களை நான் மதிப்பவன். நாய்கள் அழகானவை. நன்றி பாராட்டுபவை. ஒரு சின்ன எச்சில் ஆட்டு எலும்புக்காக சாகும்வரைக்கும் நன்றி நவில்பவை. எனக்கேன் நாய்கள்மீது கோபம் வரப்போகிறது? ஆனால். இந்த ஆனால் என்ற வார்த்தைக்கு அற்புதமான சக்தி உண்டு. அது தனக்கு முன்னர் உதிக்கப்பட்ட அத்தனை வார்த்தைகளையும் செல்லுபடியற்றதாக்கிவிடும். விழுங்கி ஏப்பம் விட்டுவிடும். ஒருவரை எத்தனை பாராட்டினாலும் ஈற்றில் ஒரு “ஆனால்” போட்டுப்பாருங்கள். அவ்வளவும் சங்குதான். இன்னார் ஒரு அற்புதமான மனிதர். அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் பேச்சு பிடிக்கும். அவர் சிரிப்பு பிடிக்கும். ஆனால்.

சண்முகத்தின் கதை

தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமாதித்தன் முருங்கை மரத்தில் தொங்கிக்கொண்டிருந்த வேதாளத்தை மீண்டும் பிடித்துத் தோளில் போட்டபடி நடக்க ஆரம்பித்தான். அப்போது வேதாளம் அவனைப்பார்த்துச் சற்று எள்ளலுடன் கூறியது. “ஏ விக்கிரமாதித்தியா, நானும் பார்த்துக்கொண்டே வருகிறேன், நீயும் கடமை துஞ்சாது சதா என்னை முருங்கை மரத்திலிருந்து பிடித்துக்கொண்டு செல்கிறாய். நானும் எப்படியோ தப்பி மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிவிடுகிறேன். இப்படியே உன்னுடைய காலம் கழிகிறது. நீ பிழைக்கத் தெரியாதவனாக இருக்கிறாய். உனக்கு நான் ஒரு கதை சொல்லி இறுதியில் சில கேள்விகளைக் கேட்கப்போகிறேன். அந்தக்கேள்விகளுக்கு உனக்குச் சரியான பதில் தெரிந்தும் சொல்லாவிடில் உன் தலை சுக்கல் நூறாக வெடித்துச் சிதறிவிடும்” விக்கிரமாதித்தன் அதற்கு ஆமோதித்துத் தலையாட்டவும், வேதாளம் தன் கதையைச் சொல்ல ஆரம்பித்தது.

Coffee - Audio Version

Kishore, a Sri Lankan migrant living in Melbourne hops into a train to Flinders street. In the same metro journey, he happens to meet a girl and slowly starts conversations with here. The story themed around his identity crisis, perceptions and the thought process during the time he works out how to talk to a stranger girl.

Coffee

"The next train to Flinders Street station via the city loop will be departing at five” The recorded voice was played when I pressed the information button at the station. There was still time. I went and sat on the near by bench inside the safety zone. There had been incidents of Indian students getting attacked and harassed in public places. They are tipped as soft-targets for crime and advised to stay within the safety zones at railway stations. Although I am from Sri Lanka, little difference it would make if I tell it to someone with a knife threatening to stab me.

சோமப்பா சொன்ன கதை

விருத்தேஸ்வரம் தேசம் செல்வச்செழிப்பான தேசம் இல்லாவிட்டாலும் நல்லவர்களைக் கொண்ட தேசம். அந்த தேசத்தின் குடியானவர்கள் எல்லோரும் பரம்பரை பரம்பரையாகக் கமம் செய்து வருபவர்கள். பெரும்போகம் சிறுபோகம் என்று ஆண்டின் பெரும்பாலான நாட்களில் கமமும் கமம் சார்ந்த தொழில்களும்தான் அவர்கள் வாழ்வு. அத்தனை பெரும் உழைப்பார்கள். உழைத்தே ஆகவேண்டும். குடும்பத்தில் பத்துப்பேர் என்றால் பத்துபேரும் உழைப்பார்கள். பெண்கள் கால்நடைகள், வீட்டு சமையல், புழுங்கல் அவிப்பு என்று கவனிப்பார்கள். ஆண்கள் வயலுக்குப் போவார்கள். தென்னைக்கு அடி வெட்டுவார்கள். சிறுவர்கள் கிளி அடிப்பார்கள். இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேலை. சில பருவங்களில் மழை பொய்த்துவிடும். சிலவேளைகளில் வெள்ளம் பயிரை மேவிவிடும். கொடிய பயிர்கொள்ளி நோய்களும் பரவுவதுண்டு. அவர்களின் வாழ்வாதாரம் நிலையற்றது. அடிக்கடி பஞ்சப்பாடு. ஆனாலும் மாசத்துக்கு ஒருமுறை தவறாமல் அரசனுக்கு திறை செலுத்துவார்கள். மிச்சம் உள்ளதை இல்லாதவர்களுக்கும் கொடுத்து தானும் உண்பார்கள்.  விருத்தேஸ்வரம் நல்லவர்களைக் கொண்ட தேசம்.

பத்தில வியாழன்

காலை ஏழரை மணிக்குத் தொலைபேசி அழைப்பு வந்தது. தெரியாத இலக்கம். ஹலோ சொன்னேன். “தம்பி, நான்தான் அண்ணா கதைக்கிறன்” அண்ணா. பேர்த்தில் அப்போது அதிகாலை நாலரை மணி இருக்கும். அவ்வளவு வேளைக்கே எனக்கு அழைப்பு எடுக்குமளவுக்கு அப்படி என்ன அவசரம்? குழப்பமாகவிருந்தது. அப்படியொன்றும் நாங்கள் அநுதினமும் அழைத்துப் பேசுபவர்கள் அல்லர். வருடத்துக்கு இரண்டுமுறைதான் அண்ணாவும் நானும் பேசுவதுண்டு. அவருடைய பிறந்தநாளுக்கு நான் அழைப்பு எடுப்பேன். என்னுடையதன்று அவர் எடுப்பார். “ஹப்பி பேர்த்டே, என்ன நடக்குது? பிறகென்ன? சரி. அப்ப வைக்கிறன்”. அவ்வளவுதான் எங்களுடைய தொடர்பாடல். நிலைமை இப்படியிருக்க திடீரென்று வந்த அண்ணாவின் அழைப்பு சற்று பயத்தையும் ஏற்படுத்தியது.  “ஆ .. அண்ணை . வணக்கம்... எப்பிடி சுகங்கள்? என்ன இந்த நேரம்?” சம்பிரதாய சுகவிசாரிப்புகளுக்குப் பதில் சொல்லும் நிலையில் அவர் இருக்கவில்லை.  “தம்பி, உனக்கு வியாழன் மாறப்போகுது... கவனமா இரு”

மெல்லுறவு

அன்றைக்கு அந்தப்பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டுக்குத் துவாரகா சென்றபோது நேரம் ஏழைத்தாண்டியிருந்தது. கதையை ஆரம்பித்த தேவகி, சற்று நிறுத்திவிட்டு குரொப் பண்ணிவைத்திருந்த ஸ்கிரீன்ஷொட்டை மீண்டும் எடுத்துப்பார்த்தாள். சுதர்சன் இராஜேஸ்வரன். முதல் கொமெண்ட். அவள் ஸ்டேடஸ் போட்டு இரண்டே நிமிடங்களில் போட்டிருக்கிறான். எல்லாமே ஜனவரி எட்டிலிருந்தே ஆரம்பித்தது. இரட்டை முகமூடி. ஹிப்போகிரிட். இதை வெளிப்படையாக எழுதுவதால் அவளுக்கு என்ன அவமானம்? எதுவுமே இல்லை. அவள் என்ன தவறு செய்தாள்? என்ன மண்ணுக்காக அவள் துவாரகா என்ற பெயரில் எழுதவேண்டும் புனைவு என்று சொல்லிப் பிணைந்துகொண்டிருக்கவேண்டும்? ஒரு முடிவெடுத்தவளாய் குரொப் பண்ணிய படத்தை வேர்ட் டொக்கியுமெண்டில் பேஸ்ட் பண்ணிவிட்டுத் தேவகி மீண்டும் எழுத ஆரம்பித்தாள்.

தேவகியின் முகநூல் பதிவு

மெல்லுறவு சிறுகதையின் உபபிரதி ********************* நன்றி : புதியசொல்

பொண்டிங்

பொண்டிங் இன்னமும் வந்துசேரவில்லை. மழைத்தூறலும் குளிருமாய் இருந்தது. அருண் பொறுமை இழந்துகொண்டிருந்தான். “Where are you?”, மயூரிக்கு மெசேஜ் பண்ணினான். “On the way” என்று ரிப்ளை வந்தது. டிரைவ் பண்ணிக்கொண்டிருந்தால் எப்படி டெக்ஸ்ட் பண்ணுவாள்? பொய். வாய் திறந்தால் பொய். சட் பண்ணினால் பொய். எஸ்.எம்.எஸ் எல்லாம் பொய். மயூரி பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்து பொய்யாகி நிற்பவள். இன்னமும் அவள் கட்டிலிலேயே கிடக்கலாம். அருகிலேயே அந்தச் சூடானியன்… ச்சிக், பொண்டிங்கை நினைக்கத்தான் கவலையாக இருந்தது. அவனை எப்படி நடத்துகிறார்களோ. பாவம். பிள்ளைக்கு வாய் திறந்து சொல்லவுந் தெரியாது. அந்த சூடானியன் பொண்டிங் முன்னாலேயே மயூரியை… Stop it Arun, அப்படி எல்லாம் நடக்காது. தாம் ஏன் அவ்வாறெல்லாம் தேவையில்லாமல் யோசித்து விசனப்படுகிறோம் என்று அருண் தன்னையே நொந்துகொண்டான். மயூரி எக்கேடு கெட்டால் அவனுக்கென்ன? அவன் எண்ணம், சிந்தனை, கவலை எல்லாம் பொண்டிங்மீதே. மயூரி பொண்டிங்கைச் சரியாகக் கவனிப்பாளா? பொண்டிங் என்ற பெயரை வைத்ததே மயூரிதானே.

சிறுவர்கள் சொல்லும் கதை

  சந்திரனின் தகப்பன் காசிப்பிள்ளையர் ஒரு கடை முதலாளி. ஞாயிற்றுக்கிழமை காசிப்பிள்ளையர் வீட்டிலே நிற்கின்ற நாளென்பதால் காலையிலேயே மொத்த வீடும் அதகளப்படத்தொடங்கிவிடும். கடை வேலையாட்கள் விடிய வெள்ளனயே வந்து தோட்டத்தில் பாத்தி மாற்றிக்கொண்டிருப்பர். ஒன்பது மணிக்கே சங்கரப்பிள்ளை ஆடு அடித்து முதற்பங்கோடு இரத்தத்தையும் வீட்டுக்கு எடுத்து வந்துவிடுவார். அழுக்கு உடுப்புகளை எடுத்துப்போகவந்த நாகம்மாக்கிழவி வீட்டு வாசலில் உட்கார்ந்து யார் கேட்கிறார்களோ இல்லையோ, ஊர்த்துலாவாரங்கள் பேசத்தொடங்கிவிடும். அன்னலிங்கத்தார் மூத்த மகளோடு மா இடிப்பதற்காக வந்துவிடுவார். கிணற்றிலே தண்ணி இறைத்து தொட்டிலில் நிரப்புவதற்கென புக்கை வந்துவிடுவார். காயப்போட்ட புழுங்கல் நெல்லை மில்லுக்கு கொண்டுபோகவென ஒருவர் வந்துநிற்பார். தேங்காய் பிடுங்க இன்னொருவர். காசிப்பிள்ளையருக்கு ஸ்பெஷல் கள்ளு கொண்டுவர வேறொருவர். கணக்குப்பிள்ளை இன்னொருபக்கம். சந்திரனும் ஞாயிற்றுக்கிழமையானால் காலையிலேயே எழுந்து கால் முகம் கழுவி தயாராக நிற்பான். ஏழரை மணியானவுடனேயே படலைக்கும் வீட்டுக்குமாய் இருப்புக்கொள்ளாமல் ஓடித்திரிவான். காரணம் சண்முகம். சண்

கனக்ஸ் மாமா வளர்த்த ஆட்டு மரம்

  கனகநாய்கம் J.P விவசாய விஞ்ஞானி புத்தூர். கனக்ஸ் மாமாவினுடைய வீட்டுப் படலையை திறக்கும்போதுதான் கவனித்தேன். யாரோ அவருடைய பெயர்ப்பலகையில் 'ய'வில் குத்துப்போட்டு அவரை நாய்கம் ஆக்கியிருந்தார்கள். சிரித்துக்கொண்டே உள்ளே நுழைந்தேன். கனக்ஸ் மாமா வீட்டு முற்றத்துக்குள் நுழையும்போதே ஒரு வித்தியாசத்தை உணரலாம். அவரின் தோட்டம் முழுதும் புதினமான மரங்களே நிற்கும். எந்த செம்பரத்தையிலும் ஒரே நிறப்பூ பூக்காது. விதம் விதமான செம்பரத்தைகள் ஒரே மரத்திலேயே பூத்துத்தொங்கும். செம்பரத்தையின் கொப்புகள் எல்லாம் டிஷ்ஷு பெப்பர் சுற்றி ஒட்டப்பட்டு கிடக்கும். அருகில் இருந்த எலுமிச்சையின் கிளைகளில் சுற்றிக்கட்டப்பட்டிருந்த பொச்சுமட்டை பதியங்களில் தண்ணீர் எந்நேரமும் வடிந்தபடியே இருக்கும். வாழைமரத்தண்டுகளில் எல்லாம் சிறிய சிறிய பொந்துகள் அடித்து அதில் ரோசாச்செடிகள் நட்டு வளர்த்திருப்பார். வாழைக் குலை போட்டிருக்கும். அரையில் ரோசா பூத்திதிருக்கும். ஒரு வாழை பூராக மஞ்சள் கோன்பூ பூத்துக்கிடந்தது. ஒரு பக்கம் அரை அடியில் பிலாமரம் காய்த்திருந்தது. எல்லாவற்றுக்குமேலாக வாசலில் இரண்டு நீளமான தென்னை மரங்கள் எதிரெதிரே வ

வீராவின் விதி

  “The present determines the past” -- Veera’s Theorem இன்றைக்கு மட்டும் இரண்டாயிரம் தடவைகள் இதனை வாசித்துவிட்டேன். தமிழில் இன்னொரு ஆயிரம் தடவைகள். “நிகழ்காலத்தின் எந்தவொரு அவதானிப்பும் கடந்தகாலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்” -- வீராவின் விதி. என்னாலேயே நம்பமுடியவில்லை. மீண்டும் மீண்டும் சரி பார்த்துவிட்டேன். நிறுவல்கள் எல்லாமே சரியாக இருக்கின்றன. உலகத்தில் அத்தனை விஞ்ஞானிகளாலும் கணித மேதைகளாலும் தீர்க்கமுடியாமல் தண்ணி காட்டிகொண்டிருந்த நிறுவல். உலகத்தையே புரட்டிப்போடப்போகின்ற சமன்பாடு. என் கைகளில். மொத்தமாக முன்னூற்றுப்பத்து பக்கங்கள். உலகமே வீராஸ் விதி என்று அலறப்போகிறது. யோசித்துப்பார்க்கவே ... உள்ளயிருந்து ஸ்ஸ்ஸ் என்று ஒரு பட்டாம்பூச்சி. “நீ சாதிச்சிட்டாய் வீரேயிங்கம்” வரும் வாரங்களில் எல்லாமே நான் நினைப்பதுபோல சரியாக அமைந்துவிட்டால் பேராசிரியர் வீரசிங்கம் என்ற பெயர் விஞ்ஞான உலகின் தவிர்க்கமுடியாத பெயராக அமைந்துவிடும். உலகின் அத்தனை மூலைகளிலும் உள்ள பல்கலைக்கழகங்களிலிருந்தும் உரையாற்ற அழைப்புகள், டெட் டோக், பட்டங்கள், கௌரவ பேராசிரியர் பதவிகள் தேடிவரும். முயன்றால் லூக்கேசியன்

தீராக் காதலன்

  படகு மெதுவாக நகர்ந்துகொண்டிருந்தது.. கங்கைத்தாய் இப்படி துக்கம் அனுஷ்டித்து இதற்குமுன் எவருமே பார்த்ததில்லை. சிறு அலையோ, அசைவோ, நீரோட்டமோ அற்று எவ்வித சலனமுமின்றி அவள் கிடந்தாள். அந்தப் படகோட்டிகூட நீர்த்திவலைகள் தெறிக்காவண்ணம் மிகப்பக்குவமாக துடுப்பு வலித்துக்கொண்டிருந்தான். ஒப்பாரி முடிந்து தூங்குகின்ற பாலைத் தலைவியின்  இரவு போன்று சுற்றுவட்டாரம் முழுதும் ஒருவித நிசப்தம் நிரவியிருந்தது.   தினமும் ஆற்றிலே பாய்மரமேற்றி மீன் பிடிக்கும் வலைஞர்களின் பாடல்கள் எங்கேயும் ஒலிக்கவில்லை. காலையில் மேலாற்று வழியாக தாவிக்குதித்து சூரிய நமஸ்காரம் செய்யும் வாலை மீன்கள் ஆற்றின் படுக்கையடியில்  இருந்த கற்களுக்குள் ஒளிந்திருந்தன.  கர்ணனின் கவச குண்டலங்களை கவர்ந்து சென்ற நாளது போன்று இன்றைக்கும் சூரியன் தயங்கித்தயங்கி வெளிவரலானான். அவனோடு இழவுவீட்டில் ஊடல் கொண்டன தாமரைச்செடிகள். என்றுமே இணை பிரியாத மகன்றில் பறவைகள் தன் துணைகளைக்காணாமல் தென்திசை தேடி பறந்துகொண்டிருந்தன. இராமன் காடேகிவிட்டான்.

கக்கூஸ் - வானொலி நாடகம்

பொதுக்கழிப்பறையில் இருக்கும்போது பக்கத்து அறைக்காரன் நம் "சவுண்டை" கேட்டால் அந்தரமாக இருக்குமே என்று நினைக்காதவர்கள் இருக்கமாட்டோம். மூன்று வருடங்களுக்கு முன்னர் எழுதிய சிறுகதை இது. "பண்புடன்" இதழுக்காக ஸ்ரீதர் நாராயணன் ஒரு சிறுகதை கேட்டபோது எழுதிக்கொடுத்தது. சென்றவருடம் "என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" நூல் வெளியீட்டு புரோமஷனுக்காக "தமிழ் அவுஸ்திரேலியன்" பத்திரிகை அவுஸ்திரேலிய  தேசிய வானொலியான எஸ்.பி.எஸ் இல் ஒரு பேட்டியை ஓழுங்கமைத்து கொடுத்தது. பேட்டியை எடுத்தவர் றைசல். என் அதிர்ஷ்டம், றைசல் வெறுமனே கடனுக்கு பேட்டியை எடுக்காமல், பேட்டிக்கு முன்னர் படலையை ஒரு நோட்டம் விட்டிருக்கிறார். அப்போதே இந்த "கக்கூஸ்" மற்றும் "குட் ஷாட்" சிறுகதைகள் அவருக்கு பிடித்துவிட்டது. அவற்றை வானொலி வடிவமாக்க அனுமதி கேட்டார். சந்தோஷமாக சரி என்றேன். குட்ஷொட்டை சென்ற வருடமே ஒலி வடிவமாக்கினார். ஆறு மாதங்கள் கழித்து "கக்கூஸ்" ஒலிவடிவமாகியிருக்கிறது. றைசலின் நெறியாள்கையில் குரல் தந்திருப்பவர் பாலசிங்கம் பிரபாகரன்.  வழமைபோலவ

பச்சை மா

“எத்தினை மணிக்கு செத்துப் போனீங்கள்?” “இப்பத்தான் தம்பி … ஒரு அரை மணித்தியாலம் இருக்கும்” “சரியான டைம் சொல்லுங்கோ”. இண்டர்கொம் கேட்ட கேள்விக்கு நித்தியானந்தன் விழித்தான். மணிக்கூட்டைப் பார்த்தான். முள்ளு மிக வேகமாக சுழன்றுகொண்டிருந்தது. இது எந்த ஊர் மணிக்கூடு என்ற குழப்பம் வந்தது. நித்தியானந்தன் தூக்கு மாட்டிய சமயம், அடுத்த அறையில் மனைவி கோமதி கொம்பியூட்டரில் எதையோ நோண்டிக்கொண்டிருந்தது ஞாபகம் வந்தது. ஒரு ஏழு ஏழரை இருக்கலாம். நித்தியானந்தன் ரொட்டிக்கு மா பிசைந்துகொண்டிருந்தபோது எடுத்த திடீர் தற்கொலை முடிவு.  மா இன்னமும் அவன் கைகளில் ஒட்டியிருந்தது. முதல்தடவை மாட்டும்போது சுடுதளம் பிசகி, தவறி விழுந்து, இரண்டாம் தடவை சரியாக மாட்டும்போதுதான் அது சரி வந்தது. நன்றாக ஞாபகம் இருக்கிறது. அப்போது நேரம்,

"குட் ஷொட்" சிறுகதை ஒலி வடிவில்.

அவுஸ்திரேலியாவின் SBS வானொலியைச் சேர்ந்த நிகழ்ச்சித் தயாரிப்பாளர் ரைசல் அவர்களின் முன் முயற்சியில் " குட் ஷொட் " சிறுகதை வானொலி நாடகமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. இனி சிறுகதை. இதைத்தொடர்ந்த என்னுடைய வானொலிப்பேட்டி. சிறுகதைக்கு உயிர்கொடுத்த ஸ்ரீபாலன் மற்றும் பாலசிங்கம் பிரபாகரனுக்கும், இதைத் தயாரித்தது மட்டுமல்லாமல், படலையின் ஏனைய சிறுகதைகளை வாசித்து தன்னுடைய விமர்சனங்களை கொடுக்கின்ற ரைசல் அவர்களுக்கும், SBS வானொலிக்கும் மிகவும் நன்றிகள். இந்த சிறுகதையின் முடிவுக்கான முடிச்சைப் போட்டுக்கொடுத்த கேதாவுக்கும் நன்றிகள்.

என் கொல்லைப்புறத்துக் காதலிகள்

முன் பதிவுகளுக்கு 2021-10-01 அச்சுப்பிரதிகள் தீர்ந்துவிட்டதால் புத்தகம் இப்போது அமேசனில் மாத்திரம் கிடைக்கிறது. நன்றி. https://www.amazon.com/dp/B0762ZRLZM/ref=cm_sw_r_sms_awdo_1ZXPSMTGVJFX4ZHPHNAE பிறவழிகளில் கட்டணம் செலுத்த விரும்புவர்கள் மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களை வாங்க விரும்புபவர்கள் இந்த  விண்ணப்பத்தை பூர்த்தி செய்யுங்கள். மெல்பேர்னில் வசிப்பவர்கள் நவம்பர் இரண்டாம் திகதி நடைபெற இருக்கும் "என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" நிகழ்விலும் புத்தகத்தை வாங்கலாம். நிகழ்ச்சி பற்றிய அறிவித்தல் இந்தவாரம் வெளியிடப்படும்.  புத்தகம் ஒக்டோபர் இறுதிவாரம் முதல் தபாலில் அனுப்பிவைக்கப்படும். மேலதிக தகவல்களுக்கு jkpadalai@gmail.com என்கின்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள்.   புத்தக விவரம் காப்புரிமை - ஜேகே  பதிப்பாளர் - வண்ணம் நிறுவனம் (www.vannam.com.au) ISBN-10 : 0992278422 ISBN-13 : 978-0-9922784-2-7 பக்கங்கள் – 344 அட்டைப்பட புகைப்படம் - செல்லத்துரை ரதீஸ்குமார் அட்டைப்பட வடிவமைப்பு - மெட்ராஸ் கஜன்

சியாமா

  சியாமா இப்போது அவனுக்கென்று அடைக்கப்பட்டிருந்த இரண்டடி உயர விளையாட்டு வேலிக்கூட்டுக்குள் இருந்தான். தரை முழுதும் பொம்மை படங்கள் போட்ட ரப்பர் விரிப்பு. கூடு எங்கும் விளையாட்டுப்பொருட்கள். அண்ணர் எதை எடுக்க? எதை விட? என்று தெரியாமல் குழம்பினார். "சியாமா கண்ணா .. அம்மாவை இஞ்ச ஒருக்கா பாருடா" தாய்க்காரி சியாமாவின் கவனத்தை இந்தப்பக்கம் திருப்பப் பார்க்கிறாள். சியாமா கணக்கே எடுக்கவில்லை. நண்பர்கள் வந்திருக்கிறார்கள். அவனைப் பார்ப்பதற்கென்றே வருவார்கள். சியாமா உறவு வட்டாரத்தில் அவ்வளவு பிரபலம். பொதுவாக ஈழத்தில் குழந்தைகள் இவ்வளவு வாளிப்புடன், கொழுகொழுவென, வெள்ளை வெளீரென்று சியாமா போல இருப்பதில்லை. ஆனால் ஆஸியில் நேரத்துக்கு தகுந்த உணவு, பால், சீஸ், பட்டர், மாடு, ஆடு என்று எப்போதும் புரதம், கொழுப்பு அதிகம் உள்ள உணவு வகைகளையே கர்ப்பிணி தாய்மார்களுக்கு பிரஸ்தாபிப்பார்கள். தெற்கு ஆசியர்கள் அந்த புதிய உணவுப்பழக்கத்துக்கு திடீரென்று மாறுவதால், பொதுவாக ஆஸி போன்ற நாடுகளில் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் எல்லாமே சியாமா போன்று மொழுமொழுவென்றுதான் இருக்கும். வைத்தியர் தசெவ்ஸ்கி இந்த விஞ