Skip to main content

Posts

Showing posts with the label நூல் விமர்சனம்

விஷ்ணுபுரம் - ஹம்பி

விஷ்ணுபுரம் நாவலை நான் மிகத் தாமதமாகத்தான் வாசித்தேன். ஹம்பி செல்வதற்கு முன்னர் நாவலை வாசித்திருக்கலாம் என்று இப்போது தோன்றுகிறது. நகரங்கள், கலாசாரங்கள், மதங்கள், தத்துவங்கள் எப்படி உருவாகி, கோலோச்சி, அதிகார உச்சங்களை அடைந்து பின்னர் அப்படியே நலிந்து ஒழிந்து போகின்றன என்பதை விஷ்ணுபுரம் எழுத்துகளில் விபரித்தது என்றால் ஹம்பியில் அதனைக் கண்கூடாகவே அறியலாம். அதன் வரலாற்றை, உச்சங்களை இன்றைய எச்சங்களினூடே காணமுடியும். ஹம்பியின் சமகால நிலையைத்தான் விஷ்ணுபுரத்தின் மூன்றாவது பாகம் விபரிக்கிறது. சில வருடங்களுக்கு முன்னர் அலுவலக வேலையாக பெங்களூர் செல்லவேண்டியிருந்தது. அப்போது வார இறுதி ஒன்றில் ஹம்பிக்கு பயணம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. ஆறு மணி நேர ரயில் பயணம். அவ்வளவு நேரம் பயணம் செய்ய வேண்டுமா என்று முதலில் தயங்கினாலும் பின்னர் பஞ்சியைப் பார்க்காமல் போகலாம் என்று முடிவெடுத்துச் செய்த பயணம். அது வாழ்நாளில் மறக்கமுடியாத வரலாற்றின் அற்புதமான காலங்களையும் அந்த நிலங்களின் தற்போதையை நிலையையும் மனிதர்களையும் எனக்கு அறியத்தந்தது. பயணங்கள் நமக்குக் கிடைக்கும் கொடை. அவற்றை ‘அடுத்தமுறை பார்க்கலாம்’ என்ற...

குஞ்சரம் ஊர்ந்தோர்

சீமான் பத்திநாதன் பர்ணாந்து எழுதிய ‘குஞ்சரம் ஊர்ந்தோர்’ நாவலைப் பற்றி நான் எழுதிய கட்டுரை ஒன்று அகழ் இதழில் வெளியாகியுள்ளது. https://akazhonline.com/?p=3856

பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம் - மயிலன்

பொதுவாகவே மரணங்களின் பின்னர் மனிதர்களுக்கு அவர்களின் சுற்றத்தவர்களாலும் அறிந்தவர்களாலும் புதிய பல அவதாரங்கள் கொடுக்கப்படுகின்றன. பெரும்பாலும் அவை நல்லவையாகத்தான் இருப்பதுண்டு. அந்தியேட்டிக் கல்வெட்டுகளிலும் அஞ்சலிக் கட்டுரைகளிலும் முதற்தடவையாக அவற்றை நாம் அறிந்துகொள்ளும்போது சமயத்தில் நமக்கு ஆச்சரியமும் அடைவதுண்டு. அகால மரணங்களின்போது இவ்வடிவங்கள் மேலும் அதீத எல்லைகளைத் தொடுவதுண்டு. ஆனால் அதுவே ஒரு தற்கொலை மரணம் ஆகிவிட்டால் இந்தக் கட்டமைப்புகளில் சின்ன பச்சாதாபமும் சிறுமையும் ஒட்டிக்கொண்டுவிடுகின்றன. தற்கொலை செய்த மனிதர்களுக்கு மற்றவர் செய்யும் அஞ்சலிகளைக் கூர்மையாகக் கவனித்துப்பாருங்கள். அவற்றில் அதிகாரமும் மேதாவித்தனமும் தொக்கி நிற்கும். அக்கணம் உயிரோடு இருக்கும் நாம் இறந்தவரைவிடச் சற்றுப் பெரியவராகிவிடுகிறோம். அறிவுரை சொல்லும் நிலைக்கு உயர்ந்துவிடுகிறோம். மிகவும் நெருக்கமானவர் என்றால் கூடவே ஒரு குற்ற உணர்வும் சேர்ந்துகொள்ளும். தற்கொலைக்கான காரணங்களைத் தேட ஆரம்பிப்போம். பல சமயங்களில் நாம் உருவாக்கி வைத்திருக்கும் காரணங்களுக்கான சாட்சியங்களைத் தேடிப்போவோம். அவர் ஏன் அப்படி இறந்தார் எ...

உள்ளக விசாரணை - අතිශය අභ්‍යන්තර පරීක්ෂණය

ஆதிரை வெளியீடாக, தேர்ந்தெடுக்கப்பட்ட சில தமிழ்ச் சிறுகதைகள் சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அதில் "சமாதானத்தின் கதை" தொகுப்பில் இடம்பெற்ற "உஷ் இது கடவுள்கள் துயிலும் தேசம்" சிறுகதையும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

குமரித்துறைவி

ஜெயமோகனின் குமரித்துறைவி நாவலை வாசித்துக்கொண்டிருக்கிறேன். ஒரு பெரும் நிகழ்வை ஒழுங்கமைக்கும் செயலை விபரிக்கும் இச்சொற்களில் மனம் பல கணங்கள் நிலைத்து நின்றது.

"சமாதானத்தின் கதை" பற்றி அபிசாயினி

புத்தகங்களோடு அதிக நேரங்களைச் செலவளிக்காத போதிலும், புத்தகங்களோடு அதிக நேரத்தைச் செலவளிப்பவர்களோடு இந்த கொரோனா காலத்தை கடக்கவேண்டி இருந்தது…….. ஆனால், தரம் 9 ல் இருந்தே நூலகங்களுக்குப் போவது என் ப(வ)ழக்கமாய் இருந்தது . எத்தனை புத்தகங்களைப் படிந்தேன் என்பதைத் தாண்டி நிறைய நேர் அதிர்வலைகளை அந்த நூலகங்களில் சுவாசித்ததுண்டு. நிறைய மனிதர்களை ரசித்ததுண்டு . அமைதியின் ஆழம் தெரிந்ததுண்டு. அதற்கு பிறகு புத்தகங்களை வாங்குவதிலும் ஆர்வம் அதிகரித்தது. ஆனால் இப்போது முகநூலோடு என் நாட்கள் கடக்கின்றன. மனவருத்தத்திற்குரிய ஒன்றுதான் ஆனால் இந்தக் காலத்தில் புத்தகங்களை வாசிப்பதிலும், புதிய புத்தகங்களைப்பற்றி அறிமுகம் செய்வதிலும் என்னோடு இருப்பவர்கள் அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள். அப்படியானவர்கள் அமைவது வரம் தானே! . அவர்களோடு பேசும்போதெல்லாம் நான் இன்னமும் புத்தகங்கள் எனும் சமுத்திரத்தின் கரையில் இருப்பதாகவே உணர்கிறேன். சும்மாவா நம் முன்னோர் சொல்லிச்சென்றனர் "கற்றது கையளவு; கல்லாதது உலகளவு" என! ஏன் உங்களில் சிலர் இன்னும் 'நீ இன்னும் கரையையேகூடப் பார்க்கவில்லை' என்று முணுமுணுப்பும்...

மடொல் டூவா என்கின்ற கிராஞ்சி

சிங்கள இலக்கியத்தில் பெரிதும் கொண்டாடப்படும் ஒரு நாவல் மடொல் டூவா. நாற்பதுகளில் மார்ட்டின் விக்கிரமசிங்க எழுதிய இந்த நாவல் ஆங்கிலத்தில் அதே பெயரிலும் தமிழில் மடொல் தீவு என்றும் மொழிபெயர்க்கப்பட்டு இன்றைக்கும் பரவலாக வாசிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. இலங்கைக் கல்விப் பொதுத் தராதரச் சாதாரண தரத்து ஆங்கில இலக்கியப் பாடத்திட்டத்திலும் இந்த நூல் உள்ளடங்கியிருக்கிறது. நாவலில் கதை இதுதான். ஒரு கிராமத்து முதலாளியின் மகனான ஏழு வயது உபாலி கினிவெலவும் அவர்களுடைய வீட்டு வேலைக்காரச் சிறுவனான ஜின்னாவும் சேர்ந்து அந்த ஊரிலே பல்வேறு குழப்படிகளைச் செய்கிறார்கள். அவன் தொல்லை தாங்கமுடியாமல், பாடசாலையை மாற்றி ஒரு ஆசிரியரின் வீட்டில் தங்க வைத்துப் படிப்பித்தாலும் உபாலியின் கொட்டம் அடங்குவதாகயில்லை. ஒரு நாள் உபாலியும் ஜின்னாவும் கிராமத்திலிருந்த ஓர்சார்ட் பண்ணைக்குள் புகுந்து அதை நாசமாக்குகிறார்கள். பின்னர் பொலிசில் பிடிபட்டுவிடுவோம் என்ற பயத்தில் அவர்கள் ஊரைவிட்டே ஓடுகிறார்கள். அப்படி ஓடி வேறொரு கிராமத்தில் உள்ள தோட்டத்தில் வேலை செய்யும்போது, அங்கு ஒடும் ஆற்றுக்கு மத்தியில் மனித நடமாட்டமில்லாத சதுப்பு மரக்க...

அஷேரா - சிதறிய எறும்புகளின் கதை

எஸ். ராமகிருஷ்ணனின் ‘யாமம்’ நாவலில் எழுதப்பட்டிருக்கும் இரவு பற்றிய குறிப்புகள் இவை. “இரவென்னும் ரகசிய நதி நம்மைச் சுற்றி எப்போதும் ஓடிக் கொண்டே இருக்கிறது. இரவு என்பது கால்கள் இல்லாமல் அலையும் பூனையைப் போன்றது. அதன் அதன் தீரா வாசனை எங்கேனும் பரவி இருக்கிறது” ‘அஷேரா’ நாவலை வாசித்த கணங்களின்போது அதுவும் இரவைப்போலவே ஒரு இரகசிய நதியாக நம்மைச் சுற்றி ஓடிக்கொண்டிருப்பதை உணரக்கூடியதாக இருக்கும். சுவிற்சலாந்தின் பனிக்குளிருக்கு உறைந்து, வசந்தங்களில் குளிர்ந்து, கோடையில் தணிந்து, கொழும்பின் அழுக்கான புறநகர்ப்பகுதிகளில் புழுங்கிக் கசிந்து, ஈழத்தின் வடக்கு கிழக்கிலும் தமிழ்நாட்டின் அகதி முகாம்களிலும் பாய்ந்தோடும்போது உலர்ந்தும் பெண்களின் மடியில் மிதந்தும் அவர்களற்ற உலர் நிலங்களில் கற்பனைப் பயிர் செய்தும் இந்த நாவல் எனும் பெரு நதி ஓடிக்கொண்டேயிருந்தது. சமயத்தில் அது கால்கள் அற்ற கள்ளப்பூனை போலவும் அரைந்துகொண்டு திரிந்தது. வாசித்து முடித்து நாட்கள் பல சென்றபின்னரும் அதன் தீராவாசனை எங்கெனும் பரவிக்கொண்டேயிருந்தது. அதனாலேயே அஷேரா என்பது ஒரு இரவு. அதன் மொழியில் சொல்லப்போனால் வெளிச்சத்தின் அடியாள். ந...

"சமாதானத்தின் கதை" பற்றி பாத்திமா மஜீதா

  நீண்ட நாட்களின் பின்னர் சிறப்பானதொரு சிறுகதைத் தொகுதி வாசிக்க கிடைத்தது. ஜேகேயின் “சமாதானத்தின் கதை” தொகுப்பு வெகுவாக என்னைப் பாதித்திருக்கின்றது. அகழ் மின்னிதழில் வெளிவந்த அவருடைய “டைனோசர் முட்டை” என்ற சிறுகதையே இத்தொகுப்பினை வாசிக்கத் தூண்டியது என்று கூறலாம். இத்தொகுப்பில் உள்ள ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு இசையில் வெவ்வேறான சுருதியுடன் ஒலித்துக் கொண்டிருப்பதை என்னால் உணர முடிந்தது. பதினொரு கதைகளும் வெவ்வேறான மொழிநடை . இதுவே இந்த தொகுதியின் முக்கியமான பலம் எனக் கருதுகின்றேன். போர், புலம்பெயர் வாழ்வின் வண்ணத்தை நுட்பமாக மாற்றி அன்றாடத்தை குலைத்து விடுவதை ஜேகே அவருடைய கதைகள் வழியாக கலையமைதியுடன் சாதித்திருக்கிறார். பெண்ணியம் குறித்த கற்பனாவாத சாய்வுகளோ அல்லது பிரச்சார முழக்கங்கள் உரத்த குரலில் ஒலிக்கும் விமர்சனமோ அவருடைய கதைகளில் எழவில்லை. அதேநேரத்தில் பெண்ணின் அக உணர்வுகளை ஆண் எழுதுவது என்பது அசாதாரண விடயம். ஆனால் இத்தொகுப்பில் சில இடங்களில் ஜேகே அதனை சாதித்துக் காட்டியிருக்கின்றார். ஜேகேயிற்கு வாழ்த்துக்கள்

"சமாதானத்தின் கதை" பற்றி நிலாந்தி சசிகுமார்

  இந்தப் புத்தகம் ஒரு நண்பியின் பரிந்துரையில் வாங்கியது. வாசித்து முடித்த போது வாங்கியதற்காக திருப்தியும் மகிழ்ச்சியும் அடைந்தேன்.தலைப்பு மயக்கியது. ஆனால் அதில் அடங்கிய பதினொரு கதைகளும் ஒரு தெளிவைத் தந்தது. புலம்பெயர் வாழ்வில் நம் மக்கள் தொலைத்து விட்ட சங்கதிகளையும், வாழ்வையும் பேசுகின்றன. ஜேகேயின் இப்படைப்பில் சிலிர்ப்புகள் அதிகமுள்ள அதேவேளை இழப்புகளும் அதிகம் தான்.

தமிழ்நதியின் 'காத்திருப்பு'

மெல்பேர்ன் வாசகர் வட்டத்தில் தமிழ்நதியின் 'மாயக்குதிரை' சிறுகதைத் தொகுப்பு பற்றிய வாசிப்பு அனுபவப் பகிர்வு சென்ற மாதம் இடம்பெற்றது. அத்தொகுப்பில் உள்ள 'காத்திருப்பு' என்ற சிறுகதை சார்ந்து இடம்பெற்ற கருத்துப் பரிமாற்றங்களைத் தொகுத்து இக்கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது. https://melbournevasakarvaddam.blogspot.com/2021/05/blog-post.html

மெக்ஸிக்கோ

தனியராகச் செய்யும் பயணங்கள் கொடுக்கும் உணர்வுகள் கலவையானவை. நாம் போகும் இடங்கள் யாவிலும் கூட்டம் அலைமோதும். தெரியாத கடைக்காரர்கள். தெருவில் எதிர்படுபவர். பாதையோர பழ வியாபாரி. கடற்கரையில் குழந்தைகளோடு பந்து விளையாடும் இளங்குடும்பம். ஆண்கள். பெண்கள். எல்லோருடனுமே ஏதோ ஒரு உறவை ஏற்படுத்த நம் மனம் நாடும். பழகிய மனிதர்களோடு பேசும்போது ஏற்படும் உற்சாகத்தைவிட இவர்களை அவதானிப்பதில் உருவாகும் உள்ளக் களிப்பு அதீதமானது. அதைக் களிப்பு என்று சொல்லிவிடவும் முடியாது. கொஞ்சம் அங்கலாய்ப்பு, கழிவிரக்கம், தனிமையின் சிறு விரக்தி, அதை ஏற்றுக்கொள்ள மறுத்து வியாபிக்கும் கொண்டாட்ட மனநிலை. தனிமைப் பயணங்களில் இவை எல்லாமே கலவையாக வந்துபோவதுண்டு.

காலத்தின் காலடி

நூலகம் அமைப்பைப் பற்றி எத்தனை தடவை சிலாகித்தாலும் போதாது என்றே தோன்றுகிறது. என்னுடைய ஈழம் சார்ந்த, தமிழ் சார்ந்த பல தேடல்கள் எல்லாம் நூலகம் தளத்திலேயே போய் முடிவடைந்திருக்கின்றன. அநேகமான உசாத்துணைகள் எல்லாம் அங்கிருந்து எடுக்கப்பட்டதுதான். யாழ்ப்பாணப் பொது நூலகம் என்பது எங்களுடைய வரலாற்றுரீதியான ஒரு கலாசார சொத்து என்றாலும் ஒரு முழுமையான நூலகத்துக்கான பலனை உலகம் முழுதும் கொடுத்துக்கொண்டிருப்பது என்னவோ நூலக இணையம்தான். ஒரு அரசாங்கம் செய்யவேண்டியதை, ஐக்கிய நாடுகளின் நிறுவனரீதியான பங்களிப்புடன் செய்யக்கூடிய ஒரு பெரும் முயற்சியை, ஒரு அரச சார்பற்ற அமைப்பு ஒன்று, தன்னார்வப் பணியாளர்களின் உதவியோடு தொடர்ச்சியாக பதினைந்து வருடங்களுக்கும் மேலாகச் செய்வதென்பது ஒரு பெரும் சாதனை. அதுவும் எந்தவித சர்ச்சைகளும் குழப்படிகளும் பொதுவெளிக்குள் வரவிடாத ஒழுங்கமைப்புடன் இருக்கும் அமைப்பு. ஈழத்தில் மேற்கொள்ளவேண்டிய செயற்திட்டங்களுக்கு ஒரு மாதிரி அமைப்பாக நூலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது என்றால் அது மிகையில்லை. சின்ன உதாரணம் ஒன்று. ஒரு சிறுகதைக்காக ஈழத்தின் நாட்டுக்கூத்து முயற்சிகள், சித்தர்பாடல்கள் பற்றித் தேடிக...