Skip to main content

Posts

சமாதானத்தின் கதை : இணையத்தில் வாங்க

சமாதானத்தின் கதை : புதிய வெளியீடு

ஆதிரை வெளியீடாக நான் எழுதிய ‘சமாதானத்தின் கதை’ என்கின்ற நூல் இப்போது கடைகளில் கிடைக்கிறது. 000 கதைகளைச் சொல்லாமலேயே விட்டுவிட்டால் என்ன என்று எண்ணிய காலமது. சொல்லாத கதைகள் எப்போதுமே எம்மோடு அமுங்கியபடி கூடவே இருக்கின்றன. இரகசியங்களைப்போல. சொல்லியபின் அவை எம்மைவிட்டுப் பறந்துபோய்விடும். பின்னர் கூப்பிட்டாலும் அவை செவிமடுப்பதில்லை. எப்போதேனும் தெருவோரம் யாரோ அவற்றைக்கூட்டிச்செல்லும்போது எம் வாசலை எட்டிப்பார்ப்பதோடு சரி. அதற்குமேல் அவற்றுக்கும் எமக்குமான உறவு நெருங்குவதேயில்லை. “சமாதானத்தின் கதை” நூலில் உள்ள பதினொரு கதைகளும் எப்போதோ என்னோடு கோபித்துக்கொண்டு பிரிந்துபோன கதைகள். அவற்றை மீள எழுதும்போது நிரம்பிய அன்பும் அதற்கும்மேலாகச் சண்டையும் அவற்றோடு பிடிக்கவேண்டியிருந்தது. சில கதைகள் வளர்ந்தும் இன்னும் பல ஒடுங்கியும் கிடந்தன. ‘விசையறு பந்து’ மதுவந்திகாவைக் காணும்போது புதிதாக இருந்தது. ‘தூங்காத இரவு வேண்டும்’ சிவலிங்கத்தின் வாழ்வை நினைத்துப்பார்க்கவே ஒரு கலக்கம் வந்துபோனது. கிட்டத்தட்ட ஒரு நான்கைந்து மாதங்கள் இக்கதைகளின் களங்களிலும் கதை மாந்தரோடும் செலவிட்ட காலைப்பொழுது

அவுஸ்திரேலிய காட்டுத்தீ பற்றிய சில குறிப்புகள்

1. ஏன் அவுஸ்திரேலியக் காடுகள் மாத்திரம் இப்படி எரிகிறது? 
 முக்கிய காரணம் இங்குள்ள காடுகளில் நிறைந்திருக்கும் யூகலிப்டஸ் மரங்கள். எங்கள் ஊர்ப்பாசையில் சொன்னால் விக்ஸ் அல்லது தைல மரங்கள். அம்மரங்களில் இலகுவில் தீப்பற்றக்கூடிய யூகலிப்டஸ் எண்ணெய் இருக்கிறது. அதனால் பல மரங்கள் வெப்பநிலை அதிகமாகும்போது சூடேறி வெடிக்கவும் செய்யும். அவுஸ்திரேலியாவின் சுதேசிய மரம் இது. அதனாலேயே சிகரட் நெருப்போ மின்னலோ அல்லது இயல்பாகவே சூடேறி வெடித்தோ காடு உடனேயே தீப்பற்றிவிடுகிறது. தவிர இங்கே காற்றில் ஈரப்பதன் இருப்பதில்லை. கொஞ்சம் வெயில் என்றாலும் மண்ணிலும் வளியிலும் குளிர்மை அகன்றுவிடும். இந்த சூழ்நிலையில் காற்றும் சேர்ந்துகொள்ள தீ இலகுவில் பற்றி விரிவடைய ஆரம்பிக்கிறது.

2019

ஞாபகத்திலேயே இல்லாத, ஷோர்ட் லெக்குக்குள் சும்மா தட்டிவிட்டு அவசரமாக ஓடி எடுத்த ரன்போல இந்த ஆண்டு கழிந்துவிட்டது. இன்னொரு ஐந்து வருடங்களில் இப்படியொரு ஆண்டு கழிந்ததே ஞாபகத்தில் இருக்கப்போவதில்லை என்று தோன்றியது. 2017ல் என்ன செய்தேன் என்பதும் ஞாபகமில்லை. இந்த ஆண்டும் அப்படித்தான். வருடம் முழுதும் மொங்கி மொங்கி வேலை செய்து என்ன பயன் என்று யோசித்தேன். அதைவிட வேலைக்கு மகிழுந்தில் பயணம் செய்வது கொடுக்கும் அலுப்பு. ச்சைக்.

கருத்துகள்

வணக்கம் Mr. JK, உங்கள் வலைதளம் மிக அருமையாக உள்ளது. இரு நாட்களுக்கு முன், என் தோழியின் பரிந்துரையினால் உங்கள் *ஆட்டிறைச்சி* பதிவை தான் முதலில் படித்தேன். சாதாரண விஷயத்தை கூட மிக சுவாரசியமா சொல்லுவார்னு சொன்னா. ஆனா இவ்வளவு அருமையா , எனக்கு பிடிச்ச மிக அழகான இலங்கை தமிழ்ல இருக்கும்னு எதிர்பாக்கல. உங்கள் எழுத்து நடை ரொம்ப பிடிச்சிருக்கு. சின்ன வயசுல இருந்து நிறைய படிக்கிறேன். ஒரு எழுத்தாளரோட எழுத்து நடை பிடிச்சா மட்டுமே, படித்ததையே திரும்ப திரும்பவும் கூட படிக்கிற பழக்கம் எனக்கு இருக்கு. புது எழுத்தாளர்கள் எழுதுவதை எல்லாம் படிக்க ஆரம்பிக்கவே ரொம்ப யோசிப்பேன். உங்க பதிவுகளை இரு நாட்களாக விடாமல் தொடர்ந்து படிக்கிறேன். 2011 இல் இருந்து ஆரம்பித்து. ஒரு சின்ன வேண்டுகோள். எனக்கு உங்கள் தமிழில் சில வார்த்தைகள் புரியல. சில இடங்கள்ள, உங்கள் பேச்சு வழக்கப்படி எழுதியிருக்கீங்களா, இல்ல ஆங்கில வார்த்தையை தமிழ்ல எழுதியிருக்கீங்களானு குழப்பம் வருது. பதிவின் சுவராசியத்தில , வேகத்தில் அதை விட்டுட்டா கூட, பிறகு அது என்னவா இருக்கும்னு யோசிக்க வைக்குது. உங்கள் பேச்சு வழக்கில் இருக்குற

கிசோகர் வாங்கித்தந்த ஐபோன் - குறுநாவல்

அத்தியாயம் 1 அத்தியாயம் 2 அத்தியாயம் 3 அத்தியாயம் 4  

கிசோகர் வாங்கித்தந்த ஐபோன் : அத்தியாயம் 4

தட்ஸ் ரைட். என்ர போன் கொமெடுக்க விழுந்திட்டுது. பார்க்கவே குமட்டிக்கொண்டு வந்தது. என்னதொரு அறுந்த சீவியம் இண்டைக்கு. ச்சைக். அருமையான ஐபோன் எக்ஸ் போன் அது. ரிலீஸ் ஆன கையோட ஆசை ஆசையா ஓடிப்போய் வாங்கியோண்டு வந்தது. போட்டோ எல்லாம் சும்மா பளீரென்று எடுக்கும். பூவை போக்கஸ் பண்ணினா பின்னால கிடக்கிற இலை, குப்பைத்தொட்டி, வேலி எல்லாம் மறைஞ்சு பூ மட்டும் பிச்சுக்கொண்டு தெரியும். அர்ஜுனன் கிளிக்கழுத்த போக்கஸ் பண்ணினதுபோல. ஒருக்கா வீட்டில வாழையிலைச் சாப்பாடு. நான் தண்ணியைத் தெளிச்சு வழிச்சிட்டு சோத்தைப் போட ரெடி. அப்பப்பார்த்து ஒரு தண்ணித்துளி வாழையிலைத் தண்டுக்குள்ள சிக்கிக் கிடந்துது. உடனே போனை எடுத்தன். துளியை போக்கஸ் பண்ணினன். துளியை குளோசா எடுக்கேக்க அதில எண்ட மூஞ்சி தெரியிறமாதிரி. ஈ லோகத்தில வேற எவனும் அப்படி ஒரு படம் எடுத்திருக்கமாட்டான். நான் என் போனில எடுத்தன். படமெண்டா நெருப்புப் படம்.

கிசோகர் வாங்கித்தந்த ஐபோன் : அத்தியாயம் 3

கொமெண்டை அழிப்பது என்று சொல்லிவிட்டேனே ஒழிய எனகெண்டால் அதற்கு மனமே இல்லை. வெண்முரசு அளவுக்கு இல்லையாயினும் விஷ்ணுபுரம் அளவுக்கு நீண்டுவிட்ட ஒரு அற்புதமான கொமெண்ட். இதனைப்போய் அடிச்சுவடியே இல்லாமல் அழிப்பதா என்று ஒரே கவலையாக இருந்தது. கருத்து நல்லா இருக்கு. கிசோகருக்குத்தான் வேணாம். தனியா நானே படலைல ஒரு பதிவாப் போட்டால் என்ன? இல்லை, வேண்டாம். படலை என்ற ஒரு தளம் இருப்பது எனக்கே மறந்துவிட்டது. பேஸ்புக்கில ஷெயார் பண்ணினாலும் நாலு லைக்குகூட இப்ப விழுகுதில்ல. எதுக்காக இருக்கும்? நாலாயிரம் பிரண்டுகள் இருந்தாலும் நாலு பேரை மாத்திரம் விட்டிட்டு மத்த எல்லாரையும் அன்பஃலோ பண்ணி வச்சிருக்கிறதால மார்க்கு அலேர்ட் ஆகி என்னை இந்த சமூகத்திற்கு இருட்டடிப்பு செய்கிறான் என்று தெரிந்தது. என்ன செய்யலாம்?

கிசோகர் வாங்கித்தந்த ஐபோன் : அத்தியாயம் 2

‘மல்லி …’ கூப்பிடும் சத்தம் கேட்கிறது. ஆனால் ஆளைக் காணவில்லை. சின்னக் கக்கூசு. இதுக்குள்ள ஆரு ஒளிந்திருக்கமுடியும்? நான் சுற்றிச் சுற்றிப்பார்க்கிறேன். ம்ஹூம். மீண்டும் கொமெண்டியபடியே ஒண்டுக்கடிக்க ஆரம்பித்தேன். ‘மல்லி உன்னைத்தான்’ அப்போதுதான் கவனித்தேன். கொமெடுக்குப் பின்னாலிருந்துதான் சத்தம் கேட்டது. அங்கே ஒரு சின்னக் கரப்பான் பூச்சி. தலைகீழாகப் பிரண்டுகிடந்து துடித்துக்கொண்டிருந்தது. ஆச்சரியத்துடன் நான் கரப்பானிடம் கேட்டேன். ‘நீயா பேசியது?’ ‘யெஸ் யெஸ் … நான்தான் கடவுள், உன்னைத் தடுத்தாட்கொள்ள வந்தேன்..’

கிசோகர் வாங்கித்தந்த ஐபோன் : அத்தியாயம் 1

போன கிழமை கிசோகரின் புண்ணியத்தில் எனக்கு புதிதாக ஒரு ஐபோன் கிடைத்தது. அன்றைக்கும் வழமைபோல வெள்ளனவே நித்திரையால எழும்பி சூடா ஒரு தேத்தண்ணி வைக்கலாம் என்று கேத்திலை ஓன் பண்ணினேன். தண்ணீர் கொதிப்பதற்குள் பால்மாவையும் சீனியையும் ஒரு கப்புக்குள் போட்டுட்டு, அடுத்த கப்புக்குள் இரண்டு தேயிலை பக்கற்றைப் போட்டேன். அப்பவும் தண்ணீர் கொதிக்க ஒரு பத்துப்பதினைஞ்சு செக்கன் இருந்துது. அந்தப் பதினைஞ்சு செக்கன்களுக்குள் வாழ்க்கையில் நான் எவ்வளத்தையோ சாதித்திருக்க முடியும். சிங்குக்குள் முந்தைய நாள் பாத்திரங்கள் கழுவாமற் கிடந்தன. ஒன்றை எடுத்துக் கழுவி வைத்திருக்கலாம். குப்பைப்பையைக் கொண்டுபோய் வெளியே தொட்டிக்குள் போட்டிருக்கலாம். கழுவிக் காய வைத்திருந்த பிளேட்டுகளை கப்பேர்டுக்க வைத்திருக்கலாம். பாணுக்கு பட்டர் பூசியிருக்கலாம். வேலைகளா இல்லை. ஆனா எனக்கு அதுக்குள்ள ஒருக்கா பேஸ்புக்குக்குள்ள போயிட்டு வரலாம் என்று ஒரு அறுந்த யோசினை வந்துது. போனேன். அப்ப பிடிச்சுது சனி.