Skip to main content

Posts

தர்மசீலன்

ஆறாம் ஆண்டில்தான் தர்மசீலனை நான் முதன்முதலில் சந்திக்கிறேன். அனுமதிப் பரீட்சையினூடாக அந்த ஆண்டு தெரிவு செய்யப்பட்ட முப்பத்தாறு பேரில் நாங்களும் உள்ளடக்கம். அச்சுவேலி ஆரம்பப் பாடசாலையிலிருந்து அவன் வந்திருக்கவேண்டும். அப்போது வகுப்புக்கு வருகின்ற ஒவ்வொரு ஆசிரியருக்கும் எங்கள் பெயர், எந்தப் பாடசாலையிலிருந்து வந்திருக்கிறோம் என்று அனைவருமே ஒப்பிக்கவேண்டுமென்பதால் அவனது ஆரம்பப் பாடசாலையின் பெயர் சன்னமாக இன்னமும் ஞாபகத்தில் இருக்கிறது.

வாணி ஜெயராம்

  “எது சுகம் சுகம் அது, வேண்டும் வேண்டும்” என்று அந்தப்பாட்டு ஆரம்பிக்கும். வழமைபோல கொஞ்சம் உயர் சுருதிதான். இந்தப்பாட்டு இங்கே ஆரம்பித்தால் எங்கே போய் முடியுமோ என்று நமக்கெல்லாம் கவலை வரலாம். “கூடும் நேரம், யுகங்கள் கணங்கள் ஆகும், நீங்கும் நேரம் சில கணங்கள் யுகங்கள் ஆகும்” என்று மேலே போய் “வா, வா, மீண்டும் மீண்டும் தாலாட்டு” என்று பல்லவியே முதல் மாடிக்குச் சென்றுதான் ஓயும். ஆனால் அந்தப்பெடி ரகுமான் பல்லவியில் செய்தது போதாது என்று சரணத்தைத் தூக்கி அடுத்த மாடியில ஏத்திவிட்டிருக்கும். “சாம வேதம் நீ ஓது, வாடைத்தீயைத் தூவும்போது” என்று சொல்லி கூரையில் ஏறிவிட்டு, இதுக்குமேலே போனால் பேதம் என்று “வா இனி தாங்காது தாங்காது, கண்ணோரம் இந்நேரம் செந்தூரம் உண்டாக” என்று பெடி மீண்டும் பாட்டைக்கொண்டுவந்து பல்லவியில் இணைத்துவிடும். இந்தக் கொம்பசிசனை அதிகம் பேஸ் உள்ள ஒரு குரல்காரி பாடமுடியாது. சித்ராவினுடையது போன்ற மென்மையான குரல் வேண்டும், ஆனால் ஹை பிட்சில் குரல் கம்பிமாதிரி நிக்கோணும். அதுக்கு இரண்டு பேர் இருக்கிறார்கள். ஒருவர் சுவர்ணலதா. அடுத்தது வாணி ஜெயராம்.

சின்னான்

“இந்த நாட்டில் இனப்பிரச்சனை என்ற ஒன்றே கிடையாது, தமிழர்களுக்கு இந்த நாட்டில் சகல உரிமைகளும் உண்டு, எண்பத்து மூன்று இனப் படுகொலைபோன்று ஆரம்பக்காலங்களில் நாட்டில் இடம்பெற்ற வன்முறைகள் எல்லாம் அரசாங்கங்களால் நிகழ்த்தப்பட்டது. போர் ஆரம்பித்த பின்னர் நாட்டில் நிகழ்ந்த அத்தனை பிரச்சனைகளுக்கும் காரணம் தீவிரவாதமே. இறுதிப்போரில் இனப் படுகொலையே நிகழவில்லை. இப்போது நாட்டில் தீவிரவாதம் ஒழிந்துவிட்டதால் தமிழரின் பிரச்சனையும் தீர்ந்துவிட்டது. வெள்ளவத்தையில் தமிழ் மக்கள் சகல உரிமைகளோடும் வாழவில்லையா? தேவையில்லாமல் இந்தப் புலம்பெயர் புலிகள்தான் இனவாதத்தைத் தூண்டிக்கொண்டிருக்கிறார்கள்”

பொங்கல் நிகழ்வுகள்

அண்மைக்கால பொங்கல் நிகழ்வுகளில் அவதானித்த சில விசயங்கள். பொங்கல் அரசியலாக்கப்பட்டுவருகிறது. இது தமிழர்களுக்கான நிகழ்வு, இது ஒரு மத நிகழ்வு அல்ல என்ற வாதம் வலியுறுத்தப்படுகிறது. எனக்கு மிகவும் நெருக்கமான பாடும்மீன் சிறிஸ்கந்தராசா அண்ணா இதுபற்றி விரிவாக எழுதி பொங்கலுக்கு மத அடையாளம் சூட்டுவதை கடுமையாக எதிர்த்திருந்தார். எனக்கு இந்த விசயத்தில் சின்னக் கருத்துவேறுபாடு உண்டு. பொங்கல் ஒரு மண் சார்ந்த நிகழ்வு. அது ஒரு மதத்தின் போதனைகளிலிருந்து உருவானதல்ல. வேதங்களோ விவிலியமோ பொங்கலை நமக்கு அறிமுகம் செய்யவில்லை. உண்மைதான். மாற்றுக்கருத்து இல்லை. நாம் உழுதுண்டு வாழ்ந்த மண்ணில் இயற்கைக்கு உழவரும் மற்றவரும் நன்றி செலுத்துமுகமாகக் கொண்டாடப்படும் நிகழ்வு இது. அந்த நன்றி செலுத்தும் நிகழ்வு அவரவர் வாழ்வியலை அடிப்படையாகக்கொண்டு அமைந்திருக்கும். இயற்கையின் இருப்பான சூரியனுக்கு நன்றி செலுத்தி அதற்குப் புற்கை படைக்கும் புள்ளியிலேயே இயற்கையை இறைக்கு நாம் ஒப்பிட ஆரம்பித்துவிடுகிறோம். அந்த நிலையில் இயற்கையோடு சேர்த்து நாம் நம்பும் ஏனைய இறைகளுக்கும் துதி பாடுவதில் தவறு இல்லை என்றே படுகிறது. அது வீட்டின் கொல்ல

ஶ்ரீரங்கத்து தேவதைகள்

காலையிலிருந்து “ஶ்ரீரங்கத்து தேவதைகள்” வாசித்துக்கொண்டிருக்கிறேன். முப்பது வருடங்களுக்கு முன்னர் வாசித்த புத்தகம். இப்போது மீண்டும் வாசிக்கையில் கதைகள் எல்லாவற்றையும் மறந்துவிட்டேன் என்று தெரிகிறது. ஆனால் அவற்றின் ஆதார விசயங்களை மறக்கவில்லை. இச்சிறுகதைகளின் மூலப் பாத்திரமான ரங்கராஜனின் வயதுதான் அப்போது எனக்கும். கிட்டத்தட்ட அந்தப் பதின்மத்துச் சிறுவனின் குணமும்தான் எனக்கு. எல்லாவற்றிலும் கூர்ந்த அவதானிப்பு இருக்கும். ஆனால் எதனையும் முன்னின்று செய்வதில்லை. என் கொல்லைப்புறத்துக் காதலிகளில் வருகின்ற பல கதைகளில் வரும் குமரனிடம் ஶ்ரீரங்கத்து தேவதைகளின் ரங்கராஜன் எட்டிப்பார்ப்பது தற்செயல் அல்ல. கடந்த சில வருடங்களாக தமிழில் வாசித்தவை எல்லாமே மண்டையைக் காயவைக்கும் கதைகளே. ஆங்கிலத்தில் அப்படியல்ல. ஆங்கில இலக்கியத்தில் சமகாலத்தில் மிகவும் கொண்டாடப்படும் கதைகள்கூட எளிமையான வடிவமைப்பையே கொண்டிருப்பவை. மண்டைகாய வைக்கும் கதைகள்வீது விமர்சனம் ஏதும் கிடையாது. கதைக்குத் தேவை. எழுதுகிறார்கள். ஆனால் அதுதான் இலக்கியம் என்றொரு மாயை பொல்லாதது. மனிதர்களுடைய நுண்ணுணர்வுகளை அற்புதமாக விவரிக்கக்கூடிய அலிஸ் மன்ற

அம்மா ஒரு கிரிக்கட் பைத்தியம்

இன்று நேற்று இல்லை. எங்கள் வீட்டில் டிவி வந்த காலத்திலிருந்தே அவர் கிரிக்கட்டை ரசித்துப் பார்ப்பது வீட்டில் சகஜமாக நடக்கும் விசயம். என் ஞாபகமறிந்து இந்தியன் ஆர்மிக்காலத்திலிருந்தே எங்கள் வீட்டில் கிரிக்கட் எப்போதும் டிவியில் போகும். அப்போது அவர் கபில்தேவ், கவாஸ்கரின் தீவிர விசிரி. பின்னர் தொண்ணூறூகளில் சச்சின், கங்குலியின் ரசிகையானார். கங்குலி நூறு அடித்தால் போதும், அடுத்தடுத்து ஸ்பின்னருக்கு வெளிய வந்து அடிக்கும் சிக்ஸர்களுக்கு அம்மாவின் கண்கள் விரிந்து தயாராகிவிடும். அப்போதெல்லாம் கிரிக்கட் நாட்களில் இன்னிங்ஸ் பிரேக்கின்போதுதான் எங்கள் வீட்டில் புட்டு அவிக்கப்பட்டுவிடும். துணைக்கு எப்போதுமே மத்தியானக் கறிதான். பின்னேரம் அவர் டிவிக்கு முன்னர் ஈசிச்செயாரில் உட்கார்ந்துவிட்டால் மட்ச் முடிந்து பிரசெண்டேசனும் நிகழ்ந்தபின்னர்தான் ரிமோட் மற்றவர் கைக்குப் போகும். அப்படி ஒரு வெறி. ஆச்சரியம் என்னவென்றால் எப்போதுமே அம்மா பெரிதாக நாடகங்கள் எதையும் பார்த்ததில்லை. இப்போதும் டிவியில் பார்ப்பது யூடியுப்தான். அதுவும் வீட்டுத்தோட்டம் பற்றிய வீடியோக்கள். Jaffna Suthan காட்டுகின்ற மாலைதீவும் டுபாயும். இ

விஷ்ணுபுரம் - ஹம்பி

விஷ்ணுபுரம் நாவலை நான் மிகத் தாமதமாகத்தான் வாசித்தேன். ஹம்பி செல்வதற்கு முன்னர் நாவலை வாசித்திருக்கலாம் என்று இப்போது தோன்றுகிறது. நகரங்கள், கலாசாரங்கள், மதங்கள், தத்துவங்கள் எப்படி உருவாகி, கோலோச்சி, அதிகார உச்சங்களை அடைந்து பின்னர் அப்படியே நலிந்து ஒழிந்து போகின்றன என்பதை விஷ்ணுபுரம் எழுத்துகளில் விபரித்தது என்றால் ஹம்பியில் அதனைக் கண்கூடாகவே அறியலாம். அதன் வரலாற்றை, உச்சங்களை இன்றைய எச்சங்களினூடே காணமுடியும். ஹம்பியின் சமகால நிலையைத்தான் விஷ்ணுபுரத்தின் மூன்றாவது பாகம் விபரிக்கிறது. சில வருடங்களுக்கு முன்னர் அலுவலக வேலையாக பெங்களூர் செல்லவேண்டியிருந்தது. அப்போது வார இறுதி ஒன்றில் ஹம்பிக்கு பயணம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. ஆறு மணி நேர ரயில் பயணம். அவ்வளவு நேரம் பயணம் செய்ய வேண்டுமா என்று முதலில் தயங்கினாலும் பின்னர் பஞ்சியைப் பார்க்காமல் போகலாம் என்று முடிவெடுத்துச் செய்த பயணம். அது வாழ்நாளில் மறக்கமுடியாத வரலாற்றின் அற்புதமான காலங்களையும் அந்த நிலங்களின் தற்போதையை நிலையையும் மனிதர்களையும் எனக்கு அறியத்தந்தது. பயணங்கள் நமக்குக் கிடைக்கும் கொடை. அவற்றை ‘அடுத்தமுறை பார்க்கலாம்’ என்ற

குஞ்சரம் ஊர்ந்தோர்

சீமான் பத்திநாதன் பர்ணாந்து எழுதிய ‘குஞ்சரம் ஊர்ந்தோர்’ நாவலைப் பற்றி நான் எழுதிய கட்டுரை ஒன்று அகழ் இதழில் வெளியாகியுள்ளது. https://akazhonline.com/?p=3856

தீத்துது

நாலடியார் எழுதப்பட்டது சங்கமருவிய காலத்தில் (கி.பி 250) என்பார்கள். தமிழ் நிலங்களில் சமணம் கோலோச்சிய காலம் அது. இந்தத் தொகைகூட சமண முனிவர்களால் எழுதப்பட்டிருக்கலாம் என்றுதான் கருதப்படுகிறது. ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதியில் வருகின்ற ‘நாலு’ என்பது நாலடியாரைக் குறிப்பது என்பதை பலர் அறிந்திருக்கலாம். அந்த 'இரண்டு' எது என்று தெரியாவிடில் அடுத்த பத்தியை வாசிக்காதீர்கள்.

அப்பித் கொட்டியாதமாய்

ரசங்கவை நான் கடைசியாகக் கொழும்பில்தான் பார்த்ததாக ஞாபகம். இருபது வருடங்களுக்கு முன்னர். அவன் இலண்டன் செல்லப்போவதாகச் சொன்னதும் அலுவலகத்தில் எல்லோரும் அவனுக்குப் பிரியாவிடை விருந்து ஒன்று கொடுத்தோம். பணம் சேகரித்து சில பரிசுகளும் வாங்கி வழங்கினோம். அதன் பிறகு நானும் இலண்டனுக்குப் புலம் பெயர்ந்திருந்தாலும் இருவருக்குமிடையே தொடர்புகள் ஏதும் இருக்கவில்லை. இரண்டாயிரத்து ஒன்பதில் என்னை அவன் தீவிரவாதத்துக்குத் துணை போவதாகக் குற்றம் சாட்டியிருந்தான். நான் பதிலுக்கு அவனையும் ஒரு அரச தீவிரவாதி என்றேன். ஒடுக்கப்பட்ட கூட்டத்திலிருந்து உருவாகும் தீவிரவாதியைவிட அதிகாரத்திலிருக்கும் தீவிரவாதியே ஆபத்தானவர் என்று நான் பதில் சொல்லியிருந்தேன். இருவருக்கும் சண்டை. அவன் என்னை நட்பு விலக்கினானா அல்லது நான் அவனை நட்பு விலக்கினானா என்று தெரியவில்லை. அவன் என் பெயரைக் கொடுத்திருப்பானோ என்ற பயத்தில் அடுத்த ஐந்து வருடங்கள் நான் ஊர்ப்பக்கம் தலைவைத்துப் படுக்கவில்லை. ஆனாலும் லின்க்ட் இன்னில் அவனின் நடவடிக்கைகளை அடிக்கடி கவனிப்பேன். ராஜபக்ச சகோதரர்களின் தீவிர ஆதரவாளன் அவன். நாட்டின்மீது அதீத பற்றும் கொண்டவன். ஒருமு