Skip to main content

டமில் மக்களுக்கு முரளி எழுதும் கடிதம்!

 

images

என் அன்புக்குரிய டமில் மக்களே,

ஐ தின்க், எங்க பிரசிடெண்ட் செய்யுற அபிவிருத்தி இஸ் குட். என்னால ஸ்ரீலங்கன் கிரிக்கட் அணில லீடிங் ஸ்பின்னரா இருக்கமுடியுமின்னா ஏன் இந்த ஜனங்களால முடியாது? என்னால எய்ட் ஹண்ட்ரட் விக்கட்ஸ் எடுக்கமுடியுதுன்னா, வை கான்ட் அதர்ஸ்? தமிழ் சிங்களம் என்று யாரையும் பிரிச்சு பாக்காதீங்க. நான் டீமில இருக்கறப்போ பீஸ் இருந்தது. சமாதானம். ஒருதடவை ஏசியன் லெவன் டீமுல கப்டினாக இருந்தன் தானே. ஸ்ரீலங்கன் டீமுல வைஸ் கப்டினாவும் இருந்தன். கப்டினா ஆக முடியல்ல. பட் அதுக்கு வன் ரீசன் இருக்கி. நான் சிங்களம் மிச்சம் பேசுவேன். ஆல் டமில்ஸ் நிச்சயமா சிங்களம் படிக்கணும். பிரித் ஒதேக்க நூலைப்பிடிச்சுகிட்டு கும்பிடணும். நீங்க சிங்கள படிச்சா சிங்களீஸ் தமிழ் படிக்க தேவையில்ல தானே. எதுக்கு பிறகு அவங்களும் தமிழ் படிச்சு, அப்புறமா தமிழன் சிங்களத்திலயும் சிங்களவன் தமிழிலையும் பேசி குழம்பி போய், வேஸ்ட்டு. அச்சுவலி வி நீட் வன் பாஷா திட்டம்.

 

mervin_silva

(சிராவ மஷான்.. சிராவ)


ஜாப்னாவுல ஆர்ப்பாட்டம் செஞ்சாங்க தானே. அந்த ஜனங்களை யாரோ தப்பா தூண்டியிருக்கிறாங்க.  .. டரெல் ஹயர் நான் எறியறேன் எண்டு சொன்னப்போ, அம்பயர் சொன்னத மதிச்சு அர்ஜூன நடந்தாரு. அதபோல நீங்களும் எங்க பிரசிடெண்ட் சொன்னத கேட்டு நடக்கோணும். திருப்பி பேசபடாது. பசங்க காணாம போனா அத பத்தி யோசிக்காம வேற பசங்க உருவாக்கிறதில வர்க்அவுட் பண்ணனும். அத வுட்டுட்டு ஆர்ப்பாட்டம் பண்ணுறது றோங். கமரூன் வரும்போது கள்ளு குடுக்கிறத வுட்டிட்டு மகஜர் குடுக்கிறீங்க.

8(கியல வடக்னா முரளி)

நம்ம பிரசிடெண்டை நீங்கல்லாரும் பிலீவ் பண்ணனும். அவரு டெவலப்மென்ட் முழுசும் நோர்த்துக்கு தான் செய்யுறார். ஏர்போர்ட், ஹார்பர், ப்ளே கிரவுண்ட், ஹைவே எல்லாமே நோர்த்துக்கு னே!.. நீங்க வேணும்னா அந்தார்டிகாவுக்கு போயி நின்னுகிட்டு நோர்த்து பாருங்க .. அம்பாந்தோட்டை தானே தெரியும்?

mervin(கொடாய் முரளி .. நியம)

நெசத்தில வோர்ல பாதிக்கப்பட்டது நானு தான். பாகிஸ்தானில நாங்க போயக்கிட்டுருக்கோம். திடீர்னு டெரரிஸ்ட் ஷூட் பண்ணினாங்க.  நான் உசக்க பணிஞ்சு போனதில தான் உசிர் தப்பினேன். பட் அதில என்னைவிட சிங்களீஸ் தான் ரொம்ப தீவிரவாதத்தால பாதிக்கப்பட்டது. சமரவீரவோட நெஞ்சு பிரிஞ்சு போச்சு. இது கமரூனுக்கு தெரியாது. டமில்ஸ் ஸ்ரீலங்காவுல நடந்ததை மறந்துட்டு பாகிஸ்தான்ல நமக்கு நடந்த தீவிரவாத தாக்குதல பத்தி பேசணும். வெஸ்டேர்ன் போர்சஸ் இன்வோல்வ்ட் இருக்கணும். பாகிஸ்தானில எங்க பஸ்ல எப்படி அமேரிக்கா குண்டு வச்சான்னு இன்டர்நேஷனல் இன்குவாரி வேணும்.

2223035629_de3b6a8af1
(மாற முரளி, மாற)

என்னைய கம்புர் கலகம் பீபில் கூப்பிட்டு பாராட்டு விளா வச்சாங்க. நான் அங்கிட்டு இங்கிலீஷ் தான் பேசினேன். எனக்கு தமிழ் தெரியாது எண்டதால தான் இங்கிலிஷ் பேசினேன்னுறாங்க. பட் தட்ஸ் ரோங். டமில்நாட்ல நடந்த கொஃபி வித் அனு ஷோவுல நான் தமிழ் தான் பேசினேன். என்னமோ தெரியேல்ல ஸ்ரீலங்கால மட்டும் எனக்கு தமிழ் பேச மாற வெட்கம். தட்ஸ் ரியலி குட். எவ்வ்ரி டமில் பேர்சனும் இப்படி தான் வெட்கப்படணும். அப்போ தான் சிங்கள பாஷாவை கத்துகிட்டு பெரிசா வரலாம். ஐ தின்க் மகாவம்சம் ஷுட் பி ட்ரான்ஸ்லெடெட் இன் டமில். அப்போ தான் டமில் எவ்ளோ கெட்ட ஜாதின்னு தெரியும் . ஐ தினக் ஐ ஆல்வேஸ் தாங் அர்ஜூன அண்ட் துட்டகைமுனு யூ னோ. அண்ட் மகிந்த ஆஸ் வெல்.

Mervin-Silva2918

(எல கிரி முரளி)

லாஸ்ட் பட் நொட் லீஸ்ட், உங்க வீட்ல யாராச்சும் காணாம போனா, இல்ல ரேப் பண்ணுபட்டா அத மறந்திடுங்க. எதிர்காலத்தில காணாம போகாம இருக்க கிரிக்கட் வெளையாடுங்க. ஒரு ஐடியா கொடுக்கறேன். ஆர்மியும் ரேப்பண்ணுப்பட்ட பொண்ணுகளும் நட்பு ரீதியான கிரிக்கட் ஆடலாம். இட்ஸ் இன்டரெஸ்டிங். நான் வேணும்னா வந்து போல் போடறேன். கிரிக்கட் மூலம் எல்லாத்தையும் மறந்து சமாதானமா போகலாம். நீங்க எப்புடி ஸ்ரீலங்கன் கிரிக்கட் டீமுக்கு சப்போர்ட் பண்ணுறீங்களோ அப்பிடியே கவர்மந்தையும் சப்போர்ட் பண்ணுங்க. கொடி பிடியுங்க. பிரசிடெண்ட் எல்லாமே செய்வாரு.

அல்லா போலும் மகிந்தாக்கே.

ரொம்ப தாங்க்ஸ்!
முரளி அய்யே

Muttiah-Muralitharan-Images-11-300x242

----------------------------------------------- யாவும் கற்பனை அல்ல -------------------------------------------------

படங்கள் : இணையம்