Skip to main content

"சமாதானத்தின் கதை" உரிமைத்தொகை


காலையில் இலாச்சி துப்புரவாக்கிக்கொண்டிருக்கும்போது கண்ணில் பட்டது.

“சமாதானத்தின் கதை” நூலுக்கான முதற்பதிப்பு உரிமைப்பங்கை புத்தகம் வெளியாகி ஒரு மாதத்திலேயே ஆதிரை வெளியீட்டாளர்கள் எனக்குக் கொடுத்துவிட்டிருந்தார்கள். குறிப்பாகப் புத்தகம் குறித்த எந்தவித நிகழ்வுகளும் இடம்பெறமுன்னமே முந்நூறு பிரதிகள் விற்பனை செய்யப்பட்டதும் அதற்கான உரிமைப்பங்கை வெளியீட்டாளர் உரிய நேரத்தில் கொடுத்ததும் மகிழ்ச்சிக்குரியதும் நம்பிக்கையூட்டும் நிகழ்வுகள்தாம். புத்தக வெளியீடு குறித்த நம்பிக்கைகளை இவை விதைக்கின்றன.
ஆதிரை குழுமத்துக்கும் அவர்களுக்கு உதவியாக இருந்த விநியோகக் குழுமங்களுக்கும் நன்றி. அதைவிட இதனை சாத்தியமாக்க உதவிய வாசகர்கள் அனைவருக்கும் என் அன்பும் நன்றிகளும்.
"சமாதானத்தின் கதை" நூலை இந்தியாவில் "டிஸ்கவரி புக் பாலசிலும்", இலங்கையில் வெண்பா புத்தகசாலை, பூபாலசிங்கம் புத்தகசாலையிலும் பெற்றுக்கொள்ளலாம்.



Popular posts from this blog

அம்மாளாச்சி கொடியேற்றம்

பசித்தது. சமைக்கப் பஞ்சியாகவும் இருந்தது. அம்மாவுக்கு அழைப்பெடுத்தேன். இரவு உங்க என்ன சாப்பாடு? மரக்கறிதான். இண்டைக்கு அம்மாளாச்சிண்ட கோயில் கொடி. மறந்திட்டியா? அய்யய்யோ. அப்ப முட்டைகூட பொரிக்கமாட்டீங்களா?

பழக்கப்படுத்திக்கொள்ளு பாப்பா

‘ஓ ஜனனி, என் ஸ்வரம் நீ’ என்ற பாடலைத் தொண்ணூறுகளில் வானொலி கேட்டு வளர்ந்தவர்களுக்குத் தெரிந்திருக்கும். புதிய ராகம் திரைப்படத்துக்காக இளையராஜா இசையில் மனோ பாடிய பாடல் என்ற அறிவிப்பாளரின் குரல்கூட இக்கணம் இதனை வாசிக்கும் சில நேயர்களின் காதுகளில் கேட்கவும் கூடும். அதேபோல இரண்டாயிரமாம் ஆண்டளவில் சக்தி, சூரியன் எப்.எம் வானொலிகளைக் கேட்டவர்கள் ‘ஏதோ மின்னல், ஏதோ மின்னல்’ என்ற பாடலை மறந்திருக்கமாட்டார்கள். சபேஷ் முரளி இசையில் மாதங்கியும் திப்புவும் பாடிய பாடல் அது. அக்காலத்தில் ஈழத்து வானொலி நேயர்கள் மத்தியில் மிகப் பிரபலமாக இருந்த இப் பாடல் வெளிவந்த திரைப்படத்தின் பெயர் ‘ஆயிரம் பொய் சொல்லி’.

அணையா விளக்கு - நிகழ்வு அறிவித்தல்

துயர் மிகுந்த இந்த அணையா விளக்குப் போராட்டத்தில் ‘ உஷ்… இது கடவுள்கள் துயிலும் தேசம் ’ கதை வாசிக்கப்படுகிறது. இருக்கும் கொஞ்ச நஞ்ச அறங்களும் நீர்த்துப்போன சம கால உலக ஒழுங்குகளுக்கிடையில் இம்மக்களின் உறுதியும் ஒற்றுமையும்தான் சிறு நம்பிக்கையையேனும் கொடுக்கிறது. நிகழ்வு அறிவித்தல் _______________ அன்புக்குரியவர்களே! அணையா விளக்கு போராட்டத்தின் மாலை நிகழ்வாக 5.30 மணிக்கு ஜே.கே அவர்களின் படுகொலை செய்யப்பட்ட மாணவி கிருசாந்தி தொடர்பான, “உஷ்.. இது கடவுள்கள் துயிலும் தேசம்” என்ற கதை வாசிப்பு இடம்பெறும்.