Skip to main content

சாமந்த் மயூரன் நேர்காணல்



சாமந்த் மயூரனுக்கு பத்துவயதுதான். யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் தரம் ஆறில் கல்வி கற்கிறார். சில நாட்களுக்கு முன்னர் அவருடைய அம்மா என்னைத் தொடர்புகொண்டார். தன் மகனுக்கு ‘என் கொல்லைப்புறத்துக் காதலிகள்’ நூலை வாசிக்கக்கொடுத்ததாகச் சொன்னார். சாமந்துக்கு புத்தகம் நன்றாகப் பிடித்துப்போனதில் என்னோடு பேசவேண்டுமென்று மகன் கேட்டதாகவும் குறிப்பிட்டார்.

அடுத்தநாளே சூமில் நாங்களிருவரும் உரையாடல் ஒன்றைச் செய்தோம். சூம் மீட்டிங்கை ஒருங்கமைத்து, லிங் அனுப்பி, ரெக்கோர்டிங்கையும் செய்து, வீடியோவையும் அனுப்பிவைத்தது சாமந்த்தான்.
சாமந்தின் இப்பகிர்வு என் எழுத்துக்குக் கிடைத்த ஆகச்சிறந்த வாசிப்பனுபவமாக அமைந்திருந்தது. சாமந்த் போன்றவர்கள்தான் என் அடுத்த வரிகளுக்கான நம்பிக்கைகளையும் ஊக்கங்களையும் விதைப்பவர்கள். நம் நாட்களை அழகாக்குபவர்கள்.

Popular posts from this blog

அம்மாளாச்சி கொடியேற்றம்

பசித்தது. சமைக்கப் பஞ்சியாகவும் இருந்தது. அம்மாவுக்கு அழைப்பெடுத்தேன். இரவு உங்க என்ன சாப்பாடு? மரக்கறிதான். இண்டைக்கு அம்மாளாச்சிண்ட கோயில் கொடி. மறந்திட்டியா? அய்யய்யோ. அப்ப முட்டைகூட பொரிக்கமாட்டீங்களா?

பழக்கப்படுத்திக்கொள்ளு பாப்பா

‘ஓ ஜனனி, என் ஸ்வரம் நீ’ என்ற பாடலைத் தொண்ணூறுகளில் வானொலி கேட்டு வளர்ந்தவர்களுக்குத் தெரிந்திருக்கும். புதிய ராகம் திரைப்படத்துக்காக இளையராஜா இசையில் மனோ பாடிய பாடல் என்ற அறிவிப்பாளரின் குரல்கூட இக்கணம் இதனை வாசிக்கும் சில நேயர்களின் காதுகளில் கேட்கவும் கூடும். அதேபோல இரண்டாயிரமாம் ஆண்டளவில் சக்தி, சூரியன் எப்.எம் வானொலிகளைக் கேட்டவர்கள் ‘ஏதோ மின்னல், ஏதோ மின்னல்’ என்ற பாடலை மறந்திருக்கமாட்டார்கள். சபேஷ் முரளி இசையில் மாதங்கியும் திப்புவும் பாடிய பாடல் அது. அக்காலத்தில் ஈழத்து வானொலி நேயர்கள் மத்தியில் மிகப் பிரபலமாக இருந்த இப் பாடல் வெளிவந்த திரைப்படத்தின் பெயர் ‘ஆயிரம் பொய் சொல்லி’.

அணையா விளக்கு - நிகழ்வு அறிவித்தல்

துயர் மிகுந்த இந்த அணையா விளக்குப் போராட்டத்தில் ‘ உஷ்… இது கடவுள்கள் துயிலும் தேசம் ’ கதை வாசிக்கப்படுகிறது. இருக்கும் கொஞ்ச நஞ்ச அறங்களும் நீர்த்துப்போன சம கால உலக ஒழுங்குகளுக்கிடையில் இம்மக்களின் உறுதியும் ஒற்றுமையும்தான் சிறு நம்பிக்கையையேனும் கொடுக்கிறது. நிகழ்வு அறிவித்தல் _______________ அன்புக்குரியவர்களே! அணையா விளக்கு போராட்டத்தின் மாலை நிகழ்வாக 5.30 மணிக்கு ஜே.கே அவர்களின் படுகொலை செய்யப்பட்ட மாணவி கிருசாந்தி தொடர்பான, “உஷ்.. இது கடவுள்கள் துயிலும் தேசம்” என்ற கதை வாசிப்பு இடம்பெறும்.