Skip to main content

நேர்காணல் - Focus Tamil



நேற்றைய ‘அறிவோம் பகிர்வோம்’ நிகழ்ச்சியில் ‘விளமீன்’ சிறுகதை எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது.

நாற்பத்தைந்து நிமிடங்கள் அச்சிறுகதையை வாசித்துவிட்டு பின்னர் அடுத்த நாற்பத்தைந்து நிமிடங்கள் அக்கதையைப் பற்றியும் கதைக் களம் சார்ந்த சமூக விசயங்களையும் Shanthiயும் Kaladeviயும் அலசினார்கள். நானும் என் பங்குக்கு சில அனுபவங்களைப் பகிர்ந்திருந்தேன்.

'எழுதப்பட்ட பின்னர் கதைகள் நம்மிடமிருந்து பிரிந்துபோய்விடுகின்றன' என்று 'சந்திரா என்றொருத்தி இருந்தாள்' சிறுகதையில் சொல்லப்பட்டிருக்கும். நேற்றைய நிகழ்வில்கூட என்னால் ஒரு வாசகராகத்தான் அக்கதையைப்பற்றி பேசமுடிந்தது. அதென்ன ‘பதின்மக் காதலின் இரண்டாம் நாள்’ என்று சாந்தி அக்கா கேட்டார். அப்படியொரு வாக்கியம் எழுதும் கணம் எப்படி என்னுள் வந்து உதித்தது என்று கொஞ்சம் ஆச்சரியமாகவே இருந்தது. இக்கணங்கள் கொடுக்கும் உவகையே தொடர்ந்து எழுதவும் வைக்கிறது.
Shanthi Sivakumar, Kaladevi Balashanmugan இருவருக்கும் நிகழ்ச்சியை ஒழுங்கமைத்த Focus Thamil அமைப்புக்கும் நன்றி.

Popular posts from this blog

அம்மாளாச்சி கொடியேற்றம்

பசித்தது. சமைக்கப் பஞ்சியாகவும் இருந்தது. அம்மாவுக்கு அழைப்பெடுத்தேன். இரவு உங்க என்ன சாப்பாடு? மரக்கறிதான். இண்டைக்கு அம்மாளாச்சிண்ட கோயில் கொடி. மறந்திட்டியா? அய்யய்யோ. அப்ப முட்டைகூட பொரிக்கமாட்டீங்களா?

பழக்கப்படுத்திக்கொள்ளு பாப்பா

‘ஓ ஜனனி, என் ஸ்வரம் நீ’ என்ற பாடலைத் தொண்ணூறுகளில் வானொலி கேட்டு வளர்ந்தவர்களுக்குத் தெரிந்திருக்கும். புதிய ராகம் திரைப்படத்துக்காக இளையராஜா இசையில் மனோ பாடிய பாடல் என்ற அறிவிப்பாளரின் குரல்கூட இக்கணம் இதனை வாசிக்கும் சில நேயர்களின் காதுகளில் கேட்கவும் கூடும். அதேபோல இரண்டாயிரமாம் ஆண்டளவில் சக்தி, சூரியன் எப்.எம் வானொலிகளைக் கேட்டவர்கள் ‘ஏதோ மின்னல், ஏதோ மின்னல்’ என்ற பாடலை மறந்திருக்கமாட்டார்கள். சபேஷ் முரளி இசையில் மாதங்கியும் திப்புவும் பாடிய பாடல் அது. அக்காலத்தில் ஈழத்து வானொலி நேயர்கள் மத்தியில் மிகப் பிரபலமாக இருந்த இப் பாடல் வெளிவந்த திரைப்படத்தின் பெயர் ‘ஆயிரம் பொய் சொல்லி’.

அணையா விளக்கு - நிகழ்வு அறிவித்தல்

துயர் மிகுந்த இந்த அணையா விளக்குப் போராட்டத்தில் ‘ உஷ்… இது கடவுள்கள் துயிலும் தேசம் ’ கதை வாசிக்கப்படுகிறது. இருக்கும் கொஞ்ச நஞ்ச அறங்களும் நீர்த்துப்போன சம கால உலக ஒழுங்குகளுக்கிடையில் இம்மக்களின் உறுதியும் ஒற்றுமையும்தான் சிறு நம்பிக்கையையேனும் கொடுக்கிறது. நிகழ்வு அறிவித்தல் _______________ அன்புக்குரியவர்களே! அணையா விளக்கு போராட்டத்தின் மாலை நிகழ்வாக 5.30 மணிக்கு ஜே.கே அவர்களின் படுகொலை செய்யப்பட்ட மாணவி கிருசாந்தி தொடர்பான, “உஷ்.. இது கடவுள்கள் துயிலும் தேசம்” என்ற கதை வாசிப்பு இடம்பெறும்.