Skip to main content

"வெள்ளி" நாவல் பற்றி அமல்ராஜ் பிரான்ஸிஸ்



ஒரு இலக்கியக் கிழவனுக்கும், நவீன ரோபோட்டிக் என்ஜினியரிங்கில் கொடிக்கட்டிப் பறக்கும் ஒரு மொடேர்ன் பையனுக்கும் இடையில் நடக்கும் ஒரு இரண்டு மணிநேர சம்பாசனை போல இருக்கிறது வெள்ளி. நவீன, விஞ்ஞான விருத்தியடைந்த ஒரு உலகத்திற்குள் நம்முடைய சங்க கால இலக்கியத்தையும், புராணங்களையும் மிக எளிமையாக உள்நுழைத்து, அதே இலக்கிய நயத்தையும், சுவையையும், அதே சங்க காலச் சூழலிலேயே வாசகர்களுக்குக் கொடுக்க முடியுமா என்றால், ஆமாம், முடியும் என்கிறது வெள்ளி. அதற்குத் தேவை வெறொன்றுமல்ல, ஜெகே போன்ற ஒரு எழுத்தாளர். அவ்வளவுதான். அந்தத் தளத்தில் வெள்ளி ஒரு பிரமாதமான தொடக்கப்புள்ளி.

காலத்தை வைத்துப் பார்த்தால், இலக்கியத்தில் இதுவொரு hybrid நாவல். இரண்டு முனைகளை (காலங்களை) இழுத்து, ஒரேயிடத்தில் வைத்து முடிச்சிடும் வேலை. சங்க காலத்தில் நவீனமும், நவீனத்தில் சங்க காலமும் கலந்து, கலைந்து, சின்னாபின்னமாகாமல், ஒவ்வொரு காலத் தனித்துவங்களையும் அதனதன் சுவைகளோடு பரிமாறும் நேர்த்தி சூப்பராக இருக்கிறது.
இவ்வாறான ஒரு கதைக்களத்தின் போட்டேன்ஷியல் ரிஸ்க் என்று பார்த்தால், சிலவேளை பச்சை இலக்கிய கிழவர்களுக்கு இது பிடிக்காமல் போகலாம். ஒரு அந்நியச் சூழலில் பிறந்து வாழும் ஒரு நவீன இளைஞனுக்குக் கடுப்படிக்கலாம். ஆனால், என்னைப் பொறுத்தவரை ஒரு interesting ஆன கன்செப்ட், திறப்பு. Such an innovative exploration!
புத்தகத்தின் வடிவமைப்பையும் அதே கென்செப்டிலேயே செய்ய முயற்சித்திருக்கிறார்கள். ஜேகே அண்ணரின் மற்றைய மூன்று புத்தகங்களோடும் ஒப்பிட்டால் - வடிவமைப்பில் - ஒரு பெரும் மாற்றம். உண்மையில், புத்தக வடிவமைப்பு என்னைவிட யஷ்ஷுக்குப் பிடித்திருந்தது. அவனுடைய புத்தகங்களின் சாயல் அடித்ததோ என்னவோ. அட்டையும், பக்கங்களில் வரும் படங்களும், போட்டோத் தாள்களும் அவனுக்கு தன்னுடைய புத்தகங்களை ஞாபகமூட்டியிருக்கலாம். பை த வே, அந்தப் படங்கள் பிரமாதம். ஐ லவ்ட் இட்.
அதிக நீளமற்ற கதை. குறுநாவலை விட நீளம், நாவலை விடக் குள்ளம் எனலாம். தீவிர வாசிப்பாளர்கள் ஒரு கப்புச்சினோவோடு குந்தினால், இரண்டாவது குவளை பற்றிய டெம்டேஷன் வருவதற்குள் முடித்துவிடலாம். என்னைப் போன்ற சோம்பேறிகளும், மண்டை விறைக்கும் நேர வித்தியாசத்தில் ‘வேர்க்கிங் ஃப்ரம் ஹோம்’ வேலை பார்ப்பவர்களும் இரண்டு மூன்று நாட்களில் ஒப்பேற்றலாம்.
தனிப்பட்ட ரீதியில், ஜேகே அண்ணரின் மாஸ்டர் பீஸ் என்றால் எனக்கு எ(இ)ப்போதும் ‘என் கொல்லைப் புறத்துக் காதலிகள்’ தான். அடாவடித்தனமான எழுத்து அது. கதைகளிலும், எழுத்திலும் நம்மை ஒரு மாதம் கட்டிவைத்து நினைத்து நினைத்துச் சிரிக்கப்பண்ணியவர் மனுசன். வெள்ளி அதை மிஞ்சவில்லை. கந்தசாமியும் கலக்சியையும், வெள்ளியையும் ஒரே ஜோர்னரில் போடலாம் (கிட்டத்தட்ட, ஓரளவு) என்றால், என் பெட் கந்தசாமியும் கலக்சியுமுக்கே உண்டு.
ஈழத்து நாவல் பரப்பில், எதிர்பாராத அல்லது எதிரெதிரான துருவங்களை இணைத்து, கோடாக்கி, கதைகளைப் பின்னி, ஆச்சரியப்படுத்துவதில் ஜேகே அண்ணர் எப்பொதும் தனித்துவமானவர். படலையில் ஆரம்பித்து வெள்ளி வரை நல்ல அனுபவங்களையே தந்துகொண்டிருக்கும் எழுத்தாளர். கந்தசாமியையும் கலக்சியையும் ப ப்புவா நியூகினிக்கும், சமாதானத்தின் கதையை லெபனானுக்கும் அனுப்பியது போல வெள்ளியை பேங்கொக் வரை அனுப்பி வைத்ததற்கு நன்றிகள் தல. போகுமிடமெல்லாம் கூடவே வந்துகொண்டிருக்கிறீர்கள்.

Popular posts from this blog

அம்மாளாச்சி கொடியேற்றம்

பசித்தது. சமைக்கப் பஞ்சியாகவும் இருந்தது. அம்மாவுக்கு அழைப்பெடுத்தேன். இரவு உங்க என்ன சாப்பாடு? மரக்கறிதான். இண்டைக்கு அம்மாளாச்சிண்ட கோயில் கொடி. மறந்திட்டியா? அய்யய்யோ. அப்ப முட்டைகூட பொரிக்கமாட்டீங்களா?

பழக்கப்படுத்திக்கொள்ளு பாப்பா

‘ஓ ஜனனி, என் ஸ்வரம் நீ’ என்ற பாடலைத் தொண்ணூறுகளில் வானொலி கேட்டு வளர்ந்தவர்களுக்குத் தெரிந்திருக்கும். புதிய ராகம் திரைப்படத்துக்காக இளையராஜா இசையில் மனோ பாடிய பாடல் என்ற அறிவிப்பாளரின் குரல்கூட இக்கணம் இதனை வாசிக்கும் சில நேயர்களின் காதுகளில் கேட்கவும் கூடும். அதேபோல இரண்டாயிரமாம் ஆண்டளவில் சக்தி, சூரியன் எப்.எம் வானொலிகளைக் கேட்டவர்கள் ‘ஏதோ மின்னல், ஏதோ மின்னல்’ என்ற பாடலை மறந்திருக்கமாட்டார்கள். சபேஷ் முரளி இசையில் மாதங்கியும் திப்புவும் பாடிய பாடல் அது. அக்காலத்தில் ஈழத்து வானொலி நேயர்கள் மத்தியில் மிகப் பிரபலமாக இருந்த இப் பாடல் வெளிவந்த திரைப்படத்தின் பெயர் ‘ஆயிரம் பொய் சொல்லி’.

அணையா விளக்கு - நிகழ்வு அறிவித்தல்

துயர் மிகுந்த இந்த அணையா விளக்குப் போராட்டத்தில் ‘ உஷ்… இது கடவுள்கள் துயிலும் தேசம் ’ கதை வாசிக்கப்படுகிறது. இருக்கும் கொஞ்ச நஞ்ச அறங்களும் நீர்த்துப்போன சம கால உலக ஒழுங்குகளுக்கிடையில் இம்மக்களின் உறுதியும் ஒற்றுமையும்தான் சிறு நம்பிக்கையையேனும் கொடுக்கிறது. நிகழ்வு அறிவித்தல் _______________ அன்புக்குரியவர்களே! அணையா விளக்கு போராட்டத்தின் மாலை நிகழ்வாக 5.30 மணிக்கு ஜே.கே அவர்களின் படுகொலை செய்யப்பட்ட மாணவி கிருசாந்தி தொடர்பான, “உஷ்.. இது கடவுள்கள் துயிலும் தேசம்” என்ற கதை வாசிப்பு இடம்பெறும்.