Skip to main content

யாயும் ஞாயும் யார் ஆகியரோ?

வெள்ளி நாவல் தயாராகிக்கொண்டிருக்கையிலேயே இவ்வகை நிகழ்வு ஒன்றை அரங்கேற்றுவது எமது கனவாக இருந்தது. நாவலில் உள்ள சங்க இலக்கியப் பாடல்களை ஒரு எளிமையான அரங்கில் பாட்டு, நடனம், நயப்புரை கோர்த்து வழங்கவேண்டும் என்பதுதான் அது. அது ஈற்றில் கைகூடியது என்னளவில் மிகப்பரவசமான தருணங்களுள் ஒன்று.

நிகழ்வில் மொத்தமாக மூன்று பாடல்களை எடுத்துச் செய்தார்கள். முதலாவது பாடல் குறுந்தொகையில் உள்ள செம்புலப் பெயல் நீரனாரின் ‘யாயும் ஞாயும்’. கொல்லன் மகளாம் வெள்ளி பட்டறையில் பணி புரிந்துகொண்டிருக்கும் சமயம் அங்கு வருகின்ற கோடனோடு செய்யும் சின்னதான காதல் விளையாட்டு இது.

பாடல்
யாயும் ஞாயும் யார் ஆகியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?
யானும் நீயும் எவ்வழி அறிதும்?
செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.


கருத்துருவாக்கமும் நடன அமைப்பும் - ஜீவிகா விவேகானந்தன்
இசையமைப்பும் பாட்டும் - ஸம்ரக்‌ஷணா
பொருளும் நயப்பும் - கேதா
காணொளியாக்கம் - வசந்த்



Popular posts from this blog

அம்மாளாச்சி கொடியேற்றம்

பசித்தது. சமைக்கப் பஞ்சியாகவும் இருந்தது. அம்மாவுக்கு அழைப்பெடுத்தேன். இரவு உங்க என்ன சாப்பாடு? மரக்கறிதான். இண்டைக்கு அம்மாளாச்சிண்ட கோயில் கொடி. மறந்திட்டியா? அய்யய்யோ. அப்ப முட்டைகூட பொரிக்கமாட்டீங்களா?

பழக்கப்படுத்திக்கொள்ளு பாப்பா

‘ஓ ஜனனி, என் ஸ்வரம் நீ’ என்ற பாடலைத் தொண்ணூறுகளில் வானொலி கேட்டு வளர்ந்தவர்களுக்குத் தெரிந்திருக்கும். புதிய ராகம் திரைப்படத்துக்காக இளையராஜா இசையில் மனோ பாடிய பாடல் என்ற அறிவிப்பாளரின் குரல்கூட இக்கணம் இதனை வாசிக்கும் சில நேயர்களின் காதுகளில் கேட்கவும் கூடும். அதேபோல இரண்டாயிரமாம் ஆண்டளவில் சக்தி, சூரியன் எப்.எம் வானொலிகளைக் கேட்டவர்கள் ‘ஏதோ மின்னல், ஏதோ மின்னல்’ என்ற பாடலை மறந்திருக்கமாட்டார்கள். சபேஷ் முரளி இசையில் மாதங்கியும் திப்புவும் பாடிய பாடல் அது. அக்காலத்தில் ஈழத்து வானொலி நேயர்கள் மத்தியில் மிகப் பிரபலமாக இருந்த இப் பாடல் வெளிவந்த திரைப்படத்தின் பெயர் ‘ஆயிரம் பொய் சொல்லி’.

அணையா விளக்கு - நிகழ்வு அறிவித்தல்

துயர் மிகுந்த இந்த அணையா விளக்குப் போராட்டத்தில் ‘ உஷ்… இது கடவுள்கள் துயிலும் தேசம் ’ கதை வாசிக்கப்படுகிறது. இருக்கும் கொஞ்ச நஞ்ச அறங்களும் நீர்த்துப்போன சம கால உலக ஒழுங்குகளுக்கிடையில் இம்மக்களின் உறுதியும் ஒற்றுமையும்தான் சிறு நம்பிக்கையையேனும் கொடுக்கிறது. நிகழ்வு அறிவித்தல் _______________ அன்புக்குரியவர்களே! அணையா விளக்கு போராட்டத்தின் மாலை நிகழ்வாக 5.30 மணிக்கு ஜே.கே அவர்களின் படுகொலை செய்யப்பட்ட மாணவி கிருசாந்தி தொடர்பான, “உஷ்.. இது கடவுள்கள் துயிலும் தேசம்” என்ற கதை வாசிப்பு இடம்பெறும்.