Skip to main content

Posts

உகண்டாவின் ஒன்பது நாட்கள் - பாகம் 8 - மாப்பிள்ளை கொடுத்த சீதனம்

டொன்சபாலா டொன்சபாலா என்று லுகண்டா மொழியில் அமைந்த ஒரு கோஸ்பல் பாட்டு பின்னணியில் ஒலித்தது. ஆழமாகக் கேட்டால் ஏ. ஆர். ரகுமானின் பாடல் ஒன்றும் நினைவுக்கு வந்து சேரும். ஏலே கீச்சான் வந்தாச்சு. நம்ம சூசை பொண்ணும் வந்தாச்சு.

உகண்டாவின் ஒன்பது நாட்கள் - பாகம் 7 - அதிசயத் திருமணம்

ஜெகனதும் பிரீடாவினதும் திருமணத் திருவிழாவின் முதல் நாள் அது. மணப்பெண்ணை மாப்பிள்ளை வீட்டாருக்கும் மாப்பிள்ளையைப் பெண் வீட்டாருக்கும் அறிமுகம் செய்யும் நிகழ்வு. க்வாஞ்சுலா என்று லுகாண்டா மொழியில் இதனை அழைக்கிறார்கள்.

உகண்டாவின் ஒன்பது நாட்கள் - பாகம் 6 - காண்டாமிருகங்களும் கொம்புத்தீயும்

இது கிபாட்டே எனும் குடியானவனின் கதை. முன்னொரு காலத்தில் அடர் காட்டுக்கு அருகாமையில் அமைந்திருந்த சிறு கிராமம் ஒன்றிலே கிபாட்டே என்ற இளைஞன் வாழ்ந்து வந்தான். ஊரிலே அவனுக்குப் பல நண்பர்கள் இருந்தார்கள். அவர்கள் எல்லோருமே தம்மைப் பெரும் அறிவாளிகளாக நினைப்பவர்கள். அறிவுரை சொல்வதிலும் வல்லவர்கள். கிபாட்டே கேட்கிறானோ, இல்லையோ, எதற்கெடுத்தாலும் அவர்கள் அவனுக்கு ஆலோசனைகளை வாரி வழங்கிக்கொண்டேயிருப்பார்கள்.

உகண்டாவின் ஒன்பது நாட்கள் - பாகம் 5 - வரலாற்றின் சுவர்

குளிர்சாதனப் பெட்டியைத் திறந்து பார்க்கையில் உள்ளே மூன்று தலைகள் மிரட்சியுடன் உறைந்து கிடந்தன. இது தினமுரசு வார இதழில் வெளியாகிய இடி அமீன் தொடரில் வந்திருந்த வாசகம். அச்சொட்டாக இப்படித்தான் எழுதப்பட்டிருந்ததா என்று நினைவில்லை. ஆனால் அந்தக் காட்சி இன்னமும் ஞாபகம் இருக்கிறது. அப்போது எனக்குப் பதினேழு பதினெட்டு வயது இருக்கலாம். யாழ்ப்பாணம் மறுபடியும் ஶ்ரீலங்கா அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்திருந்த காலம். இயல்பாகவோ அல்லது வலிந்தோ சில விசயங்கள் நமக்குப் புதிதாகக் கொடுக்கப்பட்டன. பெப்சி, பஃன்டா போன்ற சோடாக்கள். பலாலியிலிருந்து இலவசமாக ஶ்ரீலங்கா இராணுவத்தினர் ஒளிபரப்பு செய்த HBO, Star, MTV, விளையாட்டு சானல்கள். வீதிக்கு வீதி வெளிக்கிளம்பிய மினி சினிமாக்கள்.

உகண்டாவின் ஒன்பது நாட்கள் - பாகம் 4 - காலனித்துவமும் திருட்டும்

அதிகாலையிலேயே போடாபோடாசுகளின் ஹோர்ன் சத்தங்கள் தூக்கத்தைக் கலைத்துவிட்டன. நான் எழுந்து திரைச்சீலையை விலக்கிப்பார்த்தேன். பள்ளமான முட்டுச் சந்து ஒன்றில் வாகனங்கள் ஊர்ந்துகொண்டிருந்தன. முட்டாமல் மோதாமல் விலகியும் நழுவியும் ஓடுவதுதான் கம்பாலாவில் வாகனம் ஓட்டுவதற்கான கலை. ஒரு ரக்பி வீரர் எப்படி சுழித்துக்கொண்டு பந்தை அடுத்த கரைக்குக் கொண்டுசேர்ப்பாரோ அதுபோல போடாபோடாசுகள் ஓடிக்கொண்டிருந்தன. பாதையோரங்களில் சூட்டும் சப்பாத்தும் அணிந்த பாடசாலை மாணவர்கள் புழுதிக்கு இடையே நடந்துபோனார்கள். உகண்டாவில் பாடசாலைகள் அதிகாலையே ஆரம்பித்து மாலை ஆறு மணிவரைக்கும் நீளும் என்று ஜெகன் சொல்லியிருந்தான். அங்கே இன்னமும் ஆங்கிலக்கல்விதான். பிரித்தானியக் காலனித்துவம் இந்த நிலத்தில் பூர்வீகமாகப் பரவி வாழ்ந்த பலவிதமான மொழிகளைப் பேசும் இனக்குழுக்களை (clans) ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட நாடு என்பதால் இன்னமும் ஆங்கிலம் பொதுமொழியாக உகண்டாவில் பயன்படுத்தப்படுகிறது. ஆயினும் தத்தமது இனக்குழுக்களிடையே அவர்கள் தமது மொழியைச் சரளமாகப் பேசுகிறார்கள். ஆங்கிலத்தை இந்த நாட்டில் எல்லோருமே பேசுவார்கள். அது ஒரு தொடர்பாடல் மொழியாக மா...

உகண்டாவின் ஒன்பது நாட்கள் - பாகம் 3 - சிம்பன்சி முதல் செயற்கை நுண்ணறிவுவரை

மழை துமிக்க ஆரம்பித்தது. கம்பாலாவுக்கு வடமேற்கே இருநூற்றைம்பது கிலோமீற்றர் தூரத்தில் அமைந்திருக்கும் புடொங்கா என்கின்ற அடர்த்தியான மழைக்காடு அது. வரும் வழியில் ஒரு மலைப்பகுதியில் வண்டியை நிறுத்திப் பார்த்தபோது கண்ணுக்கெட்டிய தூரமெல்லாம் காடுதான் தெரிந்தது. விமானத்தின் யன்னலூடே பார்க்கையில் வானமெங்கும் விரித்துக்கிடக்கும் முகிலைப்போலக் காடு நிலமெங்கும் பச்சையாய்ப் படர்ந்திருந்தது. எங்கள் குழுவில் பதினைந்து பேரளவில் இருந்தார்கள். பச்சை, சாம்பல் நிறங்களில் நீர்புகா உடைகளும் மலையேறும் சப்பாத்துகளும் தொப்பியும் அணிந்திருந்தோம். வனக்காவலர்கள் எங்களுக்கான பயண அறிவுறுத்தல்களைச் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

உகண்டாவில் ஒன்பது நாட்கள் - பாகம் 2 - ஊர் எனும் யானை

விமானம் திடும்மென்று தரையிறங்கி பெரும் இரைச்சலோடு ஊர்ந்தபோது உள்ளிருந்தவர்கள் அனைவருமே கைதட்டி ஆரவாரம் செய்தார்கள். பலர் மளமளவென எழுந்து தம்முடைய கைப்பைகளைத் தூக்கிக்கொண்டு தயாரானார்கள். ஏன் அந்த அவசரம் என்று எனக்குப் புரிவதேயில்லை. விமானம் அதுபாட்டுக்கு ஊர்ந்து, நிலையத்தைச் சென்றடைந்து, கதவு திறக்கப்பட்டு, முதல் வகுப்பு இருக்கைப் பயணிகளையும் வெளியே அனுப்பிய பின்னர்தான் எங்களை வெளியேறவே அனுமதிப்பார்கள். அப்போதும்கூட முன்னிருக்கைகளில் உட்கார்ந்திருப்பவர்கள் எழுந்து, தம் கைப்பைகளைச் சாவகாசமாக எடுத்து நகரும்வரை நாம் காத்திருக்கவேண்டும். அதற்குள் அதறிப் பதறி எழுந்து முட்டிமோதி நிற்பதில் என்ன பயன்? நான் கல்லுப்பிள்ளையார் கணக்காய் உட்கார்ந்திருந்தேன். காதில் இளையராஜா தேஷாக இசைத்துக்கொண்டிருந்தார். இருபத்தெட்டு மணி நேர நெடிய பயணம். தூக்கம் வராது, தோளோடு நீ சேர்க்க ஏக்கம் வராது என்று சித்திரா இறைஞ்சிக்கொண்டிருக்க எனக்கோ தூக்கம் தூக்கிப்போட்டது.