நேற்றைய எழுத்துப் பட்டறை இனிதே நிகழ்ந்தேறியது. ஹெமிங்வேயின் Hills like white elephants சிறு கதையோடு ஆரம்பித்தோம். பின்னர் இளவேனில் சஞ்சிகையில் வெளியான சாந்தி சிவகுமார் எழுதிய ஒரு சேலையின் பயணம் என்ற சிறுகதை எப்படி அதன் ஆரம்ப பொறியிலிருந்து இப்போதுள்ள வடிவத்தை வந்தடைந்தது என்று உரையாடினோம். இடையிடையே நவீன இலக்கியத்தில் பலரும் பயன்படுத்தும் நுட்பங்கள், புனைவுகளை அணுகுவதற்கான சில ஆரம்ப உத்திகள் என்று பலதையும் விவாதித்தோம். பங்குபெற்றவர்களும் எழுத்து, வாசிப்புடன் பரிச்சயமானவர்கள் என்பதால் கேள்விகளும் ஆழமாக அமைந்திருந்தன. மொத்தத்தில் நம் ஞாயிறு காலையின் மூன்று மணி நேரம் இனிதாகவும் பயனுள்ளதாகவும் அமைந்தது. இவ்வாறான இலக்கியம் சார்ந்த கூட்டு முயற்சிகளை சிறிய அளவில் முன்னெடுக்கவேண்டும் என்ற ஆவல் பல ஆண்டுகளாகவே இருந்தது. இந்நாள்களில் மெல்பேர்ன் வாசகர் வட்டத்தினூடும் இளவேனில் சஞ்சிகையினூடும் அவற்றைச் சாத்தியப்படுத்தக்கூடியதாக இருப்பது பெரு மகிழ்ச்சி. இந்த அரங்கினை நம் வாசகர் வட்டத்தின் சார்பாக முன்றில் அமைப்பின்வழி சாந்தி அக்காதான் ஒழுங்கமைத்தார். எப்படியானதொரு அரங்கைத் தாம் எதிர்பார...