Skip to main content

Posts

Showing posts from 2026

ஜேன் ஓஸ்டினின் படைப்புலகம் - podcast

இந்த உரையாடலைச் செய்யும் எண்ணம் தற்செயலாகத்தான் உருவானது.   ஜேன் ஓஸ்டினின் நாவல்களைப் பற்றி கலா அக்காவும் நானும் நம்முடைய வாட்ஸப் குழுமத்தில் அடிக்கடி கருத்துகளைப் பகிர்ந்துகொண்டிருப்போம். ஒரு கட்டத்தில் அதையே பொட்காஸ்டாக செய்தால் என்ன என்று தோன்றிய எண்ணத்தின் விளைவுதான் இந்தக் காணொளி. ஜேனின் “Sense and Sensibility” என்ற நாவலைப் பிரதான இழையாகக்கொண்டு இந்த உரையாடலை நாம் அமைத்துள்ளோம்.   இந்நாவலைத் தழுவியே ராஜீவ்மேனன் “கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்” என்ற திரைப்படத்தின் இயக்கினார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஜேனை வாசித்திருக்காவிட்டாலும் கண்டுகொண்டேன் திரைப்படத்தை விரும்பிப் பார்த்தவர் எனில் இந்த உரையாடலை உள்வாங்குவது உங்களுக்கும் எளிதாக அமையும் என்று நம்புகிறேன்.   இந்த உரையாடலைச் சாட்டாக வைத்து மறுபடியும் ஜேன் ஓஸ்டினின் மாந்தரோடு பயணம் செய்யும் வாய்ப்பு கிடைத்ததில் பெரு மகிழ்ச்சி. அதையே கலா அக்காவோடு இணைந்து செய்ததில் இரட்டிப்பு மகிழ்ச்சி. கலா அக்கா புத்தகங்களின் காதலி. புத்தகங்களை அவர் பேச ஆரம்பிக்கையிலேயே கூட இருக்கும் நமக்கும் ஒரு குழந்தையின் பரவசம் தொற்றிவிடுவதுண்டு....

மறை சாட்சி - சிறுகதை

தேவாலயத்தினுள்ளே மரியதாஸ் நுழையும்போது திருப்பலி ஆரம்பித்துவிட்டிருந்தது. அனைவரும் அமைதியாக அமர்ந்திருந்து இறைவாக்கினைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். மரியதாஸ் ஓசை ஏதும் எழுப்பாமல் பின்னாலே ஒரு ஓரமாகப் போய் நின்றுகொண்டான். அவன் அப்படித் தயக்கத்தோடு நிற்பதைக் கவனித்த கடைசி வாங்கிலில் உட்காந்திருந்த பெண்மணி ஒருவர், அருகில் வந்தமருமாறு அவனுக்கு நகர்ந்து இடங்கொடுக்க, மரியதாஸ் அவரைப்பார்த்து சங்கடமாகப் புன்னகைத்தபடி மெதுவாக அங்கு சென்று உட்கார்ந்தான்.

தாயகம் கரப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் வெற்றிக்கிண்ணம்

கரப்பந்தாட்டத்தின் ‘over game’ வடிவம் தொழில்முறை விளையாட்டில் கொஞ்சம் கொஞ்சமாக வழக்கு ஒழிந்து வந்தாலும் ஊர் மக்களிடையே அது மிகப்பிரபலமானது. நான் முதன்முதலாக இதனை விளையாடியது அத்தியடியில்தான். தொண்ணூறுகளில் அத்தியடிலிருந்த பிரியா வீட்டுக்குப் பின் வளவில் ஒரு பெருங்கூட்டமே அந்நாள்களில் கரப்பந்து விளையாட மாலை நேரங்களில் கூடிவிடும். பகல் முழுதும் வேலை செய்தவர்கள் எல்லோரும் வீட்டுக்குப் போய் ஒரு டீ குடித்துவிட்டு ஐந்து மணிக்குள்ளே திடலுக்கு வந்துவிடுவார்கள். அப்படி வருபவர்கள் பலரும் கரப்பந்தில் பழம் தின்று கொட்டை போட்டவர்கள். அவர்கள் பந்தை உருட்டி, உருட்டி அடிக்கும் இலாவகத்தைப் பார்ப்பதே சுவாரசியமாக இருக்கும். விளையாட்டில் சுதி ஏறினால் தூஷணங்களும் பறக்கும். என்னைப்போன்ற பதின்மத்தவர்கள்தாம் அதிகம் வாங்கிக்கட்டுவார்கள். பந்துக்குப் பாயாவிட்டால், பந்து பறிக்க அடித்தால், மற்றவர் பந்துக்குப் பாய்ந்தால், ஏன் அவர்கள் பிழை விட்டால்கூட நமக்கே ஏச்சு விழும்.

புலம்பெயர் எரிபொருள் கியூ

இன்று வீட்டிலிருந்துதான் வேலை. அடுத்த அரை மணி நேரத்தில் ஆரம்பிக்க இருக்கும் அலுவலகக் கூட்டத்துக்கான தயார்ப்படுத்தல்களைச் செய்துகொண்டிருந்தேன். புதிய திட்ட வரைபு ஒன்று அது. நான்தான் அதனை அறிமுகம் செய்து உரையாடவேண்டும். நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர், பிரதானத் தொழில்நுட்ப இயக்குநர், சைபர் பாதுகாப்பு நிபுணர் எனப் பல முடிவெடுக்கும் புள்ளிகள் பங்கெடுக்கும் கூட்டம் அது. காலையில் குடித்த கோப்பி வயிற்றைக் கலக்கிக்கொண்டிருந்தது.

முரண் நயத்தல்

உங்களை இங்கே எதிர்பார்க்கவில்லை. நேற்றைய நிகழ்வில் மொத்தமாக மூன்று பேர் இந்தக் கூற்றை என்னிடம் சொன்னார்கள். அது கம்பன் கழகம் நடத்திய ஞானவேள்வி எனும் நிகழ்வு. ஆண்டுதோறும் இந்த நிகழ்வை குமாரதாசன் அண்ணா மெய்யும் மடியும் வருந்த மேடையேற்றிக்கொண்டிருக்கிறார். நானும் ஒவ்வொரு வருடமும் தவறாமல் இந்நிகழ்வுக்குச் செல்லும் வழக்கத்தை வைத்திருக்கிறேன். ஒவ்வொரு வருடமும் யாரேனும் சிலர் அதிசயமாக இப்படி ஒரு கேள்வியை என்னிடம் கேட்பதுண்டு. இத்தனைக்கும் கேட்டவர்கள் அத்தனை பேரும் ஓரளவுக்கு எனக்கு நெருக்கமானவர்களும்கூட. ஆனாலும் என்னைக் கண்டவுடன் சிறு திகைப்பு அவர்களது கண்களில் ஒளிர்ந்து மறையும். ஆச்சரியம் விளையும். வாய் அறியாது சொற்களை உதிர்த்துவிடும்.

எழுத்துப் பட்டறை - புகைப்படங்கள்

நேற்றைய எழுத்துப் பட்டறை இனிதே நிகழ்ந்தேறியது.   ஹெமிங்வேயின் Hills like white elephants சிறு கதையோடு ஆரம்பித்தோம். பின்னர் இளவேனில் சஞ்சிகையில் வெளியான சாந்தி சிவகுமார் எழுதிய ஒரு சேலையின் பயணம் என்ற சிறுகதை எப்படி அதன் ஆரம்ப பொறியிலிருந்து இப்போதுள்ள வடிவத்தை வந்தடைந்தது என்று உரையாடினோம். இடையிடையே நவீன இலக்கியத்தில் பலரும் பயன்படுத்தும் நுட்பங்கள், புனைவுகளை அணுகுவதற்கான சில ஆரம்ப உத்திகள் என்று பலதையும் விவாதித்தோம். பங்குபெற்றவர்களும் எழுத்து, வாசிப்புடன் பரிச்சயமானவர்கள் என்பதால் கேள்விகளும் ஆழமாக அமைந்திருந்தன. மொத்தத்தில் நம் ஞாயிறு காலையின் மூன்று மணி நேரம் இனிதாகவும் பயனுள்ளதாகவும் அமைந்தது. இவ்வாறான இலக்கியம் சார்ந்த கூட்டு முயற்சிகளை சிறிய அளவில் முன்னெடுக்கவேண்டும் என்ற ஆவல் பல ஆண்டுகளாகவே இருந்தது. இந்நாள்களில் மெல்பேர்ன் வாசகர் வட்டத்தினூடும் இளவேனில் சஞ்சிகையினூடும் அவற்றைச் சாத்தியப்படுத்தக்கூடியதாக இருப்பது பெரு மகிழ்ச்சி.   இந்த அரங்கினை நம் வாசகர் வட்டத்தின் சார்பாக முன்றில் அமைப்பின்வழி சாந்தி அக்காதான் ஒழுங்கமைத்தார். எப்படியானதொரு அரங்கைத் தாம் எதிர்பார...

சுந்தரம்பிள்ளை அங்கிள்

சற்று முன்னர்தான் அம்மா அழைப்பெடுத்து சுந்தரம்பிள்ளைஅங்கிள் காலமான செய்தியைச் சொன்னார். எனக்கு உடனடியாக எதுவுமே தோன்றவில்லை. கொஞ்ச நேரம் டிவி பார்த்தேன். ஏதோ ஒரு புத்தகத்தை எடுத்துத் தட்டினேன். செல்பேசியில் சில காணொளிகள் பார்த்தேன். ம்ஹூம். உடலும் உள்ளமும் கூட்டாகப் பிரிந்து கடந்த காலத்துக்கு ஓடிப்போனதில் நிகழ்காலம் மரத்துப்போயிருந்தது. இதைக்கூட எழுதக்கூடாதென்றுதான் புத்தி சொல்கிறது. மனம் தன் போக்கில் எழுதிக்கொண்டிருக்கிறது. நான் தடுக்கப்போவதில்லை.

"இல 20, சூரியா வீதி, நீர்கொழும்பு" – முருகபூபதியின் வீடு

சில வாரங்களுக்கு முன்னர் லெ. முருகபூபதியின் நூல் ஒன்றை வாசித்துக்கொண்டிருக்கையில் ஒரு வரியில் கடந்துபோன அவருடைய பிரிட்டிஷ் கால ‘பொலீஸ் தாத்தா’ பாத்திரம் உடனேயே மனதுள் பதிந்தது. பின்னர் அந்த இழையைப் பிடித்து அவருடைய ஏனைய பல புத்தகங்களைத் தேடி தேடி வாசித்தபோது, கொஞ்சம் கொஞ்சமாக, பொழுது புலர்வதுபோல இக்கட்டுரை அதன் பாட்டுக்குத் தன்னைத்தானே எழுத ஆரம்பித்தது.

மணியம் மாஸ்டர்

வழமையான யாழ்ப்பாணத்துக் காணொளி ஒன்று. தென்மராட்சி வயல் காட்டுப்பக்கம் ஒரு ஐயாவைப் பேட்டி எடுக்கிறார்கள். நரை விழுந்த தோற்றத்தோடு, நெற்றியில் பட்டைத் திரு நீறும் நம் ஊருக்கேயான மென் நீல வண்ண சேர்ட்டும் சாறமும் அணிந்தபடி சக நண்பர்களோடு வயலில் அவர் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார். நேர்காணல் எடுப்பவர் அவரிடம் எத்தனை ஆண்டுகளாக வயல் வேலை செய்கிறீர்கள் என்று கேட்க, ஐயா சொல்கிறார். எனக்கு எழுபத்தொரு வயது. அம்பது வரியமா நாங்கள் வயலுக்கதான் நிக்கிறம். அப்ப வயல்தான் மெயினா செய்யிறனீங்களா? நாங்க டீச்சர். இப்ப ரிட்டயர் ஆயிட்டம். ஆனால் எப்பவுமே வயல்தான். எந்த ஸ்கூலில படிப்பிச்சனிங்கள் ஐயா? நாங்கள் யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கொலிஜில படிப்பிச்சனாங்கள். எனக்கு உடல் உடனேயே கிறுகிறுத்தது. இது எங்கட மணியம் மாஸ்டர் அல்லவா? ***** பரி. யோவானின் ஒரு சில misfits வாத்திமார்களில் முதன்மையானவர் இந்த மணியம் மாஸ்டர். அதனாலேயே எனக்கும் அவரை மிகவும் பிடிக்கும். மீசாலை ஒரு C90 மோட்டார் சைக்கிளில் கொஞ்சம் லேட்டாகத்தான் தினமும் அவர் பாடசாலைக்கு வருவார். நீண்ட தூர மோட்டர் சைக்கிள் பயணத்தால் அவருடைய கால்கள் எல்லாம் புழுதி பட...

podcast: The Anthropologists நூல் உரையாடல்

துருக்கியைப் பூர்வீகமாகக்கொண்ட ‘ஐஷீகுள் சவாஸ்’ என்ற எழுத்தாளர் எழுதிய ’The Anthropologists’ என்ற நாவலைப்பற்றி இம்முறை உரையாடியிருக்கிறோம்.

நிகழ்ச்சி அறிவித்தல் - எழுத்துப் பயிற்சிப் பட்டறை

                                                     வணக்கம் நண்பர்களே, மெல்பேர்னில் வரும் பெப்ரவரி மாதம் 22ம் திகதி 'எழுத்துப் பயிற்சிப் பட்டறை' ஒன்றை ஒழுங்கமைத்துள்ளோம்.

தூக்கமா கண்மணி, பள்ளி எழு

இன்று காலை இந்தப் பாட்டு நினைவுக்கு வந்தது. சிறு வயதில் இப்பாட்டை அடிக்கடி நான் முணுமுணுப்பதுண்டு. ஊரின் ஒவ்வொரு சந்தி மூலைகளிலும் எஞ்சி நின்ற மின்சாரக் கம்பங்களில் ஒலி பெருக்கிகள் பூட்டப்பட்டு இயக்கப்பாடல்கள் இசைக்கப்பட்ட காலம் அது. ஒரு பக்கம் ‘கனலில் கருவாகி’, ‘பிள்ளையார் சுழி போட்டு’ என்று கோயில் கோபுரங்கள் பாடல்கள் இசைக்க, இன்னொரு பக்கம் ‘மக்களெல்லாம்’ என்று இசை கேட்க, சைக்கிளில் சுற்றித்திரிந்த சிறுவர்களுக்கு இவ்விரண்டு வகைப் பாடல்களும் மண்டைகளுக்குள் ஏறியது ஆச்சரியமில்லை.   எப்படி மதங்களினூடாகப் பல தலைமுறைகளில் கலை முகிழ்ந்தெழுந்ததோ அதுபோலவே போராட்ட காலத்தின் கலையும். மதங்களையும் அவற்றின் எதேச்சதிகாரங்களையும் நிராகரிக்கும்போது நாச்சியார் திருமொழியையும் சுந்தர காண்டத்தையும் நாம் புறந்தள்ளினோமானால் இழப்பு நமக்குத்தான். அதுபோலவே போராட்டங்கள்மீது நாலு பேருக்கு நாலு விதமான எண்ணம் சிந்தனைகள் இருக்கலாம். அதனாலேயே அக்காலத்துக் கலையை மறுதலித்துவிடக்கூடாது. அந்தக் காலத்தின் ஈழத்து இசையும் அவ்வகையானதுதான். மிக அற்புதமான இசைத்தொகுப்புகள் அக்காலப்பகுதியில் வந்திருக்கின்றன. அப்பாடல்களின் வ...

வாழும் வரலாறு மல்லிகை ஜீவா

லெ. முருகபூபதி எழுதிய ‘வாழும் வரலாறு மல்லிகை ஜீவா’ என்ற அற்புத நூலை வாசித்துக்கொண்டிருந்தேன். முருகபூபதியின் கட்டுரைகளில் எப்போதும் ஒருவித பத்திரிகையாளருக்கேயுரிய பற்றின்மை இருக்கும். சம்பவங்கள் குறித்தோ, மனிதர்கள் குறித்தோ அவர் எழுதும்போது அதில் எந்தவிதக் ‘commentary’யும் இருக்காது. ஆனால் அப்படி எழுதுவதே அவற்றின்மீதான பெரும் அபிப்பிராயத்தை வாசகர்மேலே ஏற்றிவிடும். ஒரு தேர்ந்த பத்திரிகையாளரின் திறன் அது. ஒரு உதாரணம் கொடுக்கிறேன். இந்தச் சம்பவம் அறுபதுகளில் இடம்பெற்றிருக்கவேண்டும். பத்தி இப்படிப்போகிறது.

கோழி வந்ததா, முட்டை வந்ததா?

இக்கேள்விக்கு முட்டை என்பதுதான் சரியான பதிலாக இருக்கமுடியும். உடனேயே அந்த முட்டையை ஒரு கோழிதானே போட்டிருக்கவேண்டும் என்ற கேள்வி எழுகிறதல்லவா? அதுதான் இல்லை. கோழி அல்லாத இன்னொரு பறவை போட்ட முட்டையிலிருந்துதான் கோழி முதன்முதலில் உருவாகியது. கொஞ்சம் ஆழமாக இதனைப் புரிந்துகொள்வதற்கு உயிரிகளின் கூர்ப்பினைப் பின்னோக்கி வேகமாக ரீவைண்ட் செய்து பார்க்கவேண்டும்.

அர்ஜீத் சிங் எனும் கலைஞன்

என் பேரபிமானத்துக்குரிய இசைக் கலைஞர் அர்ஜீத் சிங், இனிமேல் தான் திரையிசைப் பாடல்களைப் பாடப்போவதில்லை என்று அறிவித்திருக்கிறார்.

podcast: அருந்ததி ரோய் எழுதிய Mother Mary Comes To Me

அருந்ததி ரோய் எழுதிய 'Mother Mary Comes To Me' நூலை மையமாக வைத்து, ஒரு தாய்–மகள் உறவின் சிக்கல்களையும், அன்பும் வன்முறையும் ஒரே நேரத்தில் கலந்து நிற்கும் அந்த முரண்பட்ட வெளிகளையும் இந்த பொட்காஸ்டில் பேச முயன்றுள்ளோம்.

மழை நாளில் 'என் கொல்லைப்புறத்துக் காதலிகள்'

ஒரு மாதத்துக்கு முன்னர் நண்பன் ஒருவன் தன் வீட்டில் பெய்த மழையைக் காணொளி எடுத்துப் பகிர்ந்திருந்தான். நான் பிறந்து வளர்ந்த ஊரான தின்னவேலியில் பெய்த மழை அது. மல்லிகைப் பந்தல், வாழை, செவ்வரத்தை, நெல்லி, பூங்கன்றுகள், இடையே நாய்க்கூடு எனச் சூழ்ந்திருந்த அந்த மிக அழகான வீட்டு முற்றத்தில் மழை கொட்டிக்கொண்டிருந்தது. தின்னவேலி மழை எப்போதுமே அண்டாவைக் கவிழ்த்துக்கொட்டுவதுபோலத்தான் பெய்யும். நான் அன்று அவனுக்கு இப்படி ஒரு கருத்து இட்டேன். வெள்ளம் தேங்கி வீடு கசியாதவரைக்கும் தின்னவேலியின் மழை மிக அழகுதான். ஏன் அப்படிச் சொன்னேனோ தெரியாது. ஆனால் இதனைச் சொல்லிய சில வாரங்களிலேயே தீவு முழுதும் மழையும் வெள்ளமும் நிலச்சரிவும் பெருங் கோரத்தாண்டவத்தை ஆடிவிட்டன. மழை நம் வீட்டுக்குள் நுழையாதவரைக்கும்தான் அழகு. அப்புறம் அது ஒரு கொடிய அரக்கியாகிவிடுகிறது. சிரங்கு. முட்டு. கக்கூஸ் அடைப்பு. நுளம்பு. காயாத உடுப்பு. மின் வெட்டு. நிலமெல்லாம் கசிந்து சகதி ஆவது. இவை எல்லாமே சிறு வெள்ளத்துக்கே வந்து சேரக்கூடிய துன்பங்கள். நிலம் சரிந்து மொத்த வீடுமே அமுங்குவதும் குழந்தைகள் உள்ள வாகனங்கள் அடித்துப்போவதும் பெரு வெள்ளத்த...

படலை பொட்காஸ்ட்

சில வருடங்களாகவே பொட்காஸ்ட் தொடர் ஒன்றை ஆரம்பிக்கவேண்டும் என்றொரு ஆர்வம் உள்ளூற ஊறிக்கொண்டிருந்தது. அது நான் தொடர்ச்சியாகக் கேட்டுப் பயனடைந்துகொண்டிருக்கும் சில பொட்காஸ்டுகளின் பாதிப்பால் ஏற்பட்ட ஒன்று. The History of Literature, Paris Review, The New Yorker Fiction, The New Yorker Writer’s Voice, Not Stupid, The Minefield, If You’re Listening, Ladies We Need to Talk என்று பல பொட்காஸ்ட் தொடர்களின் ஆதர்ச இரசிகன் நான். இந்த பொட்காஸ்டுகள் அனைத்துமே ஆழமான விசயங்களையும் அன்றாட விசயங்களையும் மிக இயல்பாகவும் முன்முடிவுகள் இல்லாமலும் அலசுபவை. கேட்கும்தோறும் புதியவற்றை நமக்கு அறிமுகப்படுத்துபவை. பெரும்பாலானவற்றுக்குக் காணொளிகளும் இல்லை. வெறுமனே ஒலி மாத்திரம்தான். நடைப்பயிற்சியின்போதும் நீண்ட தூரப் பயணங்களின்போதும் காதுகளில் ஒலிக்கவிட்டால் நேரம் கரைவதே தெரியாது. பல சமயங்களில் புதிய அத்தியாயங்களைக் கேட்பதற்காகவே நடைப்பயிற்சிக்குப் போன சம்பவங்களும் உண்டு. அத்தனை அலாதியான அனுபவத்தையும் தேடலையும் கொடுப்பவை இவை. இவ்வாறான பொட்காஸ்டுகளை செய்வதற்கு முன்னர் பெருந்தேடலும் தயார்படுத்தலும் தேவை என்று தோன்றி...

ஆறிடும். ஆறாது.

சில வாரங்களுக்கு முன்னர் எனக்கு மிக நெருக்கமான அக்கா ஒருவர் ஒரு வார்த்தை சொன்னார். அது என்ன வார்த்தை என்பதோ சொல்லப்பட்ட சூழலோ அவ்வளவு முக்கியமில்லை. ஆனால் அது என் ஆழ் மனதை மிகவும் பாதித்துவிட்டது. அவர் அப்படியொன்றும் மோசமாக எதையும் சொல்லவில்லை. அது சாதாரணமாகக் கடந்துபோகவேண்டிய ஒன்றுதான். ஆனால் என் நுண்ணுணர்வை அது தாக்கிவிட்டது. பிறரிடம் கடமைப்படுவது என்பது எனக்குக் கொல்லக்கொண்டுபோவதுபோல. அதனால் மனம் சஞ்சலத்தோடு அலைந்தது. அந்த மன அங்கலாய்ப்பு அர்த்தமற்றது என்று புத்தி எனக்குப் பாடம் புகட்டியது. ஆனால் என் மனதினால் அதனை விட்டுத்தள்ளமுடியவில்லை. நாள் முழுதும் அது புலம்பிக்கொண்டேயிருந்தது. அடுத்த நாளே, சொல்வழி கேட்கமாட்டாயா என்று புத்தி என் மனதைக் குட்டி அடக்கியதால் மனம் கூண்டுக்குள் பதுங்கிய நாய்க்குட்டியாட்டம் ஒடுங்கிவிட்டது. ஆனால் இரு வாரங்கள் கழித்து, புத்தி வேலைக்குப் போயிருந்த சமயம் மனம் கூண்டுக்குள்ளிருந்து மறுபடியும் வெளிவந்து வேலையைக் காட்டிவிட்டது. ஏனென்று தெரியவில்லை. சாதாரண விசயம்தான். சனியன்போல அலைக்கழிந்தது. சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது என்று ஒரு பாட்டு இருக்கு. கன்னி மனத...