Skip to main content

Posts

Showing posts from September, 2016

சிட்னியில் ஒரு சந்திப்பு

சிட்னியில் வசிக்கும் புத்தகப்பிரியர்களுக்கு. வரும் ஞாயிறு நான்கு மணியளவில், சிட்னி முருகன் ஆலயத்துக்கு அருகே இருக்கும் அறிவகம் எனும் இடத்திலே சிறு சந்திப்பு ஒன்றை நிகழ்த்தலாம் என்று ஒரு சிற்றிச்சை. "கந்தசாமியும் கலக்சியும்" புத்தகத்தைச் சாட்டாகக்கொண்டு கொஞ்சம் டக்ளஸ் அடம்ஸ், டெரி பிரச்சட் ஆகியோரின் நாவல்களைப் பற்றியும் பேசலாம் என்று ஒரு ஆசை. கூடவே நண்பர்களையும் சந்திக்க விருப்பம். ஐந்துபேராவது வருவதை உறுதிப்படுத்தினால் நிகழ்ச்சியை நிச்சயம் நடத்தலாம். இல்லையேல் கோரம் இன்றி பாராளுமன்றம் ஒத்திவைக்கப்படும். அறியத்தாருங்கள். நன்றி. 02-10-2016 Sunday 4.00 pm 191 Great western high way May hill NSW2145

Yarl Geek Challenge – Season 5

கி.பி 1600.  நெதர்லாந்து நாட்டு மிடில்பேர்க் நகரத்தில் கண்ணாடிக்கடை ஒன்றை நடத்திவருகிறார் லிப்பர்ஷி. பூதக்கண்ணாடி, பார்வைக்குறைப்பாடு உள்ளவர்கள் பயன்படுத்தும் கண்ணாடிவில்லை என்று பல்வேறுவகைக் கண்ணாடிகளும் வில்லைவகைகளும் அவருடைய கடையில் விற்பனைக்குக் கிடைக்கும். லிப்பர்ஷியின் கடையில் அவருக்குத் துணையாக ஒரு உதவியாளரும் வேலைசெய்து வருகிறார்.  ஒருநாள் லிப்பர்ஷியின் உதவியாளர், இரண்டு வில்லைகளை ஓரடி இடைவெளியில் வைத்து அவற்றினூடாக வெகுதொலைவில் இருக்கும் பொருட்களைத் தற்செயலாகப் பார்க்குஞ்சமயத்தில் அந்தச்சம்பவம் இடம்பெறுகிறது. ஆரம்பத்தில் மங்கலாகத் தெரிந்த தூரப்போருட்கள் வில்லைகளுக்கிடையேயான தூரத்தை தொடர்ந்து மாற்றிக்கொண்டிருக்கையில் ஒரு கட்டத்தில் தெளிவாகத் தெரிய ஆரம்பிகின்றன. மிக எட்டத்திலிருந்த தேவாலயம் ஒன்று அருகிலிருப்பதுபோல அவருக்குப் புலப்பட ஆரம்பிக்கிறது. உடனேயே அந்த உதவியாளர் லிப்பர்ஷியிடம் ஓடிச்சென்று தான் கண்டறிந்ததைச் சொல்லியிருக்கிறார். வெகுதொலைவில் இருக்கின்ற பொருளினை, இரண்டு வில்லைகளைக் குறிப்பிட்ட இடைவெளியில் நிறுத்தி, அவற்றினூடு பார்க்கும்போது, அது மிகவும் அண்மி

"கந்தசாமியும் கலக்சியும்" : நாவலை உரையாடுதல்

அரைச்சுக் குழைச்சுத் தடவ

அரைப்பு “அடி அரைச்சு அரைச்சுக் குழைச்சு குழைச்சுத் தடவத் தடவ மணக்குஞ் சந்தனமே...!” மகராசன்; தொண்ணூறுகளில் வெளியான ஒரு மரணவதைத் திரைப்படம். கமல் நட்புக்காக நடித்திருப்பார்.  அதில் வெளிவந்த சங்க இலக்கியப் பாடல்தான் இந்த "அரைச்சு அரைச்சு".  பாடலின் வரிகள் படான் என்றாலும் (உ.தா சின்ன சேலம் மாம்பழமே, மச்சான் தட்டுற மத்தளமே), வழமைபோல ராஜாவின் இசை நுணுக்கமானது. “சந்தனமே..”யில் விழும் சங்கதியை ரசிக்காதவர்கள் இருக்கமாட்டார்கள். இதற்கு மேல் டீடெயிலாக எழுத இதுவொன்றும் இசைப்பதிவு கிடையாது. நிற்க. “அரைச்சு அரைச்சு” பாடல், வெளிவந்த காலத்தில் பயங்கரப் பேமஸ். யாழ்ப்பாணத்தில் சரிந்து கிடந்திருந்த நியூமார்க்கட் வழியாக நடந்து செல்கையில் குறைந்தது இரண்டு புடவைக்கடை, ஒரு தேத்தண்ணிக்கடையிலாவது இதனைக் கேட்கமுடியும். இலங்கை வானொலியில் ஒலிபரப்பாகும் பட்சத்தில் வேம்படிச் சந்தியிலிருந்து கஸ்தூரியார் ரோட்டுக்குச் சைக்கிள் மிதிப்பதற்குள் முழுப்பாடலையும் கேட்டு ரசிக்கலாம். எல்லாக்கடைகளிலும் ஒரே வானொலி. ஒரே பாடல். பயணவழி முழுதும் தொடர்ச்சியாகப் பாடல் அறுபடாமல் ஒலித்துக்கொண்டேயிருக்கும