Skip to main content

Posts

Showing posts from July, 2020

சித்தகத்திப் பூக்களே

நேற்று கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் இளையராஜாவுடன் நடைப்பயிற்சியில் இருந்தேன். எல்லாமே தொண்ணூறுகளின் ஆரம்பகாலத்து இளையராஜா. “கட்டி வச்சுக்கோ”வில் ஆரம்பித்து “முத்துமணி மாலை”, “தானந்தன கும்மிகொட்டி”, “சாமிக்கிட்ட சொல்லிவச்சு”, “என்னைத் தொட்டு” என்ற வரிசை பதினொராவது கிலோமீற்றர் கடக்கையில் “சித்தகத்திப் பூக்களே”க்குத் தாவியது. அதன்பின்னர் அடுத்த முப்பது நிமிடங்களுக்கு அதுவே ரிப்பீட்ட ஆரம்பித்தது.

குருபரன்

இனிய நண்பர் குருபரன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர் பதவியைத் துறந்தார் என்ற செய்தி மிகுந்த மன அலைக்கழிப்பைத் தந்துகொண்டிருக்கிறது. ஊரில் இவ்வகை நிகழ்வுகள் தினமும் நிகழும் ஒன்றுதான். ஆனால் குருபரனை நெருக்கமாகத் தெரியும் என்பதால் இதன் தாக்கம் அதிகமாக உள்ளது. இதேபோலத்தான் என் இன்னொரு நண்பர் பாலமுருகனுக்கும் நிகழ்ந்தது. மருத்துவரான பாலமுருகன் சில வருடங்கள் வெளிநாட்டில் பணிபுரிந்துவிட்டு மீண்டும் ஊரில்போய் வாழவேண்டும் என்று போன இடத்தில் அரசுத்துறையும் அதிகாரிகளும் ஆண்டுக்கணக்கில் அவருக்கு வேலைக்கான ஒதுக்கீட்டை செய்யாமல் அவரை அலைக்கழித்ததில் பாலா திரும்பவும் வெளிநாட்டுக்கே வந்து இங்குள்ள அரசு மருத்துவமனையில் பணிபுரிய ஆரம்பித்துவிட்டார். அதிகாரத்துக்குப் படியாமல், நேர்மையான வழியில், நெளிவு சுளிவுகளின்றி வாழ விரும்பும் பலரை இப்படித்தான் அந்தக்கட்டமைப்புகள் பிழிந்து எடுத்துவிடுகின்றன. குருபரனுக்கு நிகழ்ந்தது அதற்கான சமீபத்திய அடையாளம்.

ஊரோச்சம் : கட்டாக்காலி நாய்கள் : 2

அன்றைக்கு சிவராத்திரி தினம். மத்தியானம் இரத்தமாக வெட்டிய ஆட்டிறைச்சிக்கறி செமிப்பதாக இல்லை. இரவுக்கு மிச்சச்சட்டியைவேறு பிரட்டவேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் வண்டி இன்னமும் பொம்மிக்கொண்டு நின்றது. இரண்டு பனங்கிழங்குகளை சீவி உள்ளே போட்டுப்பார்த்தேன். வயிறு மேலும் இறுகியதுதான் மிச்சம். ‘நாச்சிமார் கோவிலடிவரைக்கும் நடந்திட்டு வருவமா’ என்று அக்கா ஐடியா கொடுத்தார். சரியென்று நாங்கள் நடக்க ஆரம்பித்தோம். அப்போது நேரம் இரவு எட்டுமணி.

ஊரோச்சம் : கட்டாக்காலி நாய்கள் : 1

யாழ்ப்பாணம் முழுதும் கட்டாக்காலி நாய்களால் நிறைந்திருந்தது. முன்னரானால் ஒழுங்கை முகப்புகளிலும் கோயில் முன்றல்களிலும் சந்தைகளிலும் சாப்பாட்டு ஓட்டல்களுக்குப் பின்னாலிருக்கும் வெறுங்காணிகளிலுமே கட்டாக்காலி நாய்கள் திரிவதுண்டு. என்னதான் கட்டாக்காலிகள் என்று சொன்னாலும் அவற்றுக்கும் ‘கண்ணன் லொட்ஜ் நாயள்’, நந்தாவில் அம்மன் நாயள்’, ‘நல்லூரடி நாயள்’, ‘மூத்திர ஒழுங்கை நாயள்’, பணிக்கரடி நாயள் என்று பல முத்திரைப் பெயர்கள் இருந்தன. அந்தக் கட்டாக்காலிகள் போட்ட குட்டிகள்தான் எங்கள் வீடுகளிலெல்லாம் வளர்ப்பு நாய்களாகவும் இருந்தன. கட்டாக்காலிகளின் எண்ணிக்கை அதிகமானாலோ அல்லது அவற்றின் தொல்லை கூடிவிட்டாலோ நகரசபை நாய்பிடிகாரர் வந்து அவற்றைப்பிடித்துக்கொண்டு போய்விடுவார்கள். பல நாய்களைத் தெருவிலேயே வைத்து இயக்கங்களும் இந்திய இலங்கை ஆர்மிகளும் மாறி மாறிச் சுட்டுப்போட்ட சம்பவங்களும் இடம்பெற்றிருக்கின்றன. சுடும்போது அவர்கள் வளர்ப்புநாயா கட்டாக்காலியா என்று பேதம் பார்க்கமாட்டார்கள். எது எப்படியோ, இன்னோரன்ன காரணங்களால் அந்நாட்களில் கட்டாக்காலிகளின் எண்ணிக்கை எப்போதுமே ஒருவித கட்டுக்குள்ளேயே இருந்தது என்க.