வணக்கம் ஜேகே. வெம்பிளி ஓஃப் ஜாப்னா கதை(?)யின் முதல் பாகம் வாசித்துவிட்டு சத்தமே போடவில்லை. கருத்திடவில்லை. ஆனால், நிறையவே சிரித்தேன்.என்னையும் மீறி பெருமூச்சுக்களும் வெளியேறியதைத் தவிர்க்க முடியவில்லை. அதுமட்டுமின்றி உங்கள் எழுத்து அறிமுகம் செய்கின்ற அம்மாவை ஒருதடவை சந்திக்கவேண்டும் எனும் ஆவல் எழுகின்றது. இரண்டாவதை வாசித்து முடித்ததும் எப்போதும் போலவே மனதோரம் பொறாமை. 'எப்படி இப்படியெல்லாம் எழுத முடியுது?' என்ற வியப்பு, மகிழ்வையும் மீறி அந்த ஆமையையும் தட்டி விட்டால் நான் என்ன செய்வது? <<<<உலகத்தின் எந்த வரலாற்றை எடுத்துக்கொண்டாலும், எல்லா இருண்டகாலங்களுக்கும் பின்னே பொற்காலங்கள் தோன்றியிருக்கும். எல்லாப் பொற்காலங்களுக்கும் பின்னே மீண்டும் இருண்ட காலங்கள் தோன்றியிருக்கும். இன்னுஞ் சொல்லப்போனால் பொற்காலங்களின் இருப்பை அதற்குப் பின்னரான இருண்ட காலங்களும், இருண்ட காலங்களின் இருப்பை அதற்கு முன்னரான பொற்காலங்களுமே எமக்கு உணர்த்தி நிற்கும். ஆனால் மிக மிக அரிதாகவே வரலாற்றின் சில காலப்பகுதிகளை எம்மால் அப்படி எடைபோட முடிவதில்லை.>>>> எனக்கு இந்த வரிக