Skip to main content

Posts

Showing posts from April, 2012

என் கொல்லைப்புறத்து காதலிகள் : சூப்பர் ஸ்டார்!

  கையில் கமரா. பிங்க் கலர். மேலே ஒரு பட்டன் இருக்கும். அமத்தினால் “பிய்ச் பிய்ச்” என்று தண்ணி சீரும்! கிணற்றடிக்கு இரண்டு படிக்கட்டுகள். ஒரு எட்டு எட்டினால் தோய்க்கிற கல்லு. மூன்றடி உயரம். அப்படியே ஒரு கை ஊன்றி டைமிங்குடன் ஜம்ப் பண்ணி நிற்கவேண்டும். அக்கா குசினிக்குள் இருந்து “டேய் தோய்க்கிற கல்லு, வழுக்கும், விழுந்து கிழுந்து எதையும் தேடிக்கொண்டு வராம, கால கைய வைச்சுக்கொண்டு சும்மா இரு!”. போன வருஷம் நல்லூரில் எட்டாம் திருவிழாவுக்கு வாங்கிய நீலக்கலர் ஐஞ்சு ரூபாய் கூலிங் கிளாஸ். அப்பிடியே ஒரு சுழற்று சுழற்றிக்கொண்டே போட்டுக்கொண்டு, ஒரு காலை சின்னதாக மடித்து மற்றக்காலில் ஊன்றிக்கொண்டு வானத்தை ஒரு ஆங்கிளில் பார்த்துக்கொண்டே இருக்க பாட்டு ஆரம்பிக்கும்! சிலு சிலுவென குளிரடிக்குது அடிக்குது, சிறு அரும்புகள் மலர் வெடிக்குது வெடிக்குது வனம் விட்டு வனம் வந்து மரங்கொத்தி பறவைகள் மனம் விட்டு சிரிக்கின்றதே! இப்போது தலைவர் கீழே குனிந்து மண்ணை மக்களை பார்க்கிறார். அம்மா தோயச்சு ஊத்தின சவர்க்கார தண்ணி பூங்கன்றுக்கு போகாதவாறு வேறு இடத்துக்கு பாத்தி மாற்றப்பட்டு இருந்தது. வெள்ளை நுரை தள்ளியது. இடை

The White Tiger

The White Tiger”. ஆஸ்திரேலியாவில் பிறந்து சென்னையில் வளர்ந்த அரவிந்த் ஆதிகா எழுதிய நாவல். இந்தியாவுக்கு விஜயம் செய்யும் சீன அதிபருக்கு, பெங்களூரில் ஒரு சின்ன கோர்ப்பரேட் ட்ரான்ஸ்போர்ட் கம்பனி நடத்தும் அசோக் சர்மா aka பலராம் எழுதும் கடிதம் தான் நாவல். அது சும்மா உத்திக்காக. கதை என்னவோ வழமையான சேட்டன் பகத் வகை கதை தான். போதிகாயாவுக்கு அருகே உள்ள குக்கிராமத்தில், இனிப்புகள் செய்யும் கீழ் சாதி(?)யில் பிறக்கும் ஒருவன், எப்படி ட்ரைவராகி, ஒரு கட்டத்தில் தன் முதலாளியையே கொன்றுவிட்டு, பணத்தை எடுத்துக்கொண்டு பெங்களூர் வந்து பிசினஸ் செய்வது தான் லைன். இப்படி வளருவதற்கு என்னென்ன தகிடுத்தனங்கள் செய்யவேண்டியிருக்கிறது, எந்த வித தார்மீக நெறிகளும் இருக்கக்கூடாது என்று சொல்லும் பத்தோடு பதினொன்று வகை நாவல். டிரைவர்கள் வாழ்க்கையை ஓரளவுக்கு டீடைலாக சொல்லியிருக்கும் நாவல். கொஞ்சம் மைக்ரோஸ்கோப் வைத்து பார்த்தால் இது தான் விகாஸ் சோப்ரா எழுதிய Q&A நாவலின் கதையும் கூட. சேட்டன் பகத்தின் “Revolution 2020” கதையும் இது தான். அயர்ச்சி! கீ.ரா, சுஜாதா, புதுமைப்பித்தன் போன்றோர் ஆங்கிலத்தில் எழுதாததால்

ஆறா வடு

“ஆறா வடு” என்று ஒரு நாவல் வந்திருக்கு, இப்படி ஒரு எழுத்தை அண்மைக்காலமாக வாசிக்கவேயில்லை, நீங்க கட்டாயம் விமர்சனம் எழுதோணும் -- திலகன் தம்பி, நீர் மட்டும் சிட்னி வந்தா, “ஆறா வடு” புத்தகத்தை தருவன், வாசிச்சு பாரும். --சக்திவேல் அண்ணா 3 more stories...When I finished the stories I thought I should have born as an Australian-and live with no knowledge about it at all! -- தன்யா ஜேகே, நான் உடுமலை.காம் இல இருந்து வாங்கி வைச்சிருக்கிறன். வாசிச்சு முடிச்சு இப்ப மனிசி வாசிச்சுக்கொண்டு இருக்கு. கதை நல்லா இருக்கு. ஆனா அவர் மற்ற கோஷ்டியா? -- சுகிந்தன் அண்ணா ஜேகே, நீங்க கட்டாயம் வாசிக்கோணும். சயந்தனில இருக்கிற லிபரல் நக்கல் எப்பவுமே கலக்கும்.  -- கேதா அண்ணா, நீங்க வாசிச்சிட்டு விமர்சனம் போடுங்க. யாரு வாசிக்காட்டியும் நீங்க வாசிக்கோணும். அப்ப தான் “எழுத்து” என்றால் உங்களுக்கு என்னவென்று விளங்கும்! – வீணா சயந்தன் எழுதிய “ஆறாவது வடு” நூல் ஆஸ்திரேலியாவில் எவ்வளவு பிரபலம் என்பதற்கு இதைவிட வேறு எதை சொல்லமுடியும்? சுகிந்தன் அண்ணா, மனைவி வாசிக்க முதலேயே, கேட்டேன் என்பதற்காக பறித்து எனக்கு வா

கூட்டமைப்பு எம்.பி சுமந்திரனுடன் நேரடி சந்திப்பு!

  தமிழ் தேசிய கூட்டமைப்பு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுடனான சந்திப்புக்கு அழைப்பு வந்தபோது முதலில் போவதில்லை என்று தான் முடிவெடுத்தேன். அப்பாவிடம் சொன்னபோது “உனக்கென்ன விசரா? அவர் கருத்தை அவர் வாயாலேயே நேரடியாக கேட்டால் தானே அவரின் நிலைப்பாடு அறியமுடியும். சும்மா பத்திரிகைகள் எழுதுவதை படித்து வியாழமாற்றத்தில விமர்சித்தால் சரியா?” என்று நெத்தியடி தர, சரி போவோம் என்று முடிவெடுத்தேன். முருகன் தானும் வருகிறேன் என்று சொல்ல, வேலை முடிந்து ஏழு மணி சந்திப்புக்கு ஆறரைக்கே போக அங்கே சுமந்திரன் ஏற்கனவே தன் காரில் டிரைவ் பண்ணி வந்திருந்தார்! அப்புறமாக ஒழுங்கமைப்பாளரும் வந்து சேர்ந்தார். என்னை அறிமுகப்படுத்தும்போதே, இவர் ஜேகே, வியாழ மாற்றத்தில சிலவேளைகளில் உங்களை பாராட்டுவார். பலவேளைகளில் விமர்சிப்பார்” என்று சொல்லிவைக்க, என்னடா இது லொள்ளா போயிற்று என்று யோசித்தேன். எந்த விஷயத்தில் என்னை விமர்சிக்கிறீர்கள் என்று சுமந்திரன் கேட்ட போது “13ம் திருத்தம் அமுல்படுத்தல் பற்றிய  உங்கள் நிலைப்பாடு …” என்று நான் சொல்லி முடிக்கும் முன்னமேயே, “புத்திஜீவிகள்” பற்றியும் எழுதியிருக்கிறார் என

மேகலா!

  குட் மோர்னிங்… மேகலா … காணும் நித்திரை… எழும்பு .. இட்ஸ் coffee டைம் … குட் மோர்னிங் கும.. கொட்டாவியால் “ரன்” சொல்லியவாறே என்னுடைய தலையணையையும் இழுத்து அணைத்துக்கொண்டே மற்றப்பக்கம் ஒருக்களித்துப்படுக்கும் மேகலாவுக்கு சென்றவாரத்தோடு இருப்பத்தேழு வயது முடிந்தது என்று நம்புவதற்கு அம்மாளாச்சிக்கு தலையில் வைத்து சத்தியம் செய்யவேண்டும். கொஞ்சம் குட்டை முடி. மிஞ்சிப்போனால் தோளின்கீழ் அரையடி நீண்டாலே அதிகம் தான். ஸ்லீக்காக சென்று, முடிவில் கேர்லியாக வளைந்து நிற்பது எப்படி என்று கேட்டு கேட்டு அலுத்துவிட்டது. சொல்லுகிறாள் இல்லை பாவி. அனிச்சையாக முடியை தவழவிட்டு மீண்டும் தலையணைக்குள் முகம் புதைக்கிறாள். பிரவுண் ப்ளெய்ன் கலரில் போர்வை. இழுத்துப்போர்த்துக்கொண்டு, மேகலா விண்டர் குளிர் தாங்கமாட்டாள். “என்ன நரகம்டா இது? திரும்பிப்போவோமா?” என்ற பல்லவி ஒவ்வொரு மே மாசமும் ஆரம்பிப்பாள். செப்டெம்பர் வசந்தகாலத்தில் ஒருமுறை கிப்ஸ்லாண்ட் ட்ரைவ் போனால் ஆகா மெல்பேர்ன் சொர்க்கம் என்பாள். குளிர் என்றால் படுக்கையில் கூட கணுக்கால் வரைக்கும் சொக்ஸ் தான். ஹீட்டர் போட்டால் தொண்டை கட்டும் குரல் போய்விடும் என்பாள்

பிரிவோம் சந்திப்போம்

“ரகுபதி ஒரு இஞ்ச் உயரத்தில் மிதந்து சென்று வீட்டுக்கு வந்தான். மதிமிதாவை திறந்து முகத்தில் மதுமிதாவை இறைத்துக்கொண்டு, மதுமிதா போட்டுக்கழுவிக்கொண்டு, மதுமிதாவால் துடைத்துக்கொண்டு, மதுமிதாவை திறந்து மதுமிதாவை படித்தான்” நம்ம தலைவர் சுஜாதாவின் “பிரிவோம் சந்திப்போம்”. இதை வாசிக்காமல் சுஜாதாவை வாசித்தேன் என்று யாரும் சொல்லமுடியாது. ஒவ்வொரு எழுத்திலும் தலைவரின் டச் இருக்கும். மதுமிதா மாதிரி ஒரு பெண்ணை காண மாட்டோமா என்று ஏங்க வைக்கும். வெகுளி, what is வெட்கம்? என்று கேட்கும் மது, அப்பா சொன்னார் என்பதற்காகவே ரகுவை காதலிக்கிறாள். அவனை கிஸ் பண்ண சொல்லுகிறாள். அமெரிக்கன் ரிட்டர்ன் ராதா வந்த போது ரகுவுக்கு சங்கு. ரகு தற்கொலை முயற்சி. காப்பாற்றப்பட்டு அமெரிக்கா வர, அங்கே அவன் மதுவை கண்டு, மதுவோடு கண்டு! வரும் சிக்கல். அமெரிக்க இந்தியர் வாழ்க்கை தலைவர் பாணியில் … அப்போது தான் “என்னுடைய”  ரத்னா அறிமுகம்! “நீங்க தானா அது?” ரகுபதிக்கு புரியவில்லை. “என்ன இது, என்னை பத்தி ஏதாவது புரளியா?” என்றான். இல்லை இல்லை, ஐ ஆம் சப்போஸ்ட் டு மீட் யு இன் திஸ் பார்ட்டி எதுக்கு நமக்கு கல்யாணம் பண்ணி வைக்கல

The Cage

மே மாசம் பதினெட்டு. பிரபாகரனின் சடலம் மீட்கப்படுவதோடு புத்தகம் ஆரம்பிக்கிறது! அந்த சம்பவத்தின் பின்னரான சிங்களவர் தமிழர் உணர்ச்சிகளும், வெளிப்படுத்திய முறையும் தொடர, அடுத்த சாப்டரில், விஷயம் இலங்கை வரலாறுக்கு தாவுகிறது. முதல் முதலில் தமிழர்களும், சிங்களவர்களும் எனக்கு சொல்லிவைத்திருந்த வரலாற்றை ஒரு வெள்ளைக்காரன் வேறு தளத்தில் மூலாதாரங்களுடன் எழுத, வரலாறுகளில் நம்பிக்கை இழக்கிறேன்! ரோமில் எரியும் போது பிடில் பிடித்தவன் யார் என்ற உண்மை! அப்புறமாய் தீயை அணைத்தவன் எழுதும் வரலாற்றில் தங்கியிருக்கிறது!. சோழ சாம்ராஜ்யத்தில் பாலும் தேனும் ஓடியதா அல்லது குருதியும் குரோதமுமா? என்பது நீங்கள் தமிழனா கலிங்கனா என்பதில் தங்கியிருக்கிறது. கலிங்கன் அடுத்த தலைமுறைக்கு தங்கினானா என்பதிலும் தங்கியிருக்கிறது! அஜீத்தன் எழுதியது போல, history always written by winners. நம்ம சங்க இலக்கியத்தையும் கம்பனையும் ஏன் காந்தியையும் கூட ஒரு வித பதட்டத்துடன் பார்க்கும் தருணம்! Gordon Weiss இன்னொரு வெள்ளைக்கார லசந்த விக்கிரமசிங்க, சிவராம், ரஜனி திரணகம .. You name it! வாசித்த ஒவ்வொரு சிங்களவனும் தமிழனும் தன்னை