Skip to main content

Posts

Showing posts from July, 2014

அசோகனின் வைத்தியசாலை.

  அனைவருக்கும் வணக்கம். நோயல் நடேசன் அவர்களுக்கு இரண்டு விஷயங்களை முதலில் சொல்ல விரும்புகிறேன். முதலாவது; நன்றி. இந்த நூலைப் பற்றி பேசுவதற்கு சந்தர்ப்பம் கொடுத்தமைக்கு நன்றி. இரண்டாவது, மன்னிப்பு. நடேசனுடைய அரசியல் பார்வைகள், நடவடிக்கைகள் மீது எனக்கு விமர்சனம் இருக்கிறது. மாறுபட்ட அபிப்பிராயங்கள் இருக்கிறது. அந்த அபிப்பிராயம், நடேசனின் நாவல் இப்படித்தான் இருக்குமோ? என்கின்ற ஒரு முன்முடிபை என்னுள் ஆரம்பத்தில் ஏற்படுத்தியது. ஒருவர் மீதான அபிப்பிராயங்கள் அவருடைய படைப்பை அணுகும்போது தடையாக இருக்குமென்றால், அது வாசகனுடைய பெரும்தோல்வி ஆகிறது. இந்த நாவலின் முதல் ஒருசில பக்கங்களை, தோல்வியடைந்த வாசகனாகவே அணுகினேன். அதற்காகத்தான் இந்த மன்னிப்பு. பின்னர் நாவலுக்குள் இழுத்துச்சென்று, என்னையும் ஒரு பாத்திரமாக்கியதன் மூலம் நடேசன் எழுத்தாளராக வெற்றியடைகிறார். என் உடைந்த மூக்கு, உடைந்த மூக்குதான்.

மன்னிப்பாயா?

  காலையில் ரயில் ஏறியதும் கேட்க ஆரம்பித்த பாடல் இது.  இன்னமும் கேட்டுக்கொண்டே இருக்கும் பாடல். "இங்குவந்து பிறந்தபின்னே இருந்த இடம் தெரியும் நாளை சென்றுவீழும் தேதி சொல்ல இங்கெவரால் முடியும்? வாழ்க்கை என்னும் பயணம். இதை மாற்றிடவா முடியும்?" தொண்ணூறுகளில் இந்த பாடலை முணுமுணுக்காமல் எவனும் வல்வை வெளியையோ, ஆசைப்பிள்ளை ஏற்றத்தையோ சைக்கிள் மிதித்து கடந்திருக்கமாட்டான். அப்போது எம்மோடு மிக நெருக்கமாக இருந்த பாடலை இப்போது திரும்பவும் கேட்கையில் அந்த எதிர்க் காற்றும், ஆசைப்பிள்ளை ஏற்றத்தின் பளுவும் நம்மை மீண்டும் தாக்குகிறது. தானாகவே விக்கிராமதித்தியனின் வேதாளம் வந்து தோளில் உட்கார்ந்து கொள்ளுகிறது. விலகாமல் கூடவே இருந்து கேள்விகளைக் கேட்டுத் துளைக்கிறது.

குரங்குகள் கிரகத்தின் வைகறை (Dawn of the Planet of the Apes)

  பால்வீதி, அன்றோமீடா மற்றும் நெபுலா பெருவெளிகளில் வலிமை மிகு சக்திகளின் எழுச்சி என்பது எப்போதுமே புரட்சிகளின் மூலமே அரங்கேறியிருக்கிறது. ஒரு புரட்சி இன்னொரு புரட்சிக்கும், அது மீண்டுமொரு புரட்சிக்கும் வித்திட்டுக்கொண்டே இருக்கிறது. இது பிரபஞ்சத்தின் பெருவெடிப்பு இயக்கத்தை ஒத்தது. சூனியவெளியில் ஆரம்பிக்கும் பெருவெடிப்பு எரிகுளத்தில் தெறித்து பறக்கும் தீமுகிழ்கள் போல பிரவாகம் எடுத்து விரிந்து ஈய்ந்து எல்லை மீறி மீண்டும் சூனியப் புள்ளியை அடையும்.   அங்கே மீண்டும் பெருவெடிப்புக்கான முன் ஏற்பாடுகள் நிகழும். அது போன்றதே புரட்சியும். இங்கே புரட்சிக்கான தேவை வெளியே சூனிய வெளி. அந்த தேவைவெளியில்  புரட்சிக்கான ஆரம்பம் அதிகார கட்டுகளை எதிர்த்து துளிர்விடும். கொஞ்சம் கொஞ்சமாக புரட்சி பெருநதியாக அலைபாயும். அடிமைத்தனத்திலிருந்து கட்டுடைத்து எழுதவதற்காக பீறிடும். புரட்சி மலரும்.  பின்னர் புரட்சியின் மலர்ச்சி இன்னுமொரு அதிகார மையத்தை உருவாக்கி, அதன்பால் அத்தனை இயக்கங்களும் சடத்துவங்களும் ஈர்க்கப்பட்டு இறுதியில் புரட்சி கட்டுடைந்து மீண்டும் சூனிய வெளியை நோக்கி தள்ளப்படும். இதுவே பிரபஞ்ச இயக்கமாகும்.

கல்லைக்கண்ட அரசியல்வாதி!

  கல்லொன்று தெருவோரம் முன்வந்து தோன்றிட்டால் என்சொல்வர் இம்மக்கட் கூட்டம்?  கல்லுக்கும் தமிழுக்கும் ஒரு பூர்வ ஜென்ம பந்தம் உண்டு. கல்தோன்றி மண்தோன்றா காலத்து முன்தோன்றிய மொழியின் முதலுறவே கல்லாகத்தானே இருந்திருக்க முடியும்? அதை கற்றதனாலாய பயனே எம் இனம்! எம் இலக்கியங்களில் கல்லுக்கென்று எப்போதுமே தனியிடம் இருக்கும். கல்லும் கவி சொல்லும். கல்லுக்குள் பெண் இருப்பாள். சமயங்களில் கல்லோடு கட்டி கவிஞர்களை கடலிலும் போடுவார்கள். "நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால் தெய்வத்தின் சாட்சியம்மா" என்று கல்லை கடவுளாக்கியவர்கள் நம் முன்னோர்கள். அந்தக்கல்லையே கவிப்பொருளாக்கிய அரங்கு இது. தலைப்பு "கல்லிலே கலைவண்ணம் கண்டார்". அரங்கில் கல்லைக்கண்ட விஞ்ஞானியாக கீர்த்தனா, கல்லைக்கண்ட சாமியார்யாக ஆனந்த், கல்லைக்கண்ட கந்தசாமியாக (பாமரன்) ஜெயகாந்தன் மற்றும் கல்லாய் அமைந்து மறுமொழியை கேதாவும் பகர்ந்தார்கள். இதில் என் பங்கு அரசியவாதி. கல்லை அரசியல்வாதியாகவும் அரசியல் கண்ணோட்டத்திலும் நோக்கியிருக்கிறேன். உங்கள் கருத்துகளை எதிர்பார்க்கிறேன் (முழு தொகுப்பு கிடைத்தவுடன் பகிர்கிறேன்).  நன்றி.

சியாமா

  சியாமா இப்போது அவனுக்கென்று அடைக்கப்பட்டிருந்த இரண்டடி உயர விளையாட்டு வேலிக்கூட்டுக்குள் இருந்தான். தரை முழுதும் பொம்மை படங்கள் போட்ட ரப்பர் விரிப்பு. கூடு எங்கும் விளையாட்டுப்பொருட்கள். அண்ணர் எதை எடுக்க? எதை விட? என்று தெரியாமல் குழம்பினார். "சியாமா கண்ணா .. அம்மாவை இஞ்ச ஒருக்கா பாருடா" தாய்க்காரி சியாமாவின் கவனத்தை இந்தப்பக்கம் திருப்பப் பார்க்கிறாள். சியாமா கணக்கே எடுக்கவில்லை. நண்பர்கள் வந்திருக்கிறார்கள். அவனைப் பார்ப்பதற்கென்றே வருவார்கள். சியாமா உறவு வட்டாரத்தில் அவ்வளவு பிரபலம். பொதுவாக ஈழத்தில் குழந்தைகள் இவ்வளவு வாளிப்புடன், கொழுகொழுவென, வெள்ளை வெளீரென்று சியாமா போல இருப்பதில்லை. ஆனால் ஆஸியில் நேரத்துக்கு தகுந்த உணவு, பால், சீஸ், பட்டர், மாடு, ஆடு என்று எப்போதும் புரதம், கொழுப்பு அதிகம் உள்ள உணவு வகைகளையே கர்ப்பிணி தாய்மார்களுக்கு பிரஸ்தாபிப்பார்கள். தெற்கு ஆசியர்கள் அந்த புதிய உணவுப்பழக்கத்துக்கு திடீரென்று மாறுவதால், பொதுவாக ஆஸி போன்ற நாடுகளில் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் எல்லாமே சியாமா போன்று மொழுமொழுவென்றுதான் இருக்கும். வைத்தியர் தசெவ்ஸ்கி இந்த விஞ