Skip to main content

Posts

Showing posts from October, 2011

சுந்தர காண்டம்

  " ஆழ நீர்க்கங்கை அம்பி கடாவிய ஏழை வேடனுக்கு, 'எம்பி நின்தம்பி, நீ தோழன், மங்கை கொழுந்தி ' எனச் சொன்ன வாழி நண்பினை உன்னி, மயங்குவாள்" பொருள்: கங்கைக் கரை வேடன் குகனிடம் நட்பு கொண்டு என் தம்பி, இனி உனக்குத் தம்பி என்றும், நீ எனக்குத் தோழன் என்றும், சீதை உனக்குக் கொழுந்தி என்றும் சொன்ன அந்தப் பரிவை எண்ணி மயங்குகிறாள். என்னைத் திருமணம் புரிய வந்து, ஜனகன் சபையில் இருந்தோர் வியப்புற வடவரை போன்ற சிவதனுசை நொடியில் வளைத்து ஒடித்த பெருமான் இன்று என்னை வந்து மீட்காமல் இருக்கிறாரே என்று வருந்துவாள்   புத்தகத்தில் ஆழ்ந்திருந்தவள் இராணுவ போலீஸ்காரியின் அழைப்பைக்கேட்டு திரும்பினாள். “மிஸ்டர் குமார ஓயாவ பலன்ட அவிள்ள இன்னவா” ( திரு குமார உன்னை பார்க்க வந்திருக்கிறான்) “குமார? ஹூ இஸ் இட் … கவுட?” “குமாரா, ஓய தன்னவலு?” (குமார, உனக்கு தெரியுமாம்) சிலிர்த்தெழுந்தாள் மேகலா, “இஸ் இட் குமரன்? குமரன்த?” “ஔ எயா தமாயி” (ஓம் அவனே தான்)   --------------------------------------------------   கிளிநொச்சி மகாவித்தியாலயம் முடிவடைந்து மாணவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறிக்கொண்டு இருந்

என் கொல்லைப்புறத்து காதலிகள் : மணிரத்னம்

ஆரம்பம் ஒரு சின்ன ஒளிப்புள்ளியில் இருந்து ஆரம்பிக்கிறது. பின்னணி இசையின் எலெக்ட்ரிக் பேஸ் கிட்டார் பிட்ச் திகிலூட்டுகிறது. அப்புறம் சேசிங். ஐந்து நிமிடத்தில் காஷ்மீரிய போராளி வாசிம்கான் சுற்றி வளைக்கப்படுகிறான். கட். அடுத்த காட்சி சுந்தரபாண்டியபுரத்தில். சின்ன சின்ன ஆசை பாடல். 

தேடித்தேடி தேய்ந்தேனே!!

சிறுவயதில் உங்களுக்கு அந்த பெண்ணை பிடித்திருக்கும்! ஒரு பதினைந்து வயது என்று வையுங்கள். அப்போது அவளுக்கு தெரியாமலேயே அவளை நோட்டம் விட்டிருப்பீர்கள். கணக்கே எடுத்திருக்கமாட்டாள்.  அவள் போகும் இடம் எல்லாம் பின் தொடர்ந்து, அத்தனை இளையராஜா டூயட்களையும் அவளோடு வயற்காட்டிலோ இல்லை இண்டோர் செட்டிலோ பாடிப்பார்த்து இருப்பீர்கள். ஒரு மழைக்கால இரவில் “புதுவெள்ளை மழை” பாட்டை ரேடியோவில் போட்டுவிட்டு அவளின் கண்கள் இரண்டையும் உங்கள் கைகளால் பொத்திக்கொண்டு கூட்டிச்சென்று காஷ்மீர் பனிமலைகள் காட்டி இருப்பீர்கள். அவளும் சொக்கிப்போய் சுத்தி சுத்தி பார்க்க, கண்ணாடி சில்லுகளாய் இசை சிதறி கிறங்கடிக்கும். ஆனால் நிஜத்தில் அவள் நேரில் வந்தால் அப்போது தான் பனைமரத்தில் எத்தனை நொங்குகள் இருக்கின்றன என்று எண்ணியிருப்பீர்கள். சரி, காலம் ஓடிவிட்டது, இப்போது வளர்ந்து பெரியவன் ஆகி விட்டீர்கள். ஒருநாள் திடீரென்று அவள் எதிரே வந்து நிற்கிறாள். ஒரு உறவுக்கார திருமணம் என்று வைய்யுங்களேன்! நீங்கள் நினைத்த கலரிலேயே சேலை, நீங்கள் நினைத்ததுபோலவே சிரிக்கிறாள். உங்களை ஞாபகம் வைத்து பேசுகிறாள்.  ரோஜா மதுபாலா போல “சிறு பறவை நீய

அப்பா வருகிறார்!

குமரனின் அப்பா இன்று தான் வருகிறார்.  காலையிலிருந்தே அவன் படலைக்கும் வீட்டிற்குமாய் ஓடிக்கொண்டு இருந்தான். இருப்புக்கொள்ளவில்லை அவனுக்கு. இரவு முழுதும் தூக்கம் இன்றி உழன்றுவிட்டு அடிக்கடி எழும்பி நேரம் பார்த்து பார்த்து வெறுத்துப்போனான். அடடே குமரனைப்பற்றி சொல்லவேயில்லை. எப்படித்தொடங்குவது? நான் தான் குமரன் என்று சொன்னால் வேலை இலகுவாக முடிந்துவிடும். ஆனால் அதில் ஒரு சங்கடம் இருக்கிறது. இதையெல்லாம் ஏன் எழுதுகிறாய் என்பார்கள். அட மறந்துவிட்டேன், சத்தியமாக இந்த குமரன் நான் இல்லை.  எங்கள் வீட்டில் அப்போது படலை இருக்கவில்லை. இரும்பு கேட் தான், ஓஹோ படலையை கேட் என்று மாற்ற அதிகம் நேரம் பிடிக்காது என்ன? ம்ம்ஹூம் ஏன் வீண் வம்பு, அது படலை தான். நான் குமரனும் இல்லை! குமரன், வரும் ஆவணிக்கு அவனுக்கு பதின்மூன்று வயது ஆகிறது. எங்கே வசிக்கிறானா? இதெல்லாம் இந்த கதைக்கு தேவையில்லை, இருந்தாலும் சொல்கிறேன். எப்போதாவது யாழ்ப்பாணம் வந்திருக்கிறீர்களா? வந்தால் அங்கே  பரமேஸ்வராச்சந்தி என்று ஒரு பிரபல முச்சந்தி இருக்கிறது, ஆம் அதே தான், பல்கலைக்கழகத்துக்கு அண்மையில், நிறைய பையன்கள் கூடும் சந்தி. ம

என் கொல்லைப்புறத்து காதலிகள் - கம்பவாரிதி ஜெயராஜ்

“ மனப்போராட்டம் நிறைந்த யதார்த்த மானிடம் பெரிதும் வெளிப்படுவது கம்பனில் …. “ என்று ஒரு பட்டிமண்டபம், 1992ம் ஆண்டு யாழ்ப்பாண கம்பன் விழாவில் நடந்தது. நல்லை ஆதீனத்தில் இடநெருக்கடியால் வெளியிலே நெரிசலில் நின்று,அப்பாவை இம்சித்து,என்னை தூக்கிவைத்து காட்டச்சொல்லி பார்த்த பட்டிமண்டபம். “இந்தை இப்பிறவிக்கு இரு மாந்தரை என் சிந்தையாலும் தொடேன்”  என்று சொல்லி பின்னாலே சீதைக்கு சிதை மூட்டச்சொன்ன போது அடைந்த கோபம் ராமனில் வந்ததா இல்லை அதற்கு வக்காலத்து வாங்கிய கம்பனில் வந்ததா என்று ஞாபகம் இல்லை. “சண்டாளி சூர்ப்பனகை தாடகை போல் வடிவு கொண்டாளைப் பெண்ணென்று கொண்டாயே தொண்டர் செருப்படி தான் செல்லாவுன் செல்வமென்ன செல்வம் நெருப்பிலே வீழ்ந்திடுதல் நேர்”  என்று அவர் ஔவையை அறிமுகம் செய்தபோது அதை மீண்டும் மனப்பாடம் செய்யும் தேவை இருக்கவில்லை. ஈழத்தில் தொண்ணூறுகளில் தனக்கென ஒரு தலைமுறை இலக்கிய ஆர்வலர்களை உருவாக்கிய கம்பவாரிதி இ. ஜெயராஜ் தான் இன்றைய கொல்லைப்புறத்து காதலி. என்னுடைய முதல் காதலியும் கூட. ஜெயராஜ் என்றால் யார் என்பதை தொண்ணூறுகளின் ஆரம்ப காலத்தில் சிறுவர்களாகவோ இல்லை இளைஞர்கள

குவா குவா ஹைக்குவா!!

              பாடசாலை எதிரே            படையினர் காவலரண்,            உள்ளே சீருடைகள்! அடையாள அட்டை எடுத்து வச்சியா? அம்மா கேட்டாள் இன்று சுதந்திரதினம்! இந்தை இப்பிறவிக்கு இருமாதரை என் சிந்தையாலும்… கொய்யால என்னை முதல்ல தொடுடா Its been fourteen years! மணலாறு வெலிஓயா! நயினாதீவு நாகதீப நாமம்தான் இனி! “ச்சே என்ன மனிதன் இவன்” பக்கத்தில் அமர்ந்திருப்பவரை திட்டினேன் பஸ்ஸில் கர்ப்பிணி 2002ம் ஆண்டு இருக்கும். நானும் அறிவிப்பாளர் குணாவும் சேர்ந்து சக்தி FM இல் ஹைக்கூ பற்றிய ஒரு தனி நிகழ்ச்சி நடத்தினோம். நல்ல பல ஹைக்கூக்களை சேகரித்து, அவற்றின் தோற்றம், இலக்கணம் என ஒரு முழு நிகழ்ச்சி செய்தபோது மகிழ்ச்சி தான். இதிலே முதலாவது ஹைக்கூ நான் சொல்லிக்கொண்டு இருக்கும்போது கிருஷாந்தி சம்பவத்தை சுட்டி நிற்கிறது என்று சொல்லி sensor செய்து விட்டார்கள். இன்னும் பல ஹைக்கூக்கள் அந்த காலத்தில் எழுதினேன். எல்லாம் தொலைந்து விட்டது. தோன்றும்போது எழுதுகிறேன். எப்போதோ ஒருமுறை, கற்றதும் பெற்றதும் என்று நினைக்கிறேன், ஒரு ஹைக்கூ வெளியானது. யா

The Spirit Of Music

1992ம் ஆண்டு, ஒருநாள் எங்கள் நண்பி யசோ அக்கா வேக வேகமாக வீட்டுக்குள் நுழைந்தார். ஒருவித படபடப்பும் பரவசமும் அவர் முகத்தில்,  என்ன என்று எல்லோரும் பார்த்தோம். ரோஜாவின் இசை இப்போது தான் கேட்டேன். ஆச்சரியம் தாங்க முடியவில்லை, சொல்லுவதற்கு வந்தேன் என்று தன்னுடைய walkman ஐ எடுத்து headphone ஐ ஒவ்வொருவர் காதுகளிலும் மாறி மாறி மாட்டினார். பரவசம் எம்மையும் கொஞ்சம் கொஞ்சமாக தொற்றத் தொடங்கியது. சின்ன சின்ன ஆசையின் சின்ன சின்ன சத்தங்கள் என்னென்னவோ செய்தது. இறுதிப்பல்லவியில் வரும் ஒவ்வொரு இறுதி note இலும் ஒவ்வொரு ஜாலம் காட்டினார். "காதல் ரோஜாவே" காதலிக்கச்சொல்ல,  புதுவெள்ளை மழை யாழ்ப்பாணத்தையே குளிரவைக்க ஒரு மாலை நேரத்தில், ரோஜாவின் மயக்க வைக்கும் பின்னணி இசை A R ரகுமான் பிறந்தாரே! சென்ற ஏப்ரலில் அவருடைய உத்தியோகபூர்வ சுயசரிதை “The Spirit Of Music” வெளிவருகிறது என அறிந்து சிங்கப்பூர் முஸ்தபா கடைக்கு போன் மேல் போன் போட்டும் வருவதற்கான எந்த அறிகுறியும் இல்லை. எனக்கோ இருப்புக்கொள்ளவில்லை. தலைவர் ஒவ்வொரு பாடலையும் எப்படி உருவாக்கினார், அதற்றுக்குப்பின்னால் இருந்த

நீ முத்தம் ஒன்று கொடுத்தால் முத்தமிழ்!

“தேங்க்ஸ் ஜெஸ்ஸி,  நான் கூப்பிட்ட உடனேயே டின்னருக்கு வந்தது, வருவியோ மாட்டியோன்னு பயந்துகிட்டே இருந்தேன்!”  “என்ன கார்த்திக் இது கேள்வி, இட்ஸ் மை ப்ளஷர்”  "ம்ம்ம்ம்,  நீ வந்து நின்னா இந்த ஏரியாவையே போட்டு தாக்கும், எனக்கெல்லாம் கிடைப்பியான்னே ஒரு டவுட் ஜெஸ்ஸி"  "கார்த்திக்..."  “ம்ம்ம், சொல்லு.. அப்புறம் இன்று முழுக்க என்ன செய்தாய்?”  “ஆரம்பிச்சிட்டியா? உன்னோட தானேடா நாள் முழுக்க இருந்தேன்”  “ஹா, சில நேரங்களில், நீ முன்னால் இருக்கும் போது என்ன பேசுவது என்றே தெரிவதில்லை”  “ஹேய், ஆர் யு ஓகே?”  “ம்ம்ம், நீ கிடைக்கும் வரை ஓகேயாகத்தான் இருந்தேன்”  “இப்போது என்னை என்ன செய்யச்சொல்கிறாய் கார்த்திக்?”  “எவ்வளவு இனிமையாக இருக்கிறது தெரியுமா? உனக்கு புரியாது ஜெஸ்சி! யாரும் என்னை சட்டை செய்வதே இல்லை  தெரியுமா? அம்மா கூட, நீ ஒருத்தி தான் .. நான் என்ன சொன்னாலும் அப்படியே கேட்பாய்”  “ஏண்டா? நீதானே எனக்கு எல்லாமே, நீ சொல்வதைக்கேட்காமல் வேறு யார் சொல்வதைக்கேட்பேன்?”  “ஆகா, கவிதை”  “உனக்காகவே வாழ்ந்து உன் மீது தலை சாய்ந்து இறப்பதே என் உயிரின் ஆசை!” சொல்லு

சீனி கம்

“ஜானே டோ னா, ஜானே ஜானே” என்று ஸ்ரேயா கோஷல் கொஞ்சும் போது கண்ணெல்லாம் ஒரு விதமாக சொருகி இதழ்களின் ஓரத்திலே ஒரு புன்சிரிப்பு ஒவ்வொருமுறையும் வரும்போது,  மெல்பேர்ன் புகைவண்டியின் முன் இருக்கையில் இருப்பவர் ஒரு மாதிரியாக என்னைப்பார்ப்பது வழக்கம். முற்பிறப்பில் செய்த புண்ணியத்தில் என்றாவது ஒருநாள்  அவள் முன்னாலே வந்து உட்கார்ந்தால் இந்த பாடலை full volume இல் வைத்து கேட்கவேண்டும். இந்த பாடலை கேட்கும் இவனை பிடிக்காத பெண்கள் இருப்பார்களா என்று தெரியவில்லை. இருந்தால் இருந்து விட்டுப்போகட்டும். யாருக்கு வேண்டும்? தமிழில் விழியிலே மணி விழியிலே நான் ஸ்ரேயா கோஷலை காதலிக்க ஆரம்பித்தது இந்த படத்தில் இருந்து தான். குரலிலே தேன் வடியும் என்பார்கள். ஆனால் தேன் எல்லாம் அத்தனை இனிப்பு கிடையாது. ச்சோ ஸ்வீட் என்று சுஜாதா சொல்லும் பெண் ஸ்ரேயா இல்லை, அவளுடைய குரல் என்று சொன்னால் ஒருவரும் நம்பப்போவதில்லை தான். சான்சே இல்லை. இளையராஜாவுக்கு நீண்ட நாட்களுக்குப்பிறகு சேப்பாக்கம் மாதிரி ஒரு பாட்டிங் பிட்ச்.  ஹாண்ட்சம் லுக்குடன் அமிதாப், லண்டனில் ஒரு வசந்தகாலத்து காதல் கதை. 34 வயது தபுவுடன் காதல்