Skip to main content

Posts

Showing posts with the label ஆக்காட்டி

ஆக்காட்டி நேர்காணல் - 6

இலங்கையை பொறுத்தவரை இன்று பல குறிப்பிடத்தக்க தமிழ் எழுத்தாளர்கள் உருவாகி வருகின்றார்கள். உங்களோடு ஒப்பிடுகையில் சிலரின் எழுத்துக்கள் சுவாரஸ்யமற்று இருப்பினும் அவர்களைப் பற்றி பலர் தெரிந்து வைத்திருக்கின்றார்கள், கொண்டாடவும் செய்கின்றனர். அவர்களைப் போன்று நீங்களும் உங்களை முன்னிலைப்படுத்தினால் எழுத்துலக ஜாம்பவானாக வருவதற்குரிய சாத்தியம் இருக்கின்றது. ஆனால் நான் கவனித்தவரையில் உங்களை நீங்கள் முன்னிலைப்படுத்தியது குறைவு. ஒரு குறுகிய பரப்புக்குள்ளேயே நிற்பதாக உணர்கின்றேன்.  

ஆக்காட்டி நேர்காணல் - 5

ஒரு புத்தகத்திற்கான விமர்சனமென்பது அந்தப் புத்தகத்திற்கான கட்டணமில்லா விளம்பரமென்று எங்கேயோ படித்தேன் ,அது உண்மையும் கூட.ஒரு புத்தகத்திற்கு விளம்பரம் அவசியம் தானா?இதனால் ஒரு மோசமான புத்தகம் கூட அந்தப் புத்தகத்தைப் பற்றிய எதிர்மறையான புரிதலை ஏற்படுத்தக்கூடிய சாத்தியம் இருக்கிறதல்லவா?

ஆக்காட்டி நேர்காணல் - 4

ஜாக் ஓடியா. ஒரு பிரான்ஸ் தேசத்து மனிதர். பிரஞ்சு மொழியை தாய்மொழியாக் கொண்டவர். வேறு இனம், வேறு மதம். இத்தனை தூரமான ஒரு மனிதர் இலங்கைத் தமிழ் அகதியொருவரின் அகச் சிக்கலைப் பற்றி படமெடுத்து கான் திரைப்பட விழாவில் மிக உயரிய விருதான தங்கப் பனை விருதினையும் வென்றிருக்கின்றார். ஆனால் இலங்கையைச் சேர்ந்த எங்களின் படைப்புகள் ஒரு குறுகிய வட்டத்துக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றது. சினிமாத்துறைக்கு மாத்திரமல்லாது, இலக்கியத்துறைக்கும் இது பொருந்தும். ஏன் இவ்வாறானதொரு நிலைமை? எங்களால் சர்வதேச விருதினை வென்றிடும் அளவிற்கு இலக்கியமோ அல்லது சினிமாவோ எடுக்க முடியாதா?

ஆக்காட்டி நேர்காணல் - 3

ஆங்கில இலக்கியங்களை நான் பெரிதாக வாசித்தது கிடையாது. ஆனால் அதன் தமிழ் மொழி பெயர்ப்புக்கள் சிலவற்றை வாசித்திருக்கின்றேன். அந்த தமிழ் மொழி பெயர்ப்புகளை எழுத்தாளர்கள் அல்லாத ஆங்கிலம் தெரிந்த மொழிபெயர்ப்பாளர்களே எழுதியிருப்பார்கள். அவர்களின் எழுத்து லாவகம் சாதாரணமாகத்தான் இருக்கும். இன்னும் சொல்லப்போனால் ராஜேஸ்குமாரின் எழுத்துக்களை விடவும், ரமணிசந்திரனின் எழுத்துக்களை விடவும் அயர்ச்சி தரக்கூடிய எழுத்துக்கள் தான் அவை. ஆனால் படைப்பை வாசித்து முடித்த பின்பு நல்லதொரு அனுபவத்தை பெறக்கூடியவாறாக உள்ளது. ஒரு திரைப்படத்தினை பார்த்து முடித்தவொரு உணர்வு நமக்குள் ஏற்படுகின்றது. ஆனால் தமிழில் நானறிந்து எந்தவொரு இலக்கியமும் அவ்வாறானதொரு உணர்வினை ஏற்படுத்தியதில்லை. நீங்கள் தமிழ் இலக்கியங்களை மாத்திரமல்லாது, ஆங்கில இலக்கியங்களையும் பெருமளவு வாசித்து வருகின்றீர்கள். மாறுபட்ட உணர்வுகளை இலக்கியங்கள் ஏற்படுத்துகின்றனவா?அல்லது அவ்விலக்கியங்களை எழுதிய எழுத்தாளன் ஏற்படுத்துகின்றானா?

ஆக்காட்டி நேர்காணல் - 2

சமீபத்தில் எழுத்தாளர் ஷர்மிளா செய்யித் தான் பங்கு பற்றிய ஒரு கூட்டத்தில் இலங்கையில் பாலியல் தொழிலினைச் சட்டபூர்வமாக்க வேண்டும், அப்பொழுதுதான் பெண்கள் மீதான வன்புணர்வுகள் குறைவடையும் என்று குறிப்பிட்டிருப்பார். பின்னர் அது பெரியளவிலான சர்ச்சையையும் ஏற்படுத்தியிருந்தது. பாலியல் தொழிலினை சட்டபூர்வமாக்குவதன் மூலம் வன்புணர்வுகள் குறைவடையுமென்பது எவ்வளவு தூரம் உண்மை? உண்மையைச் சொல்ல வேண்டுமெனில் எந்தப் பெண்களுமே பாலியல் தொழிலினை அவர்களாகவே தங்கள் சுயவிருப்பின் அடிப்படையில் விரும்பித் தேர்ந்தெடுப்பதில்லை. மாறாக ஏதோவொரு தூண்டுதலே அவர்களை அவ்வாறு செய்ய வைக்கின்றது? ஷர்மிளா செய்யித்தின் இந்தக் கூற்று சரியானது தானா? இதை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

ஆக்காட்டி நேர்காணல் - 1

பிரான்சிலிருந்து வெளிவரும் ஆக்காட்டி சஞ்சிகையின் ஜூலை-ஓகஸ்ட் இதழிலே என்னுடைய நேர்காணல் வெளிவந்திருக்கிறது. எழுத்தாளர் சாதனா ஈமெயில் மூலம் அனுப்பிவைத்த கேள்விகளுக்கு கொடுக்கப்பட்ட பதில்கள் இவை. நேர்காணலை magzter தொடுப்பிலும் வாசிக்க முடியும்! இங்கே வெளியிடப்படுகின்ற பதில்களில் சில எழுத்துத்திருத்தங்கள் உண்டு. உங்களுடைய இளம் பராயம், வாழ்க்கைச் சூழல், பள்ளி, எழுத்தின் ஆரம்பம், முதல் படைப்பு இது பற்றி விரிவாகக் கூற முடியுமா?