Skip to main content

Posts

Showing posts with the label உகண்டா

உகண்டாவின் ஒன்பது நாட்கள் - பாகம் 11 - நைல் எனும் பாலூட்டும் தாய்

இது புகண்டா இனக்குழுக்களிடையே நிலவும் ஒரு நாட்டார் கதை. ஒரு கிராமத்திலே மட்பானைகளை செய்யும் குயவர் தம்பதியினர் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு ஒரு மகன் இருந்தான். ஏனைய சிறுவர்களைப்போலன்றி கொஞ்சம் விட்டேற்றியாக, தானும் தன்பாடுமாகத்தான் அவன் திரிவான். ஒருவர் வித்தியாசமாக இருந்தால் அவரை எள்ளி நகையாடுவது ஒன்றும் மனிதர்களுக்குப் புதிதல்லவே. இந்தச் சிறுவனையும் அவன் பிறந்ததிலிருந்தே ஊரில் அவனை எல்லோரும் பழித்துவந்தார்கள். அவனது தாய்கூட தன் பிள்ளை மற்றவர்களைப்போல இல்லையே என்று வருந்தினாள். அவனும் ஒரு கட்டத்தில் விரக்தியடைந்து வீட்டை விட்டே வெளியேறுகிறான். காட்டில் அலைகிறான். வழியில் காணும் விலங்குகளிடம் அவன் தன்னைப்பற்றிச் சொல்லவும், அவையும், நீ வேலை செய்வதில்லை, நன்றியுடையவனாய் இல்லை, மக்களோடு பழகுவதில்லை என்று ஒவ்வொரு காரணங்களாய்ச் சொல்லி அவனை முட்டாள் என்று விளிக்கின்றன. இவற்றையெல்லாம் கேட்டு அவனது மனம் மேலும் சஞ்சலப்பட்டது. அப்போதுதான் அவன் ஒரு முயலைக் காண்கிறான். முயல் அவனை அரவணைத்து ஆறுதல் சொல்கிறது. தன் வீட்டுக்கு அவனை அழைத்துச்சென்று தான் சேகரித்து வைத்திருந்த பருப்புகளைத் தின்னக்கொடுத்...

உகண்டாவின் ஒன்பது நாட்கள் - பாகம் 10 - உன்மத்தம் ஆகுதடி

வழியில் நைல் நதி குறுக்கிட்டது. இந்தப் பக்கம் புகண்டா காடும் அந்தப் பக்கம் சவான்னா புல்வெளியும் பரவிக்கிடக்க, நடுவே நதி கடல்போல வியாபித்திருந்தது. நாம் பாலத்தைக் கடக்கும்போது சூரியன் காடுகளிடையே தலை தூக்க ஆரம்பித்திருந்தான். மொத்த ஆறுமே ஒரு வண்ணக்குழம்புபோல நகர்ந்துகொண்டிருந்தது. அதன் இரு புறங்களிலும் நீருக்குள்ளிருந்து தலை தூக்கியிருந்த நீர் யானைகளின் வழுக்கல் நெற்றிகளில் சூரியக் கதிர்கள் பட்டுத் தெறித்து மின்னின. ஆங்காங்கே சில முதலைகளையும் மௌலீமா காட்டினாள். நாங்கள் வாகனத்தைப் பாலத்தருகே நிறுத்தி இறங்கினோம். பொன்னிற மேனியுடன் நதியும் அதனுள்ளே முதலைகளும் பறவைகளும் நீர் யானைகளும் என்று அழகும் ஆபத்தும் ஒரு சேர்ந்த இயற்கை அது. நதி ஒரு நகரும் காடு. அதைப் பார்த்துக்கொண்டேயிருந்தால் நேரமாவதையே உணரமுடியாது. மௌலீமாதான் வா போகலாம் என்று வலிந்து அழைத்துப்போனாள். இப்பயணம் முழுதும் ஏற்பட்ட உணர்வு இது. ஒன்றில் மனம் தரித்துவிட்டால் பின்னர் அங்கிருந்து நகரவே அது இடம் கொடுக்காது. ஆனால் அதேசமயம் அடுத்ததையும் பார்த்தே தீரவேண்டும் என்று அது அடம் பிடிக்கவும் செய்யும். ஒரு பெரு நாவலின் அற்புத வரிகளில் இரச...

உகண்டாவின் ஒன்பது நாட்கள் - பாகம் 9 - காதலின் துயரம்

அன்றுதான் காட்டுத் தர்பாரைப் பார்க்கப்போவதற்கு நாம் திட்டமிட்டிருந்தோம். முந்தைய தினமே கம்பாலாவிலிருந்து புறப்பட்டு நான்கு மணி நேரம் பயணம் செய்து இந்த மச்சிசன் நீர்வீழ்ச்சியை அண்டிய வனப்பகுதிக்கு வந்திருந்தோம். ஜெகனின் உள்ளூர் நண்பர் ஒருவர்தான் இந்தச் சுற்றுலாவை ஒழுங்குபடுத்தியிருந்தார். இரண்டு சபாரி வாகனங்கள். நம் வாகனத்துக்கு சோபியா ஓட்டுநர். லௌமி, சுகி, அவர்களுடைய மகன்கள் இருவரும் பயணம் செய்த வாகனத்துக்கு வின்சன் ஓட்டுநர். மௌலீமா ஒரு பொதுவான வழிகாட்டி. எல்லோருமே வனவிலங்குகள் சம்பந்தமான உயர்கல்வி கற்றவர்கள். இருபதுகளில் இருக்கும் இளைஞர்கள். நாம் தங்கி நிற்கும் மேர்ச்சிசன் காட்டுப்பகுதியைப் பற்றிய தகவல்களை எல்லாம் அவர்கள் பயணம் நெடுகவும் சொல்லிக்கொண்டே வருவார்கள். காட்டில் அலைந்து களைத்திருக்கும்போது சாப்பிடலாம் என்று வழியில் ஒரு சந்தையில் நிறுத்தி வாழைப்பழச் சீப்புகளையும் அன்னாசிகளையும் அவர்கள் வாங்கினார்கள். ஆனால் மச்சிசன் காட்டின் நுழைவு வாயிலில் அனுமதி பெறுவதற்காக நாம் இறங்கி நின்ற வேளையில் பபூன் ஒன்று வாகனத்தின் யன்னல் வழியே உள்ளே நுழைந்து வாழைப்பழச் சீப்புகளை எடுத்துக்கொண்டு ஓட...

உகண்டாவின் ஒன்பது நாட்கள் - பாகம் 8 - மாப்பிள்ளை கொடுத்த சீதனம்

டொன்சபாலா டொன்சபாலா என்று லுகண்டா மொழியில் அமைந்த ஒரு கோஸ்பல் பாட்டு பின்னணியில் ஒலித்தது. ஆழமாகக் கேட்டால் ஏ. ஆர். ரகுமானின் பாடல் ஒன்றும் நினைவுக்கு வந்து சேரும். ஏலே கீச்சான் வந்தாச்சு. நம்ம சூசை பொண்ணும் வந்தாச்சு.

உகண்டாவின் ஒன்பது நாட்கள் - பாகம் 7 - அதிசயத் திருமணம்

ஜெகனதும் பிரீடாவினதும் திருமணத் திருவிழாவின் முதல் நாள் அது. மணப்பெண்ணை மாப்பிள்ளை வீட்டாருக்கும் மாப்பிள்ளையைப் பெண் வீட்டாருக்கும் அறிமுகம் செய்யும் நிகழ்வு. க்வாஞ்சுலா என்று லுகாண்டா மொழியில் இதனை அழைக்கிறார்கள்.

உகண்டாவின் ஒன்பது நாட்கள் - பாகம் 6 - காண்டாமிருகங்களும் கொம்புத்தீயும்

இது கிபாட்டே எனும் குடியானவனின் கதை. முன்னொரு காலத்தில் அடர் காட்டுக்கு அருகாமையில் அமைந்திருந்த சிறு கிராமம் ஒன்றிலே கிபாட்டே என்ற இளைஞன் வாழ்ந்து வந்தான். ஊரிலே அவனுக்குப் பல நண்பர்கள் இருந்தார்கள். அவர்கள் எல்லோருமே தம்மைப் பெரும் அறிவாளிகளாக நினைப்பவர்கள். அறிவுரை சொல்வதிலும் வல்லவர்கள். கிபாட்டே கேட்கிறானோ, இல்லையோ, எதற்கெடுத்தாலும் அவர்கள் அவனுக்கு ஆலோசனைகளை வாரி வழங்கிக்கொண்டேயிருப்பார்கள்.

உகண்டாவின் ஒன்பது நாட்கள் - பாகம் 5 - வரலாற்றின் சுவர்

குளிர்சாதனப் பெட்டியைத் திறந்து பார்க்கையில் உள்ளே மூன்று தலைகள் மிரட்சியுடன் உறைந்து கிடந்தன. இது தினமுரசு வார இதழில் வெளியாகிய இடி அமீன் தொடரில் வந்திருந்த வாசகம். அச்சொட்டாக இப்படித்தான் எழுதப்பட்டிருந்ததா என்று நினைவில்லை. ஆனால் அந்தக் காட்சி இன்னமும் ஞாபகம் இருக்கிறது. அப்போது எனக்குப் பதினேழு பதினெட்டு வயது இருக்கலாம். யாழ்ப்பாணம் மறுபடியும் ஶ்ரீலங்கா அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்திருந்த காலம். இயல்பாகவோ அல்லது வலிந்தோ சில விசயங்கள் நமக்குப் புதிதாகக் கொடுக்கப்பட்டன. பெப்சி, பஃன்டா போன்ற சோடாக்கள். பலாலியிலிருந்து இலவசமாக ஶ்ரீலங்கா இராணுவத்தினர் ஒளிபரப்பு செய்த HBO, Star, MTV, விளையாட்டு சானல்கள். வீதிக்கு வீதி வெளிக்கிளம்பிய மினி சினிமாக்கள்.

உகண்டாவின் ஒன்பது நாட்கள் - பாகம் 4 - காலனித்துவமும் திருட்டும்

அதிகாலையிலேயே போடாபோடாசுகளின் ஹோர்ன் சத்தங்கள் தூக்கத்தைக் கலைத்துவிட்டன. நான் எழுந்து திரைச்சீலையை விலக்கிப்பார்த்தேன். பள்ளமான முட்டுச் சந்து ஒன்றில் வாகனங்கள் ஊர்ந்துகொண்டிருந்தன. முட்டாமல் மோதாமல் விலகியும் நழுவியும் ஓடுவதுதான் கம்பாலாவில் வாகனம் ஓட்டுவதற்கான கலை. ஒரு ரக்பி வீரர் எப்படி சுழித்துக்கொண்டு பந்தை அடுத்த கரைக்குக் கொண்டுசேர்ப்பாரோ அதுபோல போடாபோடாசுகள் ஓடிக்கொண்டிருந்தன. பாதையோரங்களில் சூட்டும் சப்பாத்தும் அணிந்த பாடசாலை மாணவர்கள் புழுதிக்கு இடையே நடந்துபோனார்கள். உகண்டாவில் பாடசாலைகள் அதிகாலையே ஆரம்பித்து மாலை ஆறு மணிவரைக்கும் நீளும் என்று ஜெகன் சொல்லியிருந்தான். அங்கே இன்னமும் ஆங்கிலக்கல்விதான். பிரித்தானியக் காலனித்துவம் இந்த நிலத்தில் பூர்வீகமாகப் பரவி வாழ்ந்த பலவிதமான மொழிகளைப் பேசும் இனக்குழுக்களை (clans) ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட நாடு என்பதால் இன்னமும் ஆங்கிலம் பொதுமொழியாக உகண்டாவில் பயன்படுத்தப்படுகிறது. ஆயினும் தத்தமது இனக்குழுக்களிடையே அவர்கள் தமது மொழியைச் சரளமாகப் பேசுகிறார்கள். ஆங்கிலத்தை இந்த நாட்டில் எல்லோருமே பேசுவார்கள். அது ஒரு தொடர்பாடல் மொழியாக மா...

உகண்டாவின் ஒன்பது நாட்கள் - பாகம் 3 - சிம்பன்சி முதல் செயற்கை நுண்ணறிவுவரை

மழை துமிக்க ஆரம்பித்தது. கம்பாலாவுக்கு வடமேற்கே இருநூற்றைம்பது கிலோமீற்றர் தூரத்தில் அமைந்திருக்கும் புடொங்கா என்கின்ற அடர்த்தியான மழைக்காடு அது. வரும் வழியில் ஒரு மலைப்பகுதியில் வண்டியை நிறுத்திப் பார்த்தபோது கண்ணுக்கெட்டிய தூரமெல்லாம் காடுதான் தெரிந்தது. விமானத்தின் யன்னலூடே பார்க்கையில் வானமெங்கும் விரித்துக்கிடக்கும் முகிலைப்போலக் காடு நிலமெங்கும் பச்சையாய்ப் படர்ந்திருந்தது. எங்கள் குழுவில் பதினைந்து பேரளவில் இருந்தார்கள். பச்சை, சாம்பல் நிறங்களில் நீர்புகா உடைகளும் மலையேறும் சப்பாத்துகளும் தொப்பியும் அணிந்திருந்தோம். வனக்காவலர்கள் எங்களுக்கான பயண அறிவுறுத்தல்களைச் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

உகண்டாவில் ஒன்பது நாட்கள் - பாகம் 2 - ஊர் எனும் யானை

விமானம் திடும்மென்று தரையிறங்கி பெரும் இரைச்சலோடு ஊர்ந்தபோது உள்ளிருந்தவர்கள் அனைவருமே கைதட்டி ஆரவாரம் செய்தார்கள். பலர் மளமளவென எழுந்து தம்முடைய கைப்பைகளைத் தூக்கிக்கொண்டு தயாரானார்கள். ஏன் அந்த அவசரம் என்று எனக்குப் புரிவதேயில்லை. விமானம் அதுபாட்டுக்கு ஊர்ந்து, நிலையத்தைச் சென்றடைந்து, கதவு திறக்கப்பட்டு, முதல் வகுப்பு இருக்கைப் பயணிகளையும் வெளியே அனுப்பிய பின்னர்தான் எங்களை வெளியேறவே அனுமதிப்பார்கள். அப்போதும்கூட முன்னிருக்கைகளில் உட்கார்ந்திருப்பவர்கள் எழுந்து, தம் கைப்பைகளைச் சாவகாசமாக எடுத்து நகரும்வரை நாம் காத்திருக்கவேண்டும். அதற்குள் அதறிப் பதறி எழுந்து முட்டிமோதி நிற்பதில் என்ன பயன்? நான் கல்லுப்பிள்ளையார் கணக்காய் உட்கார்ந்திருந்தேன். காதில் இளையராஜா தேஷாக இசைத்துக்கொண்டிருந்தார். இருபத்தெட்டு மணி நேர நெடிய பயணம். தூக்கம் வராது, தோளோடு நீ சேர்க்க ஏக்கம் வராது என்று சித்திரா இறைஞ்சிக்கொண்டிருக்க எனக்கோ தூக்கம் தூக்கிப்போட்டது.

உகண்டாவின் ஒன்பது நாட்கள் - பாகம் 1 - பாடசாலை நண்பனின் திருமணம்

ஏனைய எந்த நட்பிலும் இல்லாத பெரு விசயம் ஒன்று பாடசாலை நட்பில் இருக்கிறது. ஆறாம் ஆண்டில் நான் பரியோவான் கல்லூரிக்குள் நுழைந்தபோது எனக்கு அந்தச் சூழலே புதிது. அதிலும் எண்பதுகளில் தின்னவேலியில் பிறந்து வளர்ந்தவனுக்கு அரியாலைப் பகுதியே புதிதாகத்தான் இருந்தது. யாழ் இந்து ஆரம்பப் பாடசாலையில் முதலாம் ஆண்டிலிருந்து கூடப்படித்த பப்பாவைத் தவிர வேறு எவரையும் அப்போது அங்கே எனக்குத் தெரிந்திருக்கவில்லை. என்னோடு சேர்ந்து எங்கள் வகுப்பில் முப்பத்தாறு பேர் ஆறாம் ஆண்டு அனுமதிப் பரீட்சையில் தெரிவாகி வந்திருந்தார்கள். பண்டத்தரிப்புமுதல் அச்சுவேலி, இருபாலை, சாவகச்சேரி என்று யாழ்ப்பாணத்தின் மூலை முடுக்கிலிருந்த ஆரம்பப் பள்ளிகளில் படித்தவர்கள் எல்லோரும் அங்கு வந்து இணைந்திருந்தார்கள். அவர்களோடு பரியோவானிலேயே பாலர் கல்வியிலிருந்து கற்று வந்த இரண்டு வகுப்புகளும் சேர்ந்து, ஏ பி சி என மொத்தமாக மூன்று வகுப்புகள். கொஞ்சம் பயம். கொஞ்சம் குழப்படி. கொஞ்சம் படிப்பு. நிறைய விளையாட்டு என்ற எளிமையான பதினொரு வயது சிறுவர்களைக்கொண்ட மூன்று வகுப்புகள் அவை. அப்படி ஆரம்பிக்கும் நட்புகளில் பெரும் பந்தம் ஒன்று இருக்கிறது. பாடசால...