அவுஸ்திரேலியா கம்பன்விழா(2013-10-27) இறுதிநாள் நிகழ்வு கவியரங்கில் அரங்கேற்றப்பட்ட கவிதை இது. பேசாப்போருட்கள் பேசினால் என்ற தலைப்பில் என்னது “சூர்ப்பனகை மூக்கு”. கேதாவும் உடன் ஏறிய(அகலிகை கல்), அரங்கின் தலைவர் ஸ்ரீபிரஷாந்தன் அண்ணா என்பதும் அவையிலே என்னுடைய கொல்லைப்புறத்து காதலி கம்பவாரிதி அவர்கள் இருந்து கேட்டு ரசித்ததும் வாழ்நாள் பெருமை. இருப்பத்துமூன்று வருட தவமும் கூட! கறந்த பால் கன்னலொடு கலந்த நெய் கடையவல்லர். கம்பநாடன் காவியத்தின் இதயம் புக்கி ஆவி கொள்வர். இவரெல்லாம் இருக்கும் அவையீர், இவனை ஆசி வழங்கிடுவீர். உவரெல்லாம் இருக்கும் கவி, உறை போட்டு வடித்திடுவீர்!