குவாண்டம் விஞ்ஞானத்தில் 'Super Position' என்றொரு வஸ்து இருக்கிறது. ஷிரோடிங்கரின் பூனையை சிலர் கேள்விப்பட்டிருக்கக்கூடும். ஒரு மூடிய கறுப்புப் பெட்டிக்குள் இருக்கின்ற பூனையின் நிலை அது. அது உயிரோடு இருக்கிறதா, இறந்துவிட்டதா, காது குடைகிறதா, காலிடுக்கை சொறிகிறதா என்று வெளியிலிருக்கும் எவருக்கும் தெரியாது. பெட்டி மூடிக்கிடக்கையில் உள்ளே அது எல்லாமுமாக இருக்கிறது. எல்லாவற்றையும் செய்கிறது. எல்லாவற்றையும் செய்யாமலும் இருக்கிறது. அதனைத்தான் 'Super Position' என்பார்கள். நாம் பெட்டியைத் திறந்து அதனைப் பார்க்கும் கணத்தில் அதன் நிலை ஒருப்படுகிறது. நான் அதனைப் பார்ப்பதாலேயே அதனுடைய 'Super Position' நிலை மாறி 'Solid State' நிலையை அடைகிறது. நடைமுறை யதார்த்தத்தில் பெட்டிக்குள் பூனையை அடைத்துவைத்தால் மூச்சுக்காற்று இன்றி அது இறந்துவிடும் என்பீர்களானால், fine, move on. வெள்ளி நாவல் வெளியீட்டோடு ஒரு முடிவை எடுத்திருந்தேன். இனிமேல் ஒரு அன்றாடங்காய்ச்சியாட்டம் முகநூலில் எழுதுவதில்லை என்று. தற்போது நான் எழுதிக்கொண்டிருக்கும் சமகால நாவல் ஒன்று ஒரு வருட காலமாக இழுபடுகிறது. அத