“சுதந்திரம் என்பது இரண்டும் இரண்டும் நான்கு என்று சொல்ல அனுமதிப்பது” வின்சன். உண்மைகளுக்கான அமைச்சு (Ministry of Truth) திணைக்களத்திலே அவனுக்கு சாதாரண கிளறிக்கல் உத்தியோகம். கட்சியின் வெளிவட்ட மெம்பர். நாற்பது வயது இருக்கலாம். புத்திசாலி. சுயசிந்தனை உள்ளவன். கட்சியின், நாட்டின் தலைவர் பெரிய அண்ணர் (Big Brother). கட்சிக்குள் மூன்று வட்டங்கள். உள்வட்டம; மொத்த சனத்தொகையில் இரண்டுவீதத்துக்கும் குறைவானவர்களே இந்த உள்வட்ட கட்சியில் இருக்கிறார்கள். இவர்களுக்கு சகலவித வசதியும் உண்டு. வைன் அடிக்கலாம். வீட்டு வேலையாள் வைத்திருக்கலாம். சீனி, சொக்கலேட், கோப்பி என்று எல்லாமே தண்ணியாக கிடைக்கும். சக்திவாய்ந்தவர்கள். தலைமைப்பீடம். முடிவெடுப்பவர்கள். இயக்குபவர்கள். The power house.