Skip to main content

Posts

Showing posts with the label பூப் புனிதக் கொலைகள்

"பூப் புனிதக் கொலைகள்" நாவல் பற்றிக் கம்பவாரிதி இ. ஜெயராஜ்

 

பூப் புனிதக் கொலைகள் - நாவல்

வணக்கம். மழை விட்டும் தூவானம் விடாததுபோல, “பூப் புனிதக் கொலைகள்” நாவலை எழுதும் கணங்களிலிருந்த உற்சாகம் இன்னமும் ஒட்டிக்கொண்டிருக்கிறது. என்னோடு சேர்ந்து, இந்த நாவலில் பயணித்த வாசக நட்புகள் அனைவருக்கும் என் அன்பும் நன்றியும். நாவல் பற்றிய விரிவான வாசிப்பு அனுபவங்களையும், அது பேசி நிற்கும் விசயப்பரப்பில் உங்களுடைய கருத்துகளையும் எதிர்பார்க்கிறேன். “பூப் புனிதக் கொலைகள்” முழுப்பாகங்களும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. அன்புடன் ஜேகே

பூப் புனிதக் கொலைகள் - பாகம் 7

நிலாப்தீன் நம்பமாட்டாமல் திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டேயிருந்தார். “இராஜராஜனா? அந்த கைனோகோலஜிஸ்டையா சொல்லுறிங்க?” அவர்கள் வாகனத் தரிப்பிடத்திலிருந்து பொலீஸ் கடவையை நோக்கி நடந்துகொண்டிருந்தனர். கோட்டையில் கூட்டம் அள்ளியது. பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது. திடலை நிறைய இளைஞர்களும் சுற்றுலாப் பயணிகளும் நிறைத்திருந்தனர். ஐந்தாறு செயற்பாட்டாளர்கள் நிகழ்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கோட்டைக்கு வெளியே ஆர்ப்பாட்டம் செய்துகொண்டிருந்தார்கள். கோட்டைக் கொத்தளத்தில் பெரிய அரங்கு ஒன்று நிர்மாணிக்கப்பட்டிருந்தது. சிங்கள, பர்மிய பிக்குகள், இந்து மத யோகிகள், கிருத்துவப் பாதிரியார்கள், இஸ்லாமிய மௌலவிகள் என மத குருமார்கள் பலர் அரங்கின் முன் வரிசையில் அமர்ந்திருந்தார்கள். போர்த்துக்கல் நாட்டின் கடற்படை அதிகாரி ஒருவரும் மரியாதை நிமித்தம் அந்தக் கோட்டை நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். தெற்கிலிருந்து வருகை தந்திருந்த சில அரசியல்வாதிகளுடன் தமிழ் எம்.பிக்களும் இரண்டாவது வரிசையை நிறைத்திருந்தனர். கொத்தளத்தின் மத்தியிலிருக்கும் கொலைக்களனுக்குப் பெயிண்ட் அடித்து, அதனை அலங்கார வளையமாக்கி, நடுவில் ஒரு சிலை எ

பூப் புனிதக் கொலைகள் : பாகம் 6

  சிவகடாட்சம் சிவபதமடைந்திருந்தார். வழமைபோல, இரத்தம் சுத்தமாகத் துடைக்கப்பட்டு, கழுத்திலும் நெஞ்சிலும் காயங்களுக்குக் கட்டுப்போடப்பட்டிருந்தன. பட்டு வேட்டி கட்டி, வெற்று மேலில் இரட்டை வடச் சங்கிலியும் கைச்செயினும் அணிந்து, செத்துச் சில மணி நேரங்கள் கழிந்தும் சிவகடாட்சம் செகச்சோதியாக இன்னமும் மின்னிக்கொண்டிருந்தார். வேட்டி நழுவா வண்ணம் இடுப்பில் வெள்ளை நிறத்தில் பெல்ட் கட்டியிருந்தார். மேலே அவர் அணிய இருந்த விதம் விதமான சரிகை ஜிப்பாக்கள் அயர்ன் செய்யப்பட்டு, கட்டிலில் விரித்து வைக்கப்பட்டிருந்தன. எல்லாமே இந்தியாவிலிருந்து வாங்கப்பட்டவை என்று அறுத்து எறியப்பட்டிருந்த அவற்றின் விலைப்பட்டிகள் சொல்லின. அந்தப் பிரமாண்டப் படுக்கை அறைக்குள் ஆளுயர டிரெஸ்ஸிங் டேபிள் ஒன்றுமிருந்தது. ஒரு சுவரில் அவர்களுடைய குடும்பப் படம் தொங்கியது. இன்னொன்றில் ஷீரடி பாபாவின் படம் மாட்டப்பட்டிருந்தது. அறையோடு கூடவே குளியலறை இணைத்துக்கட்டப்பட்டிருந்தது. அங்கிருந்து பின் தோட்டத்துக்கு செல்வதற்கெனத் தனியாகக் கதவு அமைத்திருந்தார்கள். அதுதான் கொலையாளிக்கு வசதியாகிப்போய்விட்டது. சிவகடாட்சத்தின் முகம் ஒருவித மயான அமைதியுட

பூப் புனிதக் கொலைகள் : பாகம் 5

“பரணி எண்டா எலி. பூரத்துக்கு யானை. பகை மிருகங்கள். ரெண்டுக்கும் யோனிப்பொருத்தமே இல்ல. ஆனா ஒரு சாந்தியைச் செய்திட்டம் எண்டால் சரி. மாப்பிளை பகுதிட்ட சொல்லிப்பாருங்கோ. அவருக்கும் சொந்த வீட்டில கேது இருக்கு. இந்தச் சம்பந்தம் தவறினா இனி நாப்பதுக்கு மேலதான் அவருக்கும் கலியாணம்.”

பூப் புனிதக் கொலைகள் : பாகம் 4

சிட்டுவேசன் ரூமை நிலாப்தீன் வியப்போடு சுற்றிச் சுற்றி வந்தார். அறைச் சுவர்கள் முழுதும் பத்திரிகைத் துணுக்குகளும் இணையச் செய்தித்தளங்கள், முகநூல், டுவிட்டர், வைபர் போன்ற சமூக ஊடகங்களில் வந்த அலசல்கள் எனப் பலவும் பிரிண்ட் செய்யப்பட்டு ஒட்டப்பட்டிருந்தன. ஒவ்வொரு கொலைச் சம்பவமும் அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்து மேயப்பட்டிருந்தது. கொல்லப்பட்டவர் விபரம், பிறந்த ஊர், வாழும் ஊர், குடும்பச்சூழல், சொத்து, மதம், சாதி, கொலை நிகழ்ந்த இடம் என எல்லாத் தகவல்களும் திரட்டப்பட்டிருந்தன. அவற்றுக்கு இடையேயான தொடர்புகள் கோடுகளால் இணைக்கப்பட்டுக் காரணங்கள் கொடுக்கப்பட்டிருந்தன.

பூப் புனிதக் கொலைகள் : பாகம் 3

  “வட மாகாண முதலமைச்சர் சிவகடாட்சம்” புரஜெக்டர் திரையில் பளிச்சென்ற எழுத்துகள் மின்னவும் சிவகடாட்சம் நிமிர்ந்து உட்கார்ந்தார். அவருடைய வீட்டிலிருக்கும் அலுவலக அறையில் கூட்டம் நிறைந்து வழிந்தது. வந்திருந்தவர்கள் எல்லோருமே சிவகடாட்சத்தின் மிக நெருங்கிய உள் வட்டத்தைச் சேர்ந்தவர்கள். சேந்தன் பல சுப்பர் மார்க்கட்டுகளின் உரிமையாளர். தணிகாசலம் குழந்தைகள் பராமரிப்பு, வயோதிபர் இல்லம் என்பவற்றை நடத்துபவர். மாறன் ஜெயமோகனால் ஈழத்து இலக்கியத்தின் ஒரே நம்பிக்கை என்று அடையாளப்படுத்தப்பட்டவர். பஞ்சன் பத்திரிகையாளர். டொக்டர் மரியநேசன் சிவில் அமைப்பின் தலைவர். மாணிக்கவாசகர் ஈழத்திலும் தமிழ்நாட்டிலும் பட்டி மண்டபம், திருமுறை வகுப்புகள் எனக் கலக்குபவர். பாதிரியார் தேவராஜா அங்கிலிக்கன் பாடசாலை ஒன்றின் அதிபராகக் கடமை புரிகிறார். கனிஸ்டசும் சாரதாம்பாளும் புலம்பெயர் தேசங்களில் தாயக மக்களின் துயர் துடைக்கும் தமிழ் அமைப்புகளை இயக்கி வருபவர்கள். மேகநாதன் பழைய கூட்டமைப்பு எம்.பி. இவர்களோடு இந்தியத் தூதரகத்தில் பணிபுரியும் குருமூர்த்தியும் வருகை தந்திருந்தார். சுபத்ரா ஒவ்வொருவருடைய வரவையும் ஐபாடில் குறித்துக்கொண்ட

பூப் புனிதக் கொலைகள் : பாகம் 2

  நிலாப்தீன் ஓட்டுநரிடம் வாகனத்தை நிறுத்தச் சொன்னார். கொக்குவிலுக்குப் போகும் வழியில் நாச்சிமார் கோயிலடி கடந்ததும் கொஞ்சத்தூரத்தில் அந்தப் பெட்டிக்கடை இருந்தது. அதிகாலையிலேயே சிறுவன் ஒருவன் கடையைத் திறந்து வைத்து, முன்றிலைக் கூட்டித் துப்புரவாக்கி, மஞ்சள் தண்ணீர் தெளித்துக்கொண்டிருந்தான். வாகனத்திலிருந்து இறங்கிய நிலாப்தீன் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு அவனை நெருங்கினார்.

பூப் புனிதக் கொலைகள் : பாகம் 1

செல்வி திரிக்‌ஷா சரவணின் பூப்புனித நீராட்டு விழா தாஜ்மஹால் மண்டபத்தில் தடபுடலாக நிகழ்ந்துகொண்டிருந்தது. வாசலில் பாவை விளக்குகள்போல அலங்கரித்து நின்ற இளம்பெண்கள், வந்தவர்களைக் கற்கண்டு கொடுத்தும் பன்னீர் தெளித்தும் வரவேற்றுக்கொண்டிருந்தார்கள். மின்வெட்டு நேரமாகையால் வாசலுக்கருகே ஒரு ஜெனரேட்டர் இரைந்துகொண்டிருந்தது. மண்டபத்தின் உள்ளே குளிரூட்டி நிறுத்தப்பட்டு வலுக்குறைந்த மின்சாரத்தில் மின் குமிழ்களும் விசிறிகளும் தூங்கி வழிந்தன. வந்தவர்களின் பலவித பெர்பியூமுகளுடன் அவர்களின் வியர்வையும் கலந்து புதிதான ஒரு நாற்றத்துடன் உடல்கள் எல்லாம் கசகசத்துக்கொண்டிருந்தன. நிறையப் பட்டுவேட்டிகளும் காஞ்சிபுரங்களும் தாவணிகளும் குறுக்கும் மறுக்கும் ஓடித்திரிந்தன. பிரதான மேடைக்கு எதிரே அமைக்கப்பட்டிருந்த சிறு மேடையில் நாதஸ்வரக் கோஷ்டியினரின் கச்சேரி இடம்பெற்றுக்கொண்டிருந்தது. ஆரம்பத்தில் இரண்டு பக்திப் பாடல்களை இசைத்துவிட்டு இப்போது கண்ணான கண்ணேயும், கண்டாங்கி கண்டாங்கியும் மூத்த வித்துவான் வாசிக்க முயன்றுகொண்டிருந்தார். அருகே அமர்ந்திருந்த அவருடைய பத்து வயது ஒப்பு, பால்போச்சியைச் சூப்புவதுபோல பீப்பி முனையை