Skip to main content

Posts

Showing posts with the label அரசியல்

மூளா தீ

காலி எண்ணெய்க்கலனுடன் பெற்றோல் வரிசையில் பல மணி நேரம் கால் கடுக்க நின்ற மாதனமுத்தாவை பின்னால் நின்ற காசிம் பாவா தட்டிக் கேட்டார். ‘லாம்புக்கா? அடுப்புக்கா?’ ‘இல்லை, வீட்டுக்கு. நான் வீட்டை எரிக்கப்போகிறேன்’ காசிம் பாவா உற்சாகமடைந்தார். ‘எந்த மினிஸ்டர் என்று சொன்னால் நானும் வருகிறேன்’ ‘மினிஸ்டர் வீடில்லை, என் வீட்டைத்தான் எரிக்கப்போகிறேன்’ ‘என்ன பிசுக்கதை இது? அவனவன் மினிஸ்டர் வீடுகளை எரிக்கிறான். நீ என்னடா என்றால் உன் வீட்டை எரிக்கப்போகிறேன் என்கிறாய்’ ‘அவனெல்லாம் திருடன், முடிச்சவிக்கி, ஒன்றுக்கும் உதவாதவன், கொலைகாரன் என்று தெரிந்துதானே வாக்களித்து அனுப்பினோம். அவன் தன்னிலை மாறவில்லை. உண்மையில் எரிப்பதாக இருந்தால் அவனைத் தேரில ஏத்திவிட்ட எங்கள் வீடுகளைத்தானே எரிக்கவேண்டும்? அதைத்தான் செய்யப்போகிறேன்’ மாதனமுத்தா சொன்னதைக் கேட்டதும் டென்சனாகிய காசிம் பாவா வரிசையில் கொஞ்சம் பின் தங்கிவிட்டார். நாள் முழுதும் வரிசையில் நின்று ஒருவாறாக அரைப்போத்தில் எண்ணெயை வாங்கியபடி மாதனமுத்தா வீட்டுக்குத் திரும்பியபோது நன்றாக இருட்டிவிட்டிருந்தது. மின் வெட்டும் வந்து சேர மாதனமுத்தாவின் மனைவி விளக்கை ஏற்ற

தலித்துகளும் பௌத்தமும்

இந்து மதத்தின் சாதிய அமைப்பில் ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்காகக் குரல் கொடுக்கும் கட்சிகளும் செயற்பாட்டாளர்களும் இந்து மதத்தின் அதிகாரத்துக்கு எதிராக பௌத்தத்தைத் தம் ஆயுதமாக எடுத்துக்கொள்வதை நம்மில் பலர் கவனித்திருக்கக்கூடும். அவர்களுடைய கூட்டங்களில் பௌத்தம் பற்றிப் பேசப்படும். நேர்காணல்களில் அவர்களுக்குப் பின்னே புத்தர் வீற்றிருப்பார். இச்சிக்கல்களைப் பேசும் திரைப்படங்களில் புத்தர் சிலைகளைக் கவனிக்கமுடியும். இதற்கு ஆரம்பப்புள்ளி வைத்தது அம்பேத்கர். அவர் இலங்கைக்கும் பர்மாவுக்கும் சென்று பௌத்த துறவிகளின் கூட்டங்களில் கலந்துகொண்டு பின்னர் நீண்ட யோசனைக்குப் பின்னர் பௌத்தத்தைத் தழுவிக்கொண்டார். இதற்கான முக்கிய காரணங்களுள் ஒன்று பௌத்தம் பிறப்பின் நிமித்தம் பிரிவினைகளைச் செய்யாது அனைவரையும் சமனாக ஏற்றுக்கொள்கிறது என்பதாகும்.

அப்பித் கொட்டியாதமாய்

ரசங்கவை நான் கடைசியாகக் கொழும்பில்தான் பார்த்ததாக ஞாபகம். இருபது வருடங்களுக்கு முன்னர். அவன் இலண்டன் செல்லப்போவதாகச் சொன்னதும் அலுவலகத்தில் எல்லோரும் அவனுக்குப் பிரியாவிடை விருந்து ஒன்று கொடுத்தோம். பணம் சேகரித்து சில பரிசுகளும் வாங்கி வழங்கினோம். அதன் பிறகு நானும் இலண்டனுக்குப் புலம் பெயர்ந்திருந்தாலும் இருவருக்குமிடையே தொடர்புகள் ஏதும் இருக்கவில்லை. இரண்டாயிரத்து ஒன்பதில் என்னை அவன் தீவிரவாதத்துக்குத் துணை போவதாகக் குற்றம் சாட்டியிருந்தான். நான் பதிலுக்கு அவனையும் ஒரு அரச தீவிரவாதி என்றேன். ஒடுக்கப்பட்ட கூட்டத்திலிருந்து உருவாகும் தீவிரவாதியைவிட அதிகாரத்திலிருக்கும் தீவிரவாதியே ஆபத்தானவர் என்று நான் பதில் சொல்லியிருந்தேன். இருவருக்கும் சண்டை. அவன் என்னை நட்பு விலக்கினானா அல்லது நான் அவனை நட்பு விலக்கினானா என்று தெரியவில்லை. அவன் என் பெயரைக் கொடுத்திருப்பானோ என்ற பயத்தில் அடுத்த ஐந்து வருடங்கள் நான் ஊர்ப்பக்கம் தலைவைத்துப் படுக்கவில்லை. ஆனாலும் லின்க்ட் இன்னில் அவனின் நடவடிக்கைகளை அடிக்கடி கவனிப்பேன். ராஜபக்ச சகோதரர்களின் தீவிர ஆதரவாளன் அவன். நாட்டின்மீது அதீத பற்றும் கொண்டவன். ஒருமு

கண்ணிலான் பெற்றிழந்தான்

ஐந்தரை ஆறு மணிக்கெல்லாம் முகம் கழுவி, சாமி கும்பிட்டுவிட்டு நாங்கள் எல்லாம் தயாராகிவிடவேண்டும். உயர்தரம் படிக்கும் அக்காவுக்கு என்று தனியாக ஒரு எண்ணெய் விளக்கும் அறையும் கொடுக்கப்பட்டிருந்தது. மீதி எல்லோருக்கும் என்று பொதுவாக ஒரு மேசையும் விளக்கும் இருந்தது. அவரவர் தத்தமது விளக்குச் சிமினிகளைத் துடைத்தல் வேண்டும். சிமினியைத் துடைப்பது என்பது பிறந்த இரண்டு நாள் குழந்தையை ஈரத்துண்டால் குளிப்பாட்டுவதுபோல. மிகக் கவனமாகத் துடைக்கவேண்டும். அதிலும் மேசை லாம்புச் சிமினி மிக மென்மையானது. எப்பன் என்றாலும் வெடித்துவிடும். அதற்குள் கையை விட்டுத் துடைப்பதும் சற்றுச் சிரமமானது. அதன் வாய்ப்பகுதியின் விளிம்பு கையைப் பதம் பார்த்துவிடும். கூடவே திரியையும் உயர்த்தி சீராகக் கத்தரித்துவிடவேண்டும். இல்லாவிடில் தீபம் ஒரு பக்கத்தால் எரிய ஆரம்பித்து சிமினியில் புகை படிந்துவிடும். எண்ணெய் தீர்ந்துபோயிருந்தால் அதையும் நிரப்பி மேசையில் வைத்துத் தீபத்தை ஏற்றி, அது செட்டில் ஆனபின்னர் சிமினையைப் பொருத்தினால் அன்றைய இரவின் படிப்பு ஆரம்பிக்கும்.

குருபரன்

இனிய நண்பர் குருபரன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர் பதவியைத் துறந்தார் என்ற செய்தி மிகுந்த மன அலைக்கழிப்பைத் தந்துகொண்டிருக்கிறது. ஊரில் இவ்வகை நிகழ்வுகள் தினமும் நிகழும் ஒன்றுதான். ஆனால் குருபரனை நெருக்கமாகத் தெரியும் என்பதால் இதன் தாக்கம் அதிகமாக உள்ளது. இதேபோலத்தான் என் இன்னொரு நண்பர் பாலமுருகனுக்கும் நிகழ்ந்தது. மருத்துவரான பாலமுருகன் சில வருடங்கள் வெளிநாட்டில் பணிபுரிந்துவிட்டு மீண்டும் ஊரில்போய் வாழவேண்டும் என்று போன இடத்தில் அரசுத்துறையும் அதிகாரிகளும் ஆண்டுக்கணக்கில் அவருக்கு வேலைக்கான ஒதுக்கீட்டை செய்யாமல் அவரை அலைக்கழித்ததில் பாலா திரும்பவும் வெளிநாட்டுக்கே வந்து இங்குள்ள அரசு மருத்துவமனையில் பணிபுரிய ஆரம்பித்துவிட்டார். அதிகாரத்துக்குப் படியாமல், நேர்மையான வழியில், நெளிவு சுளிவுகளின்றி வாழ விரும்பும் பலரை இப்படித்தான் அந்தக்கட்டமைப்புகள் பிழிந்து எடுத்துவிடுகின்றன. குருபரனுக்கு நிகழ்ந்தது அதற்கான சமீபத்திய அடையாளம்.

மைத்திரிபால சேனநாயக்காவும் வெடி அண்ணரும்

கிழமைக் கடைசியில் மைத்திரிபால சேனநாயக்கா கட்சி தாவினதில அதிகம் பயனுற்றவர்  நம்ம வெடி அண்ணர்தான். வழமைபோல அன்றைக்கும் ஒரு "குட் ஷொட்" பார்ட்டி. வெடி அண்ணை செம போர்மில இருந்தார். அவர் போர்மில இருக்கையில் ஆனானப்பட்ட சுமந்திரன் கூட அம்மிக்கொண்டு இருக்கவேண்டும். அந்தளவுக்கு அண்ணர் இராஜதந்திரத்தை பிழிஞ்சு ஊத்துவார். அப்படி அவர் புல் போர்மில் இருந்தபோதுதான், கல்மடு குளக்க்கட்டு உடைக்கப்பட்டு இராணுவ உடல்கள் ஓமந்தை வரைக்கும் வெள்ளத்தில் மிதந்து சென்றன. ஒரு ஏ4 தாளில் கல்மடுக் குளக்கட்டு பிளானைக் கீறி, எப்படி தண்ணி ஓமந்தை மட்டும் மற்றப்பக்கத்தாலை பாய்ந்தது என்று அவர் ஸ்கெட்ச் போட்டு பூகொளவியலை விளக்கியபோது மொத்த பார்ட்டியே தண்ணீரில் சந்தோஷத்தில் மிதந்தது தனிக்கதை. இப்போது கொஞ்சநாளாக பெரிய அளவில விஷயம் சிக்காததால் காய்ந்து கிடந்த வெடி அண்ணருக்கு, மைத்திரி மாமா இப்பிடி பாய்ஞ்சது  ஒல்மோஸ்ட் தமிழீழம் கிடைத்தமாதிரி உற்சாகத்தைக் கொடுத்தது. மீண்டும் தாய் நாட்டை நிர்மாணிக்க காசு கலக்ட் பண்ணி அனுப்புற அளவுக்கு ஒரேநாளில் வெடி அண்ணர் ரோட் மப் போட்டுவிட்டார். ஆளுக்கு பயங்கர புளுகம். நான்தான் ச

நரேந்திர மோடி, இந்தியாவின் ஜே ஆர் ஜெயவர்த்தனா.

    "மோடிக்கும் ஜே. ஆருக்கும் என்ன ஒற்றுமை?" என்று ஒரு சிங்கள நண்பன் முகநூலில் கேட்டிருந்தான். முக்கியமான கேள்வி இது. இந்தக் கேள்விக்கான பதில் பல புதிர்களுக்கான முடிச்சுகளைப் போடக்கூடியது. தவிர்க்கமுடியாத ஒற்றுமைகளை இந்த இருவரும் கொண்டிருக்கிறார்கள். ஜே ஆரின் வாழ்க்கை ஒரு வரலாறு என்றால் அதிலிருந்து ஓரளவுக்கு மோடியின் அரசியலை எதிர்வு கொள்ளக்கூடிய அளவுக்கு இருவருக்கும் பல ஒற்றுமைகள். யார் இந்த ஜே ஆர்?

மண்டேலா

  கறுப்பின விடுதலைக்கான ஒரு போராளி. போராட்டத்தின் வடிவங்களை, கொள்கைகளை காலத்துகேற்ப மாற்றிய யதார்த்தவாதி. கம்யூனிசம், ஜனநாயகம், இனவாதம், பல்லினவாதம் என்று எல்லாமே இவர் வாழ்க்கையில், காலத்துக்காலம் வந்து போனது. இறுதியில் ஆயுதப்போராட்டத்தில் நம்பிக்கை வைத்து பயிற்சியும் எடுத்து சிறைக்கு சென்றார். இருபத்தேழு வருடங்கள் சிறைவாசம். அப்போதும் கூட ஆயுதப்போராட்டமே முன்னிலைப்படுத்தப்பட்டது. 2008ம் ஆண்டுவரை அமெரிக்க தீவிரவாத பட்டியலில் அவர் இருந்தாராம்.ஆனால் எழுபதுகளில் ஆயுதப்போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் அனைவருமே கைதுசெய்யப்பட நிலைமை மாறியது. போராட ஆட்கள் இல்லை. சிறையில் ஒத்துழையாமை நிகழ்ந்தாலும் அது பெரிதாக வெள்ளை ஆட்சியாளரை பாதிக்கவில்லை. ஆனால் இவர்களை சிறைவைத்ததால் போராட்டம் சர்வதேசமயப்படுத்தப்பட்டது. உலகம் இப்பொழுது போராட்டத்தை கையில் எடுத்துக்கொண்டது.

1984

  “சுதந்திரம் என்பது  இரண்டும் இரண்டும் நான்கு என்று சொல்ல அனுமதிப்பது” வின்சன். உண்மைகளுக்கான அமைச்சு (Ministry of Truth) திணைக்களத்திலே அவனுக்கு சாதாரண கிளறிக்கல் உத்தியோகம். கட்சியின் வெளிவட்ட மெம்பர். நாற்பது வயது இருக்கலாம். புத்திசாலி. சுயசிந்தனை உள்ளவன். கட்சியின், நாட்டின் தலைவர் பெரிய அண்ணர் (Big Brother). கட்சிக்குள் மூன்று வட்டங்கள். உள்வட்டம; மொத்த சனத்தொகையில் இரண்டுவீதத்துக்கும் குறைவானவர்களே இந்த உள்வட்ட கட்சியில் இருக்கிறார்கள். இவர்களுக்கு சகலவித வசதியும் உண்டு. வைன் அடிக்கலாம். வீட்டு வேலையாள் வைத்திருக்கலாம். சீனி, சொக்கலேட், கோப்பி என்று எல்லாமே தண்ணியாக கிடைக்கும்.  சக்திவாய்ந்தவர்கள். தலைமைப்பீடம். முடிவெடுப்பவர்கள். இயக்குபவர்கள். The power house.

டமில் மக்களுக்கு முரளி எழுதும் கடிதம்!

  என் அன்புக்குரிய டமில் மக்களே, ஐ தின்க், எங்க பிரசிடெண்ட் செய்யுற அபிவிருத்தி இஸ் குட். என்னால ஸ்ரீலங்கன் கிரிக்கட் அணில லீடிங் ஸ்பின்னரா இருக்கமுடியுமின்னா ஏன் இந்த ஜனங்களால முடியாது? என்னால எய்ட் ஹண்ட்ரட் விக்கட்ஸ் எடுக்கமுடியுதுன்னா, வை கான்ட் அதர்ஸ்? தமிழ் சிங்களம் என்று யாரையும் பிரிச்சு பாக்காதீங்க. நான் டீமில இருக்கறப்போ பீஸ் இருந்தது. சமாதானம். ஒருதடவை ஏசியன் லெவன் டீமுல கப்டினாக இருந்தன் தானே. ஸ்ரீலங்கன் டீமுல வைஸ் கப்டினாவும் இருந்தன். கப்டினா ஆக முடியல்ல. பட் அதுக்கு வன் ரீசன் இருக்கி. நான் சிங்களம் மிச்சம் பேசுவேன். ஆல் டமில்ஸ் நிச்சயமா சிங்களம் படிக்கணும். பிரித் ஒதேக்க நூலைப்பிடிச்சுகிட்டு கும்பிடணும். நீங்க சிங்கள படிச்சா சிங்களீஸ் தமிழ் படிக்க தேவையில்ல தானே. எதுக்கு பிறகு அவங்களும் தமிழ் படிச்சு, அப்புறமா தமிழன் சிங்களத்திலயும் சிங்களவன் தமிழிலையும் பேசி குழம்பி போய், வேஸ்ட்டு. அச்சுவலி வி நீட் வன் பாஷா திட்டம்.

Still Counting The Dead.

வைத்தியர் மே 15, 2009. ஒரு சின்ன கட்டிடத்தில் இயங்கிக்கொண்டிருந்த கடைசி வைத்தியசாலையையும் கைவிட்டாயிற்று. ஏனைய வைத்தியர்கள் இராணுவத்திடம் சரணடைய சென்றுவிட்டார்கள். வைத்தியர் நிரோனும் அவரின் உதவியாளர் மட்டுமே பங்கருக்குள். முந்தைய தினத்து பொஸ்பரஸ் குண்டு தாக்குதலில் நிரோனின் முதுகு, கைப்பகுதி எல்லாமே எரிந்து சிதிலமாகி இருந்தது. அகோர பசி. வெளியேயோ குண்டு மழை. பங்கருக்கால் கொஞ்சம் தலையை நீட்டி எட்டிப்பார்த்தால் ஒரே புகை மூட்டம். தூரத்தே கடற்கரை மணலில் ஒரு பனங்காய் விழுந்துகிடக்கிறது. ஓடிச்சென்று அதை எடுத்துவருமாறு தன் உதவியாளரிடம் நிரோன் சொல்லுகிறார். தாமதித்தால் இன்னொரு பங்கருக்குள் இருப்பவர்கள் முந்திவிடலாம். கொஞ்சம் குண்டுகள் தணிந்த சமயம் பார்த்து உதவியாளரும் ஓடிச்சென்று அதை எடுத்துக்கொண்டு வேகமாக பங்கருக்குள் திரும்புகிறார். அப்போது தான் அந்த உதவியாளன் கையில் இருந்ததை நிரோன் கவனிக்கிறார்.

கூட்டமைப்பு எம்.பி சுமந்திரனுடன் நேரடி சந்திப்பு!

  தமிழ் தேசிய கூட்டமைப்பு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுடனான சந்திப்புக்கு அழைப்பு வந்தபோது முதலில் போவதில்லை என்று தான் முடிவெடுத்தேன். அப்பாவிடம் சொன்னபோது “உனக்கென்ன விசரா? அவர் கருத்தை அவர் வாயாலேயே நேரடியாக கேட்டால் தானே அவரின் நிலைப்பாடு அறியமுடியும். சும்மா பத்திரிகைகள் எழுதுவதை படித்து வியாழமாற்றத்தில விமர்சித்தால் சரியா?” என்று நெத்தியடி தர, சரி போவோம் என்று முடிவெடுத்தேன். முருகன் தானும் வருகிறேன் என்று சொல்ல, வேலை முடிந்து ஏழு மணி சந்திப்புக்கு ஆறரைக்கே போக அங்கே சுமந்திரன் ஏற்கனவே தன் காரில் டிரைவ் பண்ணி வந்திருந்தார்! அப்புறமாக ஒழுங்கமைப்பாளரும் வந்து சேர்ந்தார். என்னை அறிமுகப்படுத்தும்போதே, இவர் ஜேகே, வியாழ மாற்றத்தில சிலவேளைகளில் உங்களை பாராட்டுவார். பலவேளைகளில் விமர்சிப்பார்” என்று சொல்லிவைக்க, என்னடா இது லொள்ளா போயிற்று என்று யோசித்தேன். எந்த விஷயத்தில் என்னை விமர்சிக்கிறீர்கள் என்று சுமந்திரன் கேட்ட போது “13ம் திருத்தம் அமுல்படுத்தல் பற்றிய  உங்கள் நிலைப்பாடு …” என்று நான் சொல்லி முடிக்கும் முன்னமேயே, “புத்திஜீவிகள்” பற்றியும் எழுதியிருக்கிறார் என

கலியபெருமாள் இந்திரன்! கலியபெருமாள் சந்திரன்!

  முற்குறிப்பு இந்த பதிவு எனக்கும், என்னுடைய நண்பரும் கவனிக்கத்தக்க ஈழத்து இலக்கியவாதியுமான உதயாவுக்குமிடையேயான “ஏழாம் அறிவுடை நம்பிகள்” என்ற சிறுகதை சம்பந்தமான வாத பிரதி வாதங்கள். இந்த வாதத்தில் எங்களுக்கு நடுவரின் தேவை ஏற்படவில்லை என்பது பெருமைக்குரியது!     ஜேகே! எழாம் அறிவுடை நம்பி என்னுள், அறிவுடை நம்பி கலிய பெருமாள் இந்திரன் , அறிவுடை நம்பி கலிய பெருமாள் சந்திரன் எண்டு இரண்டு துருவங்களை உண்டு பண்ணி ஒரு பெரிய பட்டி மண்டபம் நடந்து கொண்டிருக்கு -இங்கு நடப்பதையும் தாண்டி, நடுவர் தீர்ப்பு சொன்னால் ஒரு முடிவான கருத்தை நேரம் பொறுப்பது பொறுத்து பதியுறன் , நானே எனக்குள் சில தெளிவு கொள்ளாததால் - என் உணர்வுகளை ஆட்கொள்ளும் சுழல்களை முடிந்த வரை பகிர்கிறேன் - இது கொஞ்சம் சிக்கல் - இடியப்பதிலிரிந்து சிக்கல் எடுக்குற மாதிரி - will c. பொதுவா இந்த மாதிரி கதைகளும் கவிதைகளும் இன்னொமொரு குணத்தை வாசகனுக்கு அடையாளப்படுத்துகின்றன, தவிர முடிவு என்று பரிந்துரைப்பதில்லை - அது அதன் நோக்கமல்ல. முடிவு வாசகனின் உள்வாங்கல் மற்றும் அனுபவம் + கொள்ளளவு பொறுத்தது. நிற்க, எழாம் அறிவு ஒரு விடியலை பெற்றுத்தரும

என் கொல்லைப்புறத்து காதலிகள் : சந்திரிகா!

  1994ம் ஆண்டு அக்டோபர் பன்னிரெண்டாம் தேதி, யாழ்ப்பாணம் காலையிலேயே எழுந்து புத்தாடை அணிந்து புன்னகையுடன் பத்திரிக்கை படித்துகொண்டு இருந்தது. அன்று தான் சமாதான பேச்சு வார்த்தை குழு கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வருகிறது. எங்கள் வீட்டுக்கு பக்கத்தில் தான் யாழ் பல்கலைக்கழக மைதானம், அங்கே தான் ஹெலிகாப்டர் இறங்குகிறது. பக்கத்து காணியில் ஒரு 50கலிபர் துப்பாக்கி பாதுகாப்புக்கு. ஆனால் இம்முறை எனக்கு பயம் இல்லை. அது தான் சமாதானம் வரப்போகிறதே! இரவு முழுதும் தூங்கவேயில்லை. தூதுக்குழுவின் அத்தனை உறுப்பினர் விவரமும் மனப்பாடம். அதன் தலைவரான பாலபட்டபெந்தி, ஜனாதிபது ஆலோசகர், லயனல் பெர்னாண்டோ என ஒரு ஐந்து பேர். புலிகள் குழுவில் கரிகாலன், இளம்பரிதி உட்பட ஒரு ஐந்து பேர். பேசப்போகிறார்கள். பிரச்சனையை தீர்க்க போகிறார்கள்.   அன்றைக்கு பாதுகாப்பு கடும்பிடி. இராமநாதன் வீதியை மூடிவிட்டார்கள். எனக்கென்றால் ஹெலியை பக்கத்தில் இருந்து ஒருமுறை பார்த்துவிட வேண்டும் என்று ஒரு ஆர்வம. அதிலும் ஹெலியின் கதவருகே துப்பாக்கியுடன் இருக்கும் ஆர்மியை நேரில் பார்க்கவேண்டும். ஒருமுறை இந்த ஹெலி தாழ்வாக சுட்டுக்கொண்டு செல்லும்