Skip to main content

Posts

Showing posts from October, 2012

காடு திறந்து கிடக்கிறது!

  நீர்வீழ்ச்சியே தான். ஸ்ஸ்ஸ் என்ற பரிச்சயமான சத்தம். சத்தம் வரும் திசையில் இரண்டு நாள் நடந்தால் அடைந்துவிடலாம். முதலில் குளிக்கவேண்டும். உடல் முழுதும் உள்ள கீறல்கள், அதில் உள்ள ரத்த திட்டுகள், அழுக்குகள், பச்சை இலை வாசனை எல்லாமே போகும்வரை தேய்த்து குளிக்கவேண்டும். அவசரமாக போகலாம் என்றால் போகும் பாதை அத்தனை அழகு. மிரட்டும் அழகு. எங்கேயும் பூக்கள். எல்லாமே பூக்கள். பார்த்தால் அன்று முழுதும் பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல .. அவ்வளவு அழகு. “நீ எப்போதாவது காதலித்திருக்கிறாயா?” அபேர்ச்சர் நன்றாக குறைத்து மஞ்சளும் சிவப்பும் கலந்த அந்த காட்டுப்பூவை நெருங்கி போஃகஸ் பண்ண கை தடுமாறிக்கொண்டிருந்த நேரம் தான் அந்த குரல். பரிச்சயமான குரல். இந்த காட்டில் .. நானே வழி தடுமாறி அலைந்துகொண்டிருப்பவன். இந்த இடத்தில் எவரும் இருக்கும் சிலமனே இல்லை. அதுவும் என்ன மாதிரி குரல் இது? ஆண் குரலா? பெண் குரலா? எங்கேயோ கேட்டிருக்கிறேன் இதை. எங்கே? தவிப்பில் படமெடுப்பதை நிறுத்திவிட்டு எல்லாத்திக்கிலும் பார்த்தேன். காடு. காடென்றால் அப்படி ஒரு காடு. இப்படி ஒரு காட்டில் தன்னந்தனியனாக என்ன துணிச்சல் எனக்கு? சரி, வழி த

மரம் போதும் படர்வோம்

மலை அளவு கருமேகம் அலை அலையா வரு நேரம் கருவறுத்த கறுப்பு தாலி எழவெடுத்த கருங்காலி கட்டியவனை தேடி ஓடி கருவறையில் வாடி வதங்கும் கருமாந்திர தமிழ்சாதி. மலர் படர தேர் கொடுக்கும் பாரி வேந்தன் சமர் இல்லை என்றபின் டொலர் கொடுத்தானில்லை! தேர் வேண்டாம் மரம் போதும் படர்வோம் என்றால் மரம்கொத்தி பறவைகள் வருமாம் என்று தார் ரோட்டில் பேர் எடுக்கும் ஜாரிசாந்தன்! இனியில்லை வழியொன்று வலியெல்லாம் கழியென்று கொடியொன்று வேர்விட்டு மரமாகுது மரம் வெட்டி விறகெடுத்து விலைபெசுது. Photo : Ketha 

காதல் போகி

மேய்வது எல்லாமே மேய்க்கப்படுவதால் மேய்க்கலாம் என்று மேயப்போனவன்! மெய்யெனப் பெய்யும் மழையும் பொய்யன மேனியாம் பொன்னாம், பெண்ணாம் பெண்ணாகரத்தில் இடைத்தேர்தலாம்! கானல் நீராம் ! காட்சிப்பிழையாம்! காதலியாம்! போனதெல்லாம் கனவினைப்போல் புதைந்தழிந்தே போனதாம் போதாத கனவாம்! பூமியும் பொய்யாம்! படி தாண்டா பத்தினியாம் படலை தாண்டிய பரமனாம்! குஞ்சியழகும் கொடுந்தானை கோட்டழகும் குமட்டுதாம். நெஞ்சத்து நல்லம்யாம்! ஒரு போல்லாப்பும் இல்லையாம்! புங்குடுதீவு புகையிலையாம்! பொருள் தேடும் பூமியில் அருள் தேடும் நெஞ்சமாம்! போகமாம், மோகமாம், மோசமாம் முப்பது நாளில் மாசமாம்! முன்னூறே நாளில் போகியாம்!  

என் கொல்லைப்புறத்து காதலிகள்: யாழ்ப்பாணத்து கிரிக்கட் - பாகம் 1

  இன்னும் ஐந்து ரன் அடித்தால் வெற்றி. நன்றாக இருட்டிவிட்டது.  தீயிடப்பட்டு நிர்மூலம் ஆக்கினாலும் கம்பீரமாக நிற்கும் யாழ் நூலகத்துக்கு பின்னாலே சூரியன் மறைந்துகொண்டிருக்க, எங்கே வெளிச்சம் இல்லை என்று சொல்லி ஆட்டத்தை நிறுத்தி விடுவார்களோ என்ற பயம் எங்களுக்கு. மணிக்கூண்டு கோபுர முனையில் இருந்து பிரபா அண்ணா பந்துவீச தயாராக, பூங்கா முனையில் எதிர்கொள்வது காண்டீபன் அண்ணா. மொத்த மைதானமே ஆர்ப்பரிக்கிறது. பந்து மட்டிங் பிட்ச்சில் லெந்தில் விழ, காண்டீபன் அண்ணா லோங் ஓனில் இழுத்து அடிக்க… பந்து பறக்கிறது. அத்தனை பேரும் ஆவென்று வாய் பிளந்து நிற்க, அது மைதானத்தை தாண்டி, வீதியை தாண்டி மணிக்கூண்டு கோபுரத்தின் உச்சியில் இருந்த சேவல் கொண்டையில் பட்டு…. சேவல் கூவும் சத்தம். எழும்பிப்பார்த்தால் இன்னமும் விடியவில்லை. காலை நாலு மணி. இன்னும் நான்கு மணித்தியாலங்களில் ஆரம்பித்துவிடும். வடக்கின் பெரும்போர் என்று அழைக்கப்படும் சென்றல் சென்ஜோன்ஸ் பிக் மேட்ச். நித்திரை அதற்கு பிறகு வரவில்லை. “கடவுளே காண்டீபன் அண்ணா எப்பிடியும் செஞ்சரி அடித்து அஞ்சு விக்கட்டும் விழுத்தோணும்.” 1992ம் ஆண்டு. மாசி மாதத்து இறுதி வெ

2 States: Story of My Marriage.

“Island of Blood”, “கோபல்ல கிராமம்”, “Restaurant at the end of universe”, “காட்டாறு” என்று தொடர்ச்சியாக கொஞ்சம் சீரியசான புத்தகங்கள். இம்முறை லைட்டாக தான் வாசிக்கவேண்டும் என்று புத்தக வரிசையை நோட்டம் விட்டபோது தலைவரின் “விடிவதற்குள் வா” அகப்பட்டது. திறந்து இரண்டு பக்கங்கள் வாசித்துவிட்டு .. ப்ச் .. இன்னும் லைட்டாக வேண்டும் என்னும்போது வீணா அடிக்கடி சொல்லுவது ஞாபகம் வந்தது. “அண்ணே புத்தகம் வாசிக்கிறது மனசுக்கு சந்தோஷத்துக்கு தானே .. பேந்தென்னத்துக்கு டென்ஷன் தாற புத்தகங்களை வாசிக்கிறீங்கள்? பேசாம ரமணிச்சந்திரன் வாசியுங்க .. கதை தெரிஞ்சாலும் வாசிக்க நல்லா இருக்கும்” எனக்கு இப்போதைக்கு தேவை ரமணிச்சந்திரன் வகையறா தான் என்று அம்மாவிடம் போய் கேட்க, உனக்கென்ன லூசா? வாசிச்சு ரெண்டு பக்கத்தில தூக்கி எறிஞ்சுடுவ, உனக்கு அது தோதுப்படாது” என்றார். சரி ஆணியே வேண்டாம் என்று மீண்டும் என் கலக்ஷனுக்கு வந்து தேடியபோது மாட்டுப்பட்டது தான் 2 States : Story of My Marriage. சென்ற வருடம் கஜன் டெல்லி போயிருந்தபோது பரிசாக வாங்கிவந்த புத்தகங்களில் ஒன்று. வாசிக்காமல் கிடந்தது. இரண்டு நாட்களுக்கு முன