நான்கு வருடங்களாக இப்படி பிடித்ததையும் பிடிக்காததையும் தொகுப்பது தொடர்கிறது. இப்போது பழையதை வாசித்துப்பார்க்க ஒரு வித சுவாரசியம்; 2008 இன் சிறந்த படமாகவும் , இசை அல்பமாகவும் கருபழனியப்பனின் “பிரிவோம் சந்திப்போம்” படத்தை குறிப்பிட்டிருந்தேன். இன்றைக்கு எனக்கு “பிரிவோம் சந்திப்போம்” தமிழில் ஹேராமுக்கு பின்னர் வந்த சிறந்த படம் என்று தோன்றுகிறது. Best emerging application என்று 2009 இல் Google Wave ஐ சொல்லியிருந்தாலும் அது பின்னர் டிஸ்கன்டினியூ ஆகிவிட்டது. 2010 இல் man of the year விருது அசாஞ்னேக்கு குடுத்திருந்தேன். தல ஈகுவடோர் எம்பசிக்குள் படுத்து கிடக்கிறார். சென்ற வருடம் Yarl IT Hub ஒரு சிறந்த தொழில்நுட்ப முயற்சி என்று சொல்ல, நினைத்ததற்கு மேலாக அது யாழ்ப்பாணத்தில் பல செயற்பாடுகளையும் நெட்வோர்க்கிங்கையும் உருவாக்கியது. இதை யார் யார் வாசிக்கிறார்களோ இல்லையோ, எனக்கொரு பெர்சனல் தொகுப்பு தான். 2012 எனக்கும் மிகவும் அமைதியாக சிம்பிளாக எந்த சிக்கலுமில்லாமல் கடந்து போன வருடம். ஒருவேளை சிக்கல்களை சிம்பிளாக எடுக்க பழகிவிட்டேனோ தெரியாது. All is well.