Skip to main content

Posts

Showing posts from May, 2021

"சமாதானத்தின் கதை" பற்றி பாத்திமா மஜீதா

  நீண்ட நாட்களின் பின்னர் சிறப்பானதொரு சிறுகதைத் தொகுதி வாசிக்க கிடைத்தது. ஜேகேயின் “சமாதானத்தின் கதை” தொகுப்பு வெகுவாக என்னைப் பாதித்திருக்கின்றது. அகழ் மின்னிதழில் வெளிவந்த அவருடைய “டைனோசர் முட்டை” என்ற சிறுகதையே இத்தொகுப்பினை வாசிக்கத் தூண்டியது என்று கூறலாம். இத்தொகுப்பில் உள்ள ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு இசையில் வெவ்வேறான சுருதியுடன் ஒலித்துக் கொண்டிருப்பதை என்னால் உணர முடிந்தது. பதினொரு கதைகளும் வெவ்வேறான மொழிநடை . இதுவே இந்த தொகுதியின் முக்கியமான பலம் எனக் கருதுகின்றேன். போர், புலம்பெயர் வாழ்வின் வண்ணத்தை நுட்பமாக மாற்றி அன்றாடத்தை குலைத்து விடுவதை ஜேகே அவருடைய கதைகள் வழியாக கலையமைதியுடன் சாதித்திருக்கிறார். பெண்ணியம் குறித்த கற்பனாவாத சாய்வுகளோ அல்லது பிரச்சார முழக்கங்கள் உரத்த குரலில் ஒலிக்கும் விமர்சனமோ அவருடைய கதைகளில் எழவில்லை. அதேநேரத்தில் பெண்ணின் அக உணர்வுகளை ஆண் எழுதுவது என்பது அசாதாரண விடயம். ஆனால் இத்தொகுப்பில் சில இடங்களில் ஜேகே அதனை சாதித்துக் காட்டியிருக்கின்றார். ஜேகேயிற்கு வாழ்த்துக்கள்

"சமாதானத்தின் கதை" பற்றி நிலாந்தி சசிகுமார்

  இந்தப் புத்தகம் ஒரு நண்பியின் பரிந்துரையில் வாங்கியது. வாசித்து முடித்த போது வாங்கியதற்காக திருப்தியும் மகிழ்ச்சியும் அடைந்தேன்.தலைப்பு மயக்கியது. ஆனால் அதில் அடங்கிய பதினொரு கதைகளும் ஒரு தெளிவைத் தந்தது. புலம்பெயர் வாழ்வில் நம் மக்கள் தொலைத்து விட்ட சங்கதிகளையும், வாழ்வையும் பேசுகின்றன. ஜேகேயின் இப்படைப்பில் சிலிர்ப்புகள் அதிகமுள்ள அதேவேளை இழப்புகளும் அதிகம் தான்.

ஊரோச்சம் : ரயில் பயணம்

கசுனுக்கு வயிற்றைக் கலக்க ஆரம்பித்திருந்தது. பச்சை அம்பரலங்காயாக இருக்கவேண்டும். அல்லது திருட்டுத்தனமாக குசினித் தட்டிலிருந்து எடுத்துத் தின்ற அச்சாறு வெங்காயமாகவும் இருக்கக்கூடும். அப்போதுதான் அவன் தாய் தொழிற்சாலையில் வேலை முடித்துவந்து, குளித்து, வீட்டு உடுப்புக்கு மாறி எல்லோருக்கும் தேநீர் தயாரிக்கலாம் என்று அடுப்பைப் பற்றவைக்கப் போயிருந்தாள். அதற்கிடையில் போய் அம்மா ‘கக்கா’ என்றால் எப்படியிருக்கும்? “போயிரு. முடிஞ்சோன கூப்பிடு, நான் வாறன்” கசுனுக்கு ஒரு பழக்கம். கக்கா இருக்கப்போகும்போதெல்லாம் கூடவே தன்னோடு ஒரு டைனோசரையும் கூட்டிப்போவான். அதற்கு அவன் முத்தா என்று பெயர் வைத்திருந்தான். முத்தா என்றால் பூட்டன். டைனோசர்கள் நம் பூட்டன் காலத்தில் வாழ்ந்தவை என்று தாய் அவனுக்குச் சொல்லியிருந்ததால் வைத்த பெயர். முத்தா ஒரு காலுடைந்த டைனோசர். யாரோ வயதாகிவிட்ட குழந்தை குப்பையில் தூக்கிப் போட்ட டி-ரெக்ஸ் அது. ஆனால் அது ஒரு டி-ரெக்ஸ் என்பதோ, அதற்கு ஒரு கால் உடைந்துபோனதோ கசுனுக்குத் தெரியாது. அவனைப்பொறுத்தவரையில் டைனோசர்களுக்கு முன்னிரு கால்களும் சிறியவை. பின்னாலே ஒருகால் மாத்திரம் இருக்கிறது. மு

அப்பாவின் தொலைபேசி

எண்பதுகளில் எங்கள் ஒழுங்கையிலேயே புறொக்டர் வீட்டில்தான் தொலைபேசி இருந்தது. அந்த வட்டாரத்தில் இருந்த இருபது முப்பது வீடுகளுக்கும் அதுதான் ஒரே தொலைபேசி. அதிலும் நாம் போய் அழைப்பு எடுக்க அந்தப் புரொக்டர் மனிசி விடாது. ஆனால் அவசர அழைப்பு ஏதும் வந்தால் எங்களுக்குச் சொல்லி அனுப்புவார்கள். அப்படி அழைப்பு எடுத்து விசயம் சொல்லுமளவுக்கு அங்காலப்பக்கம் தொலைபேசி வசதிகொண்ட எவரையும் வட்டாரத்துக்கும் தெரியாததால் பெரிதாக அழைப்பு எதுவும் எமக்கு வருவதில்லை. வெளிநாட்டுக்கு ஆட்கள் போகத்தொடங்கியிராத காலம் அது. அல்லது போனவர்களுக்கு தொலைபேசி அழைப்பு எடுத்துப் பேசுமளவுக்கு வசதியும் வந்திராத காலம். எப்போதாவது அப்பாவுக்கு வேலை விசயமாக அழைப்பு வரும். தனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்திருக்கிறது என்றதுமே அப்பாவின் முகத்தின் பின்னே ஒரு ஒளிவட்டம் பிரகாசிக்கும். அது செருப்பை அணிந்துகொண்டு, ஒழுங்கையால் நடந்து புரொக்டர் வீட்டுக்குப் போய், தொலைபேசியில் கதைத்துவிட்டுத் திரும்பும்வரைக்கும் நிலைத்து நிற்கும். வருகின்ற வழியில் சிங்கன் குறைந்தது நான்கு வீடுகளிலாவது கேற்றடியில் நின்று அந்த அழைப்பைப்பற்றிப் பெருமைப்பட்டுப் பீத்

டைனோசர் முட்டை

பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்னர் அனிதா நாயரின் 'லேடிஸ் கூப்' நாவலை வாசித்திருந்தேன். அந்தக் கதையில் மார்கரட் போல்ராஜ் என்றொரு பெண் பாத்திரம் வரும். அவருக்கு, வீட்டில் கொடுமை செய்யும், சுயநலக்கார, பெண்கள் மீது பலவீனம் கொண்ட, ஸ்மார்ட் லுக்கிங் உள்ள ஒரு கணவன். மார்கரட் தன் கணவனை எப்படி வழிக்குக் கொண்டுவந்து அவனை ஒன்றுமேயற்றவனாக்குகிறார் என்பதுதான் அந்தக் கதை. நாவலில் ஒரேயொரு அத்தியாயம் மட்டுமே வருகின்ற மார்கரெட் பல ஆண்டுகளாக நெஞ்சைக் குடைந்துகொண்டே இருந்தார். அந்தப் புள்ளி பல வருடங்களாக உப்புத்தண்ணிக்க போட்ட நெல்லிக்காய் மாதிரி ஊறிக்கொண்டே கிடந்தது. பல தடவைகள் என் வாசக வட்ட நண்பர்களோடு மார்கரட் பற்றிப் பேசியிருக்கிறேன். நிறைய நாள் ஜீவியோடு இதுபற்றி உரையாடியிருக்கிறேன். அந்தப் புள்ளியை எடுத்து விளையாடவேண்டும் என்றும் ஒரு ஆசை இருந்தது. தன்னைவிட சுப்பீரியராக இருக்கக்கூடிய ஒரு துணையை எப்படி அணு அணுவாக மழுங்கடிப்பது என்கின்ற புள்ளி. ஆனால் அதற்குச் சரியான கதை ஒன்று அமையவில்லை. திடீரென்று ஒருநாள் அந்த மார்கரட் ஆணாகியிருந்தால் எப்படியிருந்திருக்கும் என்று தோன்றியது. எழுத ஆரம்பித்தேன்

ஒரு பனங்கொட்டை உதயமாகிறான்

நாளைக்கு உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் வந்துவிடும் என்றார்கள். அருமைநாயகம் சேர் சுட்டெண் வாங்கியிருந்தார். ஆனால் தகவல் எதுவும் வந்திருக்கவில்லை. பெறுபேற்றுக்காகக் காத்திருந்த இந்த மூன்று மாதங்களில் பல்கலைக்கழக அனுமதி கிடைக்கும் என்ற நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாகத் தேய ஆரம்பித்திருந்தது. மறுபடியும் இன்னொருமுறை பரீட்சைக்குப் படிக்கும் முனைப்பும் அருகியிருந்தது. மீண்டும் அசேதன இரசாயனத்தை நினைத்தாலே SO2 மூக்குக்குள் போய்க் குமட்டிக்கொண்டு வந்தது.

தமிழ்நதியின் 'காத்திருப்பு'

மெல்பேர்ன் வாசகர் வட்டத்தில் தமிழ்நதியின் 'மாயக்குதிரை' சிறுகதைத் தொகுப்பு பற்றிய வாசிப்பு அனுபவப் பகிர்வு சென்ற மாதம் இடம்பெற்றது. அத்தொகுப்பில் உள்ள 'காத்திருப்பு' என்ற சிறுகதை சார்ந்து இடம்பெற்ற கருத்துப் பரிமாற்றங்களைத் தொகுத்து இக்கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது. https://melbournevasakarvaddam.blogspot.com/2021/05/blog-post.html