Skip to main content

Posts

Showing posts from April, 2015

நானாகிய நீ

    நான் மழையானால் நீ கடலாகிறாய். நான் மணலானால் நீ அலையாகிறாய். நான் விழி திறந்தால் நீ இரவாகிறாய். நான் மடை திறந்தால் நீ சுரமாகிறாய். நான் உலையானால் நீ திரையாகிறாய். நான் திரையானால் நீ வெளியேறுகிறாய். நான் வெளியாகையில் நீ சிறை போகிறாய். நான் சிறை பூணுகையில் நீ சிற்றறை ஆகிறாய்.  

ஓ காதல் கண்மணி

  ஒரு இயல்பான நிச்சயத் திருமணம். பரஸ்பரம் அறிமுகமில்லாத இருவரின் ஈகோ, அதெல்லாம் கடந்து ஒருவரை ஒருவர் புரிந்துக்கொள்ளும்போது மலரும் இனிமையான காதல். திருமணத்துக்கு பின்னரான காதல். “மௌனராகம்”. எண்பதுகளில். காதலிக்கிறார்கள். இருவீட்டிலும் சம்மதமில்லை. தன்னிச்சையாக திருமணம் முடிக்கிறார்கள். வீட்டை விட்டு வெளியே வந்து குடும்பம் நடத்துகிறார்கள். ஈகோ. ஊடல். சின்னதாய் பிரிவு. அப்போது அவர்களுக்குள்ளேயே இருக்கும் அந்த ஈர்ப்பும் காதலும் புரியவே மீண்டும் சேருகிறார்கள். “அலைபாயுதே”. தொண்ணூறுகளில். காதலிக்கிறார்கள். சேர்ந்து வாழுகிறார்கள். திருமணம் எல்லாம் தேவையில்லாத கொமிட்மெண்ட் என்று சொல்லுகின்ற “லிவிங் இன் ரிலேஷன்ஷிப்” காதலர்கள். இருக்கும்வரைக்கும் சந்தோசமாக இருப்போம். எதுக்கு திருமணம் செய்து தேவையில்லாத சண்டை, ஊடல், கோபம், அங்கலாய்ப்பு எல்லாம் அனுபவிப்பான் என்கின்ற எண்ணத்தை பிரதிபலிக்கும் இளம் ஜோடி. வாழ்க்கை நன்றாகவே போகிறது. ஆனாலும் அதே சண்டை, ஊடல், கோபம் எல்லாமே லிவிங் இன் ரிலேஷன்ஷிப்பிலும் வருகிறது. ஒரு கட்டத்தில், தாம்பத்யம் என்பது வெறும் இருபதுகளோடு முடியும், வேண்டுமானால் பிய்த்துக்கொ

கக்கூஸ் - வானொலி நாடகம்

பொதுக்கழிப்பறையில் இருக்கும்போது பக்கத்து அறைக்காரன் நம் "சவுண்டை" கேட்டால் அந்தரமாக இருக்குமே என்று நினைக்காதவர்கள் இருக்கமாட்டோம். மூன்று வருடங்களுக்கு முன்னர் எழுதிய சிறுகதை இது. "பண்புடன்" இதழுக்காக ஸ்ரீதர் நாராயணன் ஒரு சிறுகதை கேட்டபோது எழுதிக்கொடுத்தது. சென்றவருடம் "என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" நூல் வெளியீட்டு புரோமஷனுக்காக "தமிழ் அவுஸ்திரேலியன்" பத்திரிகை அவுஸ்திரேலிய  தேசிய வானொலியான எஸ்.பி.எஸ் இல் ஒரு பேட்டியை ஓழுங்கமைத்து கொடுத்தது. பேட்டியை எடுத்தவர் றைசல். என் அதிர்ஷ்டம், றைசல் வெறுமனே கடனுக்கு பேட்டியை எடுக்காமல், பேட்டிக்கு முன்னர் படலையை ஒரு நோட்டம் விட்டிருக்கிறார். அப்போதே இந்த "கக்கூஸ்" மற்றும் "குட் ஷாட்" சிறுகதைகள் அவருக்கு பிடித்துவிட்டது. அவற்றை வானொலி வடிவமாக்க அனுமதி கேட்டார். சந்தோஷமாக சரி என்றேன். குட்ஷொட்டை சென்ற வருடமே ஒலி வடிவமாக்கினார். ஆறு மாதங்கள் கழித்து "கக்கூஸ்" ஒலிவடிவமாகியிருக்கிறது. றைசலின் நெறியாள்கையில் குரல் தந்திருப்பவர் பாலசிங்கம் பிரபாகரன்.  வழமைபோலவ

என் கொல்லைப்புறத்துக் காதலிகள் பற்றி மயிலன்

அன்புள்ள ஜேகே, சிறு வயதில் எனக்கொரு பழக்கமுண்டு. டைரிமில்க் எனக்கு அலாதி விருப்பம். நான் இரண்டாம் வகுப்பு படிக்கும்போது வீட்டில் ஃப்ரிட்ஜ் வாங்கினார்கள். ஃப்ரீசருக்கு கீழே உள்ள தட்டில் ஒரு டைரிமில்க் அரையாகவோ முக்காலாகவோ இருக்கும். பத்து வில்லைகள் இருக்கும் அதை பத்து நாட்கள் நாளொன்றிற்கு ஒன்றாகத்தான் சாப்பிடுவேன். அவ்வளவுதான் வாங்கியும் தருவார்கள். அத்தனை நாட்கள் நீட்டித்து வைத்து அதனை உண்பதுதான் அதன் சுவை. பள்ளியின் கடைசி ஒரு மணி நேரமும், ரிக்ஷா பயணமும் முழுக்க முழுக்க அந்த ஒரு வில்லையை சுற்றியேத்தான் மனம் ஏங்கிக்கிடக்கும். ஒரு காத்திருப்பை அதில் தேக்கி வைப்பதில் ஒரு குதூகலம். நிதானித்து ருசிக்கும்போது அது வெறும் டைரிமில்க் மட்டுமல்ல. அப்படித்தான் உங்கள் காதலிகளும்.