Skip to main content

Posts

Showing posts from April, 2020

ஊரோச்சம் : நயினாதீவின் மாஸ்டர் செஃப்

எனக்கும் மனைவிக்குமிடையில் சாப்பாட்டு விசயத்தில் அடிக்கடி சண்டை வரும். நாங்கள் ஒரு தீவுக் குடும்பம் என்பதால் கடலில் நீந்துகின்ற, கடற்கரையில் ஊருகின்ற எதையுமே ருசித்துச் சாப்பிடுவோம். ஒவ்வொரு ஜந்துவையும் எப்படிச் சமைக்கவேண்டுமென்பதை வேதங்கள்போல எங்கள் முன்னவர்கள் செவிவழியாக தம் அடுத்த சந்ததிகளுக்கு அருளிச்செய்திருக்கிறார்கள். நிலவுக் காலத்தில் நண்டு வலிச்சலாக இருக்கும். சின்னத்திரளி பதினொருமணிக்குமேலே நாறிவிடும். களங்கண்டி விளமீனைப் பொரித்துப் புட்டோடு சாப்பிடவெண்டும். ஒட்டி என்றால் தடித்த குழம்பும் சொதியும். கணவாயை ஏழு சிரட்டையில் அவிய விடவேண்டும். மட்டி எப்படி சமைப்பது. ஒடியற்கூழுக்கு என்னென்ன போடுவது, நெத்தலியில் சொதி. சூடையில் பொரியல். முரள். கிளாக்கன். சீலா, கும்பளா, அறக்குளா முதற்கொண்டு முள்ளு மீனான கொய்யையையும் பச்சைத்தண்ணியான கட்டாவையும்கூட எப்படி சமைக்கவேண்டுமென எத்தனை எத்தனை ரெசிப்பிகள். எந்தெந்த நோய்க்கு எந்தெந்த மீன்கள். எந்தெந்தக் காலத்தில் எந்தெந்த கறிகள் என எல்லாமே என் அம்மாவுக்கு அத்துப்படி. அபிமன்யுவுக்கு கருவிலேயே சக்கரவியூகம் சொல்லிக்கொடுக்கப்பட்டதுபோல ந

ஊரோச்சம் : சிமாகாவின் கனிந்த இரவுகள்

அன்றிரவு ஏழு மணிக்கு வசாவிளானில் செம்முகம் ஆற்றுகைக்குழுவினரின் அரங்கு ஒன்று நடக்கப்போவதாக அக்கா சொல்லியிருந்தார். அதனாலேயே நிருபாவின் புத்தக நிகழ்விலிருந்து வெள்ளனவே கழன்று, வீடு திரும்பி ஆறரைக்கே தயாராக இருந்தேன். நேரம் ஏழு, ஏழரை மணி ஆகிவிட்டது. ஆனால் அக்கா மட்டும் வெளிக்கிடும் சிலமனே இல்லை.  “என்னக்கா லேட்டாப் போய் என்னெய்யிறது” “பொறு ஏழு மணி எண்டா இவங்கள் ஒன்பது மணிக்குத்தான் தொடங்குவாங்கள்”

நீண்ட காத்திருப்பு

கொமடோர் போயகொட ஶ்ரீலங்கா கடற்படையின் அதிகாரியாக இருந்தவர். 74ல் கடற்படையில் இணைந்து 93ல் சாகரவர்த்தனா கடற்படைக் கப்பலின் தளபதியாக நியமிக்கப்படுகிறார். 94ம் ஆண்டு கற்பிட்டிக் கடற்பகுதியில் நங்கூரம் தரித்து நிற்கும்போது சாகரவர்த்தனா புலிகளின் கரும்புலித்தாக்குத்தலில் சிக்குகிறது. போயகொட புலிகளால் கைது செய்யப்படுகிறார்.  அடுத்த எட்டு ஆண்டுகள் புலிகளின் கட்டுப்பாட்டில் சிறைக்கைதியாகத் தான் வாழ்ந்த வாழ்க்கையை ஒரு சுயசரித நூலாக, போயகொட சொல்லச்சொல்ல, சுனிலா கலப்பதி கேட்டு எழுதியிருக்கிறார்.“A Long Watch” என்று ஆங்கிலத்தில் வெளியான அந்த நூலைத் தமிழில் தேவா மொழிபெயர்த்திருக்கிறார். அந்த நூலின் பெயர்தான், “நீண்ட காத்திருப்பு”

ஒற்றன்

பெங்களூர் சென்ற சமயம் அசோகமித்திரனின் ‘ஒற்றன்’ நாவலை வாங்கியிருந்தேன். பெயரைப் பார்த்ததும் ஏதோ திரில்லர் கதையாக்கும் என்று இரண்டு வருடங்களாக வாசிக்காமலேயே இருந்துவிட்டேன். கிருமிக்காலத்தில் அதிகம் அழுத்தம் தராத புத்தகத்திலிருந்து மீளவும் வாசிப்பைத் தீவிரமாக ஆரம்பிக்கலாம் என்று தூக்கிய புத்தகம் ஒற்றன்.

பராபரம்

எல்லோரும் வீட்டினுள் முடங்கிக்கிடக்கையில் வெளியில் நடமாடுவதில் ஒரு சுகம் உண்டு. எங்காவது ஓரிரு மனிதர்கள். மனிதர்களைக் கண்டு ஆச்சரியமாகத் திரும்பிப்பார்க்கும் கங்காருக்கூட்டங்கள். கூட்டம் கூட்டமாகப் பறவைகள்.  இவர்களோடு நானும்.