Skip to main content

Posts

Showing posts from November, 2011

“மேகம் இடம் மாறும்போது!!”

அன்புள்ள பிருந்தன்! ஆரம்பத்திலேயே சொல்லி விடுகிறேன். இசையின் அரிச்சுவடி அறியாதவன் நான்.  சுருதி பிடித்து பாடுவதற்குள் கஜனிடம் நூறு தடவை குட்டு வாங்கியதால் பாடுவதை குளியலறையோடு நிறுத்தியவன். என் விமர்சனத்தை நீங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவேண்டியதில்லை. குப்பையில் போட்டு விடலாம். ATM மெஷினில் வரும் Balance Receipt ஐ பார்த்து விட்டு கசக்கி எறிவது போல எறிந்துவிடுங்கள். எவ்வளவு பணம் மீதி இருக்கிறது என்று எப்படியும் பார்ப்பீர்கள் தானே! உங்களையும் உங்கள் சகோதரர்களையும் முதன் முதலில் கேள்விப்பட்டு இன்றைக்கு பத்து வருடங்கள் இருக்குமா? அப்போது தான் சில ராஜா, ரகுமான் பாடல்களை உங்கள் குரல்களில் பாடி ஒரு சீடி வெளியிட்டு இருந்தீர்கள். கஜன் கொடுக்கும் போதே, “காந்தினியின் குரலை கேட்டுப்பார், she got something” என்று சொன்னான். அதுதான் ஆரம்பம். அப்புறம் கூடிய சீக்கிரமே உங்கள் ஆல்பம் “துளிகள்” வெளியானது. கஜன் சீடீ வாங்கிக்கொண்டு நேரே என் வீட்டுக்கு தான் வந்தான். எம்மிடம் இருந்த 5 in 1 இல் போட்டு கேட்டோம் .. By then I  realised you got something! Brunthan’s masterpiece of todate! அந்த

என் கொல்லைப்புறத்து காதலிகள் : குட்டி

  எங்கள் வீட்டின் முன்னே ஒரு எலுமிச்சை மரம் இருந்தது. அது வளரும்போது எம்மை கேட்டு வளரவில்லை. நாம் கிணற்றில் அள்ளி குளித்த தண்ணீரில் தானாகவே வளர்ந்தது. காய்த்து கொட்டியது. இலைகளை விட காய்களின் எண்ணிக்கை தான் அதிகம். வளரும்போது யாரும் அதை கவனிக்கவில்லை. காய்க்க ஆரம்பித்துவிட்டதா? பாத்தி எல்லாம் கட்டி ஒரே அமர்க்களம் தான். தனியாக தண்ணீர் பாய்ச்சி, தேயிலை சாயம், கோழிச்செட்டை எல்லாம் வெட்டித்தாட்டு பெற்ற பிள்ளையை கவனிப்பது போல கவனிக்கத்தொடங்கினோம். சனிக்கிழமை வந்தால் ஐந்து மணிக்கெல்லாம் வீட்டில் எழுப்பி விடுவார்கள். ஒரு பிளேன்டீயை குடித்துவிட்டு ஒரு துவாயை தலையில் முண்டாசு போல கட்டிக்கொள்ளவேண்டும். இல்லாவிட்டால் யாழ்ப்பாண பனிக்கு முட்டுச்சளி தலைக்குள் ஏறிவிடும். எலுமிச்சை மரத்தடிக்கு போய் சந்தைக்கு கொண்டு போகக்கூடிய பதமான காய்களை பிடுங்கவேண்டும்.

“சின்ன குயிலின் சோகம்!”

அலுவலகம் முடிந்து ரயில் நிலையம் நோக்கி நடந்துகொண்டு இருக்கிறேன். ஐபாடில் சதிலீலாவதி படத்தின் “மாருகோ மாருகோ” பாடல். கமலின் கமகம்களை கேட்டபோது மெல்லிய புன்னகை என்னையறியாமல் வந்தது. நடந்து கொண்டிருந்த இடம் மெல்பேர்ன் நகரத்து யாரா(Yarra) நதியின் குறுக்கு பாலம். பாலத்தின் விளிம்பு தடுப்பில் உட்கார்ந்திருந்த வெள்ளை புறாக்களை ஒரு குட்டிப்பொண்ணு துரத்தி விளையாடிக்கொண்டு இருந்தது. அவள் தாய், தன் பருமனான உடலை தூக்கிக்கொண்டு, “Careful honey .. careful” என்று பொண்ணை அதட்டிக்கொண்டு பின்னாலேயே ஓட, அந்த சுட்டியோ சட்டை செய்யாமல் குறுக்கும் நெடுக்குமாய் ஓடியது. தாயும் சளைக்கவில்லை! “பொன்மேனி உருகுதே” என்ற இடம் வருகிறது. சித்ராவின் ஆலாப்பு. பாடல் முழுதும் ஒருவித கோவைகுசும்பு  குழைந்த குரலில் பாடியவர் சட்டென சாஸ்திரிய சாயலுக்கு மாறி சித்ரா தான் பாடுகிறேன் என்று கோடி காட்டுகிறார். இந்த சறுக்கலை எப்படி இளையராஜா அனுமதித்தார்? என்று நினைத்துக்கொண்டே இருக்கும் போது, அந்த தாயின் கையில் பொண்ணு அகப்பட திடுக்கிட்டேன். அந்த இடத்தில் சித்ராவும் அவர் மகள் நந்தனாவும் ஓடி விளையாடுவது போல கற்பனை வர, தாங்க

“படிச்சதென்ன? பிடிச்சதென்ன?” -- “ஏதென்சு நகரத்து எழில் மிகு வாலிபன்”

நீண்ட காலம் ஆகிவிட்டது சந்தித்து! இன்றும் இது எழுதுவதாய் இல்லை. ஆனால் இந்த  ஏதென்சு நகரத்து எழில் மிகு வாலிபன்   இன்று எழுத தூண்டிவிட்டான். நண்பனின் கதை என்ன தான் எழுதி இருக்கிறான் என்றே வாசிக்க சென்றேன்.  சில கதைகள் உணர்ச்சி வசப்பட வைக்கும். சில கதைகள் சிந்திக்க வைக்கும். சில கதைகள் இலக்கியத்தனமாய் இருக்கும். கம்பன் பாடல் போல, வாசிக்க வாசிக்க புது புது அர்த்தங்கள் தோன்ற வைக்கும். இந்த கதை தோன்ற வைத்தது. ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு அர்த்தங்கள் கிடைக்ககூடிய கதை. அது தான் இலக்கியம். கம்பவாரிதி வீட்டு கட்டுத்தறி இல்லையா! என் அர்த்தம் இங்கே! கதையை வாசிக்க இந்த லிங்க்! ஏதென்ஸ் தோட்டத்து ராஜகுமாரா!!!!! ஷேக்ஸ்பியரின் “Merchant Of Venice” தான் உங்கள் பெயரை வாசிக்கும் போது ஞாபகம் வரும்! ஐரோப்பிய இலக்கியம் அழகாக காதலிக்கும்.  அதிலும் இளவரசர்கள் இன்னும் அருமை, நீங்கள் அந்த பெயரில் உலாவுவதில் எனக்கு ஆச்சரியம் இல்லை .. அது கிடக்கட்டும்!! இந்த கதைக்கு,  எனக்கு ஒரு interpretation இருக்கிறது. அது நிச்சயம் உங்களதாய் இருக்க வேண்டிய தேவை இல்லை. பிரபல கவிஞரும் வசனகர்த்தாவுமான Robert Browning இடம் அவர

கலியபெருமாள் இந்திரன்! கலியபெருமாள் சந்திரன்!

  முற்குறிப்பு இந்த பதிவு எனக்கும், என்னுடைய நண்பரும் கவனிக்கத்தக்க ஈழத்து இலக்கியவாதியுமான உதயாவுக்குமிடையேயான “ஏழாம் அறிவுடை நம்பிகள்” என்ற சிறுகதை சம்பந்தமான வாத பிரதி வாதங்கள். இந்த வாதத்தில் எங்களுக்கு நடுவரின் தேவை ஏற்படவில்லை என்பது பெருமைக்குரியது!     ஜேகே! எழாம் அறிவுடை நம்பி என்னுள், அறிவுடை நம்பி கலிய பெருமாள் இந்திரன் , அறிவுடை நம்பி கலிய பெருமாள் சந்திரன் எண்டு இரண்டு துருவங்களை உண்டு பண்ணி ஒரு பெரிய பட்டி மண்டபம் நடந்து கொண்டிருக்கு -இங்கு நடப்பதையும் தாண்டி, நடுவர் தீர்ப்பு சொன்னால் ஒரு முடிவான கருத்தை நேரம் பொறுப்பது பொறுத்து பதியுறன் , நானே எனக்குள் சில தெளிவு கொள்ளாததால் - என் உணர்வுகளை ஆட்கொள்ளும் சுழல்களை முடிந்த வரை பகிர்கிறேன் - இது கொஞ்சம் சிக்கல் - இடியப்பதிலிரிந்து சிக்கல் எடுக்குற மாதிரி - will c. பொதுவா இந்த மாதிரி கதைகளும் கவிதைகளும் இன்னொமொரு குணத்தை வாசகனுக்கு அடையாளப்படுத்துகின்றன, தவிர முடிவு என்று பரிந்துரைப்பதில்லை - அது அதன் நோக்கமல்ல. முடிவு வாசகனின் உள்வாங்கல் மற்றும் அனுபவம் + கொள்ளளவு பொறுத்தது. நிற்க, எழாம் அறிவு ஒரு விடியலை பெற்றுத்தரும

ஆத்தா நான் பாஸாயிட்டேன்!!! (‘சவால் சிறுகதை-2011’)

  பரிசில், ஆதி மற்றும் யூடான்ஸ் இணைந்து வழங்கிய சவால் சிறுகதை போட்டி முடிவுகள் வெளியாகி விட்டன . நான் எழுதிய “சட்டென நனைந்தது நெஞ்சம் ” சிறுகதைக்கு இரண்டாம் இடம் கிடைத்து இருக்கிறது. காலையிலிருந்து கிள்ளி கிள்ளி பார்த்து கை முழுதும் காயம் என்றால் பார்த்து கொள்ளுங்கள்!   78 கதைகள் போட்டிக்கு வந்தன. அனுஜன்யா, ஸ்ரீதர் நாராயணன், எம்எம். அப்துல்லா என மூன்று தேர்ந்த நடுவர்கள். பரிசிலும் ஆதியும் ஒருங்கமைப்பாளர்கள். இரண்டு வாரங்களுக்குள் எல்லா கதைகளையும் வாசித்து அவற்றுக்கு நறுக்கென விமர்சனங்கள் கொடுத்து இறுதியில் நேற்று முடிவுகளை அறிவித்தார்கள். நான் மெல்போர்னில் வசிப்பதால் காலை ஐந்து மணிக்கு திடுக்கிட்டு எழுந்து பக்கத்தில் கிடந்த ஐபாடில் எடுத்து பார்த்த போது,  முதல் முதலாய் ஒரு மெல்லிய சந்தோஷம் வந்து விழியன் ஓரம் வழிந்தது இன்று! முதல் முதலாய் ஒரு மெல்லிய உற்சாகம் வந்து மழையைப் போலே  பொழிந்தது இன்று !!   முதலாம் இடத்தில் இரண்டு கதைகள். இரண்டுமே தேர்ந்த குழப்பமில்லாத சிறுகதைகள். வாசித்தபோது அவற்றின் தகுதியை மனதார மெச்சினேன். என்னுடைய கதையோடு சேர்ந்து இன்னொரு கதைக்கும் இரண்டாம் இடம் கொடுக்

கடல் கோட்டை

“தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா” என்று பத்தாம் வகுப்பில் படிக்கும் போது கல்லூரியில் பேச்சுப்போட்டி. ஸ்கிரிப்ட் எழுதித்தந்தவர் பொன்னுச்சாமி தமிழ் மாஸ்டர்!  கம்பவாரிதி ஜெயராஜ் ஸ்டைலில அங்கே இங்கே ஏறி இறக்கி பேசினதில் முதலிடம் கிடைத்தது. தமிழ்த்தின விழா பரிசு போட்டியில் ஆறேழு புத்தகங்கள் தந்தார்கள். தந்ததில் பிடித்தது கடல் கோட்டை! சாண்டில்யன் பாணி சரித்திர நவீனம்! மருதநாயகம் போல ஒரு வன்னிமை. போர்த்துக்கீசரை நாட்டை விட்டு கலைக்க ஒல்லாந்தருடன் கைகோர்த்து, இறுதியில் ஒல்லாந்தரிடம் வெள்ளைக்கார பெண்ணை கேட்டு, ஏமாற்றப்பட்டு அவனுக்கு வெள்ளைக்காரிக்கு பதிலாக ஒரு நாயை பெண்ணாக கொடுக்கிறார்கள். வந்ததே கோபம் வன்னிமைக்கு! இப்போது ஒல்லாந்தருக்கு எதிராக மாறுகிறான்(எங்கேயோ கேட்ட/பார்த்த கதை போல இருக்கிறதா?).  இவன் வீட்டுக்கு விசிட் அடித்தான் என்ற ஒரே காரணத்தால் படித்த மிதவாதியான பூதத்தம்பி தூக்கில் இடப்பட(அங்கேயும் பொறாமை, காட்டிக்கொடுப்பு) .. இப்படி ஈழத்து தளத்தில் ஒரு வரலாற்று கதை. நிஜக்கதையை கொஞ்சம் பூடகாமாக செங்கை ஆழியான் எழுதினாரோ என்ற சந்தேகம் எனக்கு நெடுங்காலமாக இருந்தது. வெ

ஏழாம் அறிவுடை நம்பிகள்!

  அரவிந்த், இப்ப நாம எந்த நிலைமைல இருக்கோம்னு முதல்ல தெரிஞ்சுக்கணும். வீரம் வீரம்னு தானே சண்டை போட்டாங்க நம்ம பக்கத்து நாட்டுக்காரங்க. ஜெயிக்க முடிஞ்சுதா? செத்து தானே போனாங்க?   ----------------------------------------------------------------------   என்னை வாழவைத்த தமிழக மக்களே. இலங்கை தமிழர்களை நான் நெறைய தடவ சந்திச்சிருக்கேன். அவங்க திட்டினா கூட நாதம் மாதிரி இருக்கும். இங்க நாம பேசறது definetely ராஜபக்ஸ காதுக்கு போய் சேரும். அந்த தைரியத்தில நான் ஸ்ரீலங்கா கவுர்மண்டுக்கு ஒண்ணு மட்டும் சொல்ல விரும்புறேன். தமிழ் மக்கள் உரிமைக்காக போராடினாங்க, நீங்க யுத்தத்த அனவுன்ஸ் பண்ணீங்க. ஒரு வருஷமா, ரெண்டு வருஷமா, முடியல .. முப்பது வருஷமா உங்களால அவங்கள ஒழிக்க முடியலையேன்னு சொன்னா நீங்க என்ன வீரர்கள்? ஆம்பளங்களா நீங்க? ஒத்துக்க ஒனக்கு ஈகோ இடம் கொடுக்கல .. பாரு உதிரம் கொட்டுது எங்க .. அந்த பொணங்கள எல்லாம் புதைக்கல, விதைக்கிறாங்க. நாளைக்கு அதுக எழுந்து வந்து ஒங்கள தூங்க விடாது. முப்பது ஆண்டுகளுக்கு பிறகு எல்லாத்தையும் விட்டிடு என்னா அது எப்பிடி? செத்தவங்க வந்து வாழ்றவங்கள விட்டிடுவாங்களா? இந

“ஐ லவ் யூ ஆன்ட்ரியா!”

காதல்கொண்டேன் படத்திலே “நெஞ்சோடு கலந்தது” பாடலை ரசிக்காமல் இருந்திருக்க மாட்டீர்கள், உயிரை அப்படியே கீறி கிழிக்கும் வயலின் செல்லோ இசையும் மெட்டும் கலந்த பாடல். என்ன கம்போசிங்டா இது, யுவன்சங்கர்ராஜா அப்பனுக்கு தப்பாமல் பிறந்த பிள்ளை என்று சிலாகித்த போது நண்பன் சொன்னான், தப்பு .. இது Corrs குழுவின் அல்பத்தில் இருந்து சுட்ட பழம் என்று. அன்றைக்கு ஆரம்பித்தது தான் ஐரிஷ் இசை பேண்ட் குழுவான  “The Corrs” மீதான காதல். பாடும் பெண் தான் ஆண்ட்ரியா. பக்கத்தில் இருக்கும் வயலினில் கொஞ்சும் பெண் அவரின் சகோதரி ஷரோன். டிரம்மர் இன்னொரு சகோதரி கரோலின். அந்த கிடார் வாசிக்கும் இளைஞன் இவர்களின் சகோதரன் ஜிம். இந்த நான்கு சகோதரர்களும் சேர்ந்து உருவாக்கிய இசை சங்கமம் தான் இந்த “The Corrs” என்ற பாண்ட். மெய் சிலிர்க்க வைப்பது என்பது இது தான் ஆன்ரியா ஓகே என்று சொல்ல பியானோ கவுன்டிங்குடன் தொடங்கும் ஒன்று. அந்த ஒன்றை என்னவென்று சொல்வேன்? வெறுமனே பாடல் என்று சொல்ல முடியாது. இசை என்றும் சொல்ல முடியாது. ஏதோ ஒன்று, உள்ளத்தையும் உடலையும் கட்டிப்போட்டு படாதபடுத்தும் ஏதோ ஒன்று. காதல் கூட இப்படி போட்டு தா

என் கொல்லைப்புறத்து காதலிகள் : சந்திரிகா!

  1994ம் ஆண்டு அக்டோபர் பன்னிரெண்டாம் தேதி, யாழ்ப்பாணம் காலையிலேயே எழுந்து புத்தாடை அணிந்து புன்னகையுடன் பத்திரிக்கை படித்துகொண்டு இருந்தது. அன்று தான் சமாதான பேச்சு வார்த்தை குழு கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வருகிறது. எங்கள் வீட்டுக்கு பக்கத்தில் தான் யாழ் பல்கலைக்கழக மைதானம், அங்கே தான் ஹெலிகாப்டர் இறங்குகிறது. பக்கத்து காணியில் ஒரு 50கலிபர் துப்பாக்கி பாதுகாப்புக்கு. ஆனால் இம்முறை எனக்கு பயம் இல்லை. அது தான் சமாதானம் வரப்போகிறதே! இரவு முழுதும் தூங்கவேயில்லை. தூதுக்குழுவின் அத்தனை உறுப்பினர் விவரமும் மனப்பாடம். அதன் தலைவரான பாலபட்டபெந்தி, ஜனாதிபது ஆலோசகர், லயனல் பெர்னாண்டோ என ஒரு ஐந்து பேர். புலிகள் குழுவில் கரிகாலன், இளம்பரிதி உட்பட ஒரு ஐந்து பேர். பேசப்போகிறார்கள். பிரச்சனையை தீர்க்க போகிறார்கள்.   அன்றைக்கு பாதுகாப்பு கடும்பிடி. இராமநாதன் வீதியை மூடிவிட்டார்கள். எனக்கென்றால் ஹெலியை பக்கத்தில் இருந்து ஒருமுறை பார்த்துவிட வேண்டும் என்று ஒரு ஆர்வம. அதிலும் ஹெலியின் கதவருகே துப்பாக்கியுடன் இருக்கும் ஆர்மியை நேரில் பார்க்கவேண்டும். ஒருமுறை இந்த ஹெலி தாழ்வாக சுட்டுக்கொண்டு செல்லும்