Skip to main content

Posts

Showing posts from January, 2014

ஈழத்து இராமாயணம்.

  மெல்பேர்னில் கேசி தமிழ்மன்றம் நிகழ்த்திய பொங்கல்விழா அன்று “இவர்கள் இன்று வந்தால்” என்ற இலக்கிய அரங்கில் “கம்பன்” தலைப்பில் எழுதிய கவி/உரை. என்னோடு கண்ணகியாக வீணாவும், பண்டாரவன்னியனாக அஜந்தன் அண்ணாவும், பாரதியாக கேதாவும், பெரியாராக ஆனந்தும் அரங்கேறினார்கள். நிகழ்வை தொகுத்துவழங்கியவர் பன்னிரண்டு வயது, மெல்பேர்னில் பிறந்து வளர்ந்த சிறுவன் துவாரகன். நன்றி கேதா அவை வணக்கம் கம்பநாடன் கவிதையிற் போல கற்றோர்க்கிதயம் களியாதே - என்று வந்திருக்கும் அனைவருக்கும் அன்பு வணக்கங்கள். இன்றைக்கு இங்க வந்து மன்றத்தில் பேச சொல்லி பொங்கல் தந்த சடையப்ப வள்ளலுக்கும் வணக்கங்கள்! காலத்தை வென்று வாழும் காவிய நாயகர்கள் நால்வருக்கும் தமிழில் ஒரு ஹாய்!

ஷண்முகி

  வாசலில் ஓட்டோ நின்றது. இறங்கி சுற்றும் முற்றும் பார்த்தேன். உயரமான தகர கேட். உள்ளே ஒன்றுமே புலப்படவில்லை.  போன் பண்ணிவிட்டு வந்திருக்கலாமோ? என்று மனைவியிடம் முணுமுணுத்தேன். ஓட்டோ ஓட்டிவந்த ராஜா அண்ணா ஒன்றையும் யோசிக்காமல் கேட்டில் “டங் டங்” என்று தட்டினார்.  பத்து செக்கன் கழித்து கேட் அரை அடி திறக்கப்பட, உள்ளிருந்து ஒரு சிறுமி முகம் எட்டிப்பார்த்தது.

குப்பை

நீயும் குப்பை, நானும் குப்பை சேர்ந்து பொறுக்கினோம் அதுவும் குப்பை நிலவின் ஒளியில் நீயும் நெளித்து நெடித்து வளைத்து நிற்க கண்டு ரெண்டும் ஒண்டு எண்டு நினைச்சு மதியை இழந்து தளர்ந்த நேரம் காமம் கடுகென உடலது பரவிட கலப்பை உழுது கண்ட கமத்தில விளைஞ்சது எதுவோ ஆறடி பயறோ? பூனைக்கு ஏதும் பிறந்திடும் புலியோ? அதுவும் வளர்ந்து ஆனது குப்பை. குப்பைக்குள் குண்டு மணிவரு மென்றுநம்பி இது தான் கடைசின்னு பலமுறை கெஞ்சி இனியும் ஏலாது எண்டு காந்தாரியும் சொல்லி ஓய்ஞ்சு ஒடிஞ்சு நிமிர்ந்து பார்த்தா கண்ணுக்கு முன்னாலே நிக்குது நூறு நூறும் சேர்ந்து நாறும் வாயால் நம்மைப்பார்த்து உறைக்கச்சொன்னது நீரும் குப்பை, நாமும் குப்பை நாம சேர்ந்தா நாடே குப்பை!