Skip to main content

Posts

Showing posts with the label சுஜாதா

ஆத்தில வாசகன் … குளத்தில எழுத்தாளன்!

  “என் இனிய இயந்திரா”, தொண்ணூறுகளின் ஆரம்பத்தில், யாழ்ப்பாணத்து வகுப்பறைகளில் அந்த புத்தகம் தவணை முறையில் கை மாறும். யார் அன்றைக்கு அதை வீட்டுக்கு கொண்டு போவது என்று போட்டி இருக்கும். அந்த இயந்திர நாயை பற்றி மாணவர்கள் கலந்து பேசுவார்கள். அடுத்த சில நாட்களில் “ஏன் எதற்கு எப்படி” என்ற இன்னொரு நூல் இதே போன்று ஒரு சுற்று வரும். மாணவர்கள் எல்லோருமே ஏதோ ஒரு நூலகத்தில் உறுப்பினராக இருப்பர். அம்புலிமாமா, ராணி காமிக்ஸில் ஆரம்பிக்கும் வாசிப்பு கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து கல்கி, பாலகுமாரன், ஜெயகாந்தன், அகிலன் வரைக்கும் நீளும். எழுத்தாளர் விழாக்கள் எல்லாம் பாடசாலை முடிந்தபின் மதியம் இரண்டு மணிக்கு, உச்சி வெயிலில், பாடசாலை முடிந்து வீடு திரும்பும் வழியில், சமாந்தரமாக துவிச்சக்கரவண்டிகளில் பயணம் செய்யும்போது தினம் தினம் இடம்பெறும். சில மாணவர்கள் பாலர் கவிதைத்தொகுப்பு வெளியிடுவார்கள். ஆசிரியர்கள் மாணவர்களை சிறுகதை எழுத சொல்லுவார்கள். மாலை ஆறு மணிக்கு மேசைவிளக்கில் படிக்கும் சிறுவனை எட்ட நின்று கவனித்தால், புத்தகம் நடுவே செங்கை ஆழியானின் கடல்கோட்டை இருக்கும். கதிரையை இழுத்து முற்றத்தில் போட்டு, பக்கத்த

வானம் மெல்ல கீழிறங்கி!

  “விளக்கு வச்சாபிறகு தான் அந்த ஈர்வலிய எடுத்தோண்டு போய் நல்லா இழு, உள்ள தரித்திரம் எல்லாம் வந்து சேரட்டும்” இரண்டு ஈர் அடிப்பதற்குள் அம்மா குசினிக்குள் இருந்தவாறே திட்ட ஆரம்பிக்க கரண்டும் கட்டாக சரியாக இருந்தது. செவ்வாய்க்கிழமை என்றால் கம்பஸ் பகுதிக்கு மின்வெட்டு என்பதை ஏதோ ஒரு ஞாபகத்தில் மேகலா மறந்துபோயிருந்தாள். சிமினி எதையுமே துடைத்துவைத்திருக்கவில்லை. உடனேயே தட்டுத்தடுமாறி எழுந்துபோய் மெழுகுதிரி ஒன்றை கண்டுபிடித்து ஏற்றிக்கொண்டு, பழைய உதயன் பேப்பரை கிழித்து அரிக்கன் லாம்பையும், மேசை லாம்பையும் கவனமாக துடைத்தாள். கத்திரிக்கோலால் முனை கருகியிருந்த திரிகள் இரண்டையும் நேர்கோட்டில் வெட்டிவிட்டு, நெருப்புக்குச்சியை தட்டும்போது, தம்பி அறைக்குள் இருந்துகொண்டு  “விளக்கை எடுத்தண்டு வர இவ்வளவு நேரமா?” என்று நாட்டாமை செய்தான். அவனுக்கு இன்னமும் இரண்டு மாதத்தில் ஒஎல் பரீட்சை. சலலகினி சந்தேஷயவையும் குசுமாசனதேவியையும் மனப்பாடம் செய்வதற்கு அவன் செய்யும் அலப்பறைக்கு பதிலாக தான் பேசாமல் டொக்டருக்கே படித்திருக்கலாம் என்று மேகலா சமயத்தில் நினைப்பதுண்டு. முதல் ஆளாய் அவனுக்கு தான் விளக்கு கொடுக்கவே

அன்பில் அவன் சேர்த்த இதை!

  ஐந்தாம் வகுப்புக்கான நுழைவுத்தேர்வு. ரிசல்ட்ஸ் பார்க்கப்போன அப்பா திரும்பும் நேரம். சென்ஜோன்ஸ் கல்லூரி அனுமதிக்கு தமிழ், கணிதம், ஆங்கிலம் என மூன்று பாடங்கள். மொத்தமாக அறுநூறு மாணவர்கள் தோற்றிய பரீட்சையில் வெறும் முப்பத்தைந்து பேர்களை மாத்திரமே தெரிவு செய்வார்கள். வீட்டில் நம்பிக்கையில்லை. எனக்கோ அந்த கதீடறல் கட்டிடக்கலையும், பிரின்சிபல் பங்களோவும், ஐந்தடிக்கு ஒன்றாய் நிற்கும் மகோகனி மரங்களில் தெறிக்கும் ஒரு வித ஆங்கில வாசமும், இது தான் என் பாடசாலை என்ற எண்ணத்தை வேரூன்றவைத்துவிட்டது. வந்த அப்பாவின் முகம் சரியில்லை. இரண்டு புள்ளிகள். மயிரிழை .. அரும்பொட்டு என்று ஏதோதெல்லாம் சொன்னார். கத்த ஆரம்பித்து, அழுது கண்ணெல்லாம் சிவந்து படுக்கையறைக்குள் போய் போர்வையை மூடிக்கொண்டு, யாழ் இந்து கல்லூரியின் நுழைவுத்தேர்வு விண்ணப்பபடிவத்தை அண்ணா கொண்டுவந்து தந்தபோது கிழித்து எறிந்தது இன்னமும் சன்னமாய் ஞாபகமிருக்கிறது. கடைசியில் அப்பா யார் காலையோ பிடித்து, டொனேஷன் ஐயாயிரம் ரூபாய் எங்கேயோ கடன் வாங்கி கொடுத்து, சென்ஜோன்ஸ் கல்லூரியில் சேர்த்துவிடும்போது, முதல் நாள் வகுப்பை தவறவிட்டு இரண்டாம் நாள் தயக்கத்

மறதிக்கு மருந்து மாஸ்டரிண்ட பிரம்பு!

  ஆஸ்திரேலியா, கேசி தமிழ் மன்றம் நடத்திய ஆடிப்பிறப்பு நிகழ்வு அன்று “மறந்து போகுமோ?” என்ற கவியரங்கத்தில் “பள்ளிப்பருவம்” பற்றிய எனது படைப்பு. இதில் கவித்துவமோ, நான் பகிர்ந்த விதத்தில் ஒரு அரங்க பாணியோ கிடையாது. ஆனால் அனுபவங்களின் நினைவூட்டல் என்ற வகையில் ஓரளவுக்கு திருப்தியை தந்த படைப்பு. கேட்டு/வாசித்து விட்டு சொல்லுங்கள்! யார் அந்த கோகிலவாணி என்று யோசிப்பவர்கள், உங்கள் கண்ணாடியில் போய் கேட்டுக்கொள்ளுங்கள்!   தமிழுக்குள் என்னை ஆட்கொண்ட எழுத்துக்கு வேந்தர் சுஜாதா எங்கள் கம்பவாரிதி ஜெயராஜ் இருவரையும் மனதார பணிந்து வணங்கி! கூழுக்குள் நீந்தியது காணும்! கரையேருங்கள்! எனக்கு புரையேறுகிறது! கவிதைக்கு அவ்வப்போது கரவோசையும் வேணும்!. அவைக்கு அடங்கி ஆரம்பிக்கிறேன் வணக்கம். பரணிகள் பலவும் முழங்கிய தேசம். அதை பரணிலே போட்டுவிட்டு படகேறியவர் நாம். நாம் தமிழர்! பனி விழும் தேசத்தில், பட்டதெல்லாம் மறந்துவிட்டு படகுக்காரும், பத்தினியும் பளிங்கினால் ஒரு மாளிகையும் கட்டியவனுக்கு பட்டென்று சுட்டது எதுவோ? அதுவே சுயத்தை என்றான் ஒருவன். சுரத்தை வந்த நேரம் சுற்றம் எல்லாம் சுடுகாட்டில் பரத்தை அழகின் செழி

வாரணம் மூன்று!

  முற்குறிப்பு : இது 13-05-2012 ஆஸ்திரேலிய எழுத்தாளர் விழாவில் “புலம்பெயர் படைப்புகள் தமிழுக்கு வளம் செர்க்கின்றவனா” என்ற கருத்தரங்கில் வலையுலகம்(blogs) சார்பில் என்னுடைய உரை! எல்லோருக்கும் வணக்கம்! தமிழை இப்படியும் ரசிக்கலாம் என்று கற்றுத்தந்த எழுத்தாளர் சுஜாதாவுக்கும், கம்பவாரிதி இ.ஜெயராஜுக்கும் மானசீக வணக்கங்கள். காலை ஆறு மணி! தலையில் துவாய், கருத்தரங்கு தமிழில் துவாலை என்று சொல்லலாமா?  யாழ்ப்பாணத்து பனியோடு முட்டி மோதி ஊமல் கரியில் பல் துலக்கி, கரண்டு போன மின்கம்பம் பிடுங்கிய பீங்கானில் கிணற்று கப்பி. டயர் வாரில் தேடா வலயம் ஆழக்கிணற்றில் வாரும்போது அரைவாசி  தண்ணீர் ஓட்டை வாளியால் ஓடிவிடும். முகம் கழுவி சைக்கிள் எடுத்து சந்திக்கடையில் உதயனும் ஈழநாதமும், புதன்கிழமை என்றால் ஞாயிறு வீரகேசரியும்! அப்பாவுக்கு ஒன்று எனக்கொன்று வாசிப்பதில் தொடங்கும் அனுபவம்! பாடசாலை இடை வேளை, பரியோவான் நூலகத்தில் மகாபாரத சித்திரக்கதைகள்! அஞ்சாதவாசம் முடிகையில் மணியடிக்கும் வகுப்பில் இருப்புக்கொள்ளாத தவிப்பு. அது முடிந்த பின்னும் நூலகம் தாமதமாய் வீடு போனமைக்கு அம்மாவின் திட்டு திருட்டுத்தனமாய் கரையெல்

சச்சின்!

  Toy Story வெற்றியை தொடர்ந்து PIXAR அடுத்த படத்தை எடுக்கவேண்டும். Second system effect என்று சொல்லப்படும் இரண்டாவது அடி சறுக்கல் என்ற விஷயத்தை தவிர்க்கவேண்டும். எப்போதுமே முதல் ஹிட் கொடுப்பது இலகு. ஆண்டாண்டு காலமாக யோசித்து வைத்திருப்பதை, சக்தியை முதலாவது சிஸ்டத்தில் கொடுத்து வென்றுவிடலாம். ஆனால் தொடர்ந்து வெல்வது என்பது கடினம். Apple2 வின் வெற்றிக்கு பிறகு வந்த Apple3 அட்ரஸ் இல்லாமல் போனதுக்கு இந்த சிண்ட்ரோம் தான் காரணம். ஒரு சில இயக்குனர்கள் முதல் படத்தோடு காணாமல் போவதும் அதனால் தான். ஸ்டீவ் ஜோப்ஸ் முதல் வெற்றியை தொடர்ந்து PIXAR இயக்குனர்களுக்கு சொன்னது ஒன்றே ஒன்று தான். Toy Story செய்யும் போது எப்படி குழந்தைகள் போல வேலை செய்தீர்களோ அதை போலவே மீண்டும் குழந்தைகள் ஆகுங்கள். இந்த உலகத்தில் குழந்தைகள் அளவுக்கு புதுவிஷயங்களை கண்டுபிடிப்பவர்கள் வேறு எவரும் இல்லை. “A Bug’s Life”, PIXAR இன் இரண்டாவது படம் வெளிவந்து ஹாலிவுட்டையே ஒரு கலக்கு கலக்கியது. சமகாலத்தில் Toystory 2 எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். படம் ஓரளவுக்கு முடியும் தருவாயில் எல்லோரும் போட்டு பார்க்கிறார்கள். ஸ்டீவ் ஜாப்ஸ், ஜோ

என்ர அம்மாளாச்சி!

  “மெல்பேர்ன் சென்ரல் செல்லும் அடுத்த புகையிரதம் இன்னமும் ஐந்து நிமிடத்தில் புறப்படும்"   எப்பிங் நிலையத்தில், பச்சை நிற பொத்தான் அழுத்தியபோது சொல்லியது. ஆஸ்திரேலிய வசந்தகாலம் காதில் கூசியது. ஜாக்கட்டின் ஜிப்பை இன்னும் மேலே இழுத்துவிட்டேன். ஐபாட் காதுக்குள் இளையராஜா “தென்றல் வந்து தீண்டி”னார். சற்று தூரத்தில் ஐந்து இளைஞர்கள், VB பியர் கானில் பெனால்டி கோல் போட்டுக்கொண்டு இருந்தனர். இருவர் ஆஸிக்காரராக இருக்கவேண்டும். மற்றவன் நெற்றியை பார்த்தால் கிழக்கு ஐரோப்பாவாக இருக்கலாம். மாசிடோனியனா? எனக்கு முன்னமேயே அகதியாக  வந்திருப்பான் போல. அடுத்தவன் கறுப்பன்.  ஒரு பெண்ணும் இருந்தாள். கால் ஓட்டும் leggies, குட்டை பாவாடை, மேலே பெயருக்கு பனியன் அணிந்திருந்தாள். இவர்களுக்கெல்லாம் குளிராதா? இல்லை காட்டுவதற்காக குளிரை சமாளிக்கிறார்களா? எல்லோருக்கும் பதினேழு பதினெட்டு வயசுக்குள் தான். ஒரே சிகரெட்டில் எல்லோர் மூச்சும் மாறி மாறி. அவர்களில் ஒருவன் என்னை கவனித்தான் போல இருந்தது. ஆஸி ஸ்லாங்கில் ஏதோ அவர்களுக்குள் பேசிக்கொண்டிருக்க, என்னை பற்றியோ தெரியாது. நான் பார்த்ததை கவனித்திருப்பார்களோ? என் பாக