Skip to main content

Posts

Showing posts with the label மணிரத்னம்

ஓ காதல் கண்மணி

  ஒரு இயல்பான நிச்சயத் திருமணம். பரஸ்பரம் அறிமுகமில்லாத இருவரின் ஈகோ, அதெல்லாம் கடந்து ஒருவரை ஒருவர் புரிந்துக்கொள்ளும்போது மலரும் இனிமையான காதல். திருமணத்துக்கு பின்னரான காதல். “மௌனராகம்”. எண்பதுகளில். காதலிக்கிறார்கள். இருவீட்டிலும் சம்மதமில்லை. தன்னிச்சையாக திருமணம் முடிக்கிறார்கள். வீட்டை விட்டு வெளியே வந்து குடும்பம் நடத்துகிறார்கள். ஈகோ. ஊடல். சின்னதாய் பிரிவு. அப்போது அவர்களுக்குள்ளேயே இருக்கும் அந்த ஈர்ப்பும் காதலும் புரியவே மீண்டும் சேருகிறார்கள். “அலைபாயுதே”. தொண்ணூறுகளில். காதலிக்கிறார்கள். சேர்ந்து வாழுகிறார்கள். திருமணம் எல்லாம் தேவையில்லாத கொமிட்மெண்ட் என்று சொல்லுகின்ற “லிவிங் இன் ரிலேஷன்ஷிப்” காதலர்கள். இருக்கும்வரைக்கும் சந்தோசமாக இருப்போம். எதுக்கு திருமணம் செய்து தேவையில்லாத சண்டை, ஊடல், கோபம், அங்கலாய்ப்பு எல்லாம் அனுபவிப்பான் என்கின்ற எண்ணத்தை பிரதிபலிக்கும் இளம் ஜோடி. வாழ்க்கை நன்றாகவே போகிறது. ஆனாலும் அதே சண்டை, ஊடல், கோபம் எல்லாமே லிவிங் இன் ரிலேஷன்ஷிப்பிலும் வருகிறது. ஒரு கட்டத்தில், தாம்பத்யம் என்பது வெறும் இருபதுகளோடு முடியும், வேண்டுமானால் பிய்த்துக்கொ

கடல்!

  தூத்துக்குடியை அண்டிய கடற்கிராமம். ஒரு குட்டி ஒழுகல் குடிசையினுள்ளே நான்கு வயது சிறுவன் மழைக்குளிரில் நடுங்கிக்கொண்டு; பக்கத்தில் தாய் படுத்துக்கிடக்கிறாள். சாமம். ஒரு குடிகார மீனவன் கதைவை தட்டி, சிறுவனை வெளியே அனுப்பிவிட்டு அந்த அந்த பெண்ணை நெருங்கும்போதுதான் அவள் குளிரில் விறைத்து இறந்து போய்கிடப்பது தெரிகிறது. அவளை கிராமத்தில் ஒதுக்கப்பட்டவர்களை புதைக்கும் இடத்தில் ஒரு ஐஸ் பெட்டியில், அதுவும் கால்கள் அதற்குள் அடங்காததால் மண்வெட்டியால் உடைத்து உள்ளே மடக்கி மூடி புதைக்கிறார்கள். அந்த குடிகாரன் தான் சிறுவனின் தந்தை. அரவணைக்காமல் துரத்திவிடுகிறான். சிறுவன் அந்த குடிகாரனின் வீட்டு வாசலில், ஏக்கத்துடன் கதவுத்தூணுடன் சாய்ந்தபடி நிற்பான். வெறும் பொத்தல் பனியன் மட்டுமே சட்டை. அவன் முகம் ஆயிரம் கதை சொல்லும். குளோசப்பில் அந்த சிறுவனின் முகம். “அம்மா தானேடா நீ என்ர அப்பன் எண்டு சொன்னது” என்று அவன் கண்கள் கதை பேசும். என்ன சீனுடா இது. என்னையறியாமலேயே நிமிர்ந்து உட்கார்ந்தேன்.

டெல்லிக்கு ராஜா!

ராஜாவுக்கு பிறந்தநாள்! வெறுமனே வாழ்த்தை facebook இல் சொல்லி கடலில் விழுந்த துளியாக்குவதில்(அடடா இது வைரமுத்து கற்பனை ஆச்சே, ராஜா கோபிக்கப்போகிறார்) இஷ்டமில்லை. பதின்மத்து வயதில் ராஜா என்று ஏற்கனவே எழுதியாகிவிட்டது. புதிதாக எதை சொல்லப்போகிறோம் என்று யோசித்தபோது ராஜா ஹிந்தியில் கோலோச்சிய பாடல்களை எடுத்துவிடலாம் என்ற ஒரு யோசனை. ஆனால் ஒன்று, எந்த ஒரு புதுப்பாட்டையும் முதன் முதலில் கேட்கும்போது ஒட்டாமல் தான் இருக்கும். கேட்க கேட்க உயிரை எடுக்கும். அந்த தேடலை ரசிகன் தான் செய்யவேண்டும். அதனால் இன்றைக்கு நீங்கள் ஏற்கனவே கேட்ட, உயிரை எடுத்த, எடுத்துக்கொண்டு இருக்கின்ற ராஜா பாடல்களை ஹிந்தியில் தருகிறேன். வெறும் மொழிமாற்றம் இல்லாமல் arrangements இல் மாற்றம் காட்டியிருக்கும் பாடல்கள். சில ஹிந்தியில் இருந்து தமிழுக்கு வந்தவை. பல இங்கேயிருந்து ஹிந்தி போனவை. “Aur Ek Prem Kahani” என்று ஒரு படம். கமல் நடித்த கன்னட சூப்பர் ஹிட்டான “கோகிலா” ரீமேக். பாலுமகேந்திரா படம். புதுசாக போடாமல் தன் பழைய ஹிட் மெட்டுகளை பாவித்து வெளியிட, இசை .. இசையை புரிந்தவர்களால் கொண்டாடப்பட்டது. படத்தின் வணிக வெற்றியை

என் கொல்லைப்புறத்து காதலிகள் : மணிரத்னம்

ஆரம்பம் ஒரு சின்ன ஒளிப்புள்ளியில் இருந்து ஆரம்பிக்கிறது. பின்னணி இசையின் எலெக்ட்ரிக் பேஸ் கிட்டார் பிட்ச் திகிலூட்டுகிறது. அப்புறம் சேசிங். ஐந்து நிமிடத்தில் காஷ்மீரிய போராளி வாசிம்கான் சுற்றி வளைக்கப்படுகிறான். கட். அடுத்த காட்சி சுந்தரபாண்டியபுரத்தில். சின்ன சின்ன ஆசை பாடல். 

The Spirit Of Music

1992ம் ஆண்டு, ஒருநாள் எங்கள் நண்பி யசோ அக்கா வேக வேகமாக வீட்டுக்குள் நுழைந்தார். ஒருவித படபடப்பும் பரவசமும் அவர் முகத்தில்,  என்ன என்று எல்லோரும் பார்த்தோம். ரோஜாவின் இசை இப்போது தான் கேட்டேன். ஆச்சரியம் தாங்க முடியவில்லை, சொல்லுவதற்கு வந்தேன் என்று தன்னுடைய walkman ஐ எடுத்து headphone ஐ ஒவ்வொருவர் காதுகளிலும் மாறி மாறி மாட்டினார். பரவசம் எம்மையும் கொஞ்சம் கொஞ்சமாக தொற்றத் தொடங்கியது. சின்ன சின்ன ஆசையின் சின்ன சின்ன சத்தங்கள் என்னென்னவோ செய்தது. இறுதிப்பல்லவியில் வரும் ஒவ்வொரு இறுதி note இலும் ஒவ்வொரு ஜாலம் காட்டினார். "காதல் ரோஜாவே" காதலிக்கச்சொல்ல,  புதுவெள்ளை மழை யாழ்ப்பாணத்தையே குளிரவைக்க ஒரு மாலை நேரத்தில், ரோஜாவின் மயக்க வைக்கும் பின்னணி இசை A R ரகுமான் பிறந்தாரே! சென்ற ஏப்ரலில் அவருடைய உத்தியோகபூர்வ சுயசரிதை “The Spirit Of Music” வெளிவருகிறது என அறிந்து சிங்கப்பூர் முஸ்தபா கடைக்கு போன் மேல் போன் போட்டும் வருவதற்கான எந்த அறிகுறியும் இல்லை. எனக்கோ இருப்புக்கொள்ளவில்லை. தலைவர் ஒவ்வொரு பாடலையும் எப்படி உருவாக்கினார், அதற்றுக்குப்பின்னால் இருந்த

மணிரத்னம் எழுதிய கவிதை!

தளபதி திரைப்படத்தின் இந்த தாய் மகன் பிரிவுத்துயர் காட்சி எல்லா இணையங்களிலும் மற்றும் Facebook, Twitter தளங்களிலும் தமிழ் ரசிகர்களால் பிரித்து மேயப்பட்டுவிட்டது. தாயும் மகனும் அந்த புகைவண்டி சத்தம் கேட்கும்போது திரும்பி பார்க்கையிலும், அதன் பின்னர் மீண்டும் திரும்பிய பின் ரஜனி காட்டும் முகபாவனையும்,  தலைவர் இளையராஜாவும் இணைந்து நம்மை உண்டு இல்லை ஆக்கிவிடுவார்கள், நாமெல்லாம் அப்படியே கனத்து போய் அமர்ந்து இருப்போம் .. எந்த சலனமும் இல்லாமல் .. அந்த காட்சியை மீண்டும் பாரத்து இரசியுங்கள்! But There's One More Thing. இந்த காட்சியின் 0:44 --- 0:51 நேரத்து காட்சியை மீண்டும் பாருங்கள். தாய் மெதுவாக திரும்பி புகைவண்டி செல்லும் திசை பார்க்கும் தருணத்தில் கேமரா மகன் பக்கம் திரும்பும். அங்கே மகன் ஏற்கனவே, அதாவது தாயுக்கும் முன்னமேயே அந்த திசை நோக்கி ஏக்கத்தோடு பார்த்து கொண்டிருப்பான்.    தாய் தன் மகனை பிரிந்து ஏங்கும் தவிப்பை விட, தாயில்லாமல், வளர்ந்து பட்ட வேதனையும் ஏக்கமும் மகனுக்கு அதிகம், பிரிவுத்துயர் தாயை விட அவனுக்கு தான் இன்னும் அதிகம் என்பதை இயக்குனர் அங்கே காட்டியிருப்பார்.