Skip to main content

Posts

Showing posts from 2024

என் கொல்லைப்புறத்துக் காதலிகள் : 6. குட்டியன்

தொ ண்ணூறுகளில் சங்கக்கடை நிவாரண அட்டை என்று ஒவ்வொரு குடும்பத்துக்கும் கொடுத்தார்கள் . அ , உ , இ என மூன்று வகையான அட்டைகள் . எங்கள் வீட்டுக்கு ‘ உ ’ அட்டை . அரசாங்க உத்தியோகத்தர் என்றால் பீயோனாக இருந்தாலும் ‘ உ ’ அட்டைதான் . நிவாரணத்தில் ‘ உ ’ அட்டைக்காரருக்குப் பங்கீட்டு அளவு அரைவாசியாகக் குறையும் . அரைப்போத்தல் மண்ணெண்ணெய் , அரைக் கிலோ பருப்பு , அரைக் கிலோ சீனி என்று எல்லாமே அரையில்தான் கிடைக்கும் . அதற்கே கோப்பிரட்டி மனேஜரிடம் பல்லிளிக்க வேண்டும் . குறைந்த சம்பளம் , அதிக சம்பளம் என்ற கதை பேச்சுக்கு இடமில்லை .   காரணம் கவுன்மேந்து உத்தியோகம் . அப்பாவின் சம்பளம் ஐயாயிரம் ரூபாய் வரும் . நொச்சியாகமவில் அவரின் செலவு போக , ஓமந்தை தாண்டி எங்கள் கைக்கு வருவது நாலாயிரம் ரூபாய் . அதுவும் ஏதாவது அடிபாடு , பாதை மூடீட்டாங்கள் என்றால் கதை கந்தல் . அந்த நாலாயிரத்தில் ஆறுபேர் கொண்ட குடும்பத்தை அம்மா பார்த்துக்கொண்டார் . கோட்டை , மண்டைதீவுப் பக்கம் பிரச்சனை என்றால் கொட்டடி மாமி ஆக்கள் வந்து இறங்குவினம் . ஆறு பத்தாகும் . அம்